11 November 2014

பொன்மொழியைவிட பெண் உடல் மொழி பிடிக்கலாம் ?

-----------------------------------------------------------------------------------------

தற்கொலை நடிகைக்கு உருக்கமாய் ஒரு கவிதாஞ்சலி  ?

                ''அவர் கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
             ''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் ..அளவுக்கு அதிகமாய் தூக்கமாத்திரையை உண்டு ..துக்கத்தை ஏன் கொடுத்தாய்ன்னு எழுதி இருக்காரே !''சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தாயும் சேயும் செய்யும் ஒரே காரியம் ?

                ''தூளியிலே குழந்தை கத்தி கத்தி அழுவுறதைக்கூட கேட்காம 

உங்கம்மா ஹால்லே என்னடா பண்ணிக்கிட்டிருக்கா ?''
              
            ''டி வி மெகா சீரியலைப் பார்த்து அம்மா அழுதுகிட்டு  

இருக்காங்கப்பா !''

பொன்மொழியைவிட பெண் உடல் மொழி பிடிக்கலாம் ?

       ''தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொருவரும் கடுமையாய் உழைக்கணும் ,நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைக்கும் வெற்றியே நிலைக்கும் ,தன்னைத் தானே செதுக்கிக் கொள்வதில் உள்ள இன்பம் வேறெதிலும் இல்லை ,ஊட்டி விடப்படும் எந்த உணவிலும் சக்தி இல்லை ,ஒரு அரிசி என்றாலும் விதைத்து வளர்த்து ,அறுவடைசெய்து சாப்பிடு ,பிரபஞ்சத்தின் சுவையை அனுபவிப்பாய் !''
         இப்படி நெஞ்சைத் தொடும் விதத்தில் தந்தை சொல்லும் அறிவுரையை எத்தனைப் பிள்ளைகள் கேட்பார்கள் ?
ஆனால் ,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என வேத வாக்காய் ஏற்று சாதித்துக் காட்டிவுள்ளார் ஒரு பிரபல நட்சத்திரம் ...
அட்வைஸ் சொன்னவர் ...
இந்தியாவின் சார்பில் உலக அளவில் பேட்மிண்டன் பந்தாடியவர் !
அட்வைஸ்  கேட்டவர் ...
வாலிப நெஞ்சங்களை பந்தாடிக் கொண்டிருப்பவர் !
தந்தையின் பெயரை சொன்னால் ...
அப்படி ஒருவரை தெரியாதே என்பீர்கள் ...
மகளின் பெயரை சொன்னால் ...
இவரை தெரியாதவர்களும் இருக்கிறார்களா என்பீர்கள் ...
தந்தை பிரகாஷ் படுகோன் ????
மகள் தீபிகா படுகோன் !!!!
தீபிகா படுகோன் தன் ரசிக கண்மணிகளுக்கு ஒரு நல்ல காரியம் செய்வதாய்  இருந்தால் ...
 தந்தையின் பொன்மொழிவுடன் கூடிய ஆட்டோகிராப் போட்டோவைக்  கொடுக்கலாம் ...
ஆனால் ஒரேஒரு கண்டிஷன்...
அந்த போட்டோவிலாவது உடம்பை முழுவதும் மறைத்துக் கொண்டு போஸ்  கொடுத்து இருத்தல் நல்லது !


சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
தமன்னா ஞாபகம் இவருக்குமா?
                       ''மன்னா,மன்னான்னு அழைக்கக் கூடாதுன்னு அரசர் கட்டளை போட்டு இருக்காரே ,ஏன்?''

tamanna-cleaning-6                                                            
                   ''தமன்னா ஞாபகம் வந்து விடுகிறதாம் அவருக்கு!''


35 comments:

 1. 01. இந்த ரசிகருக்கு நைட் டூட்டி செக்யூரிட்டி வேலை போட்டால் சரியா வரும்.

  02. வீட்டில நடந்ததையெல்லாம் வெளியே சொல்லாதீங்க பகவான்ஜி

  03. நல்ல ட்ரெஸ் எடுத்தாலும் கிழிச்சுதான் போடனும்னு நடிகர் சங்க ரூல்சாமுள்ள....

  04. இந்த விசயம் நம்ம ரமணாவுக்கு தெரியுமா ?

