1 December 2014

கல்யாண ஃபோட்டோ ஷூட்டிங்ல அது மட்டும்தான் பாக்கி.!

-----------------------------------------------------------------------------------------

மாமூல் நூறு வகை ?

                         ''நம்ம ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் 

,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
                 

            ''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி 

வெளியிட்டு இருக்காரே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

 அதுவுமா இருக்கும் ?  

                 ''அந்த அகராதிகிட்டே  கல்யாண 

ஆல்பத்தைக் காட்டாதேன்னு   சொன்னா ,கேட்டியா ?''
                
          ''இப்போ அதுக்கென்ன ?''
             
          ''பஸ்ட் நைட்  போட்டோ ஒண்ணுமே 

இல்லையேங்கிறான் !''
இதுக்கு வந்த ரசிக்க வைத்த கமெண்ட்.......

இப்போ நடக்கும் கல்யாண ஃபோட்டோ ஷூட்டிங்ல அது மட்டும்தான் பாக்கி. மத்தபடி முதுகு வழியா அணைச்சுக்குறது, இடுப்புல கை வச்சுக்குறது, மடில சாஞ்சுக்குறதுன்னு மிட்நைட் 2 மணி வரை ஃபோட்டோ எடுத்து தள்ளுறாங்க.
ReplyDelete

Replies


 1. நல்ல வேளை,மிட் நைட் மசாலாவையும் சேர்த்து எடுக்காம போனாங்களே !
  நன்றி
 2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
 3. இவர் நம்ம ஊர் சர்தார்ஜி போலிருக்கு!
 4.  ''ஆனந்தவிகடன்  வாங்கவா வாராவாரம் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு  வந்து போறீங்க?''
 5. ''அங்கே வாங்கினா19ரூபாய்!இங்கேவாங்கினா   17ரூபாய் தானே ?''

சுய ஒளி சூரியனாய் இருக்கணும் !

இரவில் நிலா மின்னுவது 
இரவல் ஒளியால் ..
இரவல் வாங்கி ,வாங்கியே 
ஒருநாள்  ஓடி ஒளிந்துக் கொள்கிறதா?

34 comments:

 1. கவிதை சூப்பர்.
  போலீஸ்காரர்கள், திருடர்களை பிடிப்பது எப்படின்னு புத்தகத்தை அல்லவா எழுதணும்...

  ReplyDelete
  Replies
  1. கடன் வாங்கியவன் ஒருநாள் ஓளிந்து கொள்கிறான் ,இல்லையென்றால் ஒளித்து வைக்கப் படுவது நடக்கிறதே :)
   அந்த வித்தையை டிபார்ட்மென்ட் சொல்லித்தரும்,இந்த வித்தையை அனுபவசாலி தானே சொல்லித் தரணும்:)
   நன்றி

   Delete
 2. மாமூலில் மட்டுமில்லை, புத்தகம் எழுதியும் சம்பாதிக்கலாம்! அதில் சில கான்ட்ரவர்சி சேர்த்தால் இன்னும் வியாபாரம் பிச்சிக்கும்! :))))

  அடப்பாவி!

  ஹா....ஹா...ஹா...

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் சர்வீசில் இருக்கும்வரை எந்த ஊழலையும் கண்டுக்காம ,ஓய்வு பெற்றபின் ,நீங்க சொல்ற மாதிரி எழுதினால் பண மழைதான்:)

   அகராதின்னா அப்படித்தானே இருப்பான் :)
   நன்றி

   Delete
 3. கவிதையும் நல்லா இருக்கு ஜி...

  ReplyDelete
  Replies
  1. 'யும் 'னு நீங்க போட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது :)
   நன்றி

   Delete
 4. Replies
  1. நீங்க கரந்தை மாமனிதர்கள் என்று நூல் எழுதி பெருமை சேர்த்ததைப் போல் ,அந்த இன்ஸ்பெக்டரும் துறைக்கு பெருமை சேர்க்கிறாரே :)
   நன்றி

   Delete
 5. சார் பர்ஸ்ட் நைட் போட்டோ, வீடியோவெல்லாம், வெளிநாடுகளில் எடுத்துக்கொள்வதாக சொல்கிறார்களே? அது கிடக்கட்டும். எனக்குத்தெரிந்த, அவருக்கு என்னைத்தெரியாத, சென்னையின் பிரபல ஓட்டல் அதிபர் ஒருவரின் தாயார், சேலம் அருகே இறந்து விட்டார். பிணம் வீட்டில் இருந்தது. உறவினர்களும், நண்பர்களும் துக்கம் விசாரிக்க குழுமியுள்ளனர். அங்கு துக்கம் விசாரிக்கும் நிகழ்வுகளையெல்லாம் ஒன்றுவிடாமல், வீடியோ, போட்டோ, ஆள் வைத்து எடுத்துக் கொண்டிருந்ததை கண்டு எனக்கு அதிர்ச்சி. திருமண போட்டோ என்றால், பிற்காலத்தில் போட்டுப்பார்க்கலாம். சாவு வீட்டில் போட்டோ, வீடியோ எடுத்து என்ன செய்வார்களோ?

  ReplyDelete
  Replies
  1. மானங்கெட்டசெயல் நண்பரே,,, இதைத்தான் சந்தனம் மிஞ்சுனா ............... தடவுவானாம். என்பது.

   Delete
  2. அதுதானே ,துக்க நிகழ்ச்சியை எப்படி மீண்டும் போட்டுப் பார்க்கத் தோணும் ?ஒருவேளை ,,கொள்ளி வைக்க வேண்டிய பிள்ளை வெளிநாட்டில் இருந்து வர முடியாததால் ,ஆன் லைனில் அவன் பார்த்துக் கொள்ளட்டும் வீடியோ எடுக்கிறார்களோ ?
   நன்றி !

