6 December 2014

சேலையில் மட்டும் கவனம் இருந்தால் போதாது !

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வாலிப வயதை அறிந்த தந்தை  ?
                      ''என்னங்க .நம்ம பையன் வேலையே தேடிக்காம , பத்மாவையே சுத்தி சுத்தி வந்துகிட்டு இருக்கான் ,எப்படியாவது அவனை வெளிநாட்டுக்கு அனுப்பப் பாருங்க !''
                        ''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

கணவனின் காதில் விழுவதும் ,விழாததும்!

           ''பசி மயக்கத்தில் காது கேக்காதுன்னு சொல்றதிலே ,உண்மையில்லேன்னு எப்படி சொல்றே ?''
             ''வெங்காயம் நறுக்குங்க என்று சொன்னா , கேட்காத உங்க காதுக்கு ,டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேக்குதே !''
இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....

பின்ன வெங்காயம் நறுக்குவது என்றால் சும்மாவா? அழணும் இல்ல....அதான் கேக்கல....!!
த. ம. போட்டாச்சு!
ReplyDelete

Replies


 1. இப்படியாவது அழ வைத்து பார்ப்பதில் என்ன சுகமோ ?
  நன்றி

 2. சேலையில் மட்டும் கவனம் இருந்தால் போதாது !

  நாம் விரும்புகின்ற ஒன்றில் மனம்  லயித்துப் போகும்போது ...
  நம்மை நாமே இழந்து விடுகிறோம் ...
  இது காதலில் வேண்டுமானால் சுகமாய் இருக்கலாம் ...
  மற்ற விசயங்களில் துக்கத்தைத்தான் தரும் என்பதற்கு உதாரணம் இதோ ...
  நேற்றைய தினம்...
  மாமியாரும் ,மருமகளும் சேலை வாங்க மதுரையில் புகழ்பெற்ற ஒரு கடைக்கு சென்றுள்ளார்கள் ...
  ஒன்றரை மணி நேரம் சேலைகளில் மனம் லயித்து ...
  'பெரும் புதை பொருள் ஆராய்ச்சி செய்து'
  சேலையை செலக்ட் செய்து பில் வாங்கி ...
  கவுண்டருக்கு சென்று சோல்டர் பேக்கை திறந்து பார்த்தால் பர்சைக் காணவில்லை ...
  கடை உரிமையாளரிடம் விபரத்தைச் சொல்லி ...
  cctvகேமரா பதிவுகளைப் பார்த்தால் அதிர்ச்சி தரும் காட்சி விரிந்தது ...
  எட்டு வயது பெண் குழந்தை சோல்டர் பேக்கை திறந்து பர்சை எடுத்து அருகில் இருந்த அவள் அம்மாவின் கையில் கொடுக்கிறது ...
  பெரும் பாடுபட்டு சம்பாதித்த பணத்துடன் அவர்கள் உடனே எஸ்கேப் ஆவதும் தெரிகிறது ...
  திருடப் பட்ட பர்சில் 'செல்'லும் இருந்ததால் உடனே தொடர்பு கொண்டபோது  ...
  சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது ...
  நொந்து நூலாகி வீட்டிற்குச் செல்ல டூ வீலர் சாவியை தேடினால் ...
  பர்சோடு சாவியும் போனது தெரிந்தது ...
  மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ...
  டூப்ளிகேட் சாவிக்கும் இருநூறு அழுது தொலைத்துள்ளார்கள் ...
  இவையெல்லாம் மனம் ஒன்றில் மட்டுமே லயித்ததால் வந்த வினைதானே ?

 3. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
 4. உண்மை தான்! முக்கியமாக ஆண்களுக்கு!
  "சேலையில் மட்டும்" கவனம் இருந்தால் எல்லாமே அம்பேல்!
  க+
  ReplyDelete

  Replies


  1. இதுக்காகத் தான் டிரைவர்களிடம் ,,,சாலையைப் பார்த்து ஓட்டு,சேலையைப் பார்த்தல்ல என்று சொல்கிறார்கள் !
   நன்றி
  2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...
  3. குருவிடம் கேக்கக் கூடாத கேள்வி!

               ''அந்த சீடரை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுறாங்களே ,குருகிட்டே என்ன கேட்டார்?''
                 ''இந்திரன் கெட்டதும் பெண்ணாலேன்னு சொல்றாங்களே உண்மையான்னு கேட்டாராம்!''
  4. டெங்கு ...அந்த பயம்  இருக்கட்டும் !

   எல்லோர் வீட்டு கதவும் ஜன்னலும் 
   மூடிக் கிடப்பது ,,திருடனுக்கு பயந்து அல்ல ,
   கொசுவுக்கு பயந்துதான் !


22 comments:

 1. 01. அபுதாபிக்கு அனுப்புனா ? ஒட்டகமாவது ஓட்டுவானா ?
  0
  2. காரியக்கார செவிடுதான்.

