29 November 2014

டைவர்ஸ்... அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா ?

--------------------------------------------------------------------------------------------------------------------------

சுயநலமில்லா விருந்தாளிகளாய் ஆனது ,ஏன் ?
                ''சர்க்கரை நோயாளிகள்  பெருகிட்டாங்கன்னு  டாக்டர்கள் சொன்னப்போ கூட  நம்பலே ,விருந்து பரிமாறுகிறவர் சொல்லும் போது நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
                ''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லி இப்போ யாருமே சொல்றதில்லையாம் !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

டைவர்ஸ் அதிர்ச்சி மனைவிக்கா ,கணவனுக்கா ?
            ''அதிர்ச்சியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னுடும்னு ,என் மனைவிகிட்டே உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
          ''விக்கல் நின்றதா ?''
           ''விக்கல் நின்னுடுச்சு ,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !''
                                           
இதற்க்கு வந்த அருமை கமெண்ட்....
விவாகரத்து பண்ணப் போறதில்லைன்னு சொல்லிடுங்க. திரும்பி விக்கல் வந்தும் அப்படியே விட்டுடுங்க
ReplyDelete

Replies


 1. விக்கலை நிறுத்தினாலும் விவாகரத்தை நிறுத்த மாட்டாங்களாமே!
  நன்றி


சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

 தணிக்கையா ? தனி கையா ?


               "வர வர சினிமாவிலே ஆபாசம் அதிகம் ஆகுது ,தணிக்கை பண்றாங்களா இல்லையா ?"
                   "தனியா கையை நீட்டி வாங்கிக்கிட்டு  பண்றாங்களோ என்னவோ ?"

             அதை இப்ப நினைத்தாலும் உடம்பு கூசும் !

மாறும் உலகில் மாறாதிருப்பது .......
கரப்பான் பூச்சியும் ,
அது உடலில் ஊர்ந்தால் ஏற்படும் அருவருப்பும் !

34 comments:

 1. மாற்றம் ஒன்றே மாறாதது...ஆனா கரப்பான் பூச்சிக்கில்ல....

  ReplyDelete
  Replies
  1. கரப்பான் பூச்சியிடம் கார்ல் மார்க்ஸ் தத்துவம் கூட பலிக்கவில்லையே :)
   நன்றி

   Delete
 2. வணக்கம்

  ''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லி இப்போ யாருமே சொல்றதில்லையாம் ...
  விருந்துக்கு செல்லும் பலரது நிலை.. இப்படித்தான் போகுது... ஆனா நமக்கில்லை....
  மிச்சம் பிடிப்பதற்கு சிறந்த வழி....
  இரசிக்கவைக்கும் கருத்துக்கள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இவருக்கு சுகர் ,எப்படி பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்றச் சொல்லிட்டு ,தனக்கும் ஊற்றச் சொல்வார் :)
   nanry

   Delete
 3. Replies
  1. காலமாற்றம் ,இப்படி நம் விருந்து 'பண்பாட்டையே ' மாற்றிடுச்சே ,எங்கே போய் சொல்ல ?:)
   நன்றி

   Delete
 4. டைவர்ஸ் அதிர்ச்சியை ரசித்தேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் விக்கல் வில்லங்கம் ஆகுமா :)
   நன்றி

   Delete
 5. Replies
  1. இன்சுலின் குறைபாடு என்றுதான் சொல்லணும் ,ஆனால் நடைமுறையில் யார் சொல்கிறார்கள் ?:)
   நன்றி

   Delete
 6. 01. இனிமேல் கல்யாணத்துக்கு போனால் பக்கத்து ஆளுக்கு ஸுகர் கம்ப்ளைண்ட் இருக்கானு கேட்டு உட்காரனுமே...
  02. டைவர்ஸ் செய்ய போறேனு சொல்றதுக்கு பதில் சின்ன வீட்டுக்கு போறேன்னு சொல்லிப்பார்க்கலாமே...
  03. இவங்களையெல்லாம் ‘’தனியா கையை வெட்டி’’ எடுத்தால் சரியா வரும்,
  04. டாக்டர் கிட்டேபோனால் அருவருப்பை மாத்திடுவாரு.
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. 1.அவர் சாப்பிடாட்டி பரவாயில்லை எனக்கு பாயசம் போடுங்க என்று நாசூக்காச் சொல்லி வாங்கிக்க வேண்டியதுதான் :)
   2.என்னைத் தவிரவும் இன்னொரு ஏமாளியா ,யாரது ..வாங்க பார்த்துதான் ஆகணும்னுகிளம்பிட்டா என்ன பண்றது :)
   3.மாட்டிக் கிட்டவங்க யாரும் நீங்க சொல்ற தண்டனையை பெற்ற மாதிரி தெரி யலையே :)
   4.அவரே அருவெறுப்பைத் தவிர்க்க முடியாது என்று சொல்றாரே :)
   நாலுக்கு நாலு சரியா போச்சே !
   நன்றி

   Delete
 7. தம 5.
  என்னா ஒரு பாசம் பக்கத்து இலையின் பாயாசம்.
  டைவர்ஸ்,தனி கை,கரப்பான் எல்லாமேஅருமை.

