30 December 2014

ஆணா ,பெண்ணா, நாமே ஸ்கேனைப் பார்த்து தெரிந்து கொள்ளும் வழி !

--------------------------------------------------
மனைவிக்கு வந்த சந்தேகம் !           

             ''என்னங்க ,உண்மையை சொல்லுங்க ..போன்லே உங்க நண்பர் இன்னும் எத்தனை நாளா கட்டாம வச்சுகிட்டு இருக்கப் போறீங்கன்னு கேட்ட மாதிரி இருந்ததே !''
             ''அட லூசு ,நம்ம வாங்கிப் போட்டிருக்கிற பிளாட்டை பற்றித்தான் கேட்டான் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


கணவனின் பயத்தால் மனைவிக்கென்ன நட்டம் ?

              ''டாக்டர் ,பாரதியார் சாவுக்குக் காரணம் ஒரு யானைதான்னு கேள்விபட்டதில் இருந்து ,என் வீட்டுக்காரர் யானைன்னா பயந்து சாகிறார் !''
              ''அதனாலே இப்ப என்ன பிரச்சினை ?''
               ''மதயானைக் கூட்டம் படத்திற்கு கூட்டிட்டுப் போகச் சொன்னா மாட்டேங்கிறாரே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
ஒரு யானைக்கே பயப்படுகிறவர்
மதயானைக் கூட்டம் என்றால்
பயப்படத்தானே செய்வார்
(பேயோடு வாழ்ந்து பழகியவர்கள் என்றால்
இந்தப் பயம் போயிருக்கும் )
ReplyDelete

Replies


 1. யானை சைசுக்கு மனைவியும் மாறி விட்டால் இந்த பயம் தெளியும்னு படுது!
  நன்றி
 2. தெரிஞ்சுக்கலாமே !
 3. கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்று அறிந்து கொள்வதில் பெற்றோர்கள் மட்டுமல்ல ,மற்றோர்களும் அறிந்து கொள்ள விரும்புவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை ...ஆனால் ,இப்படி பாலினத்தை வெளியே சொல்வது குற்றமென்று ஸ்கேன் சென்டர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது ...கர்ப்பிணிப் பெண் முகம் பளபளப்பாக ஆனாலும் ...இனிப்பை சாப்பிட ஆர்வம் அதிகமானாலும் ...வாந்தி,மயக்கம் இல்லாமல் போனாலும் ...சிசுவின் இதயத் துடிப்பு 140ஆக இருந்தால் ...பெண் குழந்தை பிறக்குமென்றும் ...வலது கையை ஊன்றி எழுந்தாலும் ...வலது புற நாசி வழியாக சுவாசம் இருந்தாலும் ...ஆண் குழந்தை பிறக்குமென்றும் நம்பப் படுகிறது ...நமக்கு மிகவும் அறிமுகமான ...அமெரிக்காவில் மருத்துவ சேவை செய்துவரும் டாக்டர் நம்பள்கி தனது அனுபவத்தின் மூலம் ...கருவில் வளர்வது ஆணா ,பெண்ணா என்பதை அறிய தரும் விளக்கத்தையும் படிங்க...
Number one: 
Absence of scrotal shadows; ஆண் இல்லை என்று ஓரளவு உறுதி படுத்திக்கொள்ளலாம்.
Number 2:
குழந்தை நேராக இருக்கும் போது, படம் எடுத்து...மூன்று கோடுகள் இருந்தால் பெருமாள் பக்தர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று! குழந்தை பக்கவாட்டில் படுத்து இருந்தால் மூன்று கோடுகளை சைவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் பெண் குழந்தை என்று!

அப்படியும் கண்டு பிடிக்கத் தெரியாத பெற்றோர்களுக்கு....
நல்ல நேரம் பார்த்து வந்து ரிப்போர்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்குள்ளவர்கள் சொல்வார்கள்.அதன் அர்த்தம் அது ஆண் குழந்தை!

