8 December 2014

பெண்ணுமா இப்படி ,யாரைத்தான் நம்புவதோ ?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஆபீசில் 'நீளும் 'கை ,வீட்டில்?

                   ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''
                    ''கை நீட்டுற வேலையை ஆபீசோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


நகைக் கடை 'வால்கிளாக்'காவது சரியாய் நேரம் காட்டுமா ?

             ''நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன் ,யார் டைம் கேட்டாலும் ,பத்து நிமிஷம் குறைவாவே சொல்றீங்களே ...'டைம் இஸ் கோல்ட் 'ன்னு உங்களுக்கு தெரியாதா ?''
            ''நகைக்கடை வச்சுருக்கிற எனக்கும் அது தெரியும் ...சேதாரம் போக தோராயமா ஒரு டயத்தைச் சொல்றேன் ,தப்பா ?''


இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்.....

அது என்ன "சே" தாரம்?
(ஏக், தோ, தீன், சார், பாஞ்ச், சே)
ReplyDelete

Replies


 1. தங்கம் தங்கம் என்று தாரம் அரிப்பதால் சே என்று கணவன் ஆவதாலும் !
  நன்றி

 2. பெண்ணுமா இப்படி ,யாரைத்தான் நம்புவதோ ?

  Multi Level Marketing எம்பதை சுருக்கமாக M L M என்பார்கள் ...
  அந்த M L M யை கணினியில் தமிழில் தட்டச்சுச் செய்தால் ...
  மலம் என்று வரும் ...உண்மையும் அதுதான் ...
  M L M பக்கம் போகாமல் இருப்பது நல்லது என்று ...
  முன்பு ட்வீட்டரில் நான் ட்வீட்டியதை உண்மையென நிரூபித்துள்ளனர் ...
  அண்மையில் கோவை போலீசாரால் கைது செய்யப் பட்டிருக்கும் வக்கீல் தம்பதியினர் ...
  அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளைப் படித்தால் ...
  இருவரும் வக்கீலுக்குப் படித்தவர்கள்தானா என சந்தேகம் எழுகிறது ...
  ஓடிசாவில் தொடங்கிய MLM நிறுவனத்திற்கு அந்த பெண்மணிதான் ...
  தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தி வந்தாராம் ...
  வேண்டிய மட்டுக்கும் மக்களின் பணம் வந்தவுடன் கம்பி நீட்டிய வழக்கில் இருந்து தப்பிக்க ...
  தன்னை நம்பி வழக்கை ஒப்படைத்த பெண்ணைக் கொன்று ...
  அந்தச் சடலத்தை வைத்து தன் மனைவி இறந்து விட்டதாக ஆள் மாறாட்டம் செய்து ...
  ஒடிசா பண மோசடி வழக்கில் இருந்து மனைவியை காப்பாற்றி இருக்கிறார் அவரது கணவர் ...
  இறந்த மனைவி இறந்ததாகவே இருந்தாலும் பரவாயில்லை ...
  இன்னொருவர் சொத்தை அபகரிக்க இறந்தவரை  உயிர்ப்பித்து இருக்கிறார் ...
  இது மட்டுமல்ல ,இன்னொரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கிலும் ,மாயமான பெண் வழக்கிலும் சேர்க்கப் பட்டுள்ளனர் வக்கீல் தம்பதியர் ...
  இவர்களின் புகழ்லண்டனில் இருந்து வெளியாகும்  'தி ஏசியன் ஏஜ் 'பத்திரிக்கை மூலம் உலகெங்கும் பரவி விட்டது !
  வக்கீலிடம் உண்மையை மறைக்ககூடாது என்பார்கள் ...
  இந்த வக்கீல் தம்பதியினர் உண்மையை மறைத்து சமூகத்தில் பெரிய மனிதர்களாய் வலம் வந்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தால் ...
  யாரைத்தான் நம்புவது என்றே புரியவில்லை !

 3. பேராசையின் விளைவு
  இப்படித்தான் நாசத்தில் முடியும்
  ReplyDelete

  Replies


  1. மாட்டிக்கொண்டவுடன் காவலர்களுக்கு முன்னிலையே தம்பதிக்குள் வாக்குவாதம் துவங்கி விட்டதாம் ...ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு !
   நன்றி
  2. சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்..
  3. ரீசார்ஜ் ஆகுமா காதல் ?

