3 December 2014

அந்தரங்கத்தைப் படம் பிடிக்க அனுமதிக்கக் கூடாது !

-----------------------------------------------------------------------------------------

கொத்தடிமை முன்னேற்றக் கழகத் தலைவரும் ,தொண்டரும் ?

             ''கட்சி உறுப்பினர் அட்டையை வாங்கிக்கிட்டேன் ,இது எத்தனை நாள் செல்லுபடியாகும் தலைவரே ?''
                 ''சுயமரியாதை இல்லாம உங்களால் இருக்கும் நாள் வரைக்கும் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மனைவியின் கோபத்திலும் நியாயம் இருக்கே !

            ''ஜாலியா மனைவியை இமய மலையில் 26000 அடிக்கு மேல் கூட்டிச் சென்று ,அங்கே தாவிக் குதித்த தவளையைக் காட்டினது தப்பாப் போச்சா ,ஏண்டா ?''
             ''இனிமே என்னை கிணத்துத் தவளைன்னு சொன்னா ,கெட்ட கோபம் வரும்னு சொல்றாளே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....

இருந்தாலும் உங்களுக்கு தில்லு அதிகம்.
ReplyDelete


 1. அவ்வளவு உயரமான பனி மலையில் தவளை வாழ்வது உண்மை ,அதுக்கே இவ்வளவு தில் இருக்கும் போது ஜோக்காளிக்கு இருக்காதா ?
  நன்றி
 2. அந்தரங்கத்தைப் படம் பிடிக்க அனுமதிக்ககூடாது !

  அந்தரங்கம் புனிதமானது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ...
  ஆனால் ,கேரள பல் டாக்டர் ஒருவருக்கு இதில் உடன் பாடில்லைப் போலிருக்கிறது ...
  ஜெயகிருஷ்ணன் என பெயர்கொண்ட அவர் இப்போது 'ஜெயில் 'கிருஷ்ணன் எனப் பெயர் எடுப்பார் போலிருக்கிறது  ...
  வலி எடுத்த பல்லைப் பிடுங்க வேண்டியவர் ...
  பல் பிடுங்கிய பாம்பாய் அடங்கிய காரணம் அறிந்தால் ...
  நீங்களும் பாம்பாய் மாறி  அவரை     கொத்திவிடுவீர்கள் ...
  கடந்த செப்டம்பர் மாதம்தான்  அவருக்கு திருமணம் நடந்துள்ளது ...
  தான் பெற்ற இன்பம் தன் இல்லாளும் பெற வேண்டுமென்று தண்ணி அடிக்கவும் ,ஆபாசப் படம் பார்க்கவும் வற்புறுத்தியுள்ளார் ...
  நற்குடியில் பிறந்த அந்த நங்கையோ மறுத்துள்ளார் ...
  மனைவியைக் கொடுமை பண்ண துவங்கிவிட்டார் ...
  இதில் உச்சகட்டக் கொடுமையாக நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்று விட்டாராம் ...
  மாமனார் வீட்டுடன் தொடர்பு கொண்டு சொன்னாராம் ...
  'எனக்கு பத்து லட்ச ரூபாய் தேவைப் படுகிறது ,தராவிட்டால் உங்கள் மகள் என்னுடன் இருக்கும் படுக்கையறைக் காட்சிகளை 'யூ ட்யுப் 'பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார் ...
  காவல் துறையில் புகார் தரப் பட்டு தற்போது கைது செய்யப் பட்டுள்ளார் ...
  படிச்ச டாக்டரே இப்படி 'யூ ட்யுப் 'பை  துப்பாக்கி போல் பாவித்து பிளாக் மெயில் செய்கிறார் ...
  சோசியல் நெட் தளங்கள் இன்னும் வேறு எதற்கெல்லாம்  உதவப் போகிறதோ ?
 3. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
 4. ithai patri naan ezhuthiyathu..
  ஆண் பெண்-
  நட்பென்பது-
  வளர வேண்டிய -
  மரமாகும்!