ரிப்போர்ட் நாளைக்கு வந்து வாங்க்கிக் கொள்ளுங்கள் என்று மொட்டையாக (நல்ல நேரம் என்ற சொல்லை சொல்லமால்) சொன்னால் பெண்குழந்தை.

நல்ல நேரம் பார்த்து ரிப்போர்ட் வாங்கியாதல் ஆண் குழந்தை நமக்கு பிறக்கும் என்று நினைக்கும் முட்டாள்களே நம் மூடநம்பிக்கியின் ஆணி வேர்!

 நல்ல நேரம்" என்பது தமிழ்நாடு முழுவதும் அறிந்த secret word---open secret! -- ஆண் குழந்தை!" இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....


பாப்பாவே அதிர்ச்சியோடு கோபப்படுவது போல் இருக்கிறது...!
ReplyDelete

Replies


 1. பெண் பிள்ளை என்று ஸ்கேனில் தெரிந்தால் ,இந்த சமூகம் கருவறையிலேயே சமாதி கட்டி விடுகிறதே ,அதனால் அதிர்ச்சியும் ,கோபமும் அடைந்து இருக்கும் !
  நன்றி

 1. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்.......
இவரோட கொள்கைப் பிடிப்பு  யாருக்கு வரும் ?

             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
            ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்றாங்களே !''

இரண்டு  கொள்கைக்கும்  வித்தியாசம் ,,?
திட்டமிட்டு கொள்ளை அடிப்பவன் கொள்ளைக்காரன் !
திட்டத்தின் பேரால் கொள்ளை அடிப்பவன்  அரசியல்வாதி !

32 comments:

 1. 01. சந்தேகப் பொண்டாட்டி சங்கீதா...

  02. காந்தியை துப்பாக்கியால சுட்டுக்கொன்றாதல துப்பாக்கி படத்துக்கும் கூப்பிட்டு போகமாட்டாரோ,,,,,

  03. விஞ்ஞானமும், மெய்ஞானமும் மிக்ஸா...?

  04. ஒத்தக்கைகாரன் என்ன செய்வான்... ?

  05. அரசியல்வாதிகளை கொள்ளைக்காரன்னு சொல்றீங்களா..... ?

  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. 1.இப்படியிருந்தால் வாழ்க்கை எப்படி சங்கீதமாய் இருக்கும் :)
   2.மீன் பிடிக்காதென்பதால் கயல் படத்திற்கும் கூட்டிப் போக மாட்டார் :)
   3.நம்பள்கிதான் அதை சொல்லணும் :)
   4.வாங்குவானாய் இருக்கும் :)
   5.சங்கீதாகிட்டே உங்க சந்தேகத்தைக் கேட்டு தீர்த்துக்குங்க :)

   Delete
 2. மனைவியின் சந்தேகத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.
  கணவனின் பயத்துக்கு நீங்கள் சொன்ன பதில் சூப்பர்.
  இப்படியெல்லாம் கூடவா ரகசியத்தை சொல்லுகிறார்கள்
  அப்படி கொள்ளை அடிக்காமல் இருந்தால் அவன் அரசியல்வாதியே கிடையாதே

  ReplyDelete
  Replies
  1. சந்தேகம் காதைக் கூட அடைத்து விடுமோ :)
   யம்மாடி ,யானை சைஸா:)
   சொல்லப் போய்தானே நம்பள்கி சொல்கிறார் :)
   அதானே,அரசியலுக்கு வந்ததே காசு பார்க்கத்தானே :)

   Delete
 3. ஆணா பொண்ணானு தெரிய இப்படி எல்லாமும் இருக்கா...அட!

  இடது கை வலது கை....ஹஹாஹ்ஹஹ்ஹ்

  ரெண்டுபேருமே கொள்ளைக்காரந்தான் ஜி! அஹஹஹ்ஹ

  ReplyDelete
  Replies
  1. அனுபவஸ்தர் சொன்னா சரியாத் தானே இருக்கும் :)
   பெயர்தான் வேறு வேறு ,கொள்ளைக்காரங்கதான் :)

   Delete
 4. சென்ற பதிவுகளையும் வாசிக்கிறோம் ஜி....இன்று மாலையிலிருந்து. ....ஒகேயா ஜி....

