5 November 2014

தங்கத்தின் மீதான மோகம் குறைந்ததா தமிழக பெண்களுக்கு ?

இவனுக்கு எதுக்கு செல்போன் ?
              ''செல்போன் காணவில்லை ,கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுன்னு  தினசரியில் விளம்பரம் பண்ணியுமா கிடைக்கலே ?''
             ''தகவல் தர வேண்டிய எண் என்று அந்த நம்பரையே கொடுத்து தொலைச்சிட்டேனே ''

          

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

மருமகளின் 'பன்றிக் 'காணிக்கை ?

            ''பன்றி உருவம் பொறிச்ச தங்க காசை , நன்றிக் காணிக்கையா போடுறீயே ,பன்றிக்காய்ச்சல் வீட்டுலே யாருக்காவது வந்து போச்சா ?''
                       ''ஆமாம்டி,பன்றிக்காய்ச்சல்லே போய் சேர்ந்தது   என் மாமியார் ஆச்சே  !''

தங்க மோகம் குறைந்ததா தமிழக பெண்களுக்கு ?

தங்கம் கிராமுக்கு 137ரூபாய் குறைந்த போதிலும் ...
இவ்வாண்டு தீபாவளி காலத்தில் 38சதவீதம் விற்பனை சரிந்துள்ளது ...
இதற்கு காரணம் ...
பணப் பற்றாக்குறை ,பணவீக்கம் அதிகரிப்பு ,விலைவாசி உயர்வு ஆகியவைகளாம்...
மக்களிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது என்ற முடிவுக்கும் வரவிடாமல் தடுக்கிறது ...
டாஸ்மாக் மதுவின் அமோக விற்பனை !
இவ்வாண்டு விற்பனை ,இலக்கை தாண்டி 
ரூபாய் 154கோடியாக உயர்ந்துள்ளதாம் ...
இது கடந்த ஆண்டைவிட 22சதவீத உயர்வாம் ...
கின்னஸ் உலக சாதனையாக இருக்கக் கூடும் ...
தங்கம் விற்பனை சரிகிறது ,டாஸ்மாக் விற்பனை கூடுகிறது என்றால் புரிகிறது ...
தமிழக மக்களிடம் தங்க வடிவில் சேமிப்பாய் மாற வேண்டிய பணம்தான் ...
டாஸ்மாக் வழியில் தண்ணீராய் மாறி அரசு கஜானாவில்  நிரம்பி வழிகிறது !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

அணைத்  தண்ணிய மட்டம்னு சொல்லப் படாது !

          ''உப்பு கரிச்சாலும் கடல்நீர் கடல்நீர்தான்னு
                                    
  ஏன்  சொல்றே ?
                         
             ''கடல்நீர் மட்டம்னு யாராவது சொல்றாங்களா!''29 comments:

 1. முதல் இரண்டும் வெடி ரகம்.
  அப்புறம் ரொம்பவும் யோசிக்காதீங்க. ஏற்கனவே முடி கொட்டிப்போச்சு. பார்க்துக்குங்க...

  ReplyDelete
  Replies
  1. அது வெடி ரகம் ,கடைசி குண்டு ரகம் :)
   இனி முடி இருந்தாலேன்ன போனாலேன்ன ஒரு முடிவோதான் நான் இருக்கேன் :)
   நன்றி ட

   Delete
 2. Replies
  1. முதலில் த ம போடும் நீங்களும்தான் புத்திசாலி :)
   நன்றி

   Delete
 3. 1.ரொம்ப புத்திசாலி.
  2. வித்தியாசமான நன்றி காணிக்கை.
  3.நமக்குபுடிச்சது எல்லாம் டாஸ்மாக் தண்ணி தான்னு யாராவது சொல்லிடப்போறாங்க ?.
  4.அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை எங்கே கிடைக்கும்?

  ReplyDelete
  Replies
  1. மேலே சொன்னதுதான் இதற்கு பதில் :)
   மாமியார் மேல் அம்புட்டு பாசம் :)
   யாராவது என்ன ,நாட்டிலே பாதிப் பேர் அப்படித்தானே சொல்றாங்க :)
   ஆயுள் கால அட்டை மட்டுமே உண்டு :)
   நன்றி

   Delete
 4. 01. நல்ல ஞாபகசக்தி.
  02. நன்றி சொல்ல பன்றியை உபயோகப்படுத்துறது நம்ம கண்ட்றிதான்.
  03. உங்களை நிதியமைச்சராக போடலாமோ...
  04. ‘’கடல்நீர் மட்டம்னு’’ சொல்லமாட்டாங்க, ஆனால் ‘’கடல் நீர்மட்டம்னு’’ சொல்வாங்க... நல்லாத்தான் யோசிக்கிறீங்க.. நானும்தான் யோசிக்கிறேன்.... ஆனா நகழமாட்டுதே....

