13 November 2014

அஞ்சு பெண்டாட்டியா ,அடி ஆத்தீ !

வரவுக்கும் செலவுக்கும் சரியாகுமோ ?

                           ''உள்ளங்கை அரிக்குதுன்னு காட்டினா , யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''
                       ''யார் என்ன சொல்றாங்க ?''
                   ''ஜோதிடர் வரவு வரும்னும் ,டாக்டர் வைத்தியச் செலவு வரும்னும் சொல்றாங்களே !.

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

குறையைக் கூட நிறைவாய் சொல்பவர் !

              ''என்னங்க ,நம்ம புது வீட்டில் மாடிப்படி  இல்லாததை  உங்க நண்பர் நாசூக்கா சுட்டிக் காட்டிட்டு போறாரா ,எப்படி ?''
                     ''வீட்டுக்கு வீடு வாசப்படி மாதிரி வீட்டுக்கு வீடு மாடிப் படி தேவை இல்லேங்கிறதை புரிஞ்சுகிட்டாராம் !''

அஞ்சு பெண்டாட்டியா ,அடி ஆத்தீ !

நான் அவனில்லை பட பாணியில்...
ஐந்து பெண்களைஏமாற்றி கல்யாணம் செய்து கொண்டதாக கைதாகி யுள்ளார்...
சினிமாப் பட டைரக்டர் ரவி தம்பி என்பவர் !
அவர் பத்தாவது படிக்கும் போதே ஒன்பதாவது படிக்கிறப் பெண்ணை காதலித்தாராம் ...
அந்தப் பெண்ணை கட்டிக்கிட்டு கை விட்டாரா ,இல்லை...
சும்மாவே கை விட்டாராவென்று தெரியவில்லை ...
படித்தது பத்தாவதுதான் என்றாலும் ...அரசியல்வாதிகளுக்கு 'டபுள் MA'வேலையும் பார்த்தவராம் ...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு உள்நாட்டில் கூட வேலை வாங்கி தராமல் ஏமாற்றியும் உள்ளாராம் ...
நெய்யூர் என்ற ஊர்க்காரர் ஆகையால் பெண்களிடம் நெய்யாகப் பேசி ஏமாற்றியுள்ளார் ...
லட்சக்கணக்கில் வரதட்சணைப் பணத்தையும் ,சீர்வரிசை நகைகளையும் எடுத்துக் கொண்டு 'எஸ்கேப் 'ஆகி விடுவாராம் ...
இவர் இயக்கிய 'வாச்சாத்தி 'படத்தைப் பார்த்து சொல்லமுடிய விட்டாலும் ...
இவர் லீலைகளைப் பார்த்து சொல்ல முடிகிறது ..'அடி ஆத்தீ '...'
கடலும் கடல்சார்ந்த குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ...
ஆனால் உடலும் உடல் சார்ந்த விசயங்களை உள்ளடக்கியே படங்களை எடுத்தவர் ...
டெல்லி மாணவி பாலியல் பிரச்சினையை மையப் படுத்தி தற்போது இவர் எடுக்கும் படத்திற்க்கு பெயர் ...
தடை செய்யப்பட்ட இடமாம் ...
இப்போது இவரே தடை செய்யப்பட்ட இடத்திற்கு  சென்றுவிட்டார் ...
சினிமா மோகத்தால் இவரிடம் ஏமாந்தவர்களின் பட்டியல் இனியும் தொடரும் ...
ஏன் இப்படி செய்தீர்கள் என்று இவரிடம் கேட்டால் ...
சினிமாவில் வெற்றி பெறும் வரை எனக்கு பெண் தரத் தயங்கிய இந்த சமூகத்தை பழிவாங்கவே இத்தனை திருமணங்களை செய்துக் கொண்டேனென்று 'பூசி மொழுகுவார் '...
ஆரம்பக் காலத்தில் கொத்தனார் வேலைப் பார்த்தவர் ஆச்சே !


சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தின 'சிரி 'ஜோக்!!! அழகை ரசித்தால்

               ''அழகை ரசித்தால் ' மெய் மறந்து போகுது டாக்டர்!''
            ''எப்படி?
           ''ஊசியை  நீங்க போட்டா வலிக்குது ,உங்க நர்ஸ் போட்டா வலிக்க மாட்டேங்குதே!


36 comments:

 1. ரசித்தேன்..

  நர்ஸே ஊசி போடனும் போல

  ReplyDelete
  Replies
  1. ஜொள்ளுப் பார்ட்டிக்கு மட்டும்தான் வலிக்காதுன்னு நினைக்கிறேன் ,ஏன்னா ,எனக்கு வலிக்குதே :)
   நன்றி

   Delete
 2. நெய்யூர் என்ற ஊர்க்காரர் ஆகையால் பெண்களிடம் நெய்யாகப் பேசி ஏமாற்றியுள்ளார் ... அது சரி...
  வாச்சாத்தி இவரா... அடி ஆத்தி...

