20 January 2015

காதல் என்பது இரு கை ஓசை ?

 மேனேஜர்  மேஜர் ஆகாதவரோ ?

        ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
        ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  ஒருநாள் லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிசன் போதுமேங்கிறாரே !''

சென்ற வருடம் ,இதே நாள் ஜோக்காளியில்......


காதல் என்பது இரு கை ஓசை ?

                ''நீ காதலிக்கிற பொண்ணோட  விருப்பத்தை தெரிஞ்சுக்க ...ஒரு கையிலே ஓசை வராதுன்னு  சொல்லிப் பார்த்தீயா,என்னாச்சு ?''
           ''ஏன் வராதுன்னு  'பளார் 'ன்னு  கன்னத்திலே அறைஞ்சிட்டாளே !''


ரொம்பவே வெவரமான புள்ள போலருக்கு...! பேசாம காதலை கோவிலுக்குள்ள வெச்சு சொல்லியிருக்கலாம். ஹெஹ்ஹெஹ்ஹே....!
ReplyDelete


 1. சொன்னானே ,பேக்கிலே வச்சு இருந்த செருப்பை எடுத்து அடிச்சுட்டாளே....விதி ,அடி வாங்கணும்ன்னு இருந்தா யாரால் தடுக்க முடியும் ?

நன்றி சொல்லும் நேரமிது !

அன்பார்ந்த வலையுலக உறவுகளே ...
இன்று காலையில் ஜோக்காளியின் முகத்தில் இன்ப அதிர்ச்சி ...
தமிழ்மண ரேங்க் வரிசையில் Top 1௦ல்  படியேறி விட்டான் ...
பார்வைகளின் எண்ணிக்கையிலும் ஒண்ணரைலட்சத்தை தாண்டியிருந்தான்...
5 .1 ௦.1 2 ல் பிறந்த ஜோக்காளி ,7 .1 1. 1 2 ல் தமிழ் மணத் 
தொட்டிலில் கையை காலை ஆட்டத் தொடங்கினான் ...
இன்றோடு 434 நாட்கள் கடந்த நிலையில் ...
சிறியதும் ,பெரியதுமாக 9 ௦ 9 பதிவுகள் போட்ட நிலையில் இந்த உச்சத்தை தொட்டு இருக்கிறான் ...
இதற்கு உதவிய நெஞ்சங்களை மறக்க முடியுமா ?
வலைப் பூவை முதலில் வடிவமைத்து தந்த அருமை மகன் அஜய் சந்தனுக்கும்...
வலைப்பூவில் நான் விரும்பிய  மேம்பாடுகளை செய்த நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கும்...
தினசரி கருத்துக்கள் மட்டுமல்ல... பிளாக் இன்னை பிளாக் காம்மாகி ...
வோட் பட்டனும் அமைத்து தந்து உச்சம் தொட உதவிய ...
வலை உலக விரல் வித்தகர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் ...
வலைச்சர அறிமுகமாய் என்னை ஆதரித்த  வே.நடன சபாபதி ,
குடந்தையூர் ஆர் .வி.சரவணன் ,திருமதி .அருணா செல்வம் ஆகியோருக்கும் நன்றி ...
அதிகபட்ச  கருத்துரைக்களைக் கூறி ஊக்குவிக்கும் ...
திருவாளர்கள் ரமணி அய்யா ,புலவர் இராமனுசம் அய்யா ,வெங்கட் நாகராஜ் ஜி ,சைதை அஜீஸ் ஜி ,திருமதி ராஜி ,அ .பாண்டியன் ஜி ,சே. குமார் ஜி,நம்பள்கி ஜி ,ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் ஜி ,வா.மணிகண்டன் ஜி ,கவியாழிகண்ணதாசன் ஜி ,கரந்தை ஜெயகுமார் ஜி ,வி .துளசிதரன் ஜி ,T.Nமுரளிதரன் ஜி ,2 ௦ ௦ 8ரூபன் ஜி ,கவிதை வீதி சௌந்தர் ஜி ,'மின்னல் வரிகள் 'பால கணேஷ் ஜி .கோவை ஆவி ஜி ஆகியோருக்கும் ...
மேலும் பல நூற்றுக்கணக்கான கருத்துரை இட்ட நண்பர்களுக்கும் ,லட்சக்கணக்கான வாசக நெஞ்சங்களுக்கும் நன்றி ...
உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கு பதிவுகளை கொண்டு சென்ற தமிழ் மணம் ,இன்ட்லி ,தமிழ் வெளி ,ஹாரம் திரட்டிக்கும் நன்றி ...
Face book ,Google+,Twitter ,வெட்டிபிளாக்கர் வழியாக follow செய்பவர்களுக்கும் நன்றி !
சிகரத்தைத் தொட என்றும்போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் !
நன்றி !

மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்...
ReplyDelete

Replies


 1. என் முதல் வணக்கத்துக்கு உரிய முதல்வரே ,வாழ்த்துக்கு நன்றி ! • 2013   இதே நாள் ,ஜோக்காளியில்....

 • பட்டாம் பூச்சியைப் பார்க்கையில் அதிசயமாய் இருக்கிறது ...
 • கூட்டுப் புழுவாய் அடைப்பட்டுக் கிடந்தது  இதுதானா ?
  pupa125.jpgஇதிலிருந்து  வந்ததா 

   Monarch (Danaus plexippus)இது?
  26 comments:

  1. வணக்கம்
   ஜி
   தகவலை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்...... வாழ்த்துக்கள்.
   நகைச்சுவை அனைத்தும் அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம 1

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete
   Replies
   1. சென்ற வருடம் ,டாப் டென்னில் வந்தவுடன் நான் சொன்ன நன்றி இது ...அதன் பிறகு ' ஜோக்காளி ' தமிழ் மண முதல்வன் ஆவதற்கு ஊக்கம் தந்த உங்களுக்கு மீண்டும் நன்றி !

    Delete
  2. மேனேஜர் உங்களைப் போல ஜி...! ஹா... ஹா...

   ReplyDelete
   Replies
   1. நம்மைப் போல என்றால் சரியாக இருக்கும் ,நக்கல் நமக்குத்தான் கை வந்த கலையாச்சே,ஜி :)

    Delete
  3. நகைப்பணி தொடர்க
   தம+

   ReplyDelete
   Replies
   1. புலி வாலை (த ம முதலவன் ) பிடித்து கொண்டுள்ளேன் ,அவ்வளவு சீக்கிரம் விட முடியாது ,நகைப் பணியை தொடர்ந்து தான் ஆகணும்:)

    Delete
  4. தொடர்ந்து தமிழ்மணத்தில் முதலிடத்தில் இருக்க வாழ்த்துகள்....

   நகைச்சுவையையும் ரசித்தேன்.

   ReplyDelete
   Replies
   1. வாழ்த்துக்கு நன்றி ,புலிவாலை விட்டாலும் ஆபத்துதானே :)

    Delete
  5. ஒரு வேளை அவருக்கு தலை வழுக்கையா இருந்தா என்ன சொல்லிருப்பாரு மேனேஜர் ?

   காதல் மட்டுமா ? கல்யாணமும் அதேமாதிரி தான்னு கேள்விப்பட்டேன் !!!

   தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் அண்ணா

   தம +

   ReplyDelete
   Replies
   1. தலைக்கு பாலீஷ் போட ஒரு நிமிஷம் போதுமேன்னு சொல்லி இருப்பார் :)

    கல்யாணம் ஆனதும் , ஒரு கை ஓசை என்றாலும் ,அது கொடுக்கல் வாங்கலாச்சே:)

    Delete
  6. நிரந்தர முதல்வர் நீர் என்பது உறுதி ஐயா. எங்களைச் சிரிக்க வைத்து வாழும் உமக்கு மகிழ்வான நல்வாழ்த்துகள்.

   ReplyDelete
   Replies
   1. இந்த உலகமே நிரந்தரமில்லை ,இதிலேது ..ஹிஹி :)

    Delete
  7. வாழ்துக்கள் ஜி.
   காலையில 4மணிக்கு நான் தானே உங்க கனவுல வந்தேன். என்னைய பார்த்ததுக்கு அப்புறம் தான்,உங்களுக்கு இந்த இன்ப அதிர்ச்சி ஏற்பட்டிருக்கு!!!

   ReplyDelete
   Replies
   1. உங்க கூட நடித்த (அல்லது நீங்க அவர் கூட நடித்தீர்களா ) அமலா பாலும் இருந்தாங்களே :)

    Delete
  8. 01. இனிமேல் கழுத்துக்கு கீழே வேலையிருக்குனு சொல்ல வேண்டியதுதான்.
   02. நல்லவேளை பக்கத்துல அவளோட அம்மா இல்லை இருந்திருந்தால் ? ஓசை இன்னும் பலமாவுல கேட்டிருக்கும்.
   03. தொடர்ந்து முதல்வராக இருக்க வாழ்த்துகிறேன்.
   04. இது மனுஷனுக்கும் பொருந்துமோ....

