23 January 2015

புருஷன் குணம் அறிந்த புண்ணியவதி :)

--------------------------------------------------------------------------


செத்தவன் வாயில் தீர்த்தம் பட்டால் சொர்க்கம் ?

                 ''அந்த டாக்டரோட திறமை  ,பக்கத்து  பெட்டிக்கடைக் காரருக்கும் தெரிஞ்சுருக்கா ,எப்படி ?''  

                '' கோவில் வாசலில்  இருந்த கடையை , இந்த கிளினிக் பக்கத்தில் மாற்றியதும்   காசித் தீர்த்த சொம்பு  நல்லா விற்பனை ஆகிறதாம்  !''                     


புருஷன் குணம் அறிந்த புண்ணியவதி !

                 ''அம்மா , பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமாயிட்டார்னு  அப்பாகிட்டே சொன்னா ,அவரை  ஞாபகம் இல்லேன்னு  சொல்றார்மா !''
            ''அமலாவோட மாமனார்னு  சொல்லு ,கண்ணீரே வடிப்பாரு !''

இதைத்தான் பார்க்கும் பார்வையில் இருக்கு ஆயிரம் அர்த்தம் என்பது.
சிலருக்கு தேவதாஸ் என்றால் விளங்கும்
சிலருக்கு நாகுர்ஜுனாவின் தந்தை என்றும்
சிலருக்கு நீங்கள் சொல்லியபடி அமலாவின் மாமனார் என்றும்
மற்றும் சிலருக்கு நாக சைத்தன்யாவின் தாத்தா என்றும் புரிய வைக்கவேண்டும்!
பார்வையின் கோணத்தை மாற்றினால் உண்மை புலப்படும்ஜி!!!
ReplyDelete


Replies


 1. இதைதான் பார்வைகள் பலவிதம்ன்னு சொல்றாங்களோ?இதில் ,அவரோட ஜொள்ளுப் பார்வை ஒரு விதம் !
ஆம்லேட் தின்னும் ஆசையே போச்சு !

             ''ஏம்பா சர்வர் ,ஆம்லேட் உடனே  கிடைக்காதா ?''

''ஆம்  'லேட் ' டாகும்  சார் !வலி ஒன்றுதான் !பேர்தான் வேறு வேறு !

HEADACHE என ஆபீஸில் லீவ்
 சொல்ல   நினைத்தபோது ...
செல் அழைத்தது ..
'மண்டைக் குத்து வலி ,வேலைக்கு வர முடியாது '
ஒலித்தது  வேலைக்காரியின்  குரல் !


28 comments:

 1. நீங்க அந்த காலத்து (?) அமலாவோட ரசிகர்னு புரியுது.
  சர்வர் என்ன ஒரு டைமிங்கோட பேசுகிறார்.
  தலைவலி எல்லோருக்கும் தானே வரும்!!!

  ReplyDelete
  Replies
  1. தாத்தாவே அமலாவை மறக்கலே ,பேராண்டி மறப்பானா :)
   வராதுன்னு வக்கனையா சொல்றார் :)
   ஆனால் தனக்கு வந்தால்தானே தெரியுது :)

   Delete
 2. நல்ல தொகுப்பு ..
  தம+

  ReplyDelete
  Replies
  1. மது ஜி ,உங்களுக்குத்தான் மாதொரு பாகன் பட்டம் பொருந்தும் .....த ம நீங்க ,வோட்டு போடுவது அவங்களா இருக்காங்களே:)

   Delete
 3. தலைவலி அவர்களுக்கு வரக்கூடாதா என்ன??
  ஒ! அவரு தான் அமலா மாமனாரா???
  பாருங்க சொக்கன் சகோ தன் அன்பு தங்கை அமலா பால் பற்றி சொல்லவில்லையே என்று குறைபட்டுக்கொள்கிறார்:)))) தலைவா ஷூட்டிங் அப்போ அமலா சொக்கன் சகோவை அண்ணா என அழைத்தது நினைவிருக்கில்ல!

