31 May 2014

பெண்ணைப் பற்றி 'சிம்பாலிக்கா' தரகர் சொன்னது !

''பொண்ணுக்கு  காது சரியாக் கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
''எள்ளுன்னா எண்ணெயா நிற்பாள்னு  சொன்னேனே!''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்! 

'சீனப்பெருங்''சுவரில் முட்டிக்கணும் போல இருக்கு !

''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே ?''


சிரி'கவிதை!

வாழ்க்கையில் உயர வேண்டுமென்றால் ...!

உயரம் அதிகமாக அதிகமாக  
விழுந்தால் அடியும் பலமாய்தான்  இருக்கும் ...
இதற்கு பயந்தால் ...
உயர்வதற்கு வாய்ப்பே இல்லை !
30 May 2014

மனைவிகிட்டே என்ன கேட்டிருப்பார் ,இப்படி கோபம் வர ?

''உங்க மனைவிக்கு மூக்குக்கு மேலே உச்சபட்ச கோபம்  வருதா ,எப்படி ?''
''நெற்றியில்  இருக்கிற மஞ்சள் ஸ்டிக்கர்  பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர்  !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

ஸ்ரீ தேவி ,கமல்,தீபா ரசிகராய் இருப்பாரோ ?

'' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை 

இடிச்சுக் கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் 

வைக்கப் போறீங்க ?''

''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் 

போறேன்  !''
'சிரி'கவிதை!

பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMSக்கு அஞ்சலி !

'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான 
 பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன 
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !

29 May 2014

இந்த 'கோச்' சடையான் ' உலக கோப்பை வெல்வாரா ?

''உங்க கபடி 'கோச் 'சை ரசினி ரசிகர்ன்னு எப்படி சொல்றே ?''
''சடையான் என்கிற தன் பெயருக்கு முன்னாலே 'கோச்' என்று போட்டுக்க ஆரம்பித்து விட்டாரே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

மாணவனின் பதிலால் ஆசிரியர் மயக்கமாகி இருப்பாரா !

''சார் ,என் பிராக்டிகல் நோட்டைக் காணாம் ..உங்க கிட்டே இருக்கா ?''
''பார்க்கிறேன் ..உன் பெயர் என்ன ?''
''அதிலேயே எழுதி இருக்கும் !''

'சிரி'கவிதை!

மங்கை மாலுமிகளை கரை ஏற்றுவாளா ?

என்னவள் ...
கலங்கரை விளக்கின் அருகில் நின்று 
கடலழகில் கண்களை இமைக்க மறந்து 
வியந்து நின்றாள் !
தூரத்து கப்பல் மாலுமிகளும் 
வியந்து நின்றார்கள் ...
இருஒளிக்கற்றைகள் எப்படி வரும் என்று ?

28 May 2014

புடவை செலக்ட் செய்ய ஒரு இரவு வேணுமாம் !

''கடையை அடைக்கப் போறோம் ,சீக்கிரம் புடவையை செலக்ட் பண்ணுங்க !''
''பரவாயில்லே ,பூட்டிட்டுப் போங்க ...காலையில் நீங்க வந்து திறக்கிறதுக்குள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து வைக்கிறேன் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!பிறப்புதான் அப்படீன்னா வாழ்நாளிலுமா ?

''உங்க பையன் ஓசி ஓசின்னு அலைய ,அவனோட பிறப்புதான் காரணமா ,எப்படி ?''
''பிரசவத்துக்கு இலவசமா வந்த ஆட்டோவிலே பிறந்தவனாச்சே !''


'சிரி'கவிதை! காதலன் ,காதலி என்றாலும் தப்புதான்  !

இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது 
கள்ளச்சாவிகள்தான் !

27 May 2014

கணவன் மேலே இந்த மரியாதையாவது இருக்கே !

''உங்க கணவரோட கல்லறையையும் , கடல்லே   பாலம் கட்டும் போது பயன்படுத்துற  சிமெண்ட்டை வைத்துதான் கட்டணும்னு சொல்றீங்களே ,ஏன் ?''
''கல்லறைக் காயிறதுக்கு முன்னாடியே அடுத்த கல்யாணத்தைப் பண்ணிகிட்டானு யாரும் சொல்லக் கூடாதுன்னுதான் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்! பெண்டாட்டிமேலே இம்புட்டு பாசமா ?
''உங்க  மாப்பிள்ளை பாசக்காரர்னு அவர் பைக்கைப் பார்த்தா தெரியுதா .எப்படி ?''
'' புது பைக் அல்ல ,புது  மனைவியே எனக்கு மாமனார் தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''


'சிரி'கவிதை!வண்டிக்கு அவசியம் ஸ்டெப்னி ,நமக்கல்ல !