  அதனை -
  மறுப்பது-
  மடத்தனமாகும்!

  பிரிந்திருந்தால்-
  பிற்போக்கு தனம்!

  கட்டுப்பட்டிருந்தால்-
  காட்டுமிராண்டி தனம்!

  இப்படியாக-
  எத்தனையோ-
  வியாக்கியானம்!

  தற்போதைய-
  ஒரு-
  சம்பவம்!

  பத்து லட்சம்-
  கேட்டான்-
  ஒருவன்!

  மறுத்தால்-
  "உறவை"இணையத்தில்- 
  வெளியிடுவேன்-
  என்றான்!

  யார்-
  இவன்!?

  ஒரு பெண்ணை-
  மணந்தவன்!

  மனைவியின்-
  "அந்தரங்கதிற்குதான்-"
  விலை பேசினான்!

  கைது-
  செய்யப்பட்டுள்ளான்!

  கட்டியவனே-
  வில்லனாக-
  மாறுகிறான்!

  "கண்டவனுடன்"-
  சுற்றுவது-
  பெண்ணுரிமை என்கிறோம்!

  எங்கோ-
  நடந்த ஒன்னு-என
  அலட்சியம் செய்வோம்!

  எங்கோ நடக்கும்-
  திருட்டிற்கு-
  நாம் ஏன் -
  பணத்தை-
  வங்கியில் போடுகிறோம்..!?
  ReplyDelete

  Replies


  1. நான் வார்த்தைகளில் எழுதியதை அருமையாக கவிதை ஆக்கிவிட்டீர்கள் ,
   பாராட்டுக்கள்...தாயெனும் தலைப்பிலான உங்கள் கவிதை நூல் வெற்றி பெற வாழ்த்துக்கள் சீனி !
   நன்றி


 5. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
 6. மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான்!
 7.             ''உன் மனைவி உன்னை சந்தேகப்படுறான்னு சொல்றீயே ஏன்?''

                ''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு சொன்னா ,'நான் இங்கே இருக்கும் போதுஎந்த சிறுக்கி உங்களை நினைக்கிறான்'னு கேட்கிறாளே ! ''             
                                                                                                        
 8.  மரம் சாயலாம்...மனம் ...?
 9. மனதைக் கொத்தும்  துயரங்களால் மனிதன்  சாய்ந்து விடலாமா ...
 10. மரம் கொத்தும் பறவையா மரத்தை சாய்த்து விடும் ? 


30 comments:

 1. 01. அப்பிடினாக்கா,,, சாகும்வரையா ?
  02. அடடே...
  03. சீனிக்கு எமது வாழ்த்துகளும்.....
  04. சந்தேகம் நியாயம்தான்...
  05. இதுவும் சரிதான்.
  த.ம 1

  ReplyDelete
  Replies
  1. 1.இதிலென்ன சந்தேகம் :)
   2.கிணற்றில் இருக்கும் தவளை சிகரத்திலும் இருக்கும் போலிருக்கே :)
   3.சீனி ,அவர் பெயரைப் போல சுருக்கமாய் போடாமல் ,நீண்ட கருத்துரையை கவிதையாய் தந்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே :)
   4.புரை கூட ஏறக்கூடாதா :)
   5.உண்மையில் அது பூச்சியைத் தானே கொத்துகிறது:)
   நன்றி

   Delete
 2. பதிவும் சீனியின் வாழ்த்துக்கவிதையும்
  கில்லர்ஜியின் பகுதிவாரியான பின்னூட்டமும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. #எங்கோ நடக்கும்-
   திருட்டிற்கு-
   நாம் ஏன் -
   பணத்தை-
   வங்கியில் போடுகிறோம்..!?#
   சீனியின் சிந்திக்க வைக்கும் வரிகளை நானும் ரசித்தேன் :)
   நன்றி

