30 October 2014

குண்டு மனைவியை இப்படியா கிண்டல் பண்றது ?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------\
திறமைக்கேற்ற பரிசு இது !

         ''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச கொஞ்ச வயசு கொள்ளைக்காரனை  கண்டு பிடிச்சிட்டோம்னு சொன்னா ..அவனை ஜெயில்லே போட்டுடாதீங்கன்னு ஏன் சொல்றே ?''
            ''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..
 குண்டு மனைவியை  இப்படியா கிண்டல் பண்றது ?
            ''என்னங்க ,குக்கரைப் பார்க்கும் போதெல்லாம்  என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
           ''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே   !''

இது காதல் தோல்வி தற்கொலை அல்ல !

 செய்தி தாளில் சமீபத்தில் ஒரு தற்கொலை செய்தி... 
விஷம் குடித்து தற்கொலை ...
           அய்யோ பாவம் எனத்தோன்றியது!
புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
            இவருக்கென்ன கஷ்டமோ ?
நாலு ஆடுகளில் ஒன்று தப்பியதால் விரக்தி ...
            அதனால் இவருக்கென்ன விரக்தி ?
புலிவேஷம்போட்டு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் ...
             அது அவர் ஆசை ,அப்புறம் ?
நாலு ஆடுகளை பல்லால் கவ்வி எறியஆரம்பித்தார் ...
             இதென்ன கூத்து ?
மூன்று ஆடுகளை எறிந்து விட்டார் ...
              உலக சாதனை தான் ,அடுத்து ?
ஒரு ஆடு மட்டும் தப்பித்து விட்டது ...
             கொடுத்து வச்ச ஆடு ,அப்புறம் ?
ஆடு தப்பியது தெய்வகுற்றம் என நினைத்து விஷம் குடித்து இறந்தார் ...
              எந்த தெய்வம் இவரை புலிவேஷம் போடச் சொன்னது ?ஆடுகளை பல்லால் கவ்வி எறியச்சொன்னது ?இப்படி மூடச் செயல்களை செய்து கொண்டு இவரைப் போன்றவர்கள் வாழ்வதை விட போய் சேர்வதே நல்லது என தோன்றுகிறது !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

என்றும் சிறைக் கஞ்சா சிங்கம்!

         ''தலைவர் ஜெயிலுக்குப்போய்  கஞ்சாவிற்கு அடிமை ஆயிட்டாராமே ,ஏன்?''          
             ''அவர் வெளியே இருந்தா 'சிறைக்கு அஞ்சா சிங்கம் 'உள்ளேபோனா 'சிறை கஞ்சா சிங்கம் 'ஆச்சே!''

32 comments:

 1. தற்கொலைச் செய்தி வராத ஏடுகளுமுண்டோ?
  கஞ்சா சிங்கங்களை ஒழிக்காத அரசுமுண்டோ?
  பெண்ணின் உள்ளத்தைக் கொள்ளை அடிச்சவருக்கு பெண்ணைக் கொடுக்காதவரும் உண்டோ?
  ஜோக்காளி தளத்தைப் பார்க்க வராதவரும் உண்டோ?

  ReplyDelete
  Replies
  1. #ஜோக்காளி தளத்தைப் பார்க்க வராதவரும் உண்டோ?#
   பல கோடி தமிழர்கள் வாழும் உலகில் ,என் தளத்திற்கு வருகை புரிவோர் எண்ணிக்கை சில நாட்களில் மட்டுமே ஆயிரத்தை தொடுகிறது . அதிக பார்வைகள் கிடைப்பதால் தமிழமணத்தில் முதலிடம் பெற்று இருந்தும் இந்த நிலையா என்று நான் யோசிப்பதுண்டு .நம் வலைப்பதிவுகள் ஒவ்வொரு தமிழன் கண்ணிலும் நுழைவது எக்காலமோ :)
   நன்றி

   Delete
  2. நம் வலைப்பதிவுகள்
   ஒவ்வொரு தமிழன் கண்ணிலும்
   நுழைவது எக்காலமோ?
   தூரம் அதிகம் இல்லை
   விரைவில் நிகழலாம்...
   வாழ்த்துகள்!

   Delete
  3. நம்புவோம் !

   Delete
 2. வணக்கம்
  தலைவா...

  ஒவ்வொரு நகைச்சுவையும் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கபாலி செய்த முடிவு சரியானதுதானே ,ரூபன் ஜி ?
   நன்றி

   Delete
 3. அது சரி, திருடன் வீட்டிலேயே, திருட்டா.
  கணவன் குண்டா இருந்தால் மனைவி என்ன சொல்லி கேலி பண்ணுவாள்?

