27 January 2015

கணவனால் இளம்மனைவிக்கு உண்டான அவஸ்தை :)

--------------------------------------------------------------------------------------
 பையனுக்கு நூடுல்ஸ்னா  உயிரோ :)    
             ''உங்க  பையன் கவிஞராய் வருவான் போலிருக்கா ,எப்படிச்  சொல்றீங்க ?''
            ''பூக்களைப் பறிக்க கோடரி எதுக்குன்னு நான் பாடினா ,நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி எதுக்குன்னு  எதிர்ப் பாட்டு பாடுறானே !''


சென்ற வருடம் ,இதே நாள் ஜோக்காளியில்......

கணவனால் இளம்மனைவிக்கு தினசரிஅவஸ்தைதான் !

              ''ராத்திரிப்பூரா  என்னவர் தொல்லைத் தாங்க முடியலேடி !''
            ''இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு ...அலுத்துக்கிறீயே ?''
             '' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால் என்னாலே 
               தூங்கவே முடியலேன்னு சொல்ல வந்தேன்!''


மலரின் நினைவுகள்27 January 2014 at 21:38
எவரோடது?!
ReplyDelete

 1. இதிலென்ன சந்தேகம் ?அவரோடதுதான் !
  Delete

 2. நன்றி
 3. ஓ... அப்படியா..!! சரி சரி...!!
  நான் கூட ஒருவேளை அவரோடதா இருக்குமோன்னு நெனச்சேன்..!!
  Delete
 4. இப்படித்தான் நினைச்சு நிறைய பேர் இன்னைக்கு 'பல்பு 'வாங்கிட்டாங்க !

 5. அரட்டை அடிச்சாலும் தூக்கம் போகும். குறட்டை விட்டாலும் தூக்கம் போகும்!
  ReplyDelete

  Replies


  1. குறட்டை விட்டால் அடுத்தவங்க தூக்கம்தானே போகும் ?

        ''மயக்கமாகி எழுந்தவனை எல்லோரும் ஏன் அடிக்கிறாங்க ?''
       ''ஒரு சோடா வாங்கிக் கொடுக்கக்கூட உங்கள்ளே யாருக்கும் 
        துப்பில்லையான்னு கேட்டானாம் !''


கும்மாச்சி27 January 2014 at 07:30
அது சரி நியாயமான கேள்விதானே.
ReplyDelete

 1. இப்படி கேட்பான்னு தெரிஞ்சு இருந்தா ,சாவட்டும் என்றே விட்டிருப்பாங்க !
   1. 2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....

   அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கு !

     1. ஒற்றுமையாய் இருந்த என்னைப் பிரித்து 
      தலையிலே பலமாய்  அழுத்தி 
       குழியிலே  என்னைத் தள்ளி 
      அகலக்கால்  வைக்க விடாமல் 
      உள்புரமாய்  மடக்கி ...
       உன்   தேவையை  தீர்த்துக் கொண்டாயே ,
      நான்படும்   கஷ்டம்  உனக்கு புரியாதா ?
      எனக் கேட்ட 'ஸ்டாப்பிளர்  பின்னிடம் '
      முதிர் இளைஞன்  சொன்னான் ...
      வேலைக் கிடைக்கும் வரை  என் கஷ்டமே 
      எனக்குப்  பெரிது !


32 comments:

 1. நூடூல்ஸ் அவளோ ஸ்ட்ராங்கா இருக்கும் போல

  ReplyDelete
  Replies
  1. நூடுல்ஸ் கெடுதல்னு கேள்வி பட்டிருக்கேன் ,ஆனால் அறிவை வளர்க்குதே :)

   Delete
 2. ஹா... ஹா... இதுவல்லவோ எதிர்ப் பாட்டு...!

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு பேரும்,போதும் நிப்பாட்டுங்க என்று பையனோட அம்மா காதை மூடிக்கொண்டதாக தகவல் :)

   Delete
 3. மைசூர்பாகு இடத்தை நூடுல்ஸ் பிடிச்சிடிச்சே!!!

  ReplyDelete
  Replies
  1. பய புள்ளைக்கு சாப்பிடுறதுதானே ஞாபகத்துக்கு வரும் ?

   Delete
 4. நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி.... நல்லாத்தான் யோசிக்கிறான் பயபுள்ள! :)

  ReplyDelete
  Replies
  1. நூடுல்ஸ் பாக்கெட்டை பிரிக்காமலே ,கையிலேயே நொறுக்குவது அவன் பழக்கமாச்சே :)

   Delete
 5. கில்லர்ஐி உம் கவிஞரே!
  பாட்டில கோடரி என்றால்
  எதிர்ப் பாட்டில சம்மட்டியா
  பிற்பாட்டில மண்வெட்டியா

  மதுரையில் தங்களச் சந்திக்க முடிந்தால் மிக்க மகிழ்ச்சி!
  Departure Date : Monday 02 February 2015
  Departure Time : 12.30 Colombo - Sri Lanka
  Arrival Time : 13.25 Mudurai - India
  Flight Num : Mihin Lanka - MJ307

  ReplyDelete
  Replies
  1. நண்பர்கள் எங்கள் நட்பு படுகெட்டி ,இடையிலே எதற்கு மண்வெட்டி ?

   தகவல் தந்ததற்கு மிக்க நன்றி ,சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் !

