18 January 2015

சொல்லித் தெரிவதில்லை ,இதுவும் ?

------------------------------------------------------------------

இன்னொரு பெண்டாட்டியை  தேடிக்குவாரோ  ?

                 ''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
                 ''சரி நான் என்ன செய்யணும் ?''
                 ''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சு கொடுங்க போதும் !''


சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

நடிகைன்னாலே டைவர்ஸ்தானா?

            ''உங்க பொண்ணுக்குத்தான் சினிமா சான்ஸ் இல்லாமே போச்சே ,கல்யாணமும் ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு ?''
            ''வர்ற வரன் எல்லாமே ஆறு மாசமாவது கியாரண்டி தர முடியுமான்னு கேட்கிறாங்களே !''

மினிமம் கியாரண்டி கூட கொடுக்க முடியாதா?
ReplyDelete

Replies


 1. அந்த நடிகையின் படத்தை வாங்கியவர்களே கேட்கும் போது ,வாழ்க்கைத் துணை வருபவர் கேட்கத் தானே செய்வார் ?


பிணவறை என்ன மணவறையா சந்தோசப்பட ?

            ''டாக்டர் ,ஆஸ்பத்திரி காம்பௌண்ட் உள்ளேயே வாக்கிங் போகச் சொன்னீங்க சரி ,பின் பக்கம் மார்ச்சுவரி  இருக்குன்னு சொல்ல வேண்டாமா ...பயந்தே போனேன் !''
            ''பயப்படாதீங்க ,உங்களுக்கு ஆப்பரேசன் முடிஞ்சதும் சரியாப் போகும் !''

இனி அவன் நிம்மதியா தூங்குவானா!?
ReplyDelete

Replies


 1. நிரந்தரமா வேண்டுமானா தூங்குவான் !


IPL கிரிக்கெட்டில் மட்டுமா சூதாட்டம் ?

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த ...
தடை செய்யப்பட்ட சேவல் பந்தயத்தில் ...
MLAக்கள் ,தொழில் அதிபர்கள் ,சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள் ...
அவர்களுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப் பட்டுள்ளது ...
15ஏக்கர் பரப்பளவு பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்ற சேவல் பந்தயங்களில் ...
5 ௦ ௦ கோடி வரை பந்தயம் கட்டி சூதாட்டம் நடைப் பெற்று உள்ளதாம் ...
அங்கே பணம் விளையாடுகிறது என்றால் ...
இங்கே ,கரூர் அருகே நடந்த சேவல் 
சண்டையால்...
வேடிக்கை பார்க்க வந்த ஒருவரும் ,சேவல் ஜாக்கியாக களம் இறங்கியவரும் பலியாகி உள்ளனர் ...
பலியாக காரணம் ,சண்டையிடும் சேவலின் காலில் கட்டப் படும் கத்தியில் தடவப்படும் விஷம் தானாம்...
பாரம்பரிய விளையாட்டுக்கள் என்ற பெயரில் இப்போது வியாபாரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்து உள்ளது வேதனைக்குரியதாகும் ! 

பணம் + புகழ் : என்ன வேண்டுமானாலும் செய்யும்...
ReplyDelete

Replies


 1. இதுவும் லாட்டரி டிக்கெட் மாதிரி பாமர மக்களை சுரண்டத் தொடங்கிவிடும் போல்
  இருக்கிறது !
 2. 2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....
 •                              ''குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்னு சொன்ன அந்த நடிகை .இப்போ 'கிளாமர் 'லே கலக்குறாங்களே .எப்படி ?''
 •  ''சான்ஸ்  கிடைக்காம  இருந்தப்போ  சினிமா 'கிராமர் 'படிச்சாங்களா  என்னவோ  !''


 • 18 comments:

  1. 01. அப்படினா ? அதற்க்கு கூலி
   02. கட்டிக்கிறவன் கரண்டியை பிடிச்சிட்டால் பிரட்சினை இல்லையே...
   03. டாக்டரோட கியாரண்டி சரிதானோ
   04. மானக்கேடு
   05. எல்லாம் அனுபவப்பாடம்தான்
   த.ம.1

   ReplyDelete
   Replies
   1. 1.கூலி நாம கொடுக்கவே வேண்டாம் ,அவரே எடுத்துக்குவார் :)
    2.கரண்டியை மட்டும் பிடிக்கிறவன் பெயர் கணவனா :)
    3.உறுதியான கியாரண்டி :)
    4.தடை செய்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது சேவல் சண்டை :)
    5.அது மாதிரி எந்த பாடம் சொல்லித் தரும் :)

    Delete
  2. வணக்கம்
   ஜி
   பணம் இருந்தால் பல்லாக்கில் ஏறலாம்......... என்ன செய்வது,... இரசித்தேன்.. பகிர்வுக்கு நன்றி.த.ம1
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. பல்லாக்கை வாங்கி விடலாம் ,உடல் ஆரோக்கியத்தை வாங்க முடியுமா :)

    Delete
  3. Replies
   1. நகை நகை என்று மனைவி அரித்துக் கொண்டே இருந்ததால் அவர் இந்த முடிவுக்கு வந்ததை ரசித்தீர்களா :)

    Delete
  4. சினிமா கிராமர் இது தானோ ஜி...?

   ReplyDelete
   Replies
   1. இந்த பாடத்தை யாருமே சொல்லித் தரவும் மாட்டாங்களே :)

    Delete
  5. Replies
   1. இத்தனை நாளா தெரியாமப் போச்சே ,நகையைப் பற்றி எழுதினால் நல்ல நகைச் சுவையென்று :)

    Delete
  6. சூப்பர் ஜோக்ஸ்! நன்றி!

   ReplyDelete
   Replies
   1. மகிழ்வான கருத்துக்கு நன்றி

    Delete
  7. நூறு பவுன் நகை எப்படி வந்தது ?? சீதனமா???
   நல்லவேளை ஆபரேசனுக்கு முன்னாலேயே வாக்கிங் போயிருந்தா என்ன ஆகிருக்கும்!!!

   ReplyDelete
   Replies
   1. சீதனமா வந்திருந்தா பெண்டாட்டிப் பிழைச்சிக் கிட்டு போகட்டும்னு விட்டிருப்பாரே :)
    இருந்தாலும் இவ்வளவு பயம் இருக்கக்கூடாது ,ஆப்பரேசனுக்கு முடிஞ்சி அங்கேதான் போகப் போறோம்ன்னு கூட தெரியாத அப்பாவியா இருக்காரே :)

    Delete
  8. மனைவி எக்கேடு கெட்டாலென்ன...
   எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சு கொடுங்க போதும்!
   இப்படியும் நம்மாளுங்க...

   ReplyDelete
   Replies
   1. இவங்களும் எக்கேடாவது கெட்டுப் போகட்டும் ,இவங்களை நம்மாளுங்கன்னு சொல்லக்கூடாது :)

    Delete
  9. மனைவிய எப்படித் துரத்தலாம்னு நேரம் பார்த்திருந்தாரு போல.....ஹஹஹ் க்ளாமர்...க்ராமர்....எல்லாமே ரசித்தோம்...ஜி....

   ReplyDelete
   Replies
   1. இவரே கடத்தி விட்டு நாடகமாடுகிறாரோ :)

    Delete