26 November 2014

தம்பதிகளை பணம் படுத்தும் பாடு

---------------------------------------------------------------------------------
அந்த வேகத்தை விட இந்த வேகம் அதிகமாயிருக்கே !
             ''அட பரவாயில்லையே ,மருந்து கூட டோர் டெலிவரியில் பத்தே நிமிடத்தில்  வீட்டுக்கு வந்திருதே !''
            ''மருந்து சாப்பிட நோயைக் கொடுத்த ஃபாஸ்ட் புட் ஐந்தே நிமிடத்தில் வருதே ,அதை மறந்துட்டீங்களே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

அகலக்கால் வைக்கிறது என்னைக்கும் ஆபத்துதான் !

           ''கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
           ''அகலக்கால் வைச்சு டிக்கெட்கொடுத்திருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும் வாங்கி  வாங்கிப் போட்டுகிட்டாரே ? 


சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

ஜொள்ளு பார்ட்டி பேஷன்ட் போலிருக்கு!

            ''இனி மேல் நீங்க  சுகரை கண்ணாலே கூட பார்க்கக்கூடாதுன்னு சொன்னா, சந்தோசமா சரின்னு சொல்றீங்களே,எப்படி?''
          ''ஃபிகரை பார்க்கக்கூடாதுன்னு சொல்லலேயே ,டாக்டர் !


தம்பதிகளை பணம் படுத்தும் பாடு 


ஜோடிப் பொருத்தப் போட்டி ...
வென்ற பணத்தால்  வந்தது ...
 தம்பதிகளுக்குள் டைவர்ஸ் ! 
40 comments:

 1. அட அதைவிட வேகமாக சில நொடிகளில் டாக்டர் பில் பாஸ்ட்டாக வந்துடும்

  ReplyDelete
  Replies
  1. நொடிக்கு இவ்வளவு செலவாகும் என்று அப்போதுதானே நமக்கு புரிகிறது :)
   நன்றி

   Delete
 2. ஜொள்ளுப் பார்ட்டி சரியான பார்ட்டி தான்.

  இந்த காலத்தில் பணம் டைவர்ஸ் வரைக்கும் போகுதே

  ReplyDelete
  Replies
  1. வந்த நோய்க்கு கவலைப் படாத அவருக்கு ஆயுசு நூறு தான் ,இல்லையா ?:)

   உன் பணம் .என் பணம் என்றால் டைவர்ஸ் வரைக்கும் போகத்தானே செய்யும் ?
   நன்றி

   Delete
 3. பணம் என்ன வேண்டுமானாலும் செய்யும்...!

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான் ,பிணமும் வாய் திறக்கும் என்று சொன்னார்களோ :)
   நன்றி

   Delete
 4. போட்டியில் வென்ற பணத்தால் வந்த டைவர்ஸ்..... சூப்பருங்கோ பகவான் ஜி.
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு போட்டியில் ஜெயிக்காமலே இருந்திருக்கலாம் :)
   நன்றி

   Delete
 5. நல்லவேளை, இப்போது எங்கும் பணப்பரிசு தரும் ஜோடிப்பொருத்தம் போட்டி நடப்பதாகத் தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. நடக்கா விட்டாலும் பணம் பலரை பிரியச் செய்துவிடுகிறதே :)
   நன்றி

   Delete
 6. 01 அந்க வேகத்துலதானே மனுஷன் மேலேயும் வேகமாப்போறான்.
  02 கவர்மெண்டுக்கு டிக்கெட்டை மிச்சப்படுத்திக் கொடுத்தது தப்பா ?
  03 துக்கத்துல ஒரு சந்தோஷம்
  04 ஆக மொத்தம் பணத்தைக்கொடுத்து வாழ்க்கையை கெடுத்துட்டாங்கே...

  ReplyDelete
  Replies
  1. 1.வேக உணவு வேகத்தை கூட்டத்தானே செய்யும் :)
   2.காசையும் மிச்சப் படுத்திவிட்டாரே :)
   3.துக்கம் வந்ததே அதிகம் சந்தோசம் தர்ற வேலையைதொடர்ந்து செய்தது தானா ?:)
   4.பணம்தான் சுகம் தரும்னு நினைச்சுட்டாங்க :)
   நன்றி

   Delete
 7. ஓ ஹோ இப்படி வேற இருக்கா..
  ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்

  ReplyDelete
  Replies
  1. பாஸ்ட் ஃபுட்டை பாஸ்ட் பாய்சன் என்றல்லவா சொல்கிறார்கள் :)
   நன்றி

   Delete
 8. 1. Over Speed - உலகமாகிப் போச்சே!..
  2. அகலக் கால் வைக்கிறது இதுக்குத்தானா!..
  3. தேறாத கேஸ்!..
  4. பணத்திற்கு நன்றி!..