ஸ்டெப்னி ...
டிரைவர்கள் வண்டியில் இருக்கிறதாவென செக் செய்ய மறப்பது ...
அடிக்கடி போகும் ஊரில் மறக்காமல்  செட் செய்துக் கொள்வது !

26 May 2014

பார்ப்பதற்கு மட்டும் அழகாய் இருந்தால் போதுமா ?

''என்னங்க ,TVல் 'செய்து பார்ப்போம் 'னு காட்டிய சமையலை பண்ணியிருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
''விளங்கலே ,இனிமே 'செய்து சாப்பிடுவோம் 'னு நிகழ்ச்சி வந்தா பாரு !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!டெலிவரியில் மட்டும் பிரச்சினை வரவேகூடாது !
''மகளிர் பேங்க் ,மகளிர் காவல் நிலையம் மாதிரி அனைத்து மகளிர் போஸ்ட் ஆபீஸ் திறந்தா என்னாகும் ?''
''எல்லோரும் டெலிவரி லீவிலே போயிட்டா ,தபால் டெலிவரி ஆகாதே !''
'சிரி'கவிதை!உதடுகள் செய்யும் நல்ல காரியம் ?


ஜோக்காளிப் பய பாடினான் ...
'ஆரிய உதடுகள் உன்னது '
சேட்டுப் பொண்ணுவின்  எதிர்ப்பாட்டு ...
'திராவிட உதடுகள் உன்னதா ?'
'இல்லை ..நல்ல காரிய உதடுகள் என்னது !'

25 May 2014

படிக்கிற காலத்திலேயே அப்படின்னா ...!

''தலைவர் ஒன்பதாவது வரை படித்ததை நிருபீக்க தலைமை ஆசிரியரை மேடைக்கு கூட்டிட்டு வந்து பேசச் சொன்னது தப்பாப் போச்சா ,ஏன் ?''
''படிக்கிற காலத்திலேயே கஞ்சா அடித்தான் என்று அடி வாங்கியது ஞாபகத்திற்கு வருவதாக தெரிவித்துவிட்டார் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!உயிர் இருக்கிறதான்னு இப்படியும் செக் செய்யலாமா ?

'' நோயாளிக்கு உயிர் இருக்கான்னு செக் பண்ற 

விதத்திலேயே அவர் போலி டாக்டர்ன்னு தெரிஞ்சுப் 

போச்சா ,எப்படி !''

''பொணத்து இடுப்புலே கிச்சு

கிச்சு மூட்டிப் பார்க்கிறாரே !''

என்றும் வாழும் TMS !

என்றும் வாழும் TMS !
நம் நெஞ்சங்களை எல்லாம் தன் வசீகரக் குரலால் மகிழ்வித்துக் கொண்டிருந்த TMS  வர்களின் உயிர் இன்றுடன் ஓய்வுப் பெற்றது !காற்றுள்ள வரைக்கும் அவர் குரல் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் !
சில வருடங்களுக்கு முன்னால் எதிர்ப்பார்க்காமல் அவரை சந்தித்தது நினைவுக்கு வருகிறது ... 
என் உறவினர் ஒருவர் மதுரை கீழவாசல் அருகில் உள்ள கிளினிக்கில் அட்மிட் ஆகியிருந்தார் .அந்த கிளினிக் இருக்கும் இடத்தை யாரிடம் விசாரிப்பது என்று பார்த்தபோது ...சிக்னல் அருகே ஒரு வீட்டில் ,ஈசி சேரில் ஒரு பெரியவர் சாய்ந்து அமர்ந்து இருந்தார் ,அவரிடம் சென்று என் மனைவி விலாசம் கேட்டு வந்தார் .டூ வீலரில் வெளியே நின்று இருந்த என்னிடம் வந்து 'அந்த பெரியவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது 'என் மனைவி சொல்லவும் நான் அவரை பார்த்தேன் ...அதிசயமாய் இருந்தது ,,அவர் அய்யா TMS தான் !மிகவும் எளிமையாக மேல்சட்டைக் கூட இல்லாமல் இருந்தஅவரை  சந்திப்போமென நினைக்கவே  இல்லை ..பிறகு அவரிடம் சென்று நலம் விசாரித்து  எங்களின் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினோம் .
தமிழ் உலகத்திற்கே முகவரியாய் இருந்தவரிடமே இன்னொரு முகவரி விசாரித்தது நாங்களாத்தான் இருப்போம் .இனி எந்த முகவரியில் அவரை சென்று  சந்திப்போம் ?
உலகுள்ளவரை அவர் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் !
துக்கத்தில் ...
பகவான்ஜி ,

24 May 2014

வராக் கடன் என்பது கோடீஸ்வரன்களுக்கு மட்டும்தானா ?