  ReplyDelete
  Replies
  1. 1 நீங்க வேலைப் பார்க்கிற இடத்திலே இருந்தாச் சொல்லுங்க :)
   2. நடக்கப் போறது என்னான்னு தெரிஞ்சாலும் சொல்ல முடியலையே :
   3. அது நடிகைங்களுக்கு பொருந்தாதே :)
   4.முதல்வர் என்று அழைத்தால் ஏன் கோபம் வரப்போவுது :)
   நன்றி

   Delete
 2. அவர் சில்க் ஸ்மிதா காலத்து ரசிகராக இருப்பாரோ?

  அந்த குழந்தை நம்ம அம்மா இப்படி சிரியலைப் பார்த்து அழுகிறாங்களேன்னு வருத்தப்பட்டு அழுகிறது.

  ஆமா, உங்களுக்கு அப்படியென்ன தீபிகா மீது கோபம்?  ReplyDelete
  Replies
  1. அப்படி இறந்தது சில்க் ஸ்மிதா மட்டும்தானா :)

   தாயும் சேயும் அழுவுதுன்னு பெத்தவர் அழலையா :)

   தமிழில் தாராளம் காட்ட வரலியேங்கிற கோபம்தான் :)
   நன்றி

   Delete
 3. Replies
  1. ரசிக்கத்தக்க அறிவுரையை படித்தீர்களா ?
   நன்றி

   Delete
 4. முதலாவது ரசிக்க வைக்கிறது.

  இரண்டாவது அந்த அம்மாவைவின் மேல் கடுப்படிக்கிறது!

  அடுத்த இரண்டும் ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. நீங்களே கடுப்பானால்,வீட்டுக்காரர் என்ன செய்வார் ,பாவம் :)
   நன்றி

   Delete
 5. தமிழ்மணம் காணோமே...

  ReplyDelete
  Replies
  1. காலையில் காணோம் ,அப்புறம் வந்து விட்டது ,அதனாலே இன்னிக்கு வோட்டை நாளைக்குச் சேர்த்து போடுங்க :)
   நன்றி

   Delete
 6. Replies
  1. யாருக்கு என்று உங்களுக்குத்தான் தெரியுமே :)
   நன்றி

   Delete
 7. வெடிச்சிரிப்பு நகைச்சுவைகள்...
  பெண்ணெழில் அவள் தந்தையின் பொன்னெழில் மொழியை
  கைகொண்டால் நலமென சொல்லியிருப்பது மிக அருமை...

  ReplyDelete
  Replies
  1. எழில் எழில் என்று சொல்லி இருப்பதும் எழில்தான் :)
   நன்றி

   Delete
 8. மன்னா,மன்னான்னு அழைக்கக் கூடாது....தமன்னா ஞாபகம் ....
  ..Aha...ha!...
  எல்லாம் வாசித்துச் சிரித்தேன்.
  மிக நன்று...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. இருபத்தாறாம் புலிகேசியின் பரம்பரையில் வந்தவராய் இருப்பாரோ :)
   நன்றி

   Delete
 9. மன்னா.என்று அழைத்தால்..தாமன்னா.....ஞாபகம் வந்தவிடுகிற அவருக்கு..தமன்னா..என்று அழைத்தால் யார் ஞாபகத்தில் வருவார்கள்............????

  ReplyDelete
  Replies
  1. குப்பைத் தொட்டி ஞாபகம் வரும் ....தூய்மை இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று குப்பை அள்ளி இருக்கிறாரே !கொடுத்து வச்ச குப்பை :)
   அந்த கண்கொள்ளாக் காட்சியை 'மேலே போய் 'இப்போ கண்டு மகிழுங்கள் :)
   நன்றி

   Delete
 10. மூன்று ஜோக்குகளும் ரசிக்க வைத்தன! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சேய் பாலுக்கு அழுகையில் தாய் சீரியலுக்கு அழுவதை ரசித்தீர்களா :)
   நன்றி

