4 November 2014

நடிகை ஸ்வேதா மேனனுக்கு வந்த சோதனை !

   ----------------------------------------------------------------------------------------------------
படிச்சிட்டு தண்டவாளத்தில் தலையைக் கொடுக்காதீங்க !           
             ''எவ்வளவுப் பெரிய பணக்காரன் ஆனாலும்  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
             ''ரயிலைப்  பிடிக்கணும்னா வேற  வழியில்லையே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

ஜாக்கிங் நல்லது வாக்கிங்கை விட !

               '' வாக்கிங் பதிலா ஜாக்கிங் போகணும்னு ஏன் சொல்றீங்க டாக்டர் ?''
             ''நீங்க தானே  'பொடி'நடை நடந்தாலே தும்மலா வருதுன்னு சொன்னீங்க !''

நடிகை ஸ்வேதா மேனனுக்கு வந்த சோதனை !

களிமண்ணு என்ற மலையாளப் படத்தில் ...
தன் உண்மையான பிரசவக்காட்சியை காட்டிய ஸ்வேதா மேனனை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள் ...
எந்த நடிகையுமே செய்யத் தயங்கும் கேரக்டரை தயங்காமல் செய்த அவரிடமே ...
பொது இடத்தில் செய்யக்கூடாத காரியத்தை 
தயங்காமல் செய்திருக்கிறார் ஒரு   M P...
கொல்லத்தில் நடந்த படகுப் போட்டி விழாவில் VIPயாக கலந்து கொண்டார் காங்கிரஸ் MP...
அவர் அருகில் அமர்ந்து இருந்தார்  ஸ்வேதா மேனன்...
படகுப் போட்டியாளர்களின் துடுப்பு போடும் கைகளின் அசைவை எல்லாரும் ரசித்துக் கொண்டிருக்க ...
இவரோ ,நடிகையின் இடுப்பில்  கைகளால் விளையாடி இருக்கிறார் ...
எடுக்கப்பட்ட வீடியோவில் ஸ்வேதா மேனன் தேவை இல்லாமல் நெளிவதும் ,MPயின் 'அன்பான 'தொடுதலும் பதிவாகி உள்ளதாம் ...
எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற கதையாக ...
அத்து மீறல் எதையும் செய்யவில்லை ,எனக்கெதிரான சதித் திட்டம் இது என்று MP உளறியுள்ளார் ...
நடிகர் சங்கத் தலைவரான இன்னோசென்டிடம் நடந்ததை விவரித்து உள்ளார் அந்த நடிகை ...
நான் ஒரு 'இன்னொசென்ட் 'என்று  MP வியாக்கியானம்  செய்வார் என எதிர்ப்பார்க்கலாம் !
நமது மக்கள் பிரதிநிதிகள் சட்ட சபையிலேயே BF பார்ப்பதும் ...
படுக்கையின்  பணத்தை அடுக்கி புரள்வதும் ...
பொது இடத்திலேயே இப்படி 'கடமை'யாற்றுவதைப் பார்க்கும் போது  நிச்சயமாய் தெரிகிறது ...
நம்ம நாடு நல்லா வரும்னு  !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

கரண்ட் ஆறு மாசம் ,காஸ் ஆறு மாசமா?

           ''கரண்ட்டும் பற்றாக்குறை, சிலிண்டர்  கேசும் பற்றாக்குறை ,சமையலை எப்படி பண்றதுங்க ? 

                  ''காடுஆறுமாசம் ,நாடுஆறுமாசம்னு  சொல்றமாதிரி
கரெண்ட் ஆறுமாசம் ,காஸ் ஆறு மாசம்னு மாத்திக்க வேண்டியதுதான் !''
22 comments:

 1. 'காடுஆறுமாசம் ,நாடுஆறுமாசம்னு சொல்றமாதிரி
  கரெண்ட் ஆறுமாசம் ,காஸ் ஆறு மாசம்னு மாத்திக்க வேண்டியதுதான் !''
  நல்ல கற்பனை...

  ரயிலை பிடிக்க வேறு வழி..?