  ReplyDelete
  Replies
  1. 1.அதிக வேகம் ஆளைக் கொல்லும்என்பதைப் புரிந்து கொள்ளாத உலகமாச்சே :)
   2.பயணிகளுக்கு ஃபாலன்ஸ் தருவதற்கும் இப்படி ஃபாலன்ஸ் பண்ணுவாரோ :)
   3.அது டாக்டரில்லே சொல்லணும் :)
   4.பிரித்து வைத்ததற்கா :)
   நன்றி

   Delete
 9. தம்பதிகளை மட்டுமா.???.எல்லாரையும்லே பாடாய் படுத்தூது...ஜீ

  ReplyDelete
  Replies
  1. படுத்தாதா ?மனமொத்த தம்பதிகளையே படுத்தும் போது:)
   நன்றி

   Delete
 10. பணம் படுத்தும் பாட்டால் வந்த கவிதை அருமை! எவ்வளவு வேகமாக செல்கிறோமோ அவ்வளவு வேகமாக துரத்துகிறது நோய்கள்! அவரு ஜொள்ளாளி போலிருக்கு! சிறப்பான ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை.அந்த ஜோள்ளாளி ஜோக்காளிதான்னு சொல்ல விட்டீங்க :)
   நன்றி

   Delete
 11. Replies
  1. 'பசி'யினால் கருத்து போடமுடிய வில்லையோ :)

   Delete
 12. // ''ஃபிகரை பார்க்கக்கூடாதுன்னு சொல்லலேயே ,டாக்டர் !//
  மனுசன் மகா புத்திசாலி. பிழைச்சுக்குவாரு!

  ReplyDelete
  Replies
  1. நீண்ட காலம் இருப்பார் ,இப்படி இல்லே நேர்மறையா யோசிக்கணும் :)
   நன்றி

   Delete
 13. ஜோடிகள் பிரியாம இருக்கணும்னா ‘மனப் பொருத்தம்’ போட்டியும் நடக்கணும். இல்லையா பகவான்ஜி?

  ReplyDelete
  Replies
  1. மனப் பொருத்தம் இருப்பது போல நடித்தும் ஜெயிப்பார்களே :)
   நன்றி

   Delete
 14. புன்னகைக்க வைக்கிறது. ஆனாலும் இதெல்லாம் கூடுதல் வசதிதானே!

  அகலக் கால் வச்சுட்டாரா? கலக்ஷன் பணத்துல கை வச்சுட்டார்!

  அடப்பாவி... ஜொள்ளுப்பார்ட்டி!

  அடப்பாவமே...

  ReplyDelete
  Replies
  1. கூடுதல் வசதிகள் ,மனிதனை படுத்த படுக்கை ஆக்கிவிடும் போலிருக்கே :)

   காலை விரித்து ,கையிலே சுருட்டி விட்டாரே :)

   ரசனைக்கார ஆளைப் போய் இப்படி சொல்றீங்களே :)

   இந்த அட ,சரிதான் :)
   நன்றி

   Delete
 15. காலையில் அலுவலகம் போகும்போது வாக்குச்சாவடி அடைத்திருந்தது ஆகவே இப்பொழுது
  த.ம 9

  ReplyDelete
  Replies
  1. ஆகா ,நீங்கள் அல்லவா உண்மையான் குடிமகன் ? வாக்குரிமையை சரியாக பயன் படுத்துகிறீர்களே:)
   நன்றி

   Delete
 16. சுகர் - ஃபிகர் - என்னா காம்பினேஷன்! :)

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணு அவருக்கு பிடிக்குது ,இன்னொன்னு அவரைப் பிடித்து ஆட்டுது :)
   நன்றி

   Delete
 17. Replies
  1. பணம் விவாகரத்தும் செய்யும்னு சொன்னது ,உண்மைதானே :)
   நன்றி

   Delete
 18. வோட்டு பதிமூன்று...
  நல்ல தொகுப்பு ...
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பதிமூன்று என்றாலும் எனக்கு லக்கி நம்பர்தான் :)
   நன்றி

   Delete
 19. ஹஹஹஹஹஹ்.....

  சுகர் ஃபிகர் ஹஹஹ செம...

  ReplyDelete
  Replies
  1. சுகரை மறக்க வைத்த ஃ பிகர் அழகுதான் :)
   நன்றி !

   Delete