18 November 2014

சம்சார ஆசை அவருக்கு இன்னும் குறையலே!

--------------------------------------------------------------------------------
 இரண்டுமே பரம்பரையாய் தொடருதே !             

         ''என்ன சொல்றே ,உங்க தாத்தா பணமும் கொடுத்து ,செலவும் கொடுத்துட்டு போயிருக்காரா ?''
                ''ஆமா ,சொத்தும் கொடுத்து ,சர்க்கரை நோயையும் கொடுத்துட்டு போயிருக்காரே !''



சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


சம்சார ஆசை இன்னும் அவருக்கு குறையலே!

              ''என் வீட்டுக்காரர் மாலை போட்டுகிட்டார்,உன் வீட்டுக்காரர் போட்டுக்கலையாடீ ?''

             ''ஹும்...அவராவது போட்டுக்கிறதாவது ,இன்னொருத்தி கழுத்துலே வேணுமானா மாலை போட நினைப்பார் !''

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...


ரஜினி மட்டுமா கோச்சடையான் ?

            ''மதுரைக்காரங்க எல்லாரும்    

கோச்சடையான்கள்தான்னு 

சொல்றீங்களே ,எப்படி?''

               ''பல வருசமா கோச்சடையில்  இருந்து வர்ற 

தண்ணீரை குடிச்சிட்டுத்தானே  அவங்க 


வாழ்ந்துகிட்டு இருக்காங்க !''



நேற்றைய 'சிரி ' கதையை  பலரும் ரசித்ததால் ...இதோ அடுத்து ஒன்று ......

-------------------------------------------------------------------------------------------------
அடுத்து நடந்தது என்ன ? தெரிஞ்சுக்க நாளைக்கு இதே இடத்திற்கு  வாங்க !












































32 comments:

 1. பாட்டன் சொத்து பேரனுக்கு சொந்தம் என்கிற மாதிரி, பாட்டன் வியாதி பேரனுக்கும். இது தான் சரியான நியாயம்.

  அவருக்கு ஒரு மனைவியால் ஏற்படும் கஷ்டம் போதாது போல...

  நேற்று சிறுகதை. இன்று தொடர்கதையா - நல்ல முன்னேற்றம்.

  ReplyDelete
  Replies
  1. இந்த நியாயம் என்றுதான் மாறுமோ ?ஜீன் வரிசையில் உள்ள பரம்பரை நோய் தரக்கூடிய செல்லை நீக்கிவிட்டால் பரம்பரை நோய் வராதென்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டார்களாமே :)
   நன்றி

   Delete
 2. Replies
  1. இப்படியும் மாலைப் போட நினைப்பாரா என்றுதானே அருமை என்றீர்கள் :)
   நன்றி

   Delete
 3. எந்த 'தப்பும்' செய்ய முடியாத சொத்து...!

  ReplyDelete
  Replies
  1. அதாவது வில்லங்கம் பார்க்கவே வேண்டாம் ,அப்படித்தானே :)
   நன்றி

   Delete
 4. அட. தொடர்கதை பாணியா...? தொடருங்கள். காத்திருக்கிறேன்.

  கோச்சடையான்.... ஹா ஹா ஹா....
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. தொடர் கதையில்லை,மூன்று நாள் தான் ...உங்க மூன்றுக்கும் நன்றி :)

   Delete
 5. ஹஹஹஹ. கோச்சடையான்...

  தொடர் கதை?!! ஜி?! சூப்பர்...தொடர்கின்றோம்....

  ReplyDelete
  Replies
  1. உண்மையான கோச்சடையான்கள் நாங்கதானே :)
   தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கத்திற்கு நன்றி !

   Delete
 6. கின்னஸ் இடம் பிடிக்கலைன்னாலும்...தமிழ் வலைப்பதிவு கின்னஸில் இடம் பிடித்துவிட்டீர்கள.. எல்லோரும் பகவானைத் தான் தேடுகிறார்கள். தாங்கள் எல்லோரும் நாளைக்கு இங்கு வந்து பாருங்கள் என்று ஆணை யிடடுள்ளீர்கள்... பகவானின் ஆணையை மதியார்தவர்கள் உண்டோ................