''பாங்க் மேனேஜர் நான்தான் ,உங்களுக்கு என்ன வேணும் ?''
''வராக்கடன்லே பத்து லட்சம் ரூபாய் கடன் வேணும் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!மாமூல் படுத்தும் பாடு !

''கொள்ளைக் காரங்களுக்கு  போலீஸ்னா  பயம்

இல்லாமப் போயிடுச்சா,ஏன் ?''

'' நம்ம ஏரியாவிலே எந்தெந்த  வீடு பூட்டிக் 

கிடக்குன்னு  போலீஸ் ஸ்டேசனுக்கே போன்

போட்டுக் கேக்கிறாங்களாம் !'''சிரி'கவிதை!அதிகாலை எழுந்தவுடன் எழுந்த சந்தேகம் !
விடியலுக்கு வரவேற்பா ...

இரவுக்கு வழியனுப்பா ...

அதிகாலை நேரத்து பறவைகளின் கானம் ?

23 May 2014

பையன் சரியா படிக்கலைன்னா இப்படியுமா ?

''உங்க  பையன் செய்ஞ்ச காரியத்தாலே... .ஒரு வார்த்தைக்கு,தூங்குறவனைக்கூட எழுப்பிடலாம்னு  சொல்லக் கூட முடியலியா ,ஏன் ?''
''ஒன்பதாம் வகுப்பிலே மூணு வருசமா  உட்கார்ந்து  இருக்கிறவனை  முதல்லே எழுப்புங்கன்னு நக்கல் அடிக்கிறாங்களே !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!காட்டின் நடுவே 'வன'மூர்த்தி !
''என் முதலாளிகிட்டே கார் ஓட்ட 'காடா 'இருக்குன்னு சொன்னா ,வன மூர்த்திங்கிற என் பெயரை மாத்திக்கன்னு சொல்றாரே ,ஏன் ?''
''வனமூர்த்தி இருக்கிற இடம் காடுதானே ?நீ 'ஹார்டா 'இருக்குன்னு சொல்லி இருக்கணும் !'சிரி'கவிதை!இது ஒரு சுயநல வேண்டுதல் !

என் உறவுகளுக்கும் வேண்டும் ...
என் பொருளாதார வலிமை !
கொடுக்கல் இருக்காதே !22 May 2014

மல்லிகைப் பூ கண்ணில் விழலாமா ?

''அவர் போலி டாக்டர்ன்னு எப்படி கண்டுபிடிச்சே ?''
''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா ,பிச்சிப் பூவான்னு கேக்கிறாரே !''சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

வேளா வேளைக்கு மருந்து கொடுக்க மனைவி தேவை ?
''டாக்டர் ,ஞாபக மறதிக்கு மருந்து கேட்டேன் ,பில்லிலே SMS சார்ஜ் முன்னூறு ரூபாய்னு போட்டிருக்கே,ஏன் ?''
''மருந்து சாப்பிடுங்கன்னு ஞாபகப்படுத்தி நாலு வேளையும்  SMS அனுப்புவோம் ,அதுக்குதான் !''
''அதுக்கு முன்னூறு  ரூபாயா ?''
''கால் பண்ணியும் சொல்வோம் ,அதுக்கு ஐநூறு ரூபாயாகும் ,பரவாயில்லையா ?''

உண்மைக் காதலன் கூட செய்யாத சூரசம்ஹார லீலைகள் !