  ReplyDelete
  Replies
  1. குறும்பட செட்யூல் நன்றாக முடிந்து விட்டது போலிருக்கே ,வாருங்கள் காத்திருக்கிறேன் :)

   Delete
 5. Replies
  1. சந்தேகம் புகுந்த வீட்டில் சந்தோசம் இல்லை என்பதை ரசித்தீர்களா :)

   Delete
 6. அவ்வவ்
  சரி எப்போ கட்றீங்க..

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே ரெண்டைக் கட்டிட்டு படாதபாடு பட்டுகிட்டிருக்கேன் ..நான் சொந்த வீட்டைச் சொன்னேன் :)

   Delete
 7. Replies
  1. கட்டாம வச்சுகிட்டு இருக்கிறதை நினைச்சு சிரிக்கிறீங்களா ,ஜி :)

   Delete
 8. என்ன ஒரு சந்தேகம்?

  இப்படியும் ஒரு பயமா?

  இப்படியும் ஒரு சங்கேதமா?

  என்ன ஒரு கொள்'கை'ப் பிடிப்பு!

  சரியான கொள்கைதான்!

  ReplyDelete
  Replies
  1. அறையும் குறையுமா காதிலே வாங்கிகிட்டு சந்தேகப் படுவது சரியில்லை :)

   'மத 'யானை என்றால் பயப்பட்டுத்தானேஆகணும் :)

   டாக்டர் சொல்றார் நம்பத்தானே வேண்டியிருக்கு :)

   ரெண்டு கையிலேயும் வாரிக்கொடுக்க மாட்டார் போலிருக்கு :)

   ரெண்டு பேருமே திட்டம் போடுறதே கொள்ளை அடிக்கத்தானே :)

   Delete
 9. Replies
  1. எதை நினைச்சு சிரிக்கிறீங்க ,சொன்னா நாங்களும் சிரிப்போமில்லே:)

   Delete
 10. டாஸ் குடிமகனுக்கே சந்தேகம் வந்து தொழைக்கிற போது....மனைவிக்கு மட்டும் சந்தேகம் வராமல் இருக்குமா...????.

  ReplyDelete
  Replies
  1. சரக்கு ஒரிஜினல்தானா என்று சந்தேகம் வரலாம் ...வீடு கட்ட முடியலையே என்று வருத்தத்தில் இருக்கிற வீட்டுக்காரரை சந்தேகிப்பது நியாயமா :)

   Delete
 11. பகவான்ஜி எனது பதிவில் ஒரு சகோ தங்களை கன்னா, பின்னா அப்படீனு எழுதியிருக்காங்க...

  ReplyDelete
  Replies
  1. என்னை மட்டுமா திட்டியிருக்காங்க ,உங்களையும் சேர்த்துதானே :)

   Delete
 12. Replies
  1. எது ..யானை சைசுக்கு மனைவியா :)

   Delete
 13. ஹ ஹா அனைத்தும் அருமை. கட்டாம வச்சிருக்கிறது செம.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்ச நாளா நம்ம பேட்டைப் பக்கம் வரவே இல்லையே ,புத்தாண்டுக்கு பெரிய அளவில் எதையாவது செய்ய திட்டம் போட்டு இருக்கீங்களா :)

   Delete
 14. வணக்கம்
  அற்புதம் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 9
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி

   Delete
 15. ஜோக்ஸ் அருமை! வாழ்த்துக்கள்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி

   Delete
 16. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. உங்கள் எண்ணம் போலவே புத்தாண்டு அமைய வேண்டுமென்றே நானும் விரும்புகிறேன் !
   அன்பான உங்கள் வாழ்த்துக்கு நன்றி!

   Delete