   Delete
 3. Replies
  1. மனம் சாயக்கூடாது ,அருமைதானே அய்யா :)
   நன்றி

   Delete
 4. வணக்கம்
  இரசித்தேன் அத்தோடு இறுதியில் டாக்டர் பற்றி சொல்லிய தகவலையும் அறிந்தேன் இப்படியான ஜென்மங்கள் இருந்து என்ன இலாபம்...பகிர்வுக்கு நன்றி த.ம 4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. #இப்படியான ஜென்மங்கள் இருந்து என்ன இலாபம்#
   இருந்தாலும் மறைந்தாலும் இவர் பேர் சொல்லும்படியா நடந்து கிட்டாரே :)
   நன்றி

   Delete
 5. அவர் மருத்துவரே அல்ல...

  முடிவில் சூப்பர் ஜி...!

  ReplyDelete
  Replies
  1. கவலை என்பது மனம் கொத்திப் பறவையா என்று கூட கேட்கலாம் இல்லையா.ஜி ?
   நன்றி

   Delete
 6. தொண்டருக்கு சுய மரியாதை வந்தாலும் உறுப்பினர் பதவி போயிடும்; தலைவரோட வீட்டம்மாவுக்கோ, சின்ன வீட்டம்மாவுக்கோ சந்தேகம் வந்துட்டாலும் பதவி போயிடும்.

  ReplyDelete
  Replies
  1. பதவியை தக்க வைச்சுக்க என்னன்ன பாடுபட வேண்டியிருக்கு ,நல்லாத்தான் இருக்கு , இவங்க சுயமரியாதை :)
   நன்றி

   Delete
 7. முதல் ஜோக் அசத்தல்! தவளை ஜோக்கும் அருமை! அந்தரங்கத்தை விலைபேசியவனை நரகத்தில்தான் தள்ள வேண்டும்! மனைவியோட சந்தேகம் சரிதான்! மரங்கொத்தி கொத்திக் கொண்டே இருந்தால் மரமும் ஒருநாள் சாயத்தானே செய்யும்?

  ReplyDelete
  Replies
  1. பெயர்தான் மரம்கொத்திப் பறவை ,அதற்குத் தேவை மரத்தில் உள்ள புழுக்கள் தானே ?
   நன்றி

   Delete
 8. Replies
  1. தங்கள் வருகை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது :)
   நன்றி

   Delete
 9. மற்ற வசூல் ராஜாக்களை விட்டுவிட்டார்களே!!...............

  ReplyDelete
  Replies
  1. அவர்களும் கம்பி எண்ணும் நல்ல காலம் வரும் :)
   நன்றி

   Delete
 10. கொ.மு. கழகம் மிக மிக அருமை பகவான் ஜி.
  த.ம.9

  ReplyDelete
  Replies
  1. எல்லா கட்சிகளிலும் கடைப் பிடிக்கப்படுகிற முக்கியமான கொள்கை இதுதானே :)
   நன்றி !

   Delete
 11. உளவியல் பிரச்சனைகள் உள்ள கிறுக்கு டாக்டர்...
  துணுக்குகள் அருமை

  ReplyDelete
  Replies
  1. மனைவியை இந்த பாடுபடுத்துபவர் டாக்டர் என்றால் நோயாளிகளின் நிலை ?:)
   நன்றி

   Delete
 12. Replies
  1. பத்துக்கு மிக்க நன்றி !

   Delete
 13. இந்த மாதிரி ஆளுங்களுக்குத்தான் முதல்ல தூக்குத்தண்டனையை கொடுக்கணும்.
  அருமையான ஒரு வாழ்க்கைத் தத்துவத்தை ரொம்ப எளிமையா சொல்லிட்டீங்க.

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஆசை இந்த ஜனநாயக நாட்டிலே நிறைவேற மாட்டேங்குதே :)

   மனம் கொத்தும் பறவையை விரட்டத்தானே வேணும் :)
   நன்றி

   Delete
 14. முன்னது அருமை! பின்னது கொடுமை!

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்னதே உண்மை :)
   நன்றி

   Delete