  ReplyDelete
  Replies
  1. பாயாசத்தை பொறுத்தவரை பாசமெல்லாம் வெளி வேஷமென்று நமக்கு தெரியாதா என்ன :)
   நன்றி

   Delete
 8. ரசித்தேன்..

  ReplyDelete
  Replies
  1. சீனியாய் ருசித்ததா :)
   நன்றி

   Delete
 9. அடுத்த இலைக்குப் பாயசம், விக்கல் நிற்க டைவோர்ஸ் எல்லாம் ரசிக்கும் ப்டி இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. இன்று எனக்கு உண்மையில் பக்கத்து இலை பாயாசம் கிடைத்தது ,உங்கள் தளத்தில் என்னைக் குறிப்பிட்டு உள்ளதைத்தான் சொல்கிறேன் :)
   நன்றி

   Delete
 10. 1. எல்லாரும் நல்லவங்களா ஆகிட்டாங்களா?..
  2. தலைவலி போய் திருகு வலி!..
  3. கையோட பிடிக்க வேண்டியது தான்!..
  4. கரப்பான் பூச்சியா..

  ReplyDelete
  Replies
  1. 1.தனக்கே சர்க்கரை ,இதிலே எங்கே பக்கத்து இலைக்கு பாயாசம் ஊரைச் சொல்றது ?:)
   2.தலைவலியே தேவலே போலிருக்கே:)
   3.ஏற்கனவே ஒருத்தரை பிடிச்சாங்க ,கேஸ் என்னாச்சோ :)
   4.மாறும் உலகில் மாறாதிருப்பது ,அதுதானே :)
   நன்றி

   Delete
 11. அருமையான தகவல் சகோ......

  இலவச 150 உடனடி ரீசார்ஜ் :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

  ReplyDelete
  Replies
  1. என்னது தகவலா ?அவ்வ்வ்வவ்வ்வவ்வ்வ்:)
   நன்றி

   Delete
 12. சுயநலமில்லா விருந்து ரசிக்க வைத்தது! அதிர்ச்சி வைத்தியம் அதிர்ச்சி கொடுத்துருச்சு போல! தனிக் கை சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி மட்டும்தான் திருமணத்திற்கு அழைப்பாரா ,நானும் என் பங்குக்கு விருந்தை வைக்க வேண்டாமா ?அதுதான் இந்த பாயாச விருந்து :)
   நன்றி

   Delete
 13. நல்ல மனைவி, கனவன் வாயால் சொன்னதை நிருபிக்க பாடுபடுகிறார்.

  ReplyDelete
  Replies
  1. மனைவி என்றால் இப்படியல்லவா இருக்கவேண்டும் :)
   நன்றி

   Delete
 14. ஹஹஹஹ....அனைத்தும்...

  தணிக்கை...தனி...சூப்பர்!

  கில்லர்ஜி கல்யாணத்திற்கும் லேட்டாத்தான் போனோம்...ரசத்துல தண்ணி கலந்துட்டாய்ங்க....ஆனாலும் மொய் வைச்சோம்..ஜி

  இங்கயும் லேட்டா வந்தாலும் மொய் வைச்தது 7 வது மொய் நு நினைக்கிரோம்...லேட்டானாலும் லேட்டஸ்ட்?!!! இந்த ஜிக்கு

  ReplyDelete
  Replies
  1. கடைசி நேரத்தில்,தென்குமரியின் கல்யாணம் நின்று போகும் என்பதால் நான் ஊரை விட்டு கிளம்பவில்லை ,கல்யாணம் சிறப்பாய் நடந்தால் செய்து விடுங்கள் என்று கில்லர்ஜியிடம் மொய் மட்டும் கொடுத்துட்டேனே :)
   நன்றி

   Delete
 15. ஆமாம்ல பாயாசம் கேட்பதே இல்லை யாரும் இப்போது...

  ReplyDelete
  Replies
  1. வேண்டாமென்று மறுப்பவர்கள் கூடிக்கொண்டே இருக்கிறார்களே :)
   நன்றி

   Delete
 16. Replies
  1. இன்றைய அருமையையும் ரசிக்க வாங்க ஸ்ரீ சந்திரா ஜி :)
   நன்றி !

   Delete
 17. விக்கல் :)

  தணிக்கை - தனி கை - அதானே!

  பக்கத்து இலை பாயாசம் - உண்மை தான்.....

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. அதிர்ச்சி ...பூமராங் போல திரும்பிடுச்சே :)

   தணிக்கை அதிகாரியை தணிக்கைச் செய்தே நியமனம் செய்ய வேண்டி இருக்குமோ :)
   பாயாசம் கூட பலருக்கும் புளிக்க ஆரம்பித்து விட்டது தான் ,கொடுமை :)
   நன்றி

   Delete