   Delete
 6. ஹஹஹஹ் அனைத்தும்.....நூடுல்ஸ் விளம்பர வார்த்தைகளாகி விடப் போகின்றது ஜி! காப்புரிமை போட்டுக்கங்க....கில்லர்ஜி யின் வலைத்தளப் பெயர்....அவர் எங்க போனாரு?  ReplyDelete
  Replies
  1. வந்துட்டோம்முள்ள...

   Delete
  2. கில்லர்ஜியின் நினைப்பு எப்போதும் எனக்கு இருப்பதால் தானே எனக்கு இந்த ஞானோதயம்?

   Delete
  3. என்ன கில்லர்ஜி,நான் சொன்னது சரிதானே ?

   Delete
 7. 1. ஹா...ஹா...ஹா... இதுகூட நல்லாயிருக்கே...

  2. ஹா...ஹா...ஹா... புதுமணத் தம்பதியர் தூங்காததற்கு இப்படிக் கூட ஒரு காரணமா!

  //அரட்டை அடிச்சாலும் தூக்கம் போகும். குறட்டை விட்டாலும் தூக்கம் போகும்!//

  ஹா...ஹா...ஹா...

  3. ஹா...ஹா...ஹா... பாக்கெட்ல பார்க்கச் சொல்லுங்க.. பர்ஸ் பத்திரமா இருக்கான்னு!

  4. அது சரி!

  ReplyDelete
  Replies
  1. 1.சம்மட்டி அடியா மனசுலே இறங்குதா :)
   2.ராத்திரி பூரா அரட்டை அடிக்க முடியாதே :)
   3.அதுலே இருந்தா சோடா எதுக்கு கேட்கப் போறார் :)
   4.பின்னின் வருத்தம் பின்னுக்கு போயிடுச்சா :)

   Delete
 8. ஆமா....,நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி எதுக்கு....???????????

  ReplyDelete
  Replies
  1. துணியை துவைக்கிற மாதிரி பாக்கெட் நூடுல்ஸை நாலு அடி அடித்தாலே போதுமே:)

   Delete
 9. முதிர் இளைஞன் என்ன வேலை என்று சொல்லவில்லையே. பல நாட்கள் விடுப்புக்குப் பின் மீண்டும் ஆஜர்.

  ReplyDelete
  Replies
  1. சர்டிபிகேட்டை எல்லாம் வேலை விண்ணப்பத்துடன் ஸ்டேப்லர் பண்ற வேலை மட்டும்தான் :)
   ஆஜருக்கு நன்றி அய்யா !

   Delete
 10. 01. பகவான்ஜி நம்மளையும் சந்திக்கு இழுப்பது போல் இருக்கிறதே....
  02. குறட்டைத்தொல்லைனு முன்னாடியே சொல்லவேண்டியதுதானே நாம் என்னமே, ஏதோனு, பயந்திட்டேன்.
  03. அடிச்சா ? மறுபடியும் மயக்கமாயிடுவானே...
  04. ஆபீஸ் வேலை செய்யும்போது அடித்தது போல் இருக்கிறதே...

  தமிழ் மணம் – நவரத்தினம்

  ReplyDelete
  Replies
  1. 1.அந்த கவி வரிக்கு சொந்தக்காரரே சும்மா இருக்கார் ,உன்கேளுக்கேன் வருத்தம் :)
   2.பயப் பட என்ன இருக்கு :)
   3.இனி அங்கேயே விழமாட்டான் :)
   4.அடிக்காத நாளில்லை ,பின்னை சொன்னேன் :)
   அழகோ அழகு ,நவரத்தினம் !

   Delete
 11. 1. ஆமாம் பூக்களைப் பறிக்க கோடாலி எதுக்கு - இதுக்கு நீங்க கில்லர்ஜியிடம் அனுமதி வாங்கிட்டீங்களா?
  2. குறட்டை சத்தம்னு சொல்லி சைவ ஜோக்காக மாத்திட்டீங்களே?
  3. அந்த கூட்டதுலே நீங்களும் இருந்தீங்களாமே? அப்படியா!!!
  4. அருமையான கவிதை

  ReplyDelete
  Replies
  1. 1.நூடுல்ஸ் சாப்பிடவுவா :)
   2.பல்பு வாங்கிட்டீங்களா :)
   3.சோடாவுக்கு தவித்ததே நான்தானே :)
   4.அந்த பின் நெஞ்சிலே குத்திடுச்சோ :)

   Delete
 12. நூடூல்ஸ் ஜோக் சூப்பர்! மற்றவையும் சிறப்பே! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. நூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கிறதே ,எப்படி :)

   Delete
 13. அனைத்தும் அருமை அண்ணா !!

  தம +

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நன்றி திருமுருகன் ஜி :)

   Delete
 14. என்னமோ ஏதோனு பதர வச்சிட்டீங்களே இளம்(...?) உள்ளங்களை?தம.+1

  ReplyDelete
  Replies
  1. அவங்க பதறட்டும், நீங்க ஏன் பதறணும் :)

   Delete
 15. அந்த மாதிரி பல்லை உடைக்கும் நூடுல்ஸ் எங்கே கிடைக்கும் என்று சொன்னால் மருமகள்கள் சந்தோஷப் படுவார்கள்!
  ட.ம.+1

  ReplyDelete
  Replies
  1. மாமியார்கள் சாப்பிட முடியாமல் போகணும் அதுதானே மருமகள்கள் எதிர்ப்பார்ப்பது ?

   Delete