28 December 2014

நடிகையின் முற்றும் துறந்த நிலை ?

---------------------------------------------------------------------

  இப்படியும் சில பெண்கள் !  


             ''நம்ம வீட்டில் நடக்கிறதெல்லாம் வெளியே போயிடுதுன்னு வாய் பேச முடியாத வேலைக்காரியை வச்சுக்கிட்டியே ,இப்ப நீயே ஏன் அவளை வேண்டாங்கிறே ?''

        ''நாலு வீட்டிலே என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


நடிகைக்கு முற்றும் துறந்த நிலை சாத்தியமா?

             ''அந்த நடிகைக்கு தீட்சை கொடுத்த குருவுக்கு கண்டனம் தெரிவிப்பதில் அர்த்தமே இல்லைன்னு ஏன் சொல்றே ?''
                '' முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது அவர் கடமை ஆச்சே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....

"முற்றும் துறந்த நிலை" நடிகை + குரு(சாமியார்!!!??) இது எங்கேயோ உதைக்குதே!! உள் அர்த்தம் ஏதோ இருக்கும் போல தெரியுதே!!!!
த.ம.+
ReplyDelete
 1. உங்களுக்கும் புரிஞ்சுப் போச்சா ?ரொம்ப சரி !
  நன்றி
 2. டெங்கு காய்ச்சல் வர உண்மைக்காரணம் ,கசப்பை நாம் சுவைக்காததுதான் !

                  ''என்னங்க ,நம்ம வீட்டிலே நீங்க மட்டும்தான் பாவக்காய் கசக்கும்னு சாப்பிடுறதேயில்லே ஆனா டெங்கு காய்ச்சல் உங்களுக்கு மட்டும்  வரமாட்டேங்குதே .எப்படி ?'' 
             ''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''
 3. இப்படித்தான் எனக்கு தெரிந்த ஒருவர் வேப்பம்பூ ரசம் தினமும் அவரே செய்து குடிப்பார் அவரை வீட்டில் சந்திப்போருக்கும் ஒரு கிளாஸ் கொடுப்பார் ஆயுசு நூறு என்பார்...அய்யோ பாவம் அவரும் இப்போ இல்லை
  ReplyDelete

  1. அவர் வீட்டுக்கு யாருமே போயிருக்க மாட்டாங்களே ,அவராலும் நூறு வயது வாழ முடியவில்லை ,அப்படித்தானே ?
   நன்றி

  2. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்.......
  3. கோளாறு எங்கேன்னு கண்டுப்பிடிங்க !

   ''ரோஜாச் செடி இருந்த  பூந்தொட்டியை ஏன்  உடைக்கிறீங்க ?''
   ''ஒரு லிட்டர்  தண்ணி  ஊத்தினா  நாலு லிட்டர் தண்ணி வழிஞ்சு  தரையெல்லாம் ஈரமாகுதே !'

 4. கட்டிக் கிட்டாலும் ,வச்சுக் கிட்டாலும் தப்புதானே?!

  1. ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாடு என 
  1. மேடை தோறும்  முழங்கும்  தலைவருக்கு  இருப்பதோ ...
  1. ஊருக்கு  ஒருத்தி !


24 comments:

 1. ரசித்தேன் நண்பரே
  நன்றி
  தம 1

  ReplyDelete
  Replies
  1. வேப்பம்பூ ரசம் உங்களுக்கும் பிடித்ததா ?

   Delete
 2. வேலைக்காரி இதற்குத் தானா...?

  ReplyDelete
  Replies
  1. பல வீடுகளிலும் இதற்கும்தான் :)

   Delete
 3. ஆமாமா..கடமையை செய்..பலனை எதிர்பாராதே..என்று பரமாத்வாவே சொன்னபோது “' முற்றும் துறந்த நிலைக்கு உயர்த்துவது அவர் கடமை ஆச்சே !”

  ReplyDelete
  Replies
  1. ஆனால் இவர் பலனை எதிர்பார்க்காமல் செய்றமாதிரி தெரியலையே :)

   Delete
 4. //ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது பண்பாடு என மேடை தோறும் முழங்கும் தலைவருக்கு இருப்பதோ ... ஊருக்கு ஒருத்தி ! //

  ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே ????

  தம

  ReplyDelete
  Replies
  1. ஊருக்கு ஒருத்தி என்று அவர் சொன்னாலும் பரவாயில்லையோ :)

   Delete
 5. 01. ஆமாமா, இதைப்பர்றி பெண்கள்தான் சொல்லனும்.

  02. ஆமாமா, ரெண்டும் முற்றும் துறந்தவர்கள்தான்.
  (நான் நித்தியையோ, ரஞ்சிதாவையோ சொல்லலை 80தை பதிவு செய்கிறேன்)

  03. மனசுல உள்ளதை கொட்டிட்டாரே...

  04. கணக்குபுள்ளையை, வரச்சொல்றேன்.

  05. அடடே... இப்படித்தான் வாழனும்.

  தமிழ் மணம் – 6

  ReplyDelete
  Replies
  1. 1.ஆனால் வாய் திறக்க மாட்டார்களே :)
   2.80பதை ஏன் பதிவு செய்கிறீர்கள் :)
   3.இதை சொல்ல நேரம் பார்த்துக் கொண்டிருந்தாரோ :)
   4.இதற்கும் அவர்தானா :)
   5.அவர் வாழும் கலையை சொல்லி தந்தால் கத்துக்கலாமோ :)

   Delete
 6. வேலைக்கார அம்மாதான் ஆள் இந்திய ரேடியோவோ

  ReplyDelete
  Replies
  1. AIR இல்லை இது ,லோக்கல் FM:)

   Delete
 7. அடடா தலைவலி போய் திருகுவலி வந்த கதை ஆயிருச்சோ? அருமையான நகைச்சுவைகள் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் வலியை இப்படி வலிய வரவழைத்துக் கொள்ளலாமா :)

   Delete
 8. Replies
  1. சுவையாய் கருத்து சொன்னதற்கு நன்றி :)

   Delete
 9. ஜீ... சரியாதான் சொல்லியிருக்கீங்களா.... முற்றும் துறந்தவா... இல்லை முற்றும் திறந்தவா....?????????????????????

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
  http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. திறந்ததும் ,துறந்ததும் யாமறியோம் :)

   Delete
 10. ''இத்தனைக் காலமும் நான் கசப்போடுதானே வாழ்ந்துக்கிட்டு இருக்கேன் ?''
  Mha!..paavam...
  . ஊருக்கு ஒருத்தி !....mmm.....
  வேப்பம் பூ என்று எல்லாம் சிரிப்புத் தான்.
  மிக்க நன்றி
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தாலி கட்டிய நாளில் இருந்து கசப்பு என்று விளக்கமாய் சொல்லாமல் போனதால் அடி வாங்காமல் தப்பித்து விட்டாரே :)

   Delete
 11. ஆஹா, அதானே அடுத்த வீட்டு ரகசியத்தை தெரிஞ்சுக்காம இருந்தா எப்படி?
  தான் ஒரு அரசியல்வாதின்னு சரியாத்தானே நிரூபிச்சிருக்கார்

  ReplyDelete
  Replies
  1. மண்டை வெடிக்காம போனதே :)
   அதுக்காக அரசிகள் இத்தனை பேரா :)

   Delete
 12. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. உங்களின் எதிர்ப்பார்ப்பைப் போலவே புத்தாண்டு அமைய வேண்டுமென்றே நானும் விரும்புகிறேன் !
   அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி !

   Delete