23 November 2014

மனைவியின் குரலுக்கு மரியாதை!

-------------------------------------------------------------------------------
  மகளின் வருத்தம் நியாயம்தானே ?       
      
            ''இங்கிலீஷ்  தெரியலைன்னா சும்மா இருங்கப்பா !''
        
           ''தப்பா எதுவம் சொல்லிட்டேனா ?''

          '' நான் அபார்ட்மெண்டுக்கு குடி போனதை அபார்சனுக்கு 

போயிட்டதா சொல்லி இருக்கீங்களே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

உடனே பிள்ளைப் பேறு ,பாட்டிக்கு கேடு ?

               ''எனக்கு இப்போ பிள்ளைப் பெத்துக்க இஷ்டமே இல்லைடீ ,என் மாமியாருக்காக  உடனே பெத்துக்க வேண்டி இருக்கு !''
            ''மாமியார் மேல் உனக்கு இவ்வளவு பாசமா ?''
             ''அட நீ வேற ,பேரப் பிள்ளையைப் பார்த்த பிறகுதான் கண்ணை மூடுவேன்னு அந்தக் கிழம் சொல்லுதே !''

ஜோக்காளியுடன் ஜாலி பயணம் செய்தோருக்கு நன்றி !

உங்களின் அன்பு ஜோக்காளி ...
கடந்த 5.1௦ .13 அன்று முதல் பிறந்த நாளை கொண்டாடி இருக்க வேண்டும் ...ஆனால் கொண்டாடவில்லை ...
7 .1 1 .1 3 அன்று தமிழ் மணத்தாயின்  மடியில் தவழத் தொடங்கிய முதலாம் ஆண்டுவிழா ...அதையும் கொண்டாடவில்லை...
காரணம் ,அவன் மனதில் ஒரு வைராக்கியம் ...
தினசரி பதிவுகள் போட்டு ...பார்வைகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிய பின்தான் கொண்டாட வேண்டும் என்று ...
இதோ அந்த நல்ல நாளும் நேற்றே வந்து விட்டது ...
7 9 8  பதிவுக்குப்பின் அந்த உயரத்தை தொட்டுவிட்டான் ...
மகிழ்ச்சியான இந்த நேரத்தில் இந்த ஜாலி பயணத்தில் இணைந்தவர்களுக்கு தன் நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறான் ...
வலைப் பூவை வடிவமைத்து தந்த அருமை மகன் அஜய் சந்தனுக்கு நன்றி ...
வலைப்பூவில் நான் விரும்பிய  மேம்பாடுகளை செய்த நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி ...
தினசரி கருத்துக்கள் மட்டுமல்ல... பிளாக் இன்னை பிளாக் காம்மாகி ...
வோட் பட்டனும் அமைத்து தந்து உச்சம் தொட உதவிய ...
வலை உலக விரல் வித்தகர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி ...
வலைச்சர அறிமுகமாய் என்னை ஆதரித்த  வே.நடன சபாபதி ,
குடந்தையூர் ஆர் .வி.சரவணன் ,திருமதி .அருணா செல்வம் ஆகியோருக்கும் நன்றி ...
அதிகபட்ச  கருத்துரைக்களைக் கூறி ஊக்குவிக்கும் ...
திருவாளர்கள் ரமணி அய்யா ,புலவர் இராமனுசம் அய்யா ,வெங்கட் நாகராஜ் ஜி ,சைதை அஜீஸ் ஜி ,திருமதி ராஜி ,அ .பாண்டியன் ஜி ,சே. குமார் ஜி,நம்பள்கி ஜி ,ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் ஜி ,வா.மணிகண்டன் ஜி ,கவியாழிகண்ணதாசன் ஜி ,கரந்தை ஜெயகுமார் ஜி ,வி .துளசிதரன் ஜி ,T.Nமுரளிதரன் ஜி ,2 ௦ ௦ 8ரூபன் ஜி ,கவிதை வீதி சௌந்தர் ஜி ஆகியோருக்கும் ...
மேலும் பல நூற்றுக்கணக்கான கருத்துரை இட்ட நண்பர்களுக்கும் நன்றி ...
உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கு பதிவுகளை கொண்டு சென்ற தமிழ் மணம் ,இன்ட்லி ,தமிழ் வெளி ,ஹாரம் திரட்டிக்கும் நன்றி ...
Face book ,Google+,Twitter வழியாக follow செய்பவர்களுக்கும் நன்றி ...
'நயா பைசாவுக்கு பிரயோசனம் இல்லா வேலை 'என்று பதிவு எழுதுவதைத் திட்டினாலும் ,லட்சம் தாண்டும் உங்களின் ஆதரவைக் கண்டு அசந்து நிற்கும் என் மணவாட்டிக்கும்  நன்றி !(இதை சொல்லவில்லை என்றால் நான்''புவ்வா'வுக்கு எங்கே போவது ?)
மேற்கண்ட பதிவு....பார்வைகளின் எண்ணிக்கை ஒரு லட்சம் ஆனவுடன்  சென்ற வருடம் போட்ட பதிவு .........
இப்போது பார்வைகளின் எண்ணிக்கை மூன்று லடசத்தை தொடப் போகிறது .....ஒரே வருடத்தில் இரண்டு லட்சம் உயர்ந்ததற்கு காரணம் ,நீங்கள் எனக்குத் தந்த ஊக்கம்தான் ....ஜோக்காளியை தொடரும் அனைவருக்கும் என் நன்றி !


சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

தலைவருக்கு பிடித்த ராகம் !

             ''தலைவரை  பேட்டி கண்ட நிருபர்கள்  எல்லாம் சிரிக்கிறாங்களே ,ஏன்?''
               ''செஞ் 'சுருட்டி ' ராகம்தான் தனக்கு  ரொம்ப  பிடித்த ராகம்னு சொன்னாராம்!


தொடக்கத்திலேயே ஒரு முற்றுப்புள்ளி!

பிரசவம் என்றவன் தீர்க்கதரிசி...
பிரசவத்தில் வந்தோர் எல்லாம் 
பிறகு சவமாய் போவதால்!

 மனைவியின் குரலுக்கு மரியாதை!
             ''என்னங்க ,என் குரல்லே நடுக்கம் இருக்குன்னு  பாட்டுப் போட்டியிலே இருந்து நீக்கிட்டாங்க!''

            ''நம்பவே முடியலேயே .நடுங்க  வைக்கிற உன் குரல்லேயும் நடுக்கம் இருக்கா?


32 comments:

 1. அபார்ட்மெண்ட்டுக்கு... அபார்ஷனுக்கு...
  நடுங்க வைக்கிற குரலுக்கு நடுக்கமா
  என அனைத்துச் சிரிப்புக்களும் அருமை....
  3 லட்சத்தை தொட இருப்பதற்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வயசானாலே இப்படி குழப்பம் வரத்தானே செய்யும் :)
   இதுக்கு மட்டும் அவர் நடுங்காமல் எப்படி கேட்டார் என்று தெரியலே :)
   வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 2. நடுங்க வைக்கிற உன் குரல்லேயும் நடுக்கம்
  இருக்கா?
  நான் நம்ம வில்லை.
  ஜோக்காளியுடன் ஜாலி பயணம் செய்தோரில் என்னையும் இணைத்தமைக்கு நன்றி!
  பேரப் பிள்ளையைப் பார்த்த பிறகுதான் கண்ணை மூடுவேன்னு சொல்லுற மாமியாருக்காக பிள்ளைப் பெத்துக்க வேண்டி இருக்காமோ!
  என்ன கொடுமை ஐயா?

  ReplyDelete
  Replies
  1. பிள்ளை பெற்றுக் கொள்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறாரோ மருமகள் :)
   நன்றி

   Delete
 3. அபார்ட்மென்ட்.......அபார்ஷன்..ஹஹஹாஹ்ஹ்ஹ்

  சென் "சுருட்டி" யில் சென்சுரியே அடித்திருப்பார்..ஹாஹ்ஹ்

  நடுங்க வைக்கும் குரலுக்கே நடுக்கமா?!!!! அது எங்கேயோ பிழையாய்ருக்கலாம் ....ஹஹஹ்ஹ்

  ஜோக்காளி இன்னும் பல லட்சங்கள் தொட வாழ்த்துக்கள்! தொடுவார்!

  ReplyDelete
  Replies
  1. தந்தையே மகளை இப்படி அபார்சனுக்கு அனுப்பலாமா :)
   டபுள் சென்சுரி கூடப் போட்டிருப்பார் :)
   இவரை நடுங்க வைத்த குரல் நடுவர்களை நடுங்க வைக்கலே போலிருக்கே :)
   வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 4. Replies
  1. எல்லாம் நீங்கள் தந்த ஆசீர்வாதம்தான் :)
   நன்றி

   Delete
 5. லட்சாதிபதியான பகவான்ஜி விரைவில் கோடிஸ்வரனாக வாழ்த்துகள்!
  தம 5

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் உள்ள நம்பர் 'ஒன்றே ' போதும் :)
   நன்றி

   Delete
 6. தங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள். உங்களின் பல நகைச்சுவைகள், நகைச்சுவைகளாக இருப்பதோடு மட்டுமன்றி நல்ல பயனுள்ள கருத்துக்களாகவும் உள்ளன. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. டைம்லி ஃ பன்ஸ் ..எனக்கு ரொம்ப பிடிக்கும் :)
   நன்றி

   Delete
 7. சாதனைகள் தொடர நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஆரம்ப காலத்தில் இருந்தே தொடரும் உங்கள் வாழ்த்திற்கு நன்றி !