  ReplyDelete
  Replies
  1. திருடன் வீட்டில் திருடுபவன் கில்லாடிதானே ,அதனாலதான் அவனுக்கு இந்த மரியாதை :)
   அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் :)
   நன்றி

   Delete
 4. நல்லாத்தான் குடும்ப உறவைத் தேடிக்கறார்..

  ReplyDelete
  Replies
  1. இனம் இனத்தோடுதானே சேரும் :)
   நன்றி

   Delete
 5. //அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான்///

  hahaha

  ReplyDelete
  Replies
  1. எந்த திருமண பதிவு நிலையத்தில் பதிந்தாலும் ,அவருக்கு இப்படி ஒரு பொருத்தமான மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரே :)
   நன்றி

   Delete
 6. ஒ...திருடுனா பொண்ணு கொடுப்பீங்களா? ஹா..

  ReplyDelete
  Replies
  1. மாமனாரும் கொள்ளைக்காரனா இருந்தா கொடுக்கத்தானே செய்வார் :)
   நன்றி

   Delete
 7. இருந்தாலும் குண்டு மனைவியை கண்டு இப்படி பொறாமையால் கிண்டல் பன்னக்கூடாது...

  ReplyDelete
  Replies
  1. குண்டு மல்லிகை அழகாய் இருக்கும் சரி ,குண்டு மனைவியுமா :)
   நன்றி

   Delete
 8. திறமைக்கு ஏற்ற பரிசா....ஹஹஹா...

  ReplyDelete
  Replies
  1. மாப்பிள்ளை என்ன சாதாரண ஆளா ,கொள்ளையன் வீட்டிலேயே கைவரிசையைக் காட்டியவனாச்சே :)
   நன்றி

   Delete
 9. குக்கரும் குண்டு மனைவியும்! பாவம் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. பாவம்தான் ,எழுந்து நிற்க முயற்சித்தும் முடியாமல் மீண்டும் உட்கார்ந்து விடுவதால் :)
   நன்றி

   Delete
 10. ஆஹா என்ன பாசம்?

  ச்சீ... பாவம்ங்க...

  சே... மூட நம்பிக்கை!

  ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. இருக்காதா பின்னே ,ஒரே தொழிலில் உள்ளவர்களாச்சே:)

   பாவம்தான் ,(சுய) பாரத்தை தாங்க முடியாதவர்கள் :)

   மூட நம்பிக்கை பலவிதம் ,அதில் இது ஒரு விதம் போலிருக்கே:)

   தலைவர் சிறையிலும் சிங்கம்தான் :)
   நன்றி

   Delete
 11. ஹாஹாஹா! ஜோக்ஸ் சூப்பர்! புலிவேசக்காரரின் மூடத்தனத்தை என்னவென்று சொல்வது?

  ReplyDelete
  Replies
  1. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதால் புலி வேஷம் போட்டவரும் இப்படி முடிவை தேடிக்கிட்டாரோ :)
   நன்றி

   Delete
 12. எல்லாமே நன்றாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. கமெண்ட் மட்டுமே போட்டு இப்படி சொல்றது நன்றாக இல்லையே ,கிங் ஜி :)
   நன்றி

   Delete
 13. ' வெளியே இருந்தா 'சிறைக்கு அஞ்சா சிங்கம் 'உள்ளேபோனா 'சிறை கஞ்சா சிங்கம் '----

  சிறைக்குள்ளே கஞ்சா பொட்டலத்தை வீசுகிறான்கள் என்று ரோட்டில் பாராபோட்டு கன்காணிக்கும்போது.. அய்யா எப்படி சிறை கஞ்சா சிங்கமா ......எப்படி..ஒரே சந்தேகமாக இருக்கு....

  ReplyDelete
  Replies
  1. ஓய்வு பெற்ற IPS அதிகாரி திரு .சியாம் சுந்தர் ,பதவியில் இருந்தபோது பாளை சிறையில் திடீர் விஜயம் செய்து கஞ்சா புழக்கம் இருப்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார் ,அவரிடம் உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள் :)
   நன்றி

   Delete
 14. நகைச் சுவை ...
  கரும் நகைச்சுவை அந்த புலிவேசம் கட்டிய ஆள்...
  நிறய படிக்கணும் உங்கள்கிட்டே இருந்து

  ReplyDelete
  Replies
  1. நீங்களே 'நிகில்' டிரைனர் ,உங்களிடம்தான் நான் கத்துக்கணும் :)
   நன்றி

   Delete
 15. சிறைக்கஞ்சா சிங்கம்! :)))

  த.ம.ஆறு!

  ReplyDelete
  Replies
  1. சிங்கம்தான் ,ஆனால் செய்ற வேலை அசிங்கமா இருக்கே :)
   நன்றி

   Delete