27 November 2014

இது என்ன 36'' 24'' 38'' ஆ ,இன்ச் டேப்பில் அளப்பதற்கு ?

               ''டியூப் லைட் எரியுதான்னு பார்த்து வாங்கிற என் பையனைக் காட்டிலும் உங்க பையன் தெளிவா ,எப்படி ?''

                  ''டியூப் லைட்டைக் கூட இன்ச் டேப்பிலே அளந்து வாங்குவானே!''சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


பாரத ரத்னா வாங்கினால் நடிகை மார்க்கெட் போயிடுமா ?

             '' முதல் படத்திலேயே என் நடிப்புக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப் போறாங்களாம் ,என்ன செய்யலாம் அம்மா  ?''

              ''சம்பாதிக்கவேண்டிய இந்த வயசுலே பாரத ரத்னா விருதா...வேண்டாம்னு சொல்லிடும்மா !''சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...


பார் இல்லா பாருலகம் உண்டா?

''நீரின்றி அமையாது உலகுன்னு பாடிய வள்ளுவர் இன்னைக்கு வந்தா .......''

''என்ன பாடுவார்?''

''  'பார் 'இன்றி அமையாது  உலகுன்னுதான்  !''

 கால் வைத்தாலே கலவரம் !

நீதி கேட்டு நீண்ட பயணம் ...
பயண  வழியில் விழுந்தது நூறு பிணம் ...
தலைவர்  முடித்துக் கொண்டார் ...
பயண  இலக்கை அடைந்துவிட்டோம் என்று !

32 comments:

 1. ரொம்பச் சுதாரிப்பான பையன்தான்
  "விளங்க்கிடுவான் "
  ரசித்துச் சிரித்தேன்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. டியூப்லைட்டை அளந்து வாங்குறவனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கு ,அப்படித்தானே ?:)
   நன்றி

   Delete
 2. Replies
  1. முதல் வாக்குக்கு முதல் மரியாதை ,நன்றி !

   Delete
 3. கலவரம்.... அருமை.

  (நான் ஒரு டியுப் லைட்டுங்க..... புரியலை பகவான் ஜி )
  த.ம. 3

  ReplyDelete
  Replies
  1. போட்டவுடன் உடனே எரியிற மாதிரி டியூப்லைட்டுக்கும் எலக்ரானிக்ஸ் சோக் வந்தாச்சு ,இனிமேலும் யாரையும் டியூப் லைட்னு திட்ட முடியாதே ,சொல்லிக்கவும் முடியாதே :)
   நன்றி

   Delete
 4. பையன் ட்யூப் லைட்டை அளந்து வாங்குறான் சரி, ஆனா அதுக்கு தலைப்பு கொஞ்சம் எங்கேயோ உதைக்குதே!!!

  ReplyDelete
  Replies
  1. அளக்கப்பட வேண்டியது அதுதானே :)
   நன்றி

   Delete
 5. சிரிப்பு வரவில்லை
  பார் இன்றி
  வேதனை இது
  நமது கனிம வளத்தை கொள்ளை போகவிட்டு ...
  நிதி திரட்ட மக்களை மலடாக்குபவர்களை என்ன சொல்வது..

  ReplyDelete
  Replies
  1. டியூப் லைட் வாங்கும் போது அளந்து வாங்கினால் நமக்கு சிரிப்பு வராது ,பார்ப்பவர்களுக்கு தானே சிரிப்பு வரும் :)
   இந்த வேதனைதான் ,அரசின் சாதனையோ :)
   ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பான்னு எடுத்துக்க முடியலையே !
   நன்றி

   Delete
 6. Replies
  1. பையன் இன்ச் டேப்பும் கையுமா இருக்கிறதைப் பார்த்தால் .எதிர்காலத்தில் அழகிப் போட்டிக்கு நடுவரா வருவான் போலிருக்கே :)
   நன்றி

   Delete
 7. பார் இன்றி.....தலைவர் சாதனை வேதனைதானே ஜி

  ReplyDelete
  Replies
  1. அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காண்பதுதான் அரசியல்வாதிகளின் இலக்கணமோ :)
   நன்றி

   Delete
 8. வணக்கம்
  இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம6
  எனது பக்கம்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பக...:   

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்கள் பதிவை ரசிக்க வருகிறேன் ...என்னது ,ஆரத்தியா ...அதெல்லாம் வேண்டாம் ரூபன் ஜி :)
   நன்றி