  சிரிப்பூக்கள் அருமை...
  எங்கங்க நர்செல்லாம் இப்போ வலிக்கிற மாதிரித்தான் ஊசிபோடுதுக...

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா ,நீங்களும் என்னோட சேர்த்தி :)
   நன்றி

   Delete
 3. 01. ஸோசிருகிட்டே புடுங்கி வைத்தியரு கிட்டே அழுக வேண்டியதான்.

  02. வீட்டுக்கு கதவு இருக்குல அதுபோதும்.

  03. இவங்கே இப்படித்தான் பாஸூ Aமாத்திக்கிட்டே இருப்பாங்கே...

  04. ஊசிய முழங்கையில போட்டா தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. 1.நம்மகிட்டே வாயைப் பிடுங்கிறவரிடம் காசைப் பிடுங்க முடியுமா :)

   2.அதுலே பூட்டு ரொம்ப முக்கியம் :)

   3.ஏமாற ஆளிலிருக்கப் போய்தானே::)

   4.ஏன், நகக்கண்ணிலே போட்டுப் பார்க்கலாமே :)
   நன்றி

   Delete
 4. உள்ளங்கை அறித்தால் - வைத்தியச் செலவு தான் - விட்டமின் B12 பற்றாக்குறை.

  உங்களுடைய சொந்த அனுபவம் சூப்பர் (கடைசி இரண்டில் ஒன்று, எது அது என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்)

  ReplyDelete
  Replies
  1. கட்டியவளுக்கு அனத்தம் என்று சினிமா படத்தில் காட்டினார்களே ,அது பொய்யா :)

   குறையைக் கூட நிறைவாய் சொல்பவர் !..இது மட்டும்தான் என் அனுபவம் :)
   நன்றி

   Delete
 5. அடி..ஆத்தீ...அஞ்சு பொண்டாட்டி...டீயா........... அடுச்சா..இப்படியில..அடிக்கனும்...........

  ReplyDelete
  Replies
  1. அவர் ரவி 'தம்பி 'இல்லே ,நமக்கெல்லாம் அண்ணனாய் இருப்பார் போலிருக்கே :)
   நன்றி

   Delete
 6. ஜோக்ஸ் கலக்கல்! அஞ்சு பேரை ஏமாத்திய டைரக்டர் அதிர்ந்து போனேன்!

  ReplyDelete
  Replies
  1. இவர் வண்டவாளம் மட்டும்தான் வெளியே வந்துள்ளது .கோலிவுட்டில் மாட்டிக்காமல் இருப்பது இன்னும் எத்தனை பேரோ :)
   நன்றி

   Delete
 7. கடைசி குசும்புத் துணுக்கு சூப்பர்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் இது என் குசும்பு இல்லே :)
   நன்றி

   Delete
 8. 1. 50 - 50

  2. ஹா...ஹா...ஹா... இதுக்கு மாடிப்படி மாது என்ன சொல்வார்?

  3. ஒரு "பாவி"யின் கதைச்சுருக்கம்!

  4. இப்படி கூட ஒரு ஜொள்ளா?

  ReplyDelete
  Replies
  1. 1.அப்படின்னா கையிலே எதுவும் தங்காது :)
   2.அவர் கண்ணுலே இது படட்டும் :)
   3.விசேஷம் என்னன்னா ,இவர் வாச்சாத்தியில் நடந்த கொடுமையைப் பற்றி படம் எடுத்து இருப்பதுதான் !
   4.ஜோள்ளர்கள் பலவகை :)

   நன்றி

   Delete
 9. கை வைத்தியமா பார்த்த செலவு கம்மியா இருக்குமில்ல??

  ReplyDelete
  Replies
  1. hand wash மட்டுமே போதும்னு சொல்றீங்களா :)
   நன்றி

   Delete
 10. //யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலே !''//

  ஜோதிடம் புருடா. டாக்டர் சொல்வதை நம்பலாம்.

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,டாக்டர் இதுக்கு ஸ்கேன் எடுக்கச் சொன்னா என்ன செய்றது :)
   நன்றி

   Delete
 11. //உங்க நர்ஸ் போட்டா...//

  நர்ஸ்ஸுக்கு முன்னால ‘அழகான’ சேர்த்துக்கலாமா?

