14 December 2014

கணவனின் புத்தி மனைவிக்கு தெரியும் !

----------------------------------------------------------------------------
நண்பர் கில்லர்ஜி வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று அசத்திக் கொண்டிருக்கிறார் ,அவருக்கு வாழ்த்துகள் !..இதோ அவர் link ...http://blogintamil.blogspot.in/2014/12/p-1985.html
------------------------------------------------------------------------------------------------------------------
   எந்தக் காரியத்தையும் முழுமையா செய்யணும் !                     
                                   ''விலங்கு தோல் ஆடைகளை  தடை செய்யணும்னு ,விலங்குகளுக்கு ஆதரவாய் ஒரு நடிகை ,அரை நிர்வாண போஸ் கொடுத்தாராமே  ,அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறே ?''
                       ''விலங்குகளுக்கு அவர் முழு ஆதரவு கொடுத்தா  நல்லதுன்னு நினைக்கிறேன் !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


மனைவி காதில் எதிரொலியா கணவனின் முணுமுணுப்பும் ?

                ''பையன்கிட்டே என்னைப் பற்றி என்ன சொல்லிக்கிட்டு இருந்தீங்க ?''
            ''பாம்புக் காதுன்னா என்னான்னு விளக்கம் கேட்டான் ...அதான் !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
அப்ப கணவன் மகுடி ஊதினா மனைவி பாம்பு ஆடுவாங்கனு சொல்லுங்க!!
 பகவான்ஜி!!!(பாம்புச் செவியாச்சே!!!)
ReplyDelete

Replies

 1. இவரே பெட்டிப் பாம்பா அடங்கி இருக்கார் ,எங்கே வாசிக்கிறது ?
  நன்றி
 2.                 நான் அந்த நடிகரை சொல்லலைங்க !

 3. ''அடுத்து  ரீலீசாகப் போற படம் வெற்றி அடையணும்னு ஹீரோ மொட்டைப் போட்டுகிட்டாறாமே?''

 4.  ''அவருக்கு இருக்கிற வசதிக்கு ,அவராவே  மொட்டைப் போட்டுகிட்டார்னு சொல்றதைதான், என்னாலே நம்ப முடியலே !''

 5. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
 6. தொப்பி திருடிய குரங்கு கதைதான் உங்களுக்கு தெரியுமே. அதேதான்!
  இவர் முதலில் தான் மொட்டை அடித்துக்கொண்டால் பின்னர் நாம் அனைவரும் அடித்துக்கொள்வேமே, அந்த நம்பிக்கையாக இருக்கலாம்.
  ReplyDelete

  Replies


  1. நம்பிக்கைப் பொய்த்துப் போனால் வளர்ந்த மயிரை பிய்த்துக்கொள்ளவேண்டியதுதானா ?
   நன்றி
  2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

   கணவனின் புத்தி மனைவிக்கு தெரியும்!

  3.              ''என்கிளாஸ்  டீச்சரை  பார்த்துவிட்டு வந்ததில் இருந்து ,அப்பா என்னை அடித்து கொண்டே 
   இருக்கிறார் ,ஏன்னு  கேளு அம்மா !''
  4. ''நீ மிஸ்னு சொன்னதை அவர் மிஸ்டேக்கா புரிஞ்சிக்கிட்டு 
   ஏமாந்து விட்டார் போல் இருக்கு !''
  5.                                                                                                             

  6. நடுத்தர வர்க்க கொதிப்பு அடங்குமா ?
    காஸ்   ஸ்டவ்வில் வெந்நீர் 
   கொதிக்கும் முன்பே ....
   கொதிக்க ஆரம்பித்து விடுகிறது மனம் ...
   ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் போதுமா என்று ?

  7.                                                                   32 comments:

 1. 01. ஒரு நடிகையா ? அந்த நடிகை பேரு ? என்ன பகவான்ஜி

  02. பையன் செவிடு இல்லையே...?

  03. இப்ப நிறைய நடிகரு மொட்டையாத்தான் இருக்காங்கே...

  04. இருக்கிற மிஸஸை மிஸ் பண்ணிடாமல் இருக்கட்டும்

  05. ஸ்டவ் கவிதை ஸூப்பர்

  தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று

  ReplyDelete
  Replies
  1. 1.பூக்களின் ஊடே புகுந்து பாருங்கள் ,தெரியும் :)
   2.அப்படி பிற(இரு)க்க வாய்ப்பே இல்லையே :)
   3.நிரந்தர மொட்டை ?:)
   4.அதுதான் மிசஸ் ஆயிடுச்சே :)
   5.முந்தைய மத்திய ஆட்சி மக்களை கொதிக்க விட்டு ,காணாமல்போயிடுச்சே :)
   இரட்டிப்பு நன்றி !

   Delete
 2. Replies
  1. அந்த கொதிப்பிற்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டி விட்டார்களே :)
   நன்றி

   Delete
 3. //''விலங்குகளுக்கு அவர் முழு ஆதரவு கொடுத்தா நல்லதுன்னு நினைக்கிறேன் !''//

  பொல்லாத ஆசை!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு அந்த 'பசி' இல்லையா ,பரமசிவம்ஜி ?
   நன்றி

   Delete
 4. Replies
  1. நடிகை ,நடிகரைப் பற்றிய தகவல்களையுமா ?
   நன்றி

   Delete
 5. // விலங்கு தோல் ஆடைகளை தடை செய்யணும்னு ,விலங்குகளுக்கு ஆதரவாய் ஒரு நடிகை ,அரை நிர்வாண போஸ் கொடுத்தாராமே ,அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறே ?''
  ''விலங்குகளுக்கு அவர் முழு ஆதரவு கொடுத்தா நல்லதுன்னு நினைக்கிறேன் !''//

  நானும் ஆதரவு கொடுக்கிறேன் !!!