   Delete
 9. அப்போ இனிமேல் என்னை யாரும் ரீப் லைற் என்று திட்டினால் கவலயே
  இல்லை இருக்கவே இருக்கு பதில் :))

  ReplyDelete
  Replies
  1. உங்களை யாராவது அப்படி திட்ட முடியுமா ?உங்கள் புத்தி கற்பூரப் புத்தியாச்சே :)
   நன்றி

   Delete
 10. ஆகா
  பார் இன்றி அமையாது உலகு
  உண்மைதான் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. போர் இன்றிகூட இருக்கும் .பார் இன்றி இருக்காதோ :)குடிகாரன் தானாய் திருந்தும் நாளும் வாராதோ?
   நன்றி

   Delete
 11. 01 அப்படீனாக்கா இஞ்ச் டேப்பே வாங்கப்போனா
  02 பாரத ரத்னா வேண்டாம்னு சொன்னதுக்கே கொடுக்கணுமே
  03 ‘’பார்’’ க்கு உள்ளே பாரீர் பாரத நாடுனு பாடுனது...
  04 அவரு வந்ததே கேத்த்துக்குதானே....

  த.ம 10

  ReplyDelete
  Replies
  1. 1.ஸ்கேலை கொண்டு போவானாய் இருக்கும் :)
   2.அந்த விருது கொடுக்கப் பட பலருக்கும் தரப் படவில்லை ,ஆனால் .......உங்களுக்கே தெரியும் :)
   3.இதில் பழம்பெரும் நாடுன்னு பெருமை வேறு :)
   4.நீதிதான் நாதியற்றுப் போச்சே :)
   நன்றி !

   Delete
 12. ட்யுப் லைட்டை அளந்து வாங்குறானா?? ரொம்ப ஓவரா இருக்கே. நான் நீளத்தை சொல்லல, அவன் புத்திசாலிதனத்தை மெச்சுறேன்!!!

  ReplyDelete
  Replies
  1. நாலடி டியூப் லைட் உயரம் கூட வளராத போதே இவன் இப்படின்னா ....நல்லா வருவான் :)
   நன்றி

   Delete
 13. ''டியூப் லைட்டைக் கூட இன்ச் டேப்பிலே அளந்து வாங்குவானே!''----அடேங்கப்பா எம்புட்டு அறிவு பிள்ளைக்கு......!!!

  ReplyDelete
  Replies
  1. குண்டு பல்பை வாங்கி வரச் சொன்னால் விட்டத்தை அளந்து பார்ப்பானோ :)
   நன்றி

   Delete
 14. இப்போதுதான் வர ஆரம்பித்திருக்கிறேன். புரிந்து கொள்ளும் தகுதி உடையவனாக மாறவேண்டும். வாழ்த்துக்கள். அதென்ன முந்தைய ஆண்டின் பதிவுகள்?

  ReplyDelete
  Replies
  1. இன்றைய உங்கள் பதிவில் ..கடவுளையே அற்புதமாய் புரிந்து கொண்டு பிளந்து கட்டியிருக்கிறீர்கள் ...உங்களுக்கா புரியாது ?
   இன்றைய தலைப்பு ,உங்களுக்கு புரிந்து இருந்தால் இளரத்தம் இன்னும் உங்கள் உடம்பில் ஓடுகிறது என்றுதானே அர்த்தம் ?
   பழைய பதிவுகள் போடக் காரணம் ,புதிய வரவான உங்களைப் போன்றவர்கள் படிக்கட்டும் என்ற நல்லெண்ணம்தான் :)
   நன்றி

   Delete
 15. அளந்து வாங்கும் அறிவே அறிவு!

  ReplyDelete
  Replies
  1. இப்படியெல்லாம் அறிவு அமைவது அபூர்வமாச்சே :)
   நன்றி

   Delete
 16. அளந்து வாங்கற பையன் விவரமானவந்தான்! நடிகையோட அம்மா சொல்றது சரிதானே! பாரின்று அமையாது உலகு நல்லா சொன்னீங்க! இன்றைய அரசியல் அவலத்தை சொன்னது கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இத்தனை பேர் இங்கே வந்தாக ,நீங்க மட்டும்தான் நடிகையோட அம்மாவுக்கு ஆறுதலா சொல்லி இருக்கீங்க ,அவங்க சார்பாவும் என் நன்றி !

   Delete