11 December 2014

புருஷனுக்கு நெக்லஸ் வாங்கி வந்த மனைவி !

கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமல்ல!

                     '' என் பெண்டாட்டி இப்படி ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தாஅவ கழுத்திலே மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''

                   ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
             ''மாஞ்சாக் கயிறு தான் !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

11.12 .13 ஐ மறக்க முடியாத நாளாக மாற்றும் கணவன் ?

            ''என்னங்க ,இன்னைக்கு தேதி 11.12 .13 ஆச்சே ...நிறைய பேர் இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கிறாங்களாம் ,நாமளும் மறக்க முடியாதபடி என்ன  காரியத்தைச்  செய்யலாம் ,சொல்லுங்க !''
                         ''டைவர்ஸ்வேனா  பண்ணிக்குவோம் !''

இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
நல்லவேளை, தங்கச்சிய கூப்பிடுன்னு பன்னாடை சொல்லலை!
ReplyDelete

Replies


 1. அதுக்காக பன்னாடைக்கு ஒரு பொன்னாடை போர்த்தி விடலாமா ?
  நன்றி
             ''ஷாப்பிங் போன உங்க மனைவி நெக்லஸ் வாங்கிகிட்டாங்க சரி ,உங்களுக்கு ?''
'' பனியன்தான்,அதுலேயும் நெக்லஸ் !''


இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....ஒஹோ
புருஷனுக்கும் நெக்லஸ்
வாங்கியாச்சுன்னு சொல்லிக்கலாம் இல்லே
புத்திசாலி பொண்டாட்டி
கட்டிக்கிடவன் பாடு திண்டாட்டம்தான்--
 1. கல்லு பதிச்ச நெக்லஸ் அவங்களுக்கு ,நாலு நாள்லே பொத்தல் விழுற பனியன் மட்டும் புருஷனுக்கா?
  நன்றி
 2. அங்கேயும் கழுத்தறுத்து விட்டாங்களா? அய்யோ பாவம்
  ReplyDelete

  Replies


  1. தாம்பத்தியத்திலே இதெல்லாம் சகஜமப்பா ,,,இது கவுண்டமணியின் மைன்ட் வாய்ஸ் மட்டுமில்லே !
   நன்றி
 1. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்..
 2. கொசு ஒழிக்க திட்டம் ..ஆனா மக்கள் ஒத்துழைப்பு ???

                                ''தண்ணி தேங்கிற இடத்தில் ,கொசு முட்டையை  சாப்பிடுற மீன்களை விட்டும்கொசு குறையலையே ,ஏன்?''
                         ''அந்த மீன்களை எல்லாம் பிடித்து மக்கள் தின்னுட்டாங்களே !  

தொடையில் மச்சம் என்று  பதிந்தால் எப்படி காட்டுறது ?

அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேட்கும் போதுதான் ....
தொடையில் மச்சமாய் சிரிக்கும் அப்பாவை 
கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !
36 comments:

 1. 01. ஒரு துணையெழுத்து துணைவியுடைய உயிரை எடுக்க துணியுதே...

  02. வாழ்க்கை இவ்வளவு லட்சணத்துல இருக்கோ,,,,

  03. இதையாவது வாங்கி கொடுத்தாளே,,,, கர்ச்சீப் வாங்கி கொடுக்காம...

  04. அதனாலதான் தெருவுக்கு ரெண்டு HOSPITAL கட்டுறாங்களோ....

  05. யேன் தொடை ரம்பா மாதிரி இருக்குமே..

  த.ம. 1

  ReplyDelete
  Replies
  1. 1.துணை சரியாக அமையவில்லையெனில் உயிரைப் பறிக்கத்தானே செய்யும் :)

   2 பழகப் பழகப் பாலும் புளிக்குமோ :)

   3.கர்சீப் வாங்கிக் கொடுத்தாலும் கப்சிப்ன்னு இருக்க வேண்டியதுதான் :)

   4.கொசுக்கள் கிளினிக்குகளை நன்றாகவே வாழ வைக்கின்றன :)

   5.ஒரு கோடிக்கு இன்ச்சூர் பண்ணிக்குங்க நம்பறேன் :)
   நன்றி

   Delete
 2. ஒரு துணைக்கால்
  எத்தனையப் பெரிய வித்தியாசத்தைக் காட்டுது பாருங்க
  மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. துணை மேல் கால் போடலாம் ,தேவையில்லாம துணைக்கால் தான் போடக்கூடாது :)
   நன்றி

   Delete
 3. டைவர்ஸ் நாள் மறக்க முடியாத நாளாக மாறிவிடும் தான்.