  ReplyDelete
  Replies
  1. நான் ஆணை இட்டால் யார் இங்கு வருவார் ,ஜோக்காளியின் மேல் உள்ள அன்பால் சேர்ந்த கூட்டம்தான் தானா வந்துக்கிட்டுதானே இருக்கு :)
   நன்றி

   Delete
 7. நான்கையுமே ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மாங்காய் மசியலுக்கு நான் மசியலேங்கிற வருத்தமா ,சுருக்கமா கருத்தை சொல்லி இருக்கீங்களே :)
   நன்றி

   Delete
 8. பரம்பரை சொத்தில் பங்கு முறைதானே!

  ReplyDelete
  Replies
  1. முறையான பங்குதான் என்றாலும் எங்க பாட்டன் சொத்து என்று பெருமையாய் சொல்லிக்க முடியாதே :)
   நன்றி

   Delete
 9. ஜோக்ஸ் மூன்றும் சூப்பர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கதையை நேரம் கிடைக்கையில் படிச்சு கருத்தைச் சொல்லுங்க ஜி !
   நன்றி

   Delete
 10. உங்க தாத்தா
  எல்லாவற்றோடும் சர்க்கரை நோயையும்
  கொடுத்துட்டு போயிருக்காரே!
  அவரா?
  இன்னொருத்தி கழுத்துலே
  மாலை போட நினைப்பாரா?
  கேக்காத காதும் கேட்குமா?
  அடுத்து நடந்தது என்ன? - அதை
  தெரிஞ்சுக்க - நாளைக்கு
  இதே இடத்திற்கு வருவேனங்க!

  ReplyDelete
  Replies
  1. தாத்தா கொடுக்க வேணாம்னு நினைச்சாலும் சரியா பரமபரைக்கு பங்கு பொய் சேர்ந்திடுதே:)
   புருஷனை அறிந்த பத்தி விரதை சொன்னா சரியாத்தானே இருக்கும் :)
   எப்படி காது கேட்டதுன்னு அறிய ஆவலாய் உள்ளதா ,நாளையும் தொடருங்க; )
   நன்றி

   Delete
 11. 01. பரம்பரை வியாதி பம்பரமாக சுழல்கிறதோ...
  02. மாலை போடுறது தப்பில்லை மாலையை அறுக்காம இருந்தால் சரி.
  03. ஆமாவுல இவுகளும் அப்படித்தான்.
  04. கதை கேட்க காதை வைத்து காத்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. 1.சாட்டை சுற்றாமலே சுழலும் பம்பரமாச்சே இது :)
   2.மாலை மாற்றாளுக்கு போனால் ,முதல் மாலை கழுத்தை அறுக்கத்தானே செய்யும் :)
   3.கோச்சடையான்கள் ஆமாம் சாமிகளா :)
   4 காதை.தீட்டிக் கொண்டிருங்க :)
   நன்றி

   Delete
 12. எல்லாமே அருமை. எங்க புடிக்கீறீங்க? உங்க தாத்தா கொடுத்த சொத்தோ ?நகைச்சுவை.

  ReplyDelete
  Replies
  1. தாத்தா கொடுத்த சொத்தில்லை ,இது எங்க பாட்டி சொத்து :)
   நன்றி

   Delete
 13. பழைய, புதிய நகைச்சுவைத் துணுக்குகளை ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கதை அளக்கத்தான் கூடாது ,கதைப் படிக்கலாம் இல்லையா ,அய்யா :)
   நன்றி

   Delete
 14. இப்பத்தான் புரியுது கோச்சடை தன்னிய குடிச்சு புட்டுதான் கோ....சடையானா இருக்காங்கன்னு

  ReplyDelete
  Replies
  1. மதுர மக்களையா இப்படி சொல்றீங்க ,நாமளும் இங்கேதானே இருக்கோம் :)
   நன்றி

   Delete
 15. சர்க்கரை வியாதியை கொடுத்தவர் , இன்சுலின் வாங்கும் பொருட்டு சொத்தையும் வைத்து விட்டு ப் போன கரிசனம் தான் என்னே !

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் தாத்தா பேரனுக்கு வேண்டாட இந்த சொத்தையும் கொடுத்திருக்காறான்னு பார்த்துத்தான் பொண்ணைத் தரணும் போலிருக்கே :)
   நன்றி

   Delete
 16. சிரிப்ஸ் அருமை...
  கதையில் மேக்லா சூப்பருங்கண்ணா...
  ஆவலாய் காத்திருக்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. எல்லோர் வீட்டிலும் ஒரு 'மேக்லா' இருக்கத்தானே செய்கிறார்கள் ?
   நன்றி

   Delete