7 December 2014

இப்படியா மனைவி மேல் பாசமாய் இருக்கிறது ?

--------------------------------------------------------

இதுவும் ஒரு நல்ல பொறுத்த 'மே' !

                 ''அதெப்படி, நான்  பொறந்த மாசம் 'மே 'ன்னு சரியா கண்டுபிடிச்சே ?''
              ''ரொம்ப லேட்டா வேலை செய்யுற உன்  'ஆட்டு  மூளை 'யை வச்சுத்தான் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

இப்படியா  மனைவி மேல் பாசமாய் இருக்கிறது ? 

            ''டூ வீலரில் போன உங்க மனைவி விபத்திலே மாட்டிகிட்டாங்களா,அய்யய்யோ என்னாச்சு ?''
                
           ''நல்ல வேளை ,வண்டிக்கு  ஒரு கீறலும் இல்லையாம் !''இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....

''அய்யய்யோ, டூ வீலரில் போன உங்க மனைவி விபத்திலே மாட்டிகிட்டாங்களாமே?''
''வண்டிக்க மேல அவ விழுந்து, வண்டி துண்டுத் துண்டா சிதறிப் போச்சாம்"
ReplyDelete

Replies


 1. உங்கள் கோணமும் சூப்பர் ...இத்தனை நாளா எங்கே இருந்தீங்க ?இல்லே ,இப்பத்தான் ரஷ்யாவில் இருந்து வந்தீங்களா ?
  நன்றி

 2. அவர் மூலம் காதல் கடிதங்கள் அனுப்பியவர்களாவது வருந்தி இருப்பார்களா?

  காதல் கடிதமோ ,வேறெந்தக் கடிதமோ சம்பந்தப் பட்டவர்களிடம்
   சரியாக கொண்டு சேர்க்கும் பணியை செய்த தபால்காரர் ஒருவர் ...
  சரியாக இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பில் இறங்காததாலேயே  ...
  இறந்து போனார்னு சொன்னால் நம்பமுடிகிறதா ?
  அந்த தபால்காரர் ,55 வயது பெரிய மனிதர் ...
  டாஸ்மாக் வாசனையுடன் மதுரையில் பஸ் ஏறியவர்...
  சமய நல்லூரில் இறங்கியிருக்க வேண்டும் ...
  போதை இறங்காததால் இறங்க மறந்துவிட்டார் ...
  பெரிய மனுஷனாச்சே  என்று இரக்கப் பட்டு அவரை ...
  நடத்துனர் அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டுள்ளார் ...
  ஸ்டாப்அருகே டூவீலர் கடை வைத்திருக்கும் மெக்கானிக் ...
  ஏற்கனவே பெரியவருக்கு அறிமுகம் ஆனவர் ஆகையால் ...
  'வாங்க வாங்க ,என்ன இங்கே வந்து இறங்குறீங்க 'ன்னு ...
  பேசிக்கொண்டே ஒரு திட்டத்துடன்   நடந்து வந்தவன் ...
  ஆள் நடமாட்டம் இல்லா  இடம் வந்ததும் ...
  பெரியவரின் கையில் இருந்த பையைப் பறிக்க முயல ...
  பெரியவர் தடுக்க முயல ...
  அருகே இருந்த அடர்ந்த புதரிலே அவரை தள்ளி ...
  ஹேக்சா  பிளேடினால் கழுத்தை அறுத்து ...
  அவரிடமிருந்த பையையும் ,ஓரு பவுன் மோதிரத்தையும் பறித்துக்கொண்ட மெக்கானிக் ...
  பையிலே ஏதும் பைசா இல்லாததால் தூக்கி எறிந்து விட்டு ...
  மோதிரத்தை அடகு வைத்து ,வந்த பணத்தில் ...
  இரண்டு நாட்கள் ஜாலியாக இருந்தாராம் !
  இவனின் ஜாலியும் டாஸ்மாக் சரக்கில்தான் இருந்திருக்கும் ...
  தற்போது  ஜெயிலில் ஜாலியாக இருப்பான் என்றே நம்பலாம் !
  பெரியவரை உரிய ஸ்டாப்பில் இறங்க விடாதது...போதை !
  ஒரு பவுன் மோதிரத்துக்காக கொலை செய்ய வைத்ததும் ...போதை !
 3. இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....
 4. 'போதை'யில் விழுந்துவிட்டால்... 
  அப்'போதை'க்கு என்ன செய்கிறோம் என்ற தன்னிலை அறிவு மழுங்கிவிடுகின்றது. பதிவுக்கு நன்றி!
  ReplyDelete

  Replies


  1. இதுக்குத்தான் சொல்றது ..எப்'போதை'க்கும் அடிமை ஆகக்கூடாது என்று !
   நன்றி
   1. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்..
   2.  ''உங்களுக்கு உங்க மனைவியை பிடிக்கலையா ?''
   3. ''ஆமா ,எப்படி  கண்டுப்பிடிச்சீங்க ?
  2.            ''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கெடுத்த வரம்னு நீங்க பாடிக்கிட்டு இருந்ததை கேட்டேனே!''26 comments:

 1. ஹா ஹா ஹா !!!

