5 January 2015

தாலியைக் கழற்றினா கணவன் ஆயுள் குறையுமா ?

           ''என்னங்க ,தூங்கும்போது உறுத்துதுன்னு தானே  தாலியைக் கழட்டி வைக்கிறேன் ,அதுக்கென்ன இப்போ ?''
            '' ஆயுள் குறைஞ்சுடுமோ  எனக்கு மனசு உறுத்துதே !''


சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...

அம்மா அப்பாவைவிட அதிகம் பிடித்தது ?

                ''என் பிள்ளைக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தர்றதை குறைச்சுக்கணும்னு ஏன் சொல்றே ?''
                ''உனக்கு அம்மா பிடிக்குமா ,அப்பா பிடிக்குமான்னு கேட்டா ,ஐஸ் கிரீம்தான் பிடிக்கும்னு சொல்றானே !''இதைத்தான் materialistic world என்பது.
ரெண்டு பேரும் வேலைக்கு போய்விட்டால், fridge-ல் இருப்பதோடும் TV-யோடும் வாழும் பிள்ளைகள் வாழ்க்கையில் வேறு என்னத்த சொல்லமுடியும்
ReplyDelete

Replies


 1. எந்திரமய வாழ்க்கைக்கு விபரீத உதாரணமாய் டாக்டர் தம்பதிகளின் மகளான ஆரூசி கொலையானதை சொல்லலாம் .இல்லையா அஜீஸ் ஜி ?
  நன்றிஅதிகம் பேசுறது கணவனா ,மனைவியா ?

           ''செல்போன்லே  அளவுக்கு அதிகமா பேசுறதை நிறுத்து !''
             ''இப்ப நீங்கதான் அளவுக்கு அதிகமா பேசுறீங்க ,போதும் நிறுத்துங்க !''
2013இதே நாளில் ,ஜோக்காளியில்....


 1. நீரோ மன்னனின் வாரிசுப் போலிருக்கு 'நம்ம தலைவர் '!

             ''பாலின பலாத்கார விவகாரத்தில் நாடே கொதிச்சுக் கிட்டு இருக்கு ,நம்ம தலைவர் என்னபண்ணிக்கிட்டு இருக்கார் ?''
                 ''பாலின பலகாரம் சாப்பிட்டுக்கிட்டு இருக்காராம் !''
 2. எந்த காரியத்தையும் மனம் லயித்து செய்யணும் !


  விருந்து சாப்பிடும் போது மருந்தை நினைக்காதே !
  மருந்து சாப்பிடும் போது குரங்கை  நினைக்காதே !
  குரங்கு வெளியில் இருந்தால் விரட்டி விடலாம் 
  மனதில் இருந்தால் விரட்டுவதும் ,தடுப்பதும் நம் கையில்தான் !

                            

32 comments:


 1. ஆயுள் குறைஞ்சால் நல்லதுதானே இது கூட தெரியாத அப்பாவியாய் இருக்கானே இவன்

  ReplyDelete
  Replies
  1. பூரிக்கட்டை அடியை இன்னும் அவர் வாங்கவில்லைப் போலிருக்கு ,அதான் இப்படி அப்பாவியாய் இருக்கிறார் :)

   Delete
 2. வணக்கம்
  தாலிக்குள் அவளவு விசயமா....
  இந்தகால பிள்ளைகள் சாப்பாடு என்றால் பெற்றவங்களை கூட மறந்திடுவங்கள்
  அருமையாக உள்ளது இரசித்தேன்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பெண்டாட்டி தாலியைக் கழற்றும் போதெல்லாம் செத்து செத்து பிழைப்பார் போலிருக்கே :)

   Delete
 3. மனைவிக்கு ஒரு வித உறுத்தல் என்றால் கணவனுக்கு அது வேறு வித உறுத்தலாக அல்லவா இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தாலியை ஒற்றிக் கொண்டு கும்பிட்ட காலத்திலேயே அவர் இன்னும் இருக்கிறார் :)

   Delete
 4. அந்த கணவர் சரியான பயந்தாங்கோலியா இருபார்போல:)

  ReplyDelete
  Replies
  1. தாலிக்கு மரியாதை இவ்வளவுதானா என்று பயந்துவிட்டார் :)

   Delete
 5. Replies
  1. நீங்கதான் எதையுமே மனம் லயித்து செய்கிறவராச்சே :)

   Delete
 6. இப்போதெல்லாம் சின்னஜ் சிறுசுங்க தாலி கட்டின அடுத்த நிமிஷமே கழட்டி வைச்சுடுதுங்களே ஜி!

  அனைத்தையும் ரசித்தோம். கடைசி சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. ஒருகாலத்தில் தாலிக்கு இருந்த மரியாதையே வேற ,தாலி சென்டிமென்ட்டில்
   எத்தனை படங்கள் பார்த்தோமே :)

   Delete
 7. சில பிரச்சனைகளால் இரண்டு நாட்களாக இங்கு வரமுடியவில்லை . இப்போதுதான் தெரிகிறது . வந்திருந்தால் , பிரச்சனை என் பக்கம் வந்திருக்காதென்று !

  அருமை நகைச்சுவை மன்னரே !!

  ReplyDelete
  Replies
  1. அதெப்படி என்று சொல்லவில்லையே ,தாலிதான் தடங்கல் பண்ணிடுச்சோ :)

   Delete
 8. அனைத்தும் படித்து சிரித்தேன

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் சிரிக்கிற மாதிரி ஆகிப் போச்சே :)

   Delete
 9. ஆ.....கனவனின் உயிர் தாலி கயிற்றில் என்றால்..மனைவியின் உயிர் எதில் இருக்கிறது பகவானே.......!!!!!

  ReplyDelete
  Replies
  1. கணவனின் atm கார்டில் இருப்பதாக தகவல் :)

   Delete
 10. /தாலியைக் கழற்றினா கணவன் ஆயுள் குறையுமா ? / ஆண்களுக்கான தாலி செண்டிமெண்ட்?
  /

  விருந்து சாப்பிடும் போது மருந்தை நினைக்காதே !
  மருந்து சாப்பிடும் போது குரங்கை நினைக்காதே !
  குரங்கு வெளியில் இருந்தால் விரட்டி விடலாம்
  மனதில் இருந்தால் விரட்டுவதும் ,தடுப்பதும் நம் கையில்தான் !/ அருமையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. ஒரேயடியா தாலி இறங்கினா சாவு ,தினசரி ராத்திரி செத்து பிழைக்கஅவராலே முடியலே :)

   ஆடுற ராமான்னு இந்த குரங்கை ஆட்டிவைக்க முடியுதா :)

   Delete
 11. இதற்கெல்லாமா இப்போது கணவன்மாகள் கேள்வி கேட்கிறார்கள்? இது சகஜமாச்சே!

  ஐஸ்க்ரீம் மாதிரி அவன்கிட்ட பேசினால் அப்பாவைப் பிடிக்கும் என்பானோ என்னவோ!

  ஹா...ஹா...ஹா... அட்வைஸா? அதானே அதிகம் கிடைக்குது?

  பாலின பலகாரம்?

  மனம் ஒரு குரங்குதானே!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி மைதிலி சொன்னமாதிரி அவர் பயந்தாங்கோலியா இருப்பாரோ :)
   வாங்கிக் கொடுத்து கேட்டா சொல்வான் :)
   அட்வைஸ் இல்லே ,அதிகாரம் :)
   மில்க் சுவீட்ச்ன்னா புரியும் :)