  ReplyDelete
  Replies
  1. தலை இருக்கிற எல்லோருக்கும் தலைவலியும் வரத்தான் செய்யும் :)
   மாமனார் மட்டுமா ,சைதை அஜீஸ் ஜி சொல்லி இருப்பதையும் பாருங்க :)
   ஐயோ பாவம் அவர் ,கண்ணா ன்னு எதிர்ப்பார்த்து ,அண்ணா ன்னு சொன்னதைக் கேட்டதும் நாலு நாள் சோறுதண்ணி குடிக்கலைன்னு கேள்விபட்டேன் :)

   Delete
 4. Replies
  1. லீவு போட்டதும் வேஸ்ட்? :)

   Delete
 5. வணக்கம்
  அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி.த.ம4
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அருமை ,ஆம்லேட் தானே :)

   Delete
 6. 01. நல்லா விசாரிங்க டாக்டரோ பினாமி பேருல இருக்கப்போகுது...
  02. ப்யூஸ் போனா இப்படித்தான்...
  03. ஆம்லேட்டில் இப்படயொரு தத்துவமா....
  04. ஏதோ லிங்க் புடிபடுதே...
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. 1.'பிணா'மியாவே இருந்துட்டுப் போறார் ,வியாபாரம் ஆனா சரிதானே ?காசி தீர்த்தமும் அவர் ஆத்து சரக்குதானே :)
   2.பியுசெல்லாம் அந்தக் காலம் ,இப்போ mcb தான் :)
   3.ஆம்லெட்டில் போடுகிற பெரிய 'வெங்காய' தத்துவம் :)
   4.ஏன்தான் புத்தி இப்படி போகுதோ :)
   த ம 5 எனக்கு இந்த ஐந்து ரொம்ப பிடிக்குதே :)

   Delete
 7. ஹா...ஹா..... சோகமான ஜோக்கா இருக்கே... (எனவே ஒரு 'ஹா' மிஸ்ஸிங்!)

  ஹா...ஹா... (இதுவும் கொஞ்சம் சோ.ஜோ தான்!!)

  ஹா...ஹா...ஹா... லேட் ஆனாலும் லேட்டஸ்ட் ஆகா வருமாமா...

  ஹா...ஹா...ஹா.... அது சரி, நம்மிடம் மட்டும்தான் மண்டை இருக்கா என்ன!

  ReplyDelete
  Replies
  1. நேரில் கங்கையைப் பார்த்த பின் ,அந்த தீர்த்தம் பிணத்துக்கு சரியென்று தோன்றுகிறது ,இதுவும் ஒரு வித சோகம்தானே :)

   அட ஆமா ,இவரும் செத்துட்டாரே :)

   வெறும் டஸ்ட்டா வராம இருந்தா சரிதான் :)

   இதைக் கேட்டவர் மண்டை இன்னும் கொஞ்சம் அதிகமா வீங்கியிருக்குமே :)

   Delete
 8. ஹா ஹா ஹா !

  அருமை ஜீ !
  தம +

  ReplyDelete
  Replies
  1. neenga tamilley kamendu pottathum arumai ji :)

   Delete
 9. ஹஹஹஹ...ரசித்தோம் அனைத்தையும்...ஆம்லேட் ஆம்...லேட் அருமை....

  ReplyDelete
  Replies
  1. நிறைய வெங்காயம் போட்ட ஆம்லேட்டை ரசித்ததற்கு நன்றி :)

   Delete
 10. நடிகர் நாகேஸ்வரராவ் என்றால்
  அமலாவோட மாமனார்னு சொல்லு
  ஆம்லேட் என்றால்
  ஆம் 'லேட்' டாகுனு சொல்லு
  சொல்லுக்குச் சொல்லு
  நகைச்சுவைனு சொல்லு


  யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

  ReplyDelete
  Replies
  1. நகைச் சுவை என்றால் ஜோக்காளி என்றே சொல்லு என்று நீங்கள் சொல்லும் வரையில் என் பணி தொடரும் :)

   மதுரைக்கும் வருகை தாருங்கள் ,சந்திக்க வருகிறேன் !

   Delete
 11. காசி தீர்த்தம்! அருமை!

  ReplyDelete
  Replies
  1. பார்க்க மட்டும்தாம் அருமை ,குடிப்பதற்கு அல்ல அய்யா :)

   Delete
 12. இப்படிபட்ட புண்ணியவதிய கொண்டவரு..ரெம்பவும் கொடுத்துவச்சரு.....ம்ம்ம்...........

  ReplyDelete
  Replies
  1. கொண்டவரா ,கொன்றவரா :)

   Delete
 13. Replies
  1. நீங்கள் செய்திருப்பதும் சூப்பர் :)

   Delete
 14. அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. டாக்டரால் இப்படியும் வாழ்றாங்க சில பேர் ,அப்படித்தானே :)

   Delete