   Delete
  3. கில்லர் ஜி ,அதென்ன பழமொழி ,கோடிட்ட இடத்தில் எதை வைத்து நிரப்புவது என்று புரியலையே :)
   நன்றி

   Delete
 6. 1 & 2. கலிகாலம்.. ஒன்னும் சொல்றதுக்கில்லை..

  3 + 4. அருமை!..

  ReplyDelete
  Replies
  1. இன்னும் மோசமாகவும் போகக்கூடும் :)

   இரவல் ..என்னைக்கு இருந்தாலும் சிக்கல்தானே :)
   நன்றி

   Delete
 7. போலிஸ்காரர்களுக்கு நூறு வழிமுறைகள் என்றால் பொதுமக்களுக்கு....?ஃபர்ஸ்ட் நைட் ஃபோட்டோ? எப்படியெல்லாம் புத்தி போகுது...!

  ReplyDelete
  Replies
  1. துரை செல்வராஜு அய்யாதான் கலிகாலம்னு சொல்லிட்டாரே ,புத்தி அப்படித்தான் போகும் :)
   நன்றி

   Delete
 8. ''.. ''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி

  வெளியிட்டு இருக்காரே !'' AAha!....தன்னைத் தானே காட்டிக் கொடுக்கும் வழி.
  ''..நைட் போட்டோ ஒண்ணுமே

  இல்லையேங்கிறான் !''......good.....(ironic)
  ''..இங்கேவாங்கினா 17ரூபாய் தானே ?..'' Mara mandai.....

  ...மிக நன்று சிரிப்பு...சிரிப்பு...
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. AAha,good,maramandai மூன்றையும் நானும் ரசித்தேன் :)
   நன்றி

   Delete
 9. ஹா....ஹா...ஹா... கவிதை அருமை!..

  ReplyDelete
  Replies
  1. இரவல் கவிதைதானே :)
   நன்றி

   Delete
 10. 01. நாலுபேருக்கு நல்லதுனா எதுவும் செய்யலாம்... அப்படினு சினிமாவுல சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாரோ....

  02. உண்மைதான் ஃபோட்டோ கலாச்சாரம் வர வர ரொம்பவும் கேவலமாக போய்க்கொண்டு இருக்கிறது இதனைக்குறித்து என்னிடம் ஒரு ஃபோட்டோ கிடைத்தது பதிவிடுகிறேன்.

  03. இவரு, நேஷனல் பெர்மிட் லாரி டிரைவரா ?

  04. நிலாக் கவி அருமை பகவான்ஜி.

  த.ம.5
  காலையிலேயே ஓட்டுப்போட்டுத்தான் அலுவலகம் சென்றேன். (காலையில் ஓட்டுப்போட மட்டுமே நேரம் இருக்கிறது என்ன செய்வது ? பகவான்ஜி பூவாவுக்கு, ரூவா வேணுமே)

  ReplyDelete
  Replies
  1. 1.அப்படி சொல்ல முடியாது ,தப்பான கருத்தை சரியா புரிஞ்சுகிட்டிருக்கார் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)
   2.சீக்கிரம் அந்த நல்ல காரியத்தை செய்யுங்க :)
   3.நேஷனல்பெர்மிட்.... எங்கு வேண்டுமானாலும் தண்ணி அடிக்கிறவர் :)
   4.கொடுத்தவன் கேட்காவிட்டாலும் இது ஏன் ஒளிந்து கொள்கிறதோ ?:)
   உங்கள் நிலைமைதான் எனக்கும் !
   நன்றி

   Delete
 11. புத்தகம் எழுதியும் சம்பாதிக்கலாம்! :)

  எதைத்தான் படம்பிடிப்பது என்றில்லையா!

  புத்தகம் வாங்க சென்னைக்கு வருவது - ஆஹா 2 ரூபா லாபத்துக்கு 500 ரூபா செலவு!

  கவிதை அருமை.

  த.ம. 6

  ReplyDelete
  Replies
  1. அடுத்து ,போலீஸ் நாயை ஏமாற்றி கொள்ளை அடிப்பது எப்படின்னு கூட எழுத இருக்கிறார் :)

   படம் பிடித்தால் தானே பிளாக் மெயில் செய்து சம்பாதிக்கலாம் :)

   மிச்சம்தானே அவருக்கு தெரியுது ?:)
   நன்றி

   Delete
 12. மாமூல் வரும் 100 வழிகள் நூலை விலைக்கு விற்பாரா? மாமூல் வழியிலா?

  ReplyDelete
  Replies
  1. மாமூல் வாங்கித்தானே பழக்கம் ?:)
   நன்றி

   Delete
 13. ஆனந்த விகடன் வாங்குறவர்..... ரெம்ப ரெம்ப...சிம்பிளானவங்க...........!!!!!!!!!!!...

  ReplyDelete
  Replies
  1. அவரோட எளிமையைக் கண்டு நானும் அசந்து போனேன் :)
   நன்றி

   Delete
 14. Replies
  1. மாமூலா வந்து ரசிப்பதற்கு நன்றி !

   Delete
 15. கல்யாண போட்டோ ஷுட் ஜோக் சூப்பர் ...அதுக்கு வந்த கமெண்ட் அதை விட சூப்பர்....

  ReplyDelete
  Replies
  1. முகூர்த்த போட்டோவைப் பார்க்கலாம் சரி ,சாந்தி முகூர்த்த போட்டோவையுமா :)
   நன்றி

   Delete
 16. ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி !

   Delete