  ReplyDelete
  Replies
  1. டைவர்ஸ் அவருக்கு சந்தோசம் தரும் போலிருக்கே :)
   நன்றி

   Delete
 4. வணக்கம்
  ஆகா...ஆகா.. மாஞ்சாக் கயிறு... கேட்டவுடன் பயந்தான் வருகிறது.....
  மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பட்டம் விட விளையாட்டுக்கு பயன்பட்ட மாஞ்சாக் கயிர் பல பேரின் உயிருக்கே வினையாய் ஆனதால் தடை செய்யப் பட்டுள்ளது ,அதனால் ஏற்பட்ட பயம்தானே :)
   நன்றி

   Delete
 5. அனைத்தும் அருமைணா ! மனம்விட்டு சிரித்தேன்

  தம

  ReplyDelete
  Replies
  1. மறைவான இடத்தில் உள்ள மச்சத்தை காட்டச் சொன்னால் சின்ன வயதில் சரி ....வளர்ந்த பிறகும் என்றால் :)
   நன்றி

   Delete
 6. Replies
  1. பள்ளியில் சேர்க்கும் போதே பிள்ளையின் அடையாளத்தை யோசித்து பதிவு செய்திருந்தால் அப்பனுக்கு இந்த பிரச்சினை வந்திருக்காதே :)
   நன்றி

   Delete
 7. இவரு மாஞ்க்கயிறு போடுவதற்கு முன்னமே..அய்யாவுக்கு தூக்கு கயிறு வந்திருக்கும் என்பதை மறைச்சு பேசுறாரு.....ங்கோ....

  ReplyDelete
  Replies
  1. கொலையும் செய்வாள் பத்தினி(?)கணவனையுமா :)
   நன்றி

   Delete
 8. ஹஹஹஹ ....அனைத்துமே ! பழையதும் நினைவில் இருக்கின்றது ஜி!

  ReplyDelete
  Replies
  1. பழையதும் ,புதுசும் கலந்த கலவையை ரசித்ததற்கு நன்றி :)

   Delete
 9. அனைத்தும் ரசித்து சிரிக்க வைத்தன! அதுவும் நெக்லஸ் பனியன் டாப்! ஹாஹாஹா!

  ReplyDelete
  Replies
  1. கணவனின் கவலைப் போக்க ,அடுத்த தடவை காலர் பனியனை வாங்கித் தருவாரோ :)
   நன்றி

   Delete
 10. நெக்லஸ் பனியன்...செம...அனைத்தையும் ரசித்து சிரித்தேன். தம் + 1

  ReplyDelete
  Replies
  1. வாங்கி வந்ததை கோளாறு சொன்னால் ,அடுத்த முறை இதுவும் கிடைக்காதே:)
   நன்றி

   Delete
 11. நெக்லஸ் பனியன்! நன்று!

  ReplyDelete
  Replies
  1. மனக்கண்ணிலேயே அந்த பனியனை மாட்டிப் பார்த்ததற்கு நன்றி :)

   Delete
 12. Replies
  1. முதலில் நன்றி :)

   Delete
 13. உங்க இடுகையின் தலைப்பை....புருஷனுக்கு செக்ஸ் வாங்கித்தந்த மனைவி என்று படித்துவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. நம்பள்கி, நீங்களும் நம்மைப்போல்தான் தமிழ் படிப்பீங்களோ....

   Delete
  2. வாங்கித் தர்றதா ?அப்புறம் எதுக்கு பெண்டாட்டின்னு சொல்லிக்கணும் :)
   நன்றி

   Delete
  3. கில்லர்ஜி,புருஷன் ,பெண்டாட்டின்னாலே இது ஒண்ணுதானா :)
   நன்றி

   Delete
 14. Replies
  1. உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கலையா:)
   நன்றி

   Delete
 15. நெக்லெஸ் பனியன் எப்படிப் போடுவது. இப்போதெல்லாம் மஞ்சக்கயிறு கட்டுகிறார்களா. நிறைய இடங்களில் தாலியோடான கோல்ட் செயின்தான்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப ஈஸிதான் ..பனியன் போட்டுக்கிறது ,அதிலென்ன ஜிப் இருக்கா ,ஹூக் இருக்கா ?
   பேஸிக் மஞ்சக் கயிறுதானே அய்யா :)
   நன்றி

   Delete
 16. பறக்காமல் இருக்க ஒரு மாஞ்சா கயிறு!!! பாஸ் எங்கயோ போய்டீங்க:)))

  ReplyDelete
  Replies
  1. பட்டம் பறக்கிறதுக்கு பயன்படுறது ,இப்படியும் பயன்படட்டுமே :)
   நன்றி

   Delete
 17. மாஞ்சா கயிறு - என்னா ஒரு கொலை வெறி! :)

  நெக்லஸ் - அதாவது கிடைச்சதே! :))

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நெக்லஸ் - அதாவது கிடைச்சதே! :)) அடுத்த வருஷம் இதுவாவது கிடைக்குமா :)
   நன்றி

   Delete