30 April 2014

கஞ்சப்பிசினாறி கணவனால் மனைவிபடும் கஷ்டம் !

''மேடம் ,கடைக்கு வர்ற எல்லோரும் புதுசா வந்த பற்பசையைத்தான் கேட்பாங்க ,நீங்க மட்டும் ஏன் பழைய சரக்கை கேட்கிறீங்க ?''
''அதையேன் கேக்குறீங்க ...எதை வாங்கினாலும் ,அதோட காலாவதி தேதியான  ரெண்டு வருசத்துக்கு   சிக்கனமா பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் கட்டாயப் படுத்துறாரே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...தின 'சிரி ' ஜோக்!பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா ?

''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு 

மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''

''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம் 

மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !

'சிரி'கவிதை!மழை அளவு குறைவு தரும் பாடம் ?

ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !

29 April 2014

மனைவி சொன்னால் அதில் நியாயம் இருக்கும் !

''நீங்க ஆரம்பித்த டென்னிஸ் கோச்சிங் சென்ட்டரை மூட ,உங்க மனைவிதான் காரணமா ,ஏன்  ?''
''கொசு பேட்டினால் ஒரு கொசுவை அடிக்கத் தெரியல ..நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சரான்னு  கிண்டல் பண்றாளே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!இட்லி மாவுன்னா கல்லையும் சேர்த்து ஆட்டுவாங்களோ !

'பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர் 

திமிராப் பதில் சொல்றானா ,எப்படி ?''

''பொங்''கல்'னா  வரத்தான் செய்யுமாம் !''

'சிரி'கவிதை!எண்ணிக்கையில் அடங்கியோரும் ,அடங்காதோரும் !

கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான் ...

கடைந்தெடுத்த அயோக்கியர்களும் வாழ்கிறார்கள் !


28 April 2014

வாxயை மூடி பேசவும் முடியும் என்றால் .....!

''அந்த படத்தைப்  பார்க்கப் போறேன்னு 

சொன்னா ...காதை  மூடி கேட்கவும்னு ஏன் 

சொல்றீங்க ?''

''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!கல்யாணமானா ஒரே சோகம்தானா ?

''நீங்க கல்யாணத்திற்கு பிறகுதான் ஜோக் எழுத 

ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''


''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது 

சிரிக்கட்டுமேன்னுதான் !''

'சிரி'கவிதை!குறள் வழி நடக்கும் நாய் !

சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ...

நாய் வாலறுந்த பின்னாலும் 

வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் '

சுற்றி சுற்றி வருகிறதே !

27 April 2014

இந்த காதல் தாலியில் முடியாது என்பதால் வந்த கனவோ ?

''டார்லிங் ,நேற்று ஒரு கெட்ட கனவு ...நீயும் நானும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறோம் !''
''அய்யய்யோ ,அப்புறம் ?''
''நீயும்தானே படுத்திருந்தே ,நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


''டைப்பிஸ்ட் சாந்திகிட்டே யாரும் வாலாட்ட 

மாட்டேங்கிறார்களே ,ஏன் ?''


''அவங்க டைப் 'அடிக்கிற ' வேகத்தைப் பார்த்தே 

அரண்டு போயிருக்காங்களே !''

'சிரி'கவிதை!எது நிம்மதி காதலா ,கல்யாணமா ?

காதலே நிம்மதி என்று ...

திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !

26 April 2014

எதை ஓசி கேட்பதென்று விவஸ்தை வேண்டாமா ?

''முந்தி இன்சுலின் சிரிஞ்ச் பேனா பையிலே எப்பவும் வச்சுருப்பீங்களே,இப்ப காணலையே ,ஏன் ?''

''அதையேன் கேக்குறீங்க ,பேனாவை ஓசி கேட்ட மாதிரி அதையும் கேக்கிறாங்களே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்.....


தின 'சிரி ' ஜோக்!தமிழனை உலகமே வியந்து பார்க்கும் !

'பூனைக்கு இருட்டிலேயும் பார்வை தெரியுமாமே ?''

''ஒண்ணும்  கவலைப் படாதீங்க ,'கரெண்ட் கட் 

'புண்ணியத்தாலே கொஞ்ச நாள்லே நமக்கும் அந்த 

சக்தி வந்திடும் !''

