19 November 2014

உறவிலேயே கட்டிக்கிட்டதால் ....!

              ''உறவிலே திருமணம் ,பின்னாலே பிரச்சினைன்னு  நான் சொல்லும் போது கேட்கலே ,இப்ப பாருங்க ...மூக்கே இல்லாமே உங்களுக்கு பிள்ளைப் பிறந்து இருக்கான் !''
            ''பின்னாலே பிரச்சினை வரும் என்றால் ஃபைல்ஸ் வரும்னு நினைச்சேன் ,முன்னாலே  இப்படி பிரச்சினை  வரும்னு நினைக்கலே ,டாக்டர் !''

 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

'டாஸ்மாக்'கை மூடினா இவருக்கு லாபம் !

                       ''குற்ற எண்ணிக்கை குறையுங்கிற நோக்கத்திலே ,டாஸ்மாக் மதுக் கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரம் சொல்றது நியாயம் தானே ?''
                   ''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு அவர் அப்படி சொல்றாரு !''
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

'மூணு வருசத்திலே டிகிரி வாங்கியது அந்த காலம் !

'                               ''உங்க பையன் மூணு வருச படிப்பை வெற்றிக்கரமா  முடிச்சிட்டான்னு சொல்றீங்க ,வேலை ஏதும் தேடுறானா ?''
                  ''அட நீங்க வேற ,அவன் படிச்சு  முடிச்சது prekg ,Lkg ,Ukg தான் !''

'சிரி'கவிதை !கண்ணுக்கு குளிர்ச்சி அவள் !

ஊட்டியிலும்  இல்லை 
நகரும் பூந்தோட்டம் .....
ஸ்கூட்டியில் என் ஸ்வீட்டி !
---------------------------------------------------------------------------------------------------------------------

நேற்றைய 'சிரி'கதையின் தொடர்ச்சி.......

கேட்காத காதும் கேட்கும் !


----------------------------------------------------------------------------------------------------------------------------
                        அப்பாவுக்கு  காது  எப்படி கேட்க ஆரம்பித்து விட்டது ,எப்படி  என்பதை நாளைக்கு நீங்க தெரிஞ்சுக்குங்க !

  

46 comments:

 1. ரசித்தேன்.....

  கதை சுவாரஸ்யம்..
  தங்கள் நடையல்லவா...கேட்கவா வேணும்
  நாளை எதிர் நோக்கி...

  இது போல் நகைச்சுவை கதைகள் எழுதுங்கள்..ஐயா
  தம 1
  நாளை வந்து போடுகிறேன். நீங்கள் இன்னும் சம்மிட் பண்ணாததால்.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் உறுதி மொழிக்கும் ,ரசனைக்கும் நன்றி !

   Delete
  2. த.ம சேர்த்து விட்டேன்.

   Delete
  3. நன்றி ,நன்றி !

   Delete
 2. மூணு வருஷ படிப்பு சூப்பர் ஜி. அப்புறம் அந்த கவிதை அருமை.
  தொடர்கதை நீண்டுக்கொண்டே போகிறதே?

  ReplyDelete
  Replies
  1. மூன்று வருஷ படிப்பு மாதிரி ,கதை மூன்று நாள் தொடர்தான் ,அதற்கு மேலும் நீளாது :)
   நன்றி

   Delete
 3. அருமை ஜி ...
  தொடர்கதை தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. நீண்ட தொடரைப் படிக்க பலருக்கும் நேரம் இருக்காது என்பதால் ,மூன்று பாகமாய் வருகிறது ,நாளைக்கு முடிந்து விடும் :)
   நன்றி

   Delete
  2. சரிதானே ,நீண்ட பதிவுகளைப் படிக்க எனக்கே நேரமில்லை ,உங்களையும் தொல்லை பண்ணக்கூடாதுங்கிற நல்ல எண்ணம்தான் :)
   நன்றி

   Delete
 4. வணக்கம்
  நன்றாக உள்ளது இரசித்தேன்... தொடர் கதையும் நல்ல நகைச்சுவை கலந்த பாணியில் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிகப் பெரிய கடமையை ,கவிதைப் போட்டி முடிவை அறிவித்து முடித்து வந்ததற்கு நன்றி !