'நான் எல்லாத்தையும் யமுனாவுக்காக மட்டும்தான் செஞ்சேன் ,ஆனா அவளே என்னைப் புரிஞ்சுக்கலேன்னு வேதனையா இருக்கு ...நிச்சயம் ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவா '
'வர்மக்கலை கற்று  தந்த என் குருவுக்கு துரோகம் செய்ஞ்சுட்டோமேன்னு வேதனையா இருக்கு ...
இப்படி இவ்வளோ பீல் பண்றது ...
திருச்சி  சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் ...
நம்ம அஞ்சு கொலை ஆறுமுகம் அல்ல ...
டாங் லீ கண்ணன் என்றழைக்கபடும் சாமியார் (?)தான் !
யமுனாவுக்காக இந்தக் கள்ளக் காதலர் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல ...
யமுனாவின் கணவரை ...
கணவரின் நண்பரை ...
நண்பரின் கார் டிரைவரை ...
தான் கற்ற வர்மக் கலையை பயன் படுத்தி கொலை செய்ததாக கூறியுள்ளார் ...
 அப்பாவி பெண் யமுனாவின் வாழ்க்கையில் விளையாடிய பாவிகளைத்தான் கொன்றது கொலை அல்ல ...சூரசம்ஹாரமாம் ...
இந்த சூரசம்ஹாரம் இத்தோடு முடியவில்லை ...
யமுனாவின் மகனை ,மகளைக் கொன்றதில் முடிந்துள்ளது ...
கராத்தே பயின்றதால் இவனுக்கு டாங் லீ என்று பட்டப் பெயர் வந்ததாம் ...
வாய் திறந்தால் பொய்யாகவே கொட்டுவதால் ...
டங் லை (Tongue lie ) கண்ணன் என்றே சொல்லலாம் !

21 May 2014

வெளிநாட்டு சப்பை மூக்கழகி தந்த 'மொக்கை' இது ....!

''பரவாயில்லேயே,அந்த வெளி நாட்டில் ...நம்ம நாட்டில்  விற்கப்படும் மூக்கு கண்ணாடிகளில் பாதியளவுகூட  விற்கிறதில்லையாமே....அவங்க கண் பார்வை நல்லா  இருக்கும் போலிருக்கே !''
''அட நீங்க வேற ...மூக்கு கண்ணாடி உட்கார்ற அளவுக்கு கூட அவங்களுக்கு மூக்கு இல்லையே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! !அனுமந்து OK ! அரவிந்து NO!

''குறைப் பிரசவம் ஆனதுக்கு காரணம், 'அரவிந்து 'ங்கிற பெயரை நாங்க  செலக்ட் செய்ததுதான்னு எப்படி சொல்றீங்க ?''
''அரவிந்த் ன்னு நீங்க நம்பிக்கையோடு  நினைக்கலையே !''


'சிரி'கவிதை!'கண்ணாடி சொல்லும் உண்மை !

வெளியே தெரிவதை என்னால் காட்டமுடியும் ...
உள்ளே உள்ளதை நீதான் பார்த்துக்கணும் !

20 May 2014

கணவன் மாத்திரை மூலமா மனைவிக்கு சொல்லவருவது .....!

''நான் மாத்திரையைச் சாப்பிடலாமான்னு  
என்கிட்டே ஏன் கேக்கிறீங்க ?''
''அரை மணி நேரத்திலே டிபன் ரெடி ஆயிடுமான்னு கேட்டா கோவிச்சுக்கிறீயே!''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! மனுஷன் சாப்பிடலாமா நாய் பிஸ்கட்டை ?

''பிஸ்கட் சாப்பிட்டுக் கிட்டிருந்த உங்களை ,உங்க நாயே  ஏன் கடிச்சது ?''
''அதோட பிஸ்கட்டை நான் டேஸ்ட் பண்ணிப் பார்த்தது ...அதுக்கு பிடிக்கலைப் போலிருக்கே !'''சிரி'கவிதை!புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை !

ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை !

19 May 2014

வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் ?

''அந்த பட விளம்பரம் பண்றவர் மொடாக் குடிகாரராய் இருப்பார் போலிருக்குன்னு ஏன் சொல்றே ?''
''வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் என்றே சொல்றாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! A .R .ரகுமானுக்கு பிடிக்காத வார்த்தை !

''இவ்வளவு வருசமாகியும் நாடு முன்னேறலேங்கிற வருத்தம் உங்களுக்கு நிறைய இருக்கும் போலிருக்கே !''
''ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
''தாய் மண்ணே 'சுணக்கம் 'ன்னு அடிக்கடி பாடுறீங்களே !''


'சிரி'கவிதை!எங்குமுள்ள ஓட்டைகள் !

ஒட்டடை சொல்லும் உண்மை ...
ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்று !
ஓட்டை மனம்தான் கேட்க மறுக்கிறது !