   மூன்றாண்டு காதல் முறிந்தது 
   மூன்று நாளாய் முடங்கியது செல்போன் ...
   அவளுக்காக ,அவன்  ரீசார்ஜ்  செய்யாததால்!28 comments:

 1. Replies
  1. இரவு 12.30 மணி அளவில் 'ரசித்தேன் ,ரசித்தேன் ,சுடச் சுட ரசித்தேன் 'என்று பாடல் ஒலிக்கக் கேட்டேன் ,,அது நீங்கதானா :)
   நன்றி

   Delete
 2. புத்திசாலித்தனமான பொண்ணு தான் :))

  ReplyDelete
  Replies
  1. ஆனால் கணவன் கை நீட்டி கொண்டு வருகிற பணம் மட்டும் வேணுங்கிறது நியாயமா :)
   நன்றி

   Delete
 3. கணவருக்கு கை நீளம், மனைவிக்கு வாய் நீளம்:))
  மல்டி தப்பு பாஸ் multi !

  ReplyDelete
  Replies
  1. இப்படிப்பட்ட இவர்களின் ஆயுட்காலம் நீளுமாவென்று தெரியவில்லை :)
   multy என்பது multi ,ஆங்கிலத்திலும் ஈறு கெடுமோ :)
   நன்றி

   Delete
 4. திரைப்படம் பார்ப்பது போல உள்ளது நிகழ்வு. இன்னும் இவர்கள் வலம் வருகிறார்கள் என்பது வேதனையான செய்தி.

  ReplyDelete
  Replies
  1. ஏமாற ஆள் இருக்கும் வரை இவரைப் போன்றவர்கள் வலம் வரத்தானே செய்வார்கள் ?
   நன்றி

   Delete
 5. நேரத்திலும் சேதாரமா
  ஆகா
  தம 2

  ReplyDelete
  Replies
  1. அதுவும் எட்டு சதம் என்றாரே :)
   நன்றி

   Delete
 6. இன்றைக்கு இவ்வளவு தான் காதல்...?!!!

  ReplyDelete
  Replies
  1. ரீசார்ஜ் செய்ததும் மீண்டும் துளிர்க்குமோ :)
   நன்றி

   Delete
 7. அனைத்துமே அருமை ! ரசித்து சிரித்து படித்தேன் .

  தம +

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து சிரித்ததற்கு நன்றி !

   Delete
 8. Replies
  1. படித்து ரசித்து சிரிக்காமலே வாக்கு அளித்ததற்கு நன்றி !

   Delete
 9. ஜோக்குகள் ரெண்டும் அசத்தல்! எம்.எல்.எம் முக்கு புது விளக்கம் சூப்பர்! கடைசி கவிதை நச்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நச்சையும் ரசித்தமைக்கு நன்றி !

   Delete
 10. ஜோக்குகள் ரெண்டும் அசத்தல்! எம்.எல்.எம் முக்கு புது விளக்கம் சூப்பர்! கடைசி கவிதை நச்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் ரசித்தமைக்கு நன்றி !

   Delete
 11. காதலின் விலை ரீசார்ஜின் மதிப்பைப் பொறுத்ததா.. என்கே போகிறது அமர காதல் எல்லாம்...

  ReplyDelete
  Replies
  1. அமர காதல் எல்லாம் அந்த காலம் ,இப்போ டைம் பாஸ் காதல்தான் :)
   நன்றி

   Delete
 12. 01. ஆபீஸுல கை நீட்டுற பழக்கம் மாதிரி தூங்குற பழக்கத்தையும், வீட்டுக்கு கொண்டு வந்துராம இருந்தால் சரி. (அதுசரி இப்ப யாரு ? வீட்டுல கை நீளுது)

  02. அவரும் எப்பத்தான் ஐஸ்வர்யாராயை வைத்து ப்ராஞ்ச் ஓபன் செய்யிறது ?

  03. சட்டம் தன் கடமையை செய்யும்.

  04. விஞ்ஞான வளர்ச்சி காதலுக்குமா ? வீழ்ச்சி

  த.ம 7

  ReplyDelete
  Replies
  1. 1.தூங்கிற பழக்கம் வீட்டில் இருந்து ஆபீஸூக்கு போனது ,லஞ்சம் அங்கே இருந்து லஞ்சம் வாங்கிற பழக்கம் வீட்டுக்கு வராமே இருந்தாலும் சரிதான் :)
   2.இவ்வளவு கணக்கா இருக்கிறவர் சீக்கிரம் பிராஞ்ச் திறந்துவிடுவார் :)
   3.சட்டம் படித்தவர்கள் இதை உணரவில்லையே :)
   4.நாடு விட்டு நாடு வந்தாலும் தேடி சென்று சேர்வது காதல் என்பார்கள் ,ஆனால் இப்போ ஓடி ஒழியும் காதலாகிப் போச்சே :)
   நன்றி

   Delete
 13. கை நீட்டுவதற்கு இப்படியெல்லாம் கூட அர்த்தம் இருக்கா?
  கவிதை சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. நீங்க இருக்கிற ஆஸியில் இல்லாமல் இருக்கலாம் ,இங்கே இருக்கே :)
   நன்றி

   Delete
 14. Replies
  1. நானும் மறுமொய் வைக்கணும் அவ்வளவுதானே :)
   நன்றி

   Delete