  ReplyDelete
  Replies
  1. அழகான சேர்த்துக்கலாம் ,லேடின்னு சேர்த்துக்கலாமா என்பதை நீங்களே முடிவு பண்ணிக்குங்க ,பரமசிவம் ஜி :)
   நன்றி

   Delete
 12. பகவான்ஜி கவனிச்சீங்களா ? கருத்துரையாளர்கள் ஊரை...
  01. தேவகோட்டை
  02. தேவகோட்டை
  03. தேவகோட்டை
  04. காரைக்குடி

  கலக்குங்க, கலக்குங்க,,,

  ReplyDelete
  Replies
  1. இருக்கும் இடம் வேறாய் இருந்தாலும் மண் மணம் வீசுதே ,எங்கிருந்தாலும் வாழ்க :)
   நன்றி

   Delete
 13. மெய் மறந்துவிட்டேன்....ஓட்டுப்போட.அப்புறம் சுதாரிச்சு போட்டாச்சு . தம 4

  ReplyDelete
  Replies
  1. மெய் மறக்கலாம் ,மொய் மறக்கக்கூடாதே;)
   நன்றி

   Delete
 14. நர்ஸ் ஊசி போட்டா..வலிக்க..மாட்டுதா...அரசு ஆஸ்பத்திரி நர்ஸ்கிட்ட போனதில்ல..போலிருக்கு.....அங்க ஒருவாட்டி போயிட்டு வாங்க...அப்பத் தெரியும்......

  ReplyDelete
  Replies
  1. அங்கே ஆம்பளை நர்ஸ் போட்டாலே நல்லாத்தான் இருக்கும் :)
   நன்றி

   Delete
 15. பகவான்ஜி சந்தோஷமான விசயம் நான் தமிழ் மணம் ஓட்டுப்போட்டேன் (எனக்கு 18 வயசு முடிஞ்சுபோச்சு) தங்களுக்கு வாழ்க்கையில் முதல்முறையாக இன்றுதான் அதுவும் பகவானுக்கு . த.ம.1

  ReplyDelete
  Replies
  1. பதினெட்டு முடிஞ்சு போச்சா ,இனிமே 'அந்த 'மாதிரி தளங்களுக்கு எல்லாம் போகக்கூடாது ,வழக்கம்போல் என் மொக்கைகளைப் படித்து தொடர்ந்து வோட்டு போடணும் சரியா :)
   உங்க தளத்தில் தமிழ்மணப் பட்டையை என்னைக்கு இணைக்கப் போறீங்க ?எனக்கும் பதினெட்டு வயசாச்சு ,நானும் வோட்டு போடணுமில்லே ?
   நன்றி

   Delete
 16. எப்படி பாஸ் இப்படி எல்லாம் ஜோசிக்க முடியுது!ஹீ ஆனாலும் நேஸ் ஊசி போட்டால் வலிக்காத்துதான்!ஹீ

  ReplyDelete
  Replies
  1. நீங்க நைஸ்னு சொல்றது ஊசியையா,ஊசி போடும் கையையா :)
   நன்றி

   Delete
 17. ஹஹாஹஹ் இரண்டுபேருமே திருடங்கள் தானே!

  ஹஹ்ஹஹ்ஹ மாடிப்படிமாது படம் நினைவுக்கு வந்தது!

  இப்படியான நிகழ்வுகள் தானே நம் இயக்குனர்களுக்குத் தீனி போடுகின்றன. அன்றே நம் இயக்குனர் சிகரம் எடுத்துவிட்டாரே! அப்படிப் பார்க்கும் போது அன்றும் நிலைமை இப்படித்தன் இன்றும் இப்படித்தான்...அப்போ காலம் மாறினாலும் இது மாறவைல்லை.....சமூகம் அதுவேதான்...

  ஹஹ்ஹஹ....நர்ஸ் ஜொள்ளுத் தாங்கலப்பா...


  ReplyDelete
  Replies
  1. மக்களை ஏமாற்றுவதில் ஆளாளுக்கு போட்டி போடுவது நியாயமா :)

   ஹாஸ்ய திலகம் சந்திர பாபுவின் படம்தானே அது ?

   நான் அவனில்லை நம்பர் இரண்டுகூட வந்தது என்றால், இந்த விஷயம் நல்ல தீனிதான் என்று அர்த்தம் ?

   இவர் வழிவதைப் பார்த்து ,ஊசியை குத்தாமகூட விட்டு இருப்பாங்களோ அதனாலேதான் வலிக்கலையோ :)
   நன்றி

   Delete
 18. அஞ்சு பெண்டாட்டியா ,அடி ஆத்தீ! என்கிறீர்
  அடுத்து
  ஊசியை நர்ஸ் போட்டா வலிக்க மாட்டேங்குதே! என்கிறீர்
  நல்லாயிருக்கு
  தங்கள் நகைச்சுவை!

  ReplyDelete
  Replies
  1. ஊசியைக் குத்தினால் மட்டுமே ,அடி ஆத்தி வலிக்குதேன்னு சொல்லணுமா:)
   நன்றி

   Delete