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் வெளி நாட்டில் இருப்பதால் உங்கள் நிலையும் ,காடாறு மாசம்தானா :)
   நன்றி

   Delete
 2. நம்ம நாடு நல்லா வரும்
  தம 1

  ReplyDelete
  Replies
  1. நம்ம காலத்திலேயா .பேரன்க காலத்திலேயா :)
   நன்றி

   Delete
 3. நாடு நல்லா வரும் ...
  தம ஒன்று

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான்யா நானும் நம்பிக்கிட்டிருக்கேன் :)

   Delete
 4. m.p இன்னொசென்ட் என்று சொல்வார்.! அவர் இன்னொசென்ட் இல்லை ஜி ! மக்களை இன்னொசென்ட் என நினைக்கிறார்!.வலைப் பதிவர் விழாவில் தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி..!
  வாருங்கள் என் "எண்ணப்பறவை"க்கு !

  ReplyDelete
  Replies
  1. உங்களை சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி !
   உங்கள் தளத்தின் இலக்கியப் புதிரில் நானும் கலந்து கொண்டு விட்டேனே :)
   நன்றி

   Delete
 5. 01. இனிமேல் ரயில்வே ஸ்டேஷனுக்கு போனால் பகவான்ஜி ஞாபகம் வரும்.

  02. அவரு பொி பேக்கிங்கோட போனாரோ ?

  03. நம்ம நாடு நல்லா வருமா ?

  04. காஸ் ஆறு மாசமா ? சிலிண்டரை பார்த்தா ஒத்துக்கொள்ளலாம் கரண்ட் ஆறு மாசமா ?

  ReplyDelete
  Replies
  1. 1.என் ஞாபகத்தில் ரயிலை விட்டுறப் போறீங்க :)

   2.பெரிய பேக்கிங் உடம்புலேயே இருக்கே :)

   3.வெளிநாட்டில் இருக்கிற நீங்கதான் சொல்லணும் :)

   4.சிலிண்டரும் ஒன்பதுதான் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னதை மறந்து விட்டீர்களா :)
   நன்றி

   Delete
 6. இன்னுமா....நம்ம நாடு..நல்லா வரல......!!!!

  ReplyDelete
  Replies
  1. என் வாயிலேதான் நல்லா வருது :)
   நன்றி

   Delete
 7. ஜோக்ஸ் அனைத்தும் சிறப்பு! வரவழைத்தது சிரிப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஒத்தாசை என்று கதை மட்டும் எழுதலே ,ஜோக்காளிக்கும் ரொம்ப ஒத்தாசையா இருக்கீங்க ,நன்றி !

   Delete
 8. ரயிலைப் பிடிக்கணும்னா
  பிளாட்பார்முக்கு வந்தே தீருவான்னு சொல்றீங்க...
  'பொடி' நடை நடந்தாலே தும்மலா
  'பொடி' ஜம் செய்தால் என்னவாம்?
  காங்கிரஸ் MP
  ஸ்வேதா மேனன் இடுப்பில்
  கைகளால் விளையாடி இருக்கிறாரா?
  ஈற்றில் ஆறு மாதக் கணக்கா?
  என்றெல்லாம் எண்ணிப் பார்த்ததை
  தங்களுடன் பகிருகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இதுவே கதைச் சுருக்கம் போலத்தான் இருக்கு :)
   நன்றி

   Delete
 9. வாக்கிங் ஜாக்கிங் ஜோக்கிங்கா? தம 4

  ReplyDelete
  Replies
  1. ஷாக்கிங் ஆகிப் போனேன் ,கிங் ,உங்க கமெண்ட்டைப் பார்த்து :)
   நன்றி

   Delete
 10. நாடு நல்லா வந்துருமா என்ன... வர விட்டாத்தானே...
  சிரிப்ப்ஸ் அருமை...

  ReplyDelete
  Replies
  1. ஜாண் ஏறினா முழம் சறுக்குகிறதே ?:)
   நன்றி

   Delete
 11. கரண்ட் ஆறு மாசம் - கேஸ் ஆறு மாசம் - நல்ல ஐடியாவா இருக்கே! :))

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. வேற வழி,நெருக்கடி இப்படி யோசிக்க வைக்குதே :)
   நன்றி

   Delete