'சிரி'கவிதை!சந்தர்ப்பம் புத்தன் ஆகவா ,பித்தன் ஆகவா ?

சந்தர்ப்பம் ஒருமுறைதான் வரும் என்பதற்காக ... 

தப்பைச் செய்தவர்களும் 

'சந்தர்ப்பச் சூழ்நிலையால்  செய்தோம் ' 

என்பதில்  என்ன நியாயம் ?

25 April 2014

பணம் சம்பாதிக்க முடியாதவன் புருசனான்னு மனைவி கேட்கிற மாதிரி ....!

''நம்ம பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்கு   பணம் வரலே போலிருக்கா ,ஏன் ?''
''வோட்டுக்கு பணம் தர வக்கு இல்லாதவன்       எல்லாம் தேர்தல்லே ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுக்கிட்டு இருக்காரே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்......

தின 'சிரி ' ஜோக்!நாணயம் வேணும்தான் ,ஆனா இப்படியா ?''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
''ஒண்ணாம் தேதி இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்துக் கதவை தட்டுகிறாரே !''

'சிரி'கவிதை!விண் மீன் உயரத்தில் மீன் விலை !

உயிரையும் பணயம் வைத்து ...
நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க...
தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் ..
பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும் 
தீனியும் போடவேண்டும் ...
கடல் அன்னை இலவசமாய் தரும் 
மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ...
மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ?

24 April 2014

அஞ்சு ,பத்மாவுக்கு பின்னாலே பையன் அலைஞ்சா ,அப்பன் ?

''அப்பன் ,மகன் ரெண்டு பேருமே  அஞ்சு ,பத்துக்கு அலையிறாங்களா,என்ன சொல்றே ?''
''அப்பன் கையிலே காசில்லாம அலையிறார் ,மகன் பொண்ணுங்க பின்னாலே அலையிறானே!''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


''உன் மனைவி உனக்கு இரட்டைக் குடிஉரிமை கொடுத்திருக்காளா,எப்படி ?''
''பார்லேயே மொத்தமாக் குடிச்சு ரோட்லே கிடக்காமே ,வீட்டுலேயும்  வந்து குடிச்சுக் கிடங்கன்னு சொல்றாளே !''

'சிரி'கவிதை!வீட்டுக்கு வீடு சுகர் பேஷன்ட் !

ஒருசேரப் பத்து பொறாமை விழிகள் என்மேல் ...
ஒரே ஒரு வார்த்தை செய்த மாயம் ...
''நிறைய சீனி போட்டு ஒரு டீ !''


23 April 2014

கன்னம் என்ன 'இச் ' கொடுக்கவும் வாங்கவும்தானா ?

''கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக் கூடாதுன்னு அவர்கிட்டே ஏண்டா சொன்னோம்னு  ஆயிடுச்சா ,ஏன்  !''
''இதை கப்பல் வைச்சுருக்கிறவங்கிட்டே போய் சொல்ல உனக்கு தைரியம் இருக்கான்னு கேட்கிறாரே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


தின 'சிரி ' ஜோக்!சுகர் வந்ததே ரேஷன் அரிசியால்தான் !

''ரேஷன் கடைலே பிளட் டெஸ்ட் பண்றாங்களா ,ஏன் ?''
''குடும்பத்தில் யாருக்காவது சுகர் இருந்தா, சீனி அளவை  குறைக்கப் போறாங்களாம் !''

'சிரி'கவிதை!மனைவி இப்படியும் சோதிக்கலாமா ?

என்மேல் மனைவிக்கு நல்ல அபிப்பிராயம் 
இருப்பது தெரிந்தது ...
அழகான வேலைக் காரியை வேலைக்கு 
வைத்துக் கொண்டதில் இருந்து !


22 April 2014

சாப்ட்வேர் டீம் லீடர் இப்படி வேலை வாங்கலாமா ?

''காலையிலே வேலைக்குப் போகும்போது தலைமுடியோடத் தானே போனே ,சாயந்திரம் வழுக்கைத் தலையனா  வர்றியே ,ஏன் ?''
''எங்க டீம் லீடர் ,நாலுநாள் வேலையை இன்னைக்கே 'கையோட முடி 'ன்னு சொல்லி 'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாரே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....

