25 November 2014

அனுஷ்கா அன்று கொடுத்ததும் ,இன்று கொடுப்பதும் !

-------------------------------------------------------------------------------------

நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் ?

               ' 'கல்யாண ஆல்பத்தில் உள்ள எல்லா 


போட்டோக்களிலும்   சிரிச்சுக்கிட்டு இருக்கிற புது 


மாப்பிள்ளை ,ஒரு போட்டோவில் மட்டும் 


முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''

                   
                        ''அதில் ,கூட நிற்கிறவங்க நடிகையோட 

டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மருமகளின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ?

      ''சாரி ஆண்ட்டி ,நான் எறிந்த ரப்பர் பால்தான்  உங்க மாமியார் நெற்றியில் பட்டது ...நல்ல வேளை ஒண்ணும் ஆகலே,அதுக்கு நீங்க ஏன் நூறு ரூபாய் கொடுக்கிறீங்க  !''
      
          ''நல்ல கார்க் பால் வாங்கி இனிமேல் விளையாடுங்க !''
     

ஆக்கிரமிப்பு நடப்பதன் காரணம் இதுதானா ?

சென்ற வெள்ளிக்கிழமை சென்னை 
உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் அனைத்தும் ...
பொதுமக்கள் யாரும் நுழைய முடியாதபடி இழுத்து மூடப் பட்டனவாம் ...
நீதிபதிகள் ,வக்கீல்கள் யாரும் வரவில்லையா ...
இல்லை கோர்ட் புறக்கணிப்பா ...
இரண்டுமே காரணமில்லை !
அன்றைய தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்களாம் ...
கோர்ட் வளாகத்திலோ ,கட்டிடத்திலோ யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை உறுதி செய்து கொண்டு அதற்குரிய பதிவேடுகளில் கையெழுத்து இடுவார்களாம் ...
எதற்காக இந்த பதிவு ?
       ஒரு சொத்துக்குச் சொந்தக் காரரின் விருப்பத்துக்கு எதிராக ,யாரேனும் ஒருவர் அச்சொத்தை 1 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்தால் ,அச்சொத்து தனக்கே உரியதென்று நீதி மன்றத்தில் வாதாட முடியுமாம் !
நீதிமன்றத்திற்கே இந்த கதி என்றால் ...
பொதுமக்களின் சொத்துக்கு என்ன உத்தரவாதம் ?

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

அனுஷ்கா தான் கொடுப்பதும் ,கெடுப்பதும் !

                ''யோகா  செஞ்சா  நல்லா  தூக்கம்  வரும்னு  சொல்றாங்களே ,உண்மையா?''


            ''உண்மைதான்!  யோகா டீச்சரா  இருந்த அனுஷ்கா தூக்கத்தை  கொடுத்தாங்க !ஆனா இப்போ நடிகை ஆகி ரசிகர்கள்   தூக்கத்தை  கெடுக்கிறாங்களே!''
                                 

                                                
                                                                                            


                                               

 ரோஜாக்கள் ஜாக்கிரதை !

ரோஜாவை முத்தமிடாதே ....
உன் தாடி முள் குத்தி விடலாம் !
ஒரு மகிழ்ச்சியான செய்தி ......இது ,நேற்றிரவு சரியாக 11.35 மணிக்கு ஜோக்காளி  அடைந்த பார்வைகளின் எண்ணிக்கை ....

300001

32 comments:

 1. அந்த வக்கிலுக்கு பக்கத்தில் நிக்கிறவங்களை மாப்பிள்ளை பார்க்கவில்லை போலும். அவர்கள்தான் வருங்கால மாப்பிள்ளைங்க அது தெரிந்து இருந்தால் எல்லா இன்னும் நல்லாவே முறைச்சு கண்ணு வெளியே வந்து இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. அய்யய்யோ,வில்லன் கூடவே இருக்கானா :)
   நன்றி

   Delete
 2. மாப்பிள்ளை முறைப்பதற்கு பதில் சந்தோஷம் அல்லவா படணும். பின்ன அந்த வக்கீல் புண்ணியத்தால் தானே, அவர் மாப்பிள்ளையாகி இருக்கிறார்.

  அந்த ரோஜா கவிதை சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. இந்த மாப்பிள்ளை பதவி எத்தனை நாளைக்கு நினைத்து கலங்கி இருப்பாரோ :)

   இருவரிக் கவிதையை பலமுறை படித்து ரசித்ததற்கும் நன்றி :)

   Delete
 3. நீதிமன்றத்திற்கே இப்படியா...? ம்... எதற்குமே உத்திரவாதம் இல்லை ஜி...

  ReplyDelete
  Replies
  1. இது என்ன நடைமுறை என்றே புரியவில்லை !
   நன்றி

   Delete
 4. 01. வக்கீலுங்க எத்தனை பேரு
  02. நேரடியா கல்லெடுத்து எறியச்சொல்லலாமே..
  03. அப்படினா சொந்த வீட்டை உடனே விற்கணுமோ
  04. இன்மேல் காந்திமதினு பேரு உள்ள டீச்சருக்கிட்டதான் படிக்கணும்
  05. கவிதை அருமை ஜி
  06. வாழ்த்துக்கள் கோடி