   தமிழ் மணம் – 7

   ReplyDelete
   Replies
   1. 1.பயந்துகிட்டு லீவு கொடுத்து விடுவாரா :)
    2.மருமகன் தப்பித்தான் :)
    3.வாசகர்களின் முதல்வனாகவே இருக்க எனக்கு ஆசை :)
    4.சில அழகிகளைப் பார்த்தால் அப்படித்தான் தோணுது :)

    Delete
  9. ஹஹஹஹ்...அனைத்துமே அருமை/ பட்டாம் பூச்சி அருமையோ அருமை! ஜி!

   ReplyDelete
  10. மேனேஜர் குசும்பு பேர்வழியா இருப்பாரோ? ஜோக்ஸ் சூப்பர்! நன்றி!

   ReplyDelete
  11. 1) ஹா...ஹா...ஹா... ஆனால் நாங்கள் கூட அப்படித்தான் சொல்வோம்! அல்லது 'டிகிடிகி'க்குப் போறோம் என்று சொல்வோம்!!

   2) ஹா....ஹா...ஹா... ஒரு கைல ஓசை வந்ததுதான். ஆனால் கன்னத்தோட காண்டாக்ட் வந்ததும்தானே ஓசை வந்தது!

   3) அடடா.... அந்த லிஸ்ட்டில் என் பெயர் இல்லை...

   4) தத்துவம் நம்பர்....?

   ReplyDelete
   Replies
   1. 1. டிகிடிகி என்று தலையில் டிராக்டர் ஒட்டிய காலமெல்லாம் போச்சே ,அதன் ஞாபகமா இந்த சொல்லா :)
    2..சம்மதம் என்றாலும் வேறு ஓசை வந்து இருக்குமே :)
    3.அந்த பதிவு சென்ற வருடம் வந்தது ,நீங்கள் அதற்கு அப்புறம் தொடர்ந்து வருவதை மறப்பேனா ?முதல் இடத்திற்கு வந்ததும் ,கடந்த 8.7.14 ல் போட்ட பதிவில் உங்களுக்கும் நன்றி சொல்லி இருப்பது ,இதோ ....#அதிகபட்ச கருத்துரைக்களைக் கூறி ஊக்குவித்த ...
    திருவாளர்கள் ரமணி அய்யா ,புலவர் இராமனுசம் அய்யா ,வெங்கட் நாகராஜ் ஜி ,சைதை அஜீஸ் ஜி ,திருமதி ராஜி ,அ .பாண்டியன் ஜி ,சே. குமார் ஜி,நம்பள்கி ஜி ,ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் ஜி ,மணிமாறன் ஜி ,கவியாழிகண்ணதாசன் ஜி ,கரந்தை ஜெயகுமார் ஜி ,,T.Nமுரளிதரன் ஜி ,2 ௦ ௦ 8ரூபன் ஜி ,கவிதை வீதி சௌந்தர் ஜி ,துளசிதரன் ஜி ,துரை செல்வராஜுஜி,கில்லர் ஜி ,வலிப்போக்கன்,
    ஸ்ரீராம் ஜி
    தமிழ் இளங்கோ ,திருமதி .அம்பாள் அடியாள் ,சொக்கன் சுப்ரமணியன்ஜி ,பரிதி முத்துராசன்ஜி ,கிங் ராஜ் ஜி ,சீனி ஜி ,திருமதி .மைதிலி ,நண்டு நொரண்டு ராஜசேகரன் ஜி ,காமக் கிழத்தன், தி பி ஆர் ஜோசப் ஜி ஆகியோருக்கும் நன்றி !
    4 தத்துவத்துக்கு ஏது நம்பர் :)

    Delete
  12. ஆண்களுக்கு எல்லாம் தலைக்கு மேல் இருக்கு என்றால்... பெண்களுக்கு...???

   ReplyDelete
   Replies
   1. சாருவோட நாவல்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமோ :)

    Delete
  13. மேனேஜர் ரசிக்க வைத்தது...
   மற்றவை அருமை...

   ReplyDelete
   Replies
   1. எல்லா மேனேஜர்களும் இப்படித்தானா :)

    Delete
  14. உங்க திறமைக்கு தமிழ்மணத்தின் இந்த அங்கீகாரம் சரியானதே பாஸ்! வாழ்த்துகள்!

   ReplyDelete
   Replies
   1. இவ்வளவுதானா ...அடுத்த கட்ட வளர்ச்சிக்கு என்ன செய்றதுன்னு யோசித்துக் கொண்டிருக்கிறேன் :)

    Delete