  03. காரியத்துல அளவுக்குமீறி லயித்து போனதால அழவும் வேண்டியதாகிப்போச்சே,,,

  04. குருவோட கடமை கற்றுக்கொடுப்பதில் மட்டுமல்ல ஐயத்தை தீர்ப்பதிலும்தான்,

  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. 1.ஒட்ட gum கொடுத்தால் கூட ஒட்ட மாட்டான் :)
   2 புருசன்மார் பலரும் அப்படித்தானே :)
   3.'லயனம் ' மிகவும் தவறோ :)
   4.குற்றமில்லாத நெஞ்சு என்றால் நீங்கள் சொல்வது நடந்திருக்கும் :)
   நன்றி

   Delete
 2. Aha!....'''செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?''.......
  ,''...டிபன் ரெடின்னா மட்டும் நல்லாக் கேக்குதே !'
  .."சேலையில் மட்டும்" கவனம் இருந்தால் எல்லாமே அம்பேல்!...'''

  ''....டிரைவர்களிடம் ,,,சாலையைப் பார்த்து ஓட்டு..''
  ''...குருகிட்டே என்ன கேட்டார்?''
  இப்படி ரசித்தவையை......
  ம்...இல்லையில்லை... எல்லாமே ரசளை தான்...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ரசனையில் ரகளைக்கூட ரசளையாகி விட்டதே :)
   நன்றி

   Delete
 3. தந்தைக்கு தெரியாதது ஏது...? ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. செக்கு மாடு சுற்றி வரலாம் ,ஊர் போய் சேராதுன்னு அவருக்கு தெரியாதா :)
   நன்றி

   Delete
 4. ஹா ஹா ஹா !

  'புதைபொருள் ஆராய்ச்சி' , 'மழைவிட்டும் தூவானம் விடாத '

  எப்படித்தான் உங்களு்ககு மட்டும் இம்மாதிரியான ஹூயுமர் வார்த்தைகள் கிடைக்கிறதோ !!


  தம +1

  ReplyDelete
  Replies
  1. அந்த வார்த்தையில் எது ஹுயுமர் ?அது அமையும் இடத்தைப் பொருத்து அல்லவா
   ஹு யூமர் :)
   நன்றி

   Delete
 5. அருமை
  கொசுவுக்கு அஞ்சாத வீரர் யார் இருக்கிறார்
  தம 4

  ReplyDelete
  Replies
  1. கொடூரமான பனி நேரத்திலும் கூட கொசுவார் முற்றிலும் ஒழிந்த மாதிரி தெரியலியே :)
   நன்றி

   Delete
 6. ஆஹா கால வாருகின்றீர்களே..சார்..

  ReplyDelete
  Replies
  1. சேச்சே ,அப்படி எல்லாம் இல்லை .என் மனைவியே மேட்சிங் பிளவுஸ் பிட் எடுக்கப் போன இடத்தில் , பட்டு சேலையை தொலைத்த கூத்து ,என் வீட்டிலும் நடந்து உள்ளதே :)
   நன்றி

   Delete
 7. இவற்றில் நிஜம் எது ஜோக்குக்காக எது என்று புரிவதில்லை. cctv காமிராவில் தெரிந்தவர்கள் பிடிபட்டார்களா?

  ReplyDelete
  Replies
  1. சொல்வதெல்லாம் உண்மை தான் ,தாயும் மகளும்உடன் அங்கிருந்து கம்பி நீட்டியதையும் cctv காமெராவில் பதிவாகி இருந்தது ,ஆனால் பிடிக்க முடியவில்லை என்பதும் சோகமான உண்மைதான் :)
   நன்றி

   Delete
 8. ”செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா போகும் ?'' - நல்ல கேள்வி!

  த.ம. 5

  ReplyDelete
  Replies
  1. அர்த்தம் பொதிந்த கேள்வியும் கூட :)
   நன்றி

   Delete
 9. செக்கு மாட்டு செகோச்லேவேகியா ம்ம்ம்ம்:))) அப்பாவுக்கு j.k தான்:)))

  ReplyDelete
  Replies
  1. GK என்றால் ஜெனரல் நாலெட்ஜ்,J.K என்றால் ஜொள்ளு நாலெட்ஜா:)
   நன்றி

   Delete
 10. எல்லாமே அருமை..
  '# செக்கு மாடு எப்படி செக்கொஸ்லேவியா # செம வாக்கியம்.
  தம 6

  ReplyDelete
  Replies
  1. மகன் மேல் உள்ள பாசம் ,அப்பனை அப்படி சொல்ல வைத்து விட்டது :)
   நன்றி

   Delete
 11. வண்டியின் சாவி இருப்பது தெரிந்திருந்தால், வண்டியும் அபேஸ் ஆயிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. திருடிக்கு வண்டி எது என்று தெரிந்து இருந்தால் அதுகூட நடந்திருக்கும் :)
   நன்றி

   Delete