  அனைத்தும் அருமைணா

  தம +

  ReplyDelete
  Replies
  1. வெறுமனே ஆதரவு தந்தால் போதாதே :)
   நன்றி

   Delete
 6. முழுமையான முதல் நகைச்சுவையை அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தோலினாலும் ,தோல் ஆடைகளாலும் கவர்ச்சி காட்டும் நடிகையே ,தோலாடைகளை எதிர்ப்பதாக சொல்வது நகைச்சுவைதானே :)
   நன்றி

   Delete
 7. 1. விலங்குகளாவது நிம்மதியாக இருந்து விட்டுப் போகட்டுமே!?..
  2. காது - கேக்காது!?..
  3. மொட்டையா! - முட்டையா?..
  4. கணவனை சரியாக புரிந்து கொண்ட தர்மபத்தினி!..
  5. கொதித்து கொதித்து கடைசியில் - ஆவியாகப் போக வேண்டியது தான்!..

  ReplyDelete
  Replies
  1. 1.சில நொடி உயிர்வாழும் ஈசலைக் கூட மனிதன் விடுவதில்லேயே :)
   2.அவரைப் பற்றி பேசும்போது மட்டும் தெளிவாய் கேட்கும் :)
   3.படம் கூமுட்டை என்று தெரிந்தும் போட்டுகிட்ட மொட்டை :)
   4.தர்ம பத்தினி என்பவர்கள் இவர்கள் போன்றவர்கள்தானா:)
   5.ஆண்ட கட்சி ஆவியாய் போனது ,இப்போ காவியாய் ஆச்சுதே :)
   நன்றி

   Delete
 8. அனைத்துமே சிரிக்க வைத்தன! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி !

   Delete
 9. எதுக்கும் அந்த நடிகையின் பெயர சொல்லி வச்சிருங்க....ஜீ

  ReplyDelete
  Replies
  1. இல்லியானா என்ன செய்வீங்க :)
   நன்றி

   Delete
 10. 'விலங்குகளுக்கு அவர் முழு ஆதரவு கொடுத்தா நல்லதுன்னு நினைக்கிறேன் !''
  வரே பெட்டிப் பாம்பா அடங்கி இருக்கார் ..
  என்று ரசனை...சிரிப்புத்தான்
  மிக நன்று. நன்றி
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி !

   Delete
 11. நல்லா இருக்குங்க எல்லா ஜோக்சும்.

  ReplyDelete
  Replies
  1. கடந்த வாரம் வலைச்சரத்தில் நீங்கள் எழுதிய பதிவுகள் எல்லாமே நல்லா இருந்தது !
   நன்றி

   Delete
 12. கணவனின் மனதை மனைவி என்னமாக புரிந்து வைக்த்திருக்கிறார்!!!
  நடுத்தர வர்க்க கொதிப்பு எங்க அடங்கப்போகுது? - உண்மையிலேயே இது ரொம்ப கொடுமை. சமையல் காஸ் எல்லாம் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அப்பாவின் ஏமாற்றம் பிள்ளைக்கு புரிய கொஞ்சம் நாளாகும் ,அப்படித்தானே :)

   அடிப்படையில் கை வைக்க நினைத்ததன் பலன் ,ஆட்சியில் இருந்த கையே காணாமல் போய் விட்டதே :)
   நன்றி

   Delete
 13. பதிவில் மட்டுமல்ல பின்னூட்டப் பதிலிலும் சிரிக்க வைக்கிறீர்களே பகவானே!!
  த ம கூடுதல் 1

  ReplyDelete
  Replies
  1. அதுதானே ஜோக்காளியின் பாணி :)
   நன்றி

   Delete
 14. ரசிக்க வைத்தது ஜி...
  ஜெயக்குமார் ஐயாவிடம் கேட்ட கேள்வி என்னிடம் கேட்காமல் இருக்க.... எல்லாவற்றையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. சரி ,அவரிடம் கேட்டதை விட்டு விடுகிறேன் ...எண்ணெய் வள நாட்டில் பணி புரியும் உங்களிடம் ஒரு கேள்வி ,கச்சா எண்ணெய் பேரலுக்கு இவ்வளவு டாலர் குறைந்தும் நம் நாட்டில் மட்டும் அந்த அளவிற்கு விலை குறையாதது ஏன் ?
   நன்றி

   Delete
 15. ஜோக்குக்கான சுவையான கம்மென்டையும் பதிவா போடுவது வித்தியாசம்

  ReplyDelete
  Replies
  1. வித்தியாசம் காட்டினாதானே ,என் வழி தனி வழின்னு சொல்லிக்க முடியும் :)
   நன்றி

   Delete
 16. கணவன் புத்தி! சிரித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. கட்டிக்கிட்டவளுக்கு கொதிப்பு அடங்க மாட்டேங்குதே அய்யா :)
   நன்றி !

   Delete