  சூப்பர்ணே !!\
  தம +1

  ReplyDelete
  Replies
  1. மேயில் இருந்து வரம் வரைக்கும் ரசித்ததற்கு நன்றி :)

   Delete
 2. Replies
  1. ரசித்தது இறைவன் கெடுத்த வரத்தைதானே :)
   நன்றி

   Delete
 3. எல்லோருமே இந்தப் பாட்டை (படும் பாட்டை....!) ஒருமுறை நினைப்பார்களோ ஜி...?

  ReplyDelete
  Replies
  1. படும் பாடு பாடக்கூட வைக்குமே :)
   நன்றி

   Delete
 4. பாசம் ரொம்ப பொங்குதே. இதுக்காக வாங்கிக் காட்டிக்க வேண்டி இருக்கு மே!

  ReplyDelete
  Replies
  1. விபத்தில் கால் ஒடிந்த மனைவிக்கு குணமாக நாளாகும் என்பதால் வந்த தைரியமோ :)
   நன்றி

   Delete
 5. /மனைவி அமைவதெல்லாம் .../ இந்த மாதிரி எழுதினால் மனைவிகள்( I mean பெண் வாசகர்கள்) உங்கள் தள்த்தைப் பகிஷ்கரிக்கக் கூடும். ...!

  ReplyDelete
  Replies
  1. Just fun,take it easy என்று எடுத்துக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாச்சே,ஜோக்காளியின் வாசகிகள் ?
   நன்றி

   Delete
 6. !''.....அடி செருப்பால....மாமனாரிடம் பொண்டாட்டிக்குன்னு வண்டி வாங்கிட்டு...... “நல்ல வேளை ,வண்டிக்கு ஒரு கீறலும் இல்லையாம்ன்னு””

  ReplyDelete
  Replies
  1. அதே மாமனார் பெற்றுக் கொடுத்த மனைவியின் கால் உடைந்ததுக்கு கவலைப் படாத அவரை ,நீங்க சொன்ன மாதிரி செருப்பாலேதான் அடிக்கணும் :)
   நன்றி

   Delete
 7. 01. அப்படீனாக்கா.. ஏப்ரல் மாதம் பிறந்தவனுக்கு எந்த மூளை ? சனி மூலைனு சொல்லிடாதீங்க..

  02. ஒருவேளை வண்டி புதுசும், மனைவி பழசுமா இருக்குமோ...

  03. போதை ஏறும் போது பாதை மாறி போறதெல்லாம் இது இந்த கோந்தைகளுக்கு தெரியாது இதனால் வீட்டு கோதைகளுக்குதான் கஷ்டம்.

  04. நல்ல கொளுந்தியாள் அமைவதுகூட அவன் செயலே...

  த.ம.8

  ReplyDelete
  Replies
  1. 1.சனி மூலைக்கும்,ஏப்ரல் மாதத்திற்கும் உள்ள உறவை இனிமேல்தான் நான் ஆராயணும் :)
   2.இதிலே என்ன சந்தேகம் :)
   3.போதை கூட்டிச் செல்லும் பாதை ,யாரோ யாரோ அறிவாரோ :)
   4.அவனின் இந்த செயலுக்கு ,தனியா காணிக்கை செலுத்த வேண்டி இருக்குமோ :)
   நன்றி

   Delete
 8. மனைவிமேல் பாசம். மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. பாசத்தை ரசிக்க முடிந்த அளவிற்கு ,அவர் வண்டி மேல் வைத்திருக்கும் மோகத்தை ரசிக்க முடியவில்லை ,அப்படித்தானே :)
   நன்றி

   Delete
 9. Replies
  1. தனி மனிதன் திருந்தினால் தவிர ஒழியாதே:)
   நன்றி

   Delete
 10. //இதுவும் ஒரு நல்ல பொறுத்த 'மே' !//

  நல்ல வேளை, நான் ‘மே’ மாதத்தில் பிறக்கவில்லை!

  ReplyDelete
  Replies
  1. ஏப்ரல் 30 ம் நாள் இரவு 12 மணிக்கு மேல் பிறந்த நான் எந்த மாதத்தில் பிறந்ததாக எடுத்துக் கொள்வது :)
   நன்றி

   Delete
 11. ரசிக்க வைத்த சிரிப்புக்கள்...

  ஆட்டு மூளையும்... மனைவி அமைவதெல்லாமும்... ம்... ஜி... வீட்ல இந்தப் பாட்டை கேக்குறதுண்டா ஜி...

  ReplyDelete
  Replies
  1. பாடினாதானே தப்பு :)
   நன்றி

   Delete
 12. மூன்று ஜோக்குமே சிறப்பு! போதை எப்போதைக்கும் கூடாது! சத்தியமான வார்த்தை!

  ReplyDelete
  Replies
  1. பொது இடத்தில் ஒரு கண் இமைக்கும் நேரத்தில் கூட ,தன்னிலை மறந்திருக்க முடியவில்லை ,போதையில் கண்ட கண்ட இடங்களில் எப்படித்தான் விழுந்து கிடக்கிறார்களோ:)
   நன்றி !

   Delete