   Delete
 8. Replies
  1. வாசகர் பரிந்துரைக்கு கொண்டு வந்ததற்கு நன்றி !

   Delete
 9. எல்லாமே சூப்பர் ஜி. தம 8

  ReplyDelete
  Replies
  1. தொடக்கத்திலேயே ஒரு முற்றுப் புள்ளியையும் ரசித்தீர்களா :)
   நன்றி

   Delete
 10. ஜோக்ஸ் எல்லாமே சூப்பர்ஜி! மூன்று லட்சம் பக்கப் பார்வைகளை பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இன்னைக்கு நான் அறியாமலே அமைந்து விட்ட பிறப்பை பற்றிய மூன்று விஷயத்தையும் ரசித்தீர்களா ,சுரேஷ் ஜி ?
   நன்றி

   Delete
 11. தினம் ஒரு ஜோக் போட்டு சிரிக்கவைத்தமைக்கு பாராட்டுக்கள்.மூன்று லட்சம் பக்கப்பார்வைகளுக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. பதிவு போடாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று எனக்கு பாட்டி பதிவையார் போட்ட உத்தரவை இன்றுவரை செயல் படுத்திக் கொண்டிருக்கிறேன் :)
   நன்றி

   Delete
 12. 01. சொன்னது யாரு ? பகவான்ஜி அடுத்த ஃப்ளாட்டு அபர்ணாவா ?
  02. அப்புறம் இது பொறந்ததுமே அப்பத்தாவை முழுங்கிடுச்சேனு ஊரு சொல்லுமே...
  03. பொருத்தமான ராகம்தான் தலைவர் சுருட்டும் பிடிப்பாரோ...
  04. பிரசவக் கவி அருமை ஜி.
  05. மனைவியை காலை வார சந்தர்ப்பம் கிடைச்சுருச்சே...

  நண்பர் பகவான்ஜி மென்மேலும் சிகரம் தொட கில்லர்ஜி யின் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. 1.என்னைக் கண்டாலே 'அபௌடேர்ன் ' அடிக்கிற அபர்ணா சொல்லலே ,பாமா சொன்னது இது :)
   2.ஊரு எதைத்தான் சொல்லாம இருந்தது ,உலை வாயை மூடலாம் ,ஊர் வாயை ....?:)
   3.சுருட்டு சுந்தரம் என்றும் பெயர் வாங்கி இருக்காரே :)
   4.சவமாவது உறுதிதானே :)
   5.வாயைக் கிளற வாய்ப்புன்னு சொல்லுங்க :)
   வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 13. எல்லோரையும் எல்லோராலும் சிரிக்க வைக்க முடியாது அதை நீங்கள் செய்துகொண்டு இருக்குறீர்கள் அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் நிறைய எழுதுங்க ஸ்ரீ சந்திரா ஜி ,தொடர்கிறேன் !
   நன்றி

   Delete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி !
   மது ஜி ,மருங்காபுரி இளவரசியாரின் வேண்டுகோளை நிறைவேற்றி விட்டீர்களா ?

   Delete
 15. ஒருலட்சம் வாழ்த்துக்கள் பகவானே
  வாக்கு பதினொன்று

  ReplyDelete
  Replies
  1. த ம 11 என்று திருத்தி ,மண்டி போடுவதில் இருந்து தப்பித்து விட்டீர்கள் மது ஜி :)
   நன்றி !

   Delete
 16. நடுங்க வைக்கும் குரலுக்கு நடுக்கமா? இதிலிருந்து என்ன தெரியுது என்றால், மனைவிக்கு தன் குரலால் கணவனை மட்டும் தான் நடுங்க வைக்கும் சக்தி இருக்கிறது.

  விரைவில் கோடீஸ்வரனாக மாறுவதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அதை மனைவியின் சக்தி என்பதா ?கணவனின் பலவீனம் என்பதா ?
   வாழ்த்துக்கு நன்றி

   Delete