  ReplyDelete
  Replies
  1. 1.குரூப் போட்டோவில் அதிகப் பட்சமா எத்தனை நிற்க முடியுமோ .அத்தனை பேர் :)
   2.நல்ல ஐடியா ,அவங்க கிட்டே சொல்லிடச் சொல்லி மருமகளிடம் சொல்லி விடுகிறேன் :)
   3.ஒருநாள் வெளியேறி ஒளிந்து நின்று ,யாராச்சும் நம்ம வீட்டிலே நுழையுறாங்களா என்று பார்க்கலாம் :)
   4.ஏன் அவங்க மட்டும் 'இச்'பெசலா எதையும் சொல்லித் தருவாங்களா :)
   5.உங்க தாடிக்கு ரொம்ப பொருத்தம் ,இல்லையா :)
   6.ஸ்ரீ பூவுஜி நேரில் வந்து வாழ்த்தியதாய் எடுத்துக்கிறேன் :)
   நன்றி

   Delete
 5. முதலும்,கடைசியும் கலக்கல்

  ReplyDelete
  Replies
  1. அதாவது,அடி முதல் முடி வரை அப்படித்தானே :)
   நன்றி

   Delete
 6. நடிகைன்னாலே இப்படித்தானோ.....அந்த வக்கீல்களில் யாராவது நடிகையின் எக்ஸ் கணவன்?!

  ரோஜா கவிதை அருமை....பல விஷய்ங்களைச் சொல்லுதே...

  வாழ்த்துக்கள் ! கோடி பல பெற (பார்வையாளர்களைத்தான்!!)

  ReplyDelete
  Replies
  1. முன்னாள் கணவர் வந்திருப்பார் ,இப்போ மாட்டிக்கிட்ட இளிச்சவாயன் யாருன்னு பார்க்க :)

   என்ன இரண்டு வரியா அவ்வளவு சொல்லுது :)

   கோடி கிடைத்தால் உங்கள் டைரக்சனில் நான் ஹீரோவா நடிக்கலாம்னு கனா கண்டுகிட்டு இருக்கேன் ,பிராக்கெட்டில் இப்படி சொல்லிட்டீங்களே :)
   நன்றி !

   Delete
 7. மூன்று லட்சம் கடந்தமைக்கு வாழ்த்துக்கள்! ஜோக்ஸ் சூப்பர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இதில் வேடிக்கை என்னவென்றால் ,வானவீதியில் வால் நட்சத்திரம் கடந்த நேரத்தைப் போல் நான் பீத்திக் கிட்டதுதான் ,இல்லையா சுரேஷ் ஜி ?
   நன்றி

   Delete
 8. ஆ........ஆ.....மனிதனின் தாடி முள்ளைவிட அவ்வளவு கூர்மையானதா......!!!!

  ReplyDelete
  Replies
  1. குத்து பட்ட ரோஜாவிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் நானென்ன சொல்வது :)
   நன்றி

   Delete
 9. Replies
  1. மறக்காமல் வோட்டு போட்ட உங்களுக்கு ஞானி ஸ்ரீ பூவின் ஆ(ச்)சி உண்டாகட்டும் :)
   நன்றி

   Delete
 10. எந்த அனுஷ்கா என்று தெரியாமல் தலை வெடித்துவிடும்.தமிழ்ப் படங்களில் நடிக்கும் அனுஷ்கா ஷெட்டியா. இல்லை ஹிந்தி திரை உலகில் இருக்கும் அனுஷ்காவா, இல்லை போங்க சார் யாருன்னு தெரியலியே....!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தலை வெடித்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் ,நல்லாத் தெரியற மாதிரி அனுஷ்கா படத்தை மாற்றிவிட்டேன் ..இப்போ உங்க சந்தேகம் தீர்ந்ததா :)
   நன்றி

   Delete
 11. மூன்று லட்சம் மும்மூன்றுமடங்கு பெறுகட்டும். அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. உங்க ஆதரவு இருக்கும் போது பெருகத்தானே செய்யும் :)
   நன்றி

   Delete
 12. Replies
  1. அதுக்கு நன்றிதான் ,இதுக்கு மிக்க மிக்க நன்றி !

   Delete
 13. ரசித்தேன்.....

  மூன்று லட்சம் - வாழ்த்துகள் பகவான் ஜி!

  ReplyDelete
  Replies
  1. மூன்று லட்சம் பணம்கூட இப்படி ஒரு சந்தோஷத்தை எனக்கு கொடுத்ததில்லையே:)
   நன்றி

   Delete
 14. ரெண்டு நடிகை ஜோக்:)))) மூணு லட்சம் எல்லாம் நம்ம பாஸ் க்கு ஒரு சாதனையே இல்லையே!! நீங்க நல்ல வருவீங்க பாஸ்:)) வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு நடிகை ரீல் ,இன்னொரு நடிகை ரியல் ))))
   இப்பவே ,வீட்டுவேலை எதையும் செய்றதே இல்லை என்று இல்லத்துணையின் வருத்தம் ,இன்னும் நல்லா வர விடுவாங்களான்னு தெரியலே :)
   நன்றி

   Delete
 15. Replies
  1. உங்களோட இந்த ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ,பாஸ் :)
   நன்றி

   Delete
 16. //ஒரு சொத்துக்குச் சொந்தக் காரரின் விருப்பத்துக்கு எதிராக ,யாரேனும் ஒருவர் அச்சொத்தை 1 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்து வந்தால் ,அச்சொத்து தனக்கே உரியதென்று நீதி மன்றத்தில் வாதாட முடியுமாம் !//

  இருந்தது...Now it was struck down by the Sup.Court.

  ReplyDelete
  Replies
  1. மாற்றியக் காரணம் .....ஒருவர் இன்னொருவனின் மனைவியை தன் சொத்து என்று சொன்னதுதான் என்று கேள்விபட்டேன் ,உண்மையா நம்பள்கி ?
   எப்பூடி உங்க பாணியிலேயே என் கேள்வி ?
   நன்றி !

   Delete