Monday, 19 January 2015

வெளி நாட்டுக்கு போகுமுன் ......:)

                                ''நீ  குடும்பத்தோட  உலக  டூர்  போறதை வாழ்த்தி ,போஸ்டரெல்லாம் போட வேண்டாம்னு ஏன் சொல்றே ?''

                       ''கொள்ளைக்காரனுக்கு  நாமே  வெற்றிலைப் பாக்கு வைச்ச மாதிரி ஆயிடும்ணுதான் !''

                         

மகளுக்கு கருச்சிதைவுன்னு அப்பன் சந்தோசமா சொல்ல முடியுமா ?

                   ''அர்த்தம் தெரிஞ்சா மட்டும் ஆங்கில வார்த்தையைச் சொல்லுங்கப்பா !''
                ''இப்ப என்ன சொல்லிட்டேன் ?''
             ''நான் அபார்ட்மென்ட்டுக்கு போனதை 'அபார்சனுக்கு 'போயிட்டாள்னு சொல்லி இருக்கீங்களே !''



  1. ஆங்கிலம் தெரியாத ஒருவர் என்னிடம் பெட் பிரசர் கூடிப் போச்சு என்றார் .புரியலையே என்றதற்கு ,இரத்த அழுத்தம் கூடிப் போச்சுன்னு சொன்னார் .சிரிப்பு வந்தது !அதன் பாதிப்புதான் இந்த கருச் சிதைவும் !
    நன்றி
    Delete
  2. இரத்த அழுத்த நோயை ஆங்கிலதிலே சொன்னா தவறாகவோ, சரியாகவோ அதை நீங்க உயர்ந்த மதிப்பான நோய்யென்று நினைச்சுக்குவீங்க என்று அவர் எதிர்பார்த்ருப்பார்.
    Delete
  3. நல்ல வேளை ,தமிழ்லே சரியாகச் சொன்னார் .இல்லைஎன்றால் எனக்கு BPஏறி இருக்கும் !
    நன்றி

படத் தலைப்பே ரிசல்ட்டை சொல்லிவிடுமா ?

        ''எப்பப் பார்த்தாலும் தலையிலே துண்டை போட்டுக் கிட்டு  இருக்காரே ,அவர் யாரு ?''
         ''உச்சி வெயில்  படத் தயாரிப்பாளர்தான் !''



ஊடகங்கள் செய்யும் உன்னதப் பணி !

செவ்வாயில் மண்ணைத் தொண்டி ஆராய்ச்சி என்பதை விட 
நம்ம ஊர் மீடியாக்களின்   'முக்கியச் '  செய்தி ...
குடும்ப அட்டையில்  உள் தாள் ஒட்டும் பணி !





22 comments:

  1. 01. வரும் முன் காப்போம்.
    02. இதற்க்காகவாவது ஆங்கிலம் படிக்கணுமோ....
    03. படம் விழுந்துடும்னு ஏற்கனவே தெரியுமோ ?
    04. அவ்வளவு கஷ்டமோ... ?

    தமிழ் மணம் 1

    ReplyDelete
    Replies
    1. 1.முன் எச்சரிக்கை நல்லதுதானே :)
      2.படிக்கவும் வேணாம் ,பேசவும் வேண்டாமே :)
      3.மக்கள் மசாலாப் படங்களை ரசிக்கும் அளவிற்கு நல்ல படங்களை ரசிப்பதில்லையே :)
      4.ஐந்து வருடமா இதுதான்யா நடந்துகிட்டிருக்கு :)

      Delete
  2. Replies
    1. இவர் இப்படின்னா ,இன்னொருத்தர் ...உச்சி வெயில் காயும் நேரம் உதட்டோரம் ஈரம் ஏனொன்னு கேள்வி கேட்கிறாரே :)

      Delete
  3. வணக்கம்
    இரசிக்கவைக்கு நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி. த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உச்சி வெயில் உங்களுக்கு கிறுகிறுப்பை தந்து இருக்குமே :)

      Delete
  4. தம +
    நீங்கள் போஸ்டர் அடிச்சு அல்லவா சொல்வீங்க..?

    ReplyDelete
    Replies
    1. போஸ்டருக்குப் பதிலாய் சாவியை கொள்ளைக்காரன் கிட்டயே கொடுத்து ...உன்னை நம்பித்தான் போறேன்னு சொல்லப் போறேன் :)

      Delete
  5. அருமை ஜீ ! ஆனா /நீ குடும்பத்தோட உலக டூர் போறதை வாழ்த்தி ,போஸ்டரெல்லாம் போட வேண்டாம்னு ஏன் சொல்றே ?''
    ''கொள்ளைக்காரனுக்கு நாமே வெற்றிலைப் பாக்கு வைச்ச மாதிரி ஆயிடும்ணுதான் !''/ இந்த ஜோக்தான் எனக்கு புரியல !

    ReplyDelete
    Replies
    1. நாங்க வீட்டிலே இல்லைன்னு சொல்றது ,கொள்ளைக்காரனுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து வரவேற்பதுதானே :)

      Delete
    2. ஆஹா ! காலங்காத்தால அரைத்தூக்கத்துல வந்து கமெண்ட் போட்டா இப்படித்தான் ஆகும் போல !!

      Delete
    3. இனிமேல் நீங்க காலைக்கடனை முடிச்சிட்டு கருத்துரை போடுங்க நண்பா....

      தமிழ் மணம் - 8

      Delete
    4. அண்ணே ! ஜோக்காளிய காலைல பாத்துட்டு மத்த வேலைய செஞ்சு பழகிடுச்சிணா !

      Delete
    5. நல்ல வேளை,ஜோக்காளியைப் படிச்சாதான் காலைக் கடன் சிரமம் இல்லாம போவுதுன்னு சொல்லாம விட்டீங்களே :)

      Delete
  6. வார்த்தை விளையாட்டு ஜோக்ஸ் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. அர்த்தம் தெரியாத ஆங்கில வார்த்தைகளை சொல்வதில் அவ்வளவு சிக்கல் இருக்குதே :)

      Delete
  7. இரத்த அழுத்தமும் உச்சி வெயிலும் கலக்கல் ஜி...

    ReplyDelete
    Replies
    1. பெட் பிரசர் என்ற வார்த்தையை முதலில் கேட்டதும் நானும் உச்சி வெயிலில் நின்றது போல் கிறுகிறுத்துப் போனேன் :)

      Delete
  8. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. என் பதிவு சிந்திக்கவும் வைக்கிறதா ..ஹா ஹா ஹா :)

      Delete
  9. அட ப்பாவி போஸ்டரா ஊர் உலகம் சுத்தறத...பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன்ல இல்ல சொல்லிட்டுப் போகச் சொல்றாங்க இப்பல்லாம்....

    ஹஹஹஹஹஹ் ...நல்லகாலம் பெட் ப்ரசர்...."pet " ப்ரஷர்னு....முதல்ல நினைச்சுட்டோம்....ஹஹ்ஹ் நல்ல வார்த்தை விளையாட்டு....

    பாவம்..ஹஹஹ் உச்சிவெயிலத்தான்....

    ReplyDelete
    Replies
    1. போலீஸ் ஸ்டேசனில் சொல்லிட்டுப் போனால் பலன் இருக்குமா :)

      Delete