''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?''
''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்ன்னு கேக்கிறான் !''
'சிரி'கவிதை!நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது !
ஒரே உறையில் இரண்டு கத்தி ...
என யாராவது சொன்னால் ...
மாமியார் மருமகள் உறவு
நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவில்லை !21 April 2014

நான் வெஜ் சமைக்கத் தெரிந்தாலும் இதை செய்ய முடியுமா ?

''வீட்டிலே ஒரு பெருச்சாளி அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருக்குன்னு சொல்றே ,ஆனா அடிக்காதீங்கன்னு ஏன் சொல்றே ?''
''கொன்றால்  பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்க ,எலிக்கறியை யாருங்க சாப்பிடுறது?''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


பொண்ணு மாப்பிள்ளை பொருத்தம் மட்டுமில்லை ....!

''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''

20 April 2014

இதுதான் தொழில் தர்மமா ?

ஜோக்காளியின் மொக்கைகளை  படிக்கும்போது .அவருடைய மூக்கிலேயே சேர்த்து மொத்து மொத்துன்னு மொத்த வேண்டுமென பலரும் நினைப்பதால் ,அவர்களை திருப்தி செய்யும் விதமாக இதோ ஜோக்காளி மூக்குடைப்பட்ட கதை !எச்சரிக்கை !இது 'சிரி 'கதை அல்ல !சீரியஸ் கதை !
தாலி கட்டுவதற்குள் அவசரமா ?

''சீக்கிரம்  மாப்பிள்ளையை  தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்?
''அட்சதை  தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று தின்னுட்டாங்களே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''
''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே ,முதலாளி !''


19 April 2014

மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதி உபகாரம் !

''அந்த முதியோர்கள் இல்லத்திற்கு தேவையான தூக்க மாத்திரையை தானமா தர்ற ,உன் வீட்டுக்காரர் தாராள மனசைப்  பாராட்டலாமே !''
''தாராள மனசுமில்லே,ஏராள மனசுமில்லே ...தினசரி குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


தின 'சிரி ' ஜோக்!நன்றி மறவாத வெஜிடேரியன் !

''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர் 

 SMS ல் என்ன எழுதி இருக்கார் ?''

''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு 

மட்டற்ற மகிழ்ச்சியாம் !''18 April 2014

கட்டாமல் வைச்சுகிட்டு இருக்கிறது தப்பா ?

''என்னங்க ,போன்லே உங்க நண்பர் 'கட்டாமலே இன்னும் எத்தனை நாள் வைச்சுக்கிட்டு இருக்கப் போறீங்க 'ன்னு கேட்டது என் காதுலே விழுந்துதே ,உண்மையைச் சொல்லுங்க !''
''அடப் பைத்தியமே ,நாம சும்மா போட்டு வச்சிருக்கிற பிளாட்டைப் பற்றி அவன் கேட்டான் ..அதைப் போய் தப்பா நினைக்கிறீயே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


தின 'சிரி ' ஜோக்!ஆளுயர மாலையைப் போட்டா ஆள் காலி !

'' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !''


'சிரி'கவிதை!படிப்பை 'கவர்ச்சி 'கவுத்துவிடக் கூடாது ,ஜாக்கிரதை !

கவர்ச்சி நடிகை BA பாஸான செய்தி ஊடகம் எங்கும் ...
கனவுக் கன்னியாய் கோட்டைக் கட்டி ...
படிப்பை 'கோட்டைவிட்ட' ரசிகர்கள் எத்தனைப் பேரோ ? 
17 April 2014

இருக்கும் போதுகூட மாமியார் மேல் இம்புட்டு பாசமில்லே !

''என்னங்க ,அமாவாசை அதுவுமா ஜன்னல்லே காக்கா வந்து கரையுதுங்க,நெய்ச்சோறு கலந்து வைக்கட்டுமா ?!''
''ஏன் ?''
''கலரும் ,குரலும் உங்க அம்மாவை ஞாபகப்படுத்துதுங்க ,அதான் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில் ....


வழக்குச் செலவுக்கே ஒத்தி காசு சரியாப் போயிருக்குமே !

''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே  போட்ட கேஸ் என்னாச்சு ?''
''அதஏன் கேக்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுக் கிட்டே இருக்கார் !''