   Delete
 5. Replies
  1. ரசித்து போட்ட வாக்குக்கும் நன்றி :)

   Delete
 6. Replies
  1. ரசித்து விட்டு ,சொல்லாமல் போட்ட வாக்குக்கும் நன்றி :)

   Delete
 7. 1. புரியவில்லை. இருந்தாலும் ஒரு சந்தேகம். பெண் நிலவில் கிடந்த பெண்ணாக இருந்திருப்பாளோ! :)))

  2. என்ன ஒரு பரந்துபட்ட பொதுநலச் சுயநலம்!

  3. சரிதான்!

  ReplyDelete
  Replies
  1. 1,புரியும்விதமா சின்ன மாற்றம் செய்து இருக்கிறேன் ,பெண் நிலவில் கிடந்த பெண்ணாக இருந்திருப்பாளோ! :)))என்பதுதான் இப்போ எனக்கு புரியலே :)
   2 ருசி பார்த்த பூனையாச்சே :)
   3.பச்சைப் புள்ளேயே இப்படி படுத்துறாங்களே :)
   நன்றி

   Delete
  2. //பெண் நிலவில் கிடந்த பெண்ணாக இருந்திருப்பாளோ! :)))என்பதுதான் இப்போ எனக்கு புரியலே :)//

   எங்கள் ப்ளாக்கின் 'நிலவில் கிடந்த பெண்' படிக்கவில்லையா? நிலவில் கிடைத்த பெண்ணுக்குத்தான் மூக்குத் துவாரங்கள் இல்லை என்று சொல்லப்பட்டிருந்தது. அதைத்தான் சொன்னேன்!

   Delete
  3. //புரியும்விதமா சின்ன மாற்றம் செய்து இருக்கிறேன்//

   படித்தேன், புரிந்து கொண்டேன்! :)))

   Delete
  4. நானும் நிலவில் கிடந்த பெண்ணை தேடிப் பார்க்கிறேன் :)

   Delete
  5. ஸ்ரீ ராம்ஜி .ரட்லேஜ் சொன்னதை .....(.அவர் அங்கு பார்த்த அந்தப் பெண் உடல் உயிருடனும் இல்லையாம். சாகவும் இல்லையாம். ஆறு விரல்கள் இருந்ததாம். மூக்குத் துவாரங்கள் இல்லையாம். அவர் 'அதை' பூமிக்குக் கொண்டு வந்து, அது இன்னமும் எங்கேயோ உயிருடன் இருப்பதாக வேறு சொல்கிறார்.)
   இதை படித்தேன் இப்படியும் ஒரு அறிவுஜீவியான்னு வியந்தேன் :)

   Delete
 8. தொடர்கதையை நாளை வந்து முழுசா படுச்சுகிறேன்:))
  ஸ்கூட்டி செம நாட்டி:))

  ReplyDelete
  Replies
  1. வந்திருக்கும் எல்லா கமெண்டையும் அடுத்த நாள் சேர்த்து படிப்பதுதானே உங்க பாணி ?;)
   நன்றி

   Delete
  2. எப்டி பாஸ்!! கொஞ்சம் ஓவரா தான் இருக்கும்.but இந்த நிமிஷம் தோணினதை சொல்லுறேன்.ஒரு அம்மா பரிமாறும்போது தன் குழந்தை எதை விரும்பி சாப்பிடுகிறது என்பதை அறிந்து வைத்திருப்பாள் இல்லையா, அதுபோல ஒரு dedication உங்க readers கிட்ட காட்டுறீங்க!!!! கிரேட் பாஸ்!! அதுனால தான் தம ரேங்க் #1!!

   Delete
  3. இப்பதான் ஊட்டுக்கார அம்மா சத்தம் போட்டுட்டு போனாக ,ஜோக்காளிச் சனியனை விட்டுட்டு வாங்கன்னு ....நாமதான் த ம ஒண்ணு கிரேட்னு நினைக்கிறோம் :)

   Delete
 9. அலுவலகம் கினம்பி விட்டேன் பிறகு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வேலை முடித்து மாலை வேளையில் மீண்டும் வந்தமைக்கு நன்றி :)

   Delete
 10. ஹஹ்ஹஹ...

  ப்ரீகேஜி, எல்கேஜி, யுகேஜி....ஹஹாஹஹ்ஹ ஆனா இப்ப அப்படித்தான் இருக்கு ஜி!

  கதை சுவாரஸ்யம்....எப்படிக் காது கேட்டது அறிய ஆவலாக இருக்கின்றோம்...ஜி!

  ReplyDelete
  Replies
  1. (சிகிச்சை) தொடர்கிறது ,நாளைக்கு காது அவருக்கு கேட்கத்தொடங்கி விடும் :)
   நன்றி

   Delete
 11. கலவர நாயகன் மருத்துவர் கொய்யாதான் ,ஒங்க ஒறுவுக்குள்ள திருமணம் முடித்துக்கொள்ளுங்கள்ன்னு ..காதலுக்கு தடைபோட்டுருச்சு.....

  ReplyDelete
  Replies
  1. காதலை தடை செய்ய எந்த கொய்யாவால் முடியும் :)
   நன்றி

   Delete
 12. சுவார(ஹா)ஸ்யமான கதையுடன் மூன்று நகைச்சுவை துணுக்குகளும் ரசிக்க வைத்தன! சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நான்தான் two in one பதிவு போடுகிறேன் என்றால் நீங்கள் கமெண்ட்டும் போடுகிறீர்களே :)
   நன்றி

   Delete
 13. 01. பிறந்த குழந்தைக்கு ஃபைல்ஸ் வரும்னு சொல்றதுல உண்மையில்லையே...
  02. உண்மையை உளறிட்டாரே...
  03. 100க்கு100 உண்மைதான்.
  04. உண்மையை சொல்லுங்க, ஸ்கூட்டியில கூட்டிட்டு வந்த ஸ்வீட்டி யாரு ?
  05. உண்மைச் சம்பவமா ? பகவான்ஜி

  ReplyDelete
  Replies
  1. 1.ஃ பைல்ஸ் மட்டுமில்லே பலதும் வரும்னு சொல்றாங்களே :)
   2.அவரும் டாஸ்மாக் பிரியரோ :)
   3.தேர்விலும் அவர்கள் நூற்றுக்கு நூறுதான் :)
   4..பின் பக்கமா பார்த்தால் யாரென்றே தெரியலே :)
   5.நாளைக்கு தெரிந்து விடுமே ,உண்மையா இல்லையா என்று :)
   நன்றி

   Delete
 14. கதையும் நன்று! மாமூல் கதையும் நன்று!

  ReplyDelete
  Replies
  1. இதை மாமூலா எல்லோரும் சொல்ற வார்த்தைன்னு எடுத்துக்கிறேன் :)
   நன்றி

   Delete
 15. அனைத்தையும் படித்துச் சிரித்தேன்.
  தொடருக்குக் காத்திருக்கிறேன் பகவான் ஜி.

  ReplyDelete
  Replies
  1. காத்திருங்கள் ,காலங்கள் போகாது ,நாளையே முடிவு தெரிந்துவிடும் :)
   நன்றி

   Delete
 16. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் குழலின் இன்னிசையை ரசித்தேன் நம்பிஜி :)
   நன்றி

   Delete
 17. நகைச்சுவையைப் போலவே தங்களது சிறுகதையும் மனதில் பதியும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனதில் பதியும் வகையில் ,கதை முடிவையும் நாளை சொல்லி விடுகிறேன் :)
   நன்றி !

   Delete

 18. டாஸ்மாக்'கை மூடினா
  கள்ளச் சாராய மாமூல் நிறையக் கிடைக்குமா?
  என்னண்ணே
  அழகான கண்டுபிடிப்பண்ணே!

  ReplyDelete
  Replies
  1. அவர் சம்பாதிக்க ,பலர் கள்ளச் சாராயம் குடிச்சுச் செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறாரே :)
   நன்றி

   Delete