   Delete
 11. தமிழ் 10 லோகோ பற்றி கேட்டிருந்தீர்கள்! சில நாட்களாக என் தளத்தில் தமிழ் 10 ஓட்டுப்பட்டை தென்படவில்லை! லோகோவும் மாறிவிட்டது. ஆனால் வேலை செய்யவில்லை! தொழில்நுட்ப பதிவர்கள் விளக்கம் சொன்னால் நன்றாக இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. என் தளத்தில் ,உங்கள் தளத்தில் வந்திருக்கும் புது லோகோ வரவில்லை ..இருந்தாலும் தமிழ்10 தளத்திற்கு சென்று பழைய முறைப் படி இணைக்க முடிகிறது .நீங்களும் இணைக்கலாமே !
   நன்றி

   Delete
 12. முதல் இரண்டு ஜோக்குக்கு அழுகை தான் வருது:(((
  மூணாவது தத்துவ முத்து!!
  நாலாவது:))))))))))))))))))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் அழுகை எப்போ நின்னுச்சு :)
   இந்த முத்தை மனசுலே கோத்துக்கலாம்:)
   இப்போ கடைசியா போட்ட படத்தைப் பார்த்தீர்களா ?
   நன்றி

   Delete
  2. ஒ! தூய்மை பாரதமா???

   Delete
  3. குப்பைக்கு அழகான குட்பை ?

   Delete
 13. த ம 1 போட்டேன் தவறி விட்டத்து கருத்துச்சொல்ல. தடங்களுக்கு வருந்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இதென்ன ஜோக்காளிக்கு வந்த சோதனை ?காலையில் தமிழ்மண பட்டையேவரவில்லை ,இப்போ என்னடான்னா போட்ட ஓட்டும் தவறுது..கூகுள் ஆண்டவர்தான் மனசு வைக்கணும் :)
   நன்றி

   Delete
 14. அந்த ரசிகன் என்னமா சிந்திக்கிறான்...
  தீபிகா படுகோனே படுகிளாமரா இருந்தாத்தானே ஆட்டோகிராப் வாங்கச் சொல்லும்...
  மெகா சீரியல் எல்லோரையும்தான் கெடுக்குது... இங்க அறையில ஒருத்தர் வாரத்தில் ஒரு நாள் இரவு ஒரு மணி வரை விடாம நாதஸ்வரம் வாசிக்கிறார்.
  தமன்னா நிபகமா... ஹன்சிகா, அனுஷ்கா வந்தா நல்லாயிருக்கும்...

  கில்லர்ஜி அண்ணா மாதிரி கருத்துப் போட்டுப் பார்த்தேன்,...
  அனைத்தும் அருமை ஜி.

  ReplyDelete
  Replies
  1. நடிகையை நினைத்து மட்டும்தான் சிந்திப்பான் போலிருக்கு !:)

   நம்ம பதிவர் சந்திப்பில் புத்தகம்வாங்கி .அதை எழுதியவர்களிடம் நான் கையெழுத்து வாங்கினேனே அது ஆட்டோகிராப் வராதா :)
   நாதஸ்வரத்தில் ஸ்வரத்தை மாற்றி பாடச் சொல்லுங்க ,அவங்க மட்டுமில்லே ,பாம்பாரும் வருவார் :)

   வழிகாட்டிய கில்லர்ஜிக்கும் ,வழிமொழிந்த உங்களுக்கும் நன்றி !

   Delete
 15. தூக்கம் தந்தவள் துக்கம் தந்தாளா?
  தாயும் சேயும் அழுவதை நிறுத்த மாட்டாங்களோ?
  பொன்மொழியை விட பெண்ணுடல் மொழி பிடிக்காதோ?
  மன்னான்னு அழைத்தால் தமன்னா ஞாபகம் வருமா?
  நல்லா அலசி உள்ளீர்கள்...
  சிறந்த நகைச்சுவைப் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தூக்கத்தை கெடுத்தவள் போய் சேர்ந்தாலேன்னு சந்தோசப் படுறதை விட்டுட்டு இதென்ன ஒப்பாரி :)

   யாருக்கு பிடிக்காதோ :)

   அஞ்சலின்னா எந்த எலி ஞாபகம் வரும்னு தெரியலே :)
   நன்றி

   Delete
 16. ஹாஹாஹஹஹ....எல்லாமே!

  இரண்டாவது தானே இப்போ நடந்துகிட்டு இருக்கு! ஜி!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு மெகாபோபியா என்று பெயர் வைக்கலாமா :)
   நன்றி

   Delete
 17. its badminton... not tennis

  ReplyDelete