  ஷகிலா மார்()கட்டு ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. விளங்கிடும்:)
   பன்றியை மட்டுமா :)
   நிதி வர்ற வழி சரியில்லையே :)
   நல்லவேளை ,ரசித்தீர்களே இது ரொம்ப மட்டம்னு நினைக்காம :)
   நன்றி

   Delete
 5. செல்லு லொல்லு மிக மிக அருமை
  தங்கள் ப்ளேக்கே கவர்ச்சியானதுதான்
  அதிலும் இன்னொரு கவர்ச்சியா ?

  ReplyDelete
  Replies
  1. கவர்ச்சிக்கு ஏது எல்லை :)
   நன்றி

   Delete
 6. Replies
  1. கவர்ச்சிக்கு போட்ட வாக்குக்கு நன்றி !

   Delete
 7. சிறப்பான நகைச்சுவைகள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கடைசி பதிவுதான் நான் போட்ட கடைசி கவர்ச்சி பதிவு :)
   அவ்வளவு வரவேற்பில்லை விட்டுவிட்டேன் !
   நன்றி

   Delete
 8. 1, 2 செம .......ஹஹஹஹஹஹாஹ்

  ஷகிலா...ஹஹாஹ் ...ம்ம்ம் கட்சி வாந்தா மாதிரிதான்....

  ReplyDelete
  Replies
  1. ஷகிலா பேட்டி கொடுத்தது சென்ற வருடம் ,இதுநாள் வரையிலும் அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை ,எந்த கட்சிக்கும் கொடுப்பினை இல்லை போலிருக்கே :)
   நன்றி

   Delete
 9. ஏதோ..வாசனை வருது....என்னான்னு யோசனை வரல...ஜீ

  ReplyDelete
  Replies
  1. கொஞ்ச நேரம் பொறுங்க ,தீஞ்ச போன நாற்றம் வரும் ,கண்டு பிடிச்சிடலாம் :)
   நன்றி !

   Delete
 10. where is your diwali dress?
  dad didn't buy sir.
  why?
  drinks everyday.

  study well be a good girl everything will be ok soon

  sure sir

  கடந்த வாரம் வகுப்பறை உரையாடல் ஒன்று ...

  ReplyDelete
  Replies
  1. நல்ல நாளும் அதுவுமா பிள்ளைக்கு கூட புதுத் துணி எடுக்க முடியாத குடிகாரன் இருந்தென்ன ,போயென்ன ?
   நன்றி

   Delete
 11. வணக்கம்
  தலைவா.
  எல்லாம் சூப்பர்.. இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி
  த.ம-8

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. எல்லா நாடுகளிலும் போதைக்கு அடிமை ஆவோர் பெருகி வருகிறார்கள் ,இல்லையா ரூபன் ஜி ?
   நன்றி

   Delete
 12. நான் தங்கள் தளத்தை அறிமுகம் செய்த வேளை, நகைச்சுவை மட்டுமல்ல பிற இலக்கியங்களும் உங்களால் எழுத முடியம் என்றிருந்தேன். கவிதை, கதை, கற்பனைக்கட்டுரை எனப் பலவும் தருகிறீர்கள். பாராட்டுகள்!
  "காமநெடியிலிந்து காமெடி to அரசியல்" என்ற பதிவு நன்று.
  "தங்க மோகம் குறைந்ததா தமிழக பெண்களுக்கு?" என்ற பொருண்மிய அறிக்கை நன்று.
  ஏனைய மூன்று நகைச்சுவையும் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. எல்லா விஷயங்களிலும் புகுந்து கலக்க வேண்டுமென்று ஆசைதான் ....இப்போதே வீட்டைக் கவனிப்பதே இல்லை என்று இல்லாளின் பூரிக்கட்டை தலைக்கு மேலே தொங்கிக் கொண்டே உள்ளதே :)
   நன்றி

   Delete
 13. கவர்ச்சியே இந்த கவர்ச்சிய பாத்து வெக்கபடும் !

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் வெட்கம் என்று ஒன்றிருந்தால் வெட்கப் படும் :)
   நன்றி

   Delete