'சிரி'கவிதை!லஞ்சத்திற்கு தூக்குத் தண்டனை எப்போது ?


ஊரெங்கும் பணம் தரும் தானியங்கி எந்திரங்கள் ...
நம்மைச் சுற்றிலும் பணம் பிடுங்கும் மனித எந்திரங்கள் !16 April 2014

ஓடிப் போனா... மனைவி பெயரும் மாறிடுமா ?

''உன் மனைவி பெயர் கலாவதிதானே ,காலாவதின்னு ஏன் சொல்றே ?''
''ஓடிப் போனவளை வேற எப்படி சொல்றது?''


15 April 2014

ரஜினிக்கும் முந்தைய நிஜ கோச்சடையான்கள் !

''மதுரைக்காரங்கதான் உண்மையில் கோச்சடையான்கள்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''அவங்க குடிக்கிற தண்ணி கோச்சடையில் இருந்துதானே வருது !''14 April 2014

குளிக்கிறதை யாராவது பார்க்க நினைப்பாங்களா ?

''உனக்கு ஏண்டி இந்த விபரீத ஆசை ?முத்து குளிக்கிறதைப்  பார்க்க நினைக்கிறே  ?''
''அட நீ வேற ,கடல்லே முத்து எடுக்கிறதைப் பார்க்கணும்னு  சொன்னா ,தப்பா  அர்த்தம் எடுத்துக்கிறீயே !''13 April 2014

கணவன் மனைவி சண்டையில் தலையிடலாமா ?

''பக்கத்து வீட்டிலே புருஷன் பெண்டாட்டி சண்டைன்னா...நாம ஒரு தப்பு செய்யலாம் ,ஒரு தப்பு செய்யக்கூடாதா ,என்னங்க சொல்றீங்க ?''
''காதை  தீட்டிக்கிட்டு ஒட்டு கேட்கலாம் ,சமரசம் செய்யப் போனாதான் தப்பு !''

12 April 2014

நடிகைக்கு ஆப்ரேசன்னா கிண்டல் செய்யலாமா ?

''அந்த நடிகைக்கு டான்ஸில் ஆப்ரேசன்னு கேள்விப்பட்டு ,டான்ஸ் மாஸ்டர்  கமெண்ட் அடிக்கிறாரா,எப்படி ?''
''அவர் டான்ஸில்தான் வீக் ,அவர் டான்ஸிலுமா  வீக்னு கேக்கிறார் !''


11 April 2014

கணவர் ரஜினி ரசிகர் என்பதற்காக இப்படி பாடலாமா ?

''உன் புருஷன் அமைதி தேடி இமயமலைக்கு போகத்  துடிக்கிறாரா ?'சேலை சோலையே 'ன்னு பாடிட்டு உன்னை சுற்றி சுற்றி வந்தவராச்சே அவர் ?''
''இப்போ 'சேலையில் சிக்கிக் கொண்டா  சொர்க்கத்தின் வழியேதும் தெரியாது'ன்னு  பாட ஆரம்பித்து விட்டார்டி!''10 April 2014

மனைவியிடம் இதை மறைக்கலாமா ?

"ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது ,பலபேர் மனைவிக்கு தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
"எதை ?"
"பேங்க் பாலன்ஸ்சை தான் !அதை  மறைக்க  பாலன்ஸ் சிலிப்பை கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே! "9 April 2014

மெண்டல் குடும்பப் பொண்ணுன்னு வேண்டாம் என்றாரோ !

''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டுப் போனவங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க பேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து தெரிஞ்சுக்குங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''

8 April 2014

கரண்ட் இல்லேன்னாலும் அவருக்கு காரியம் முடியணும்!

''அய்யா பெரியவரே ,கிராமத்தில் இருந்து வந்து இருக்கீங்க சரி ,மேட்னி  ஷோவுக்கான 'கரண்ட் 'புக்கிங் முடிஞ்சுப் போச்சே !''
''அப்படின்னா ஜெனரேட்டர் புக்கிங் ஆரம்பிங்க !''

7 April 2014

மருமகளை இந்த நிலையிலும் நம்பலைன்னா ....?

''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லைன்னு  ஏண்டி சொல்றே ?''
''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,அவங்க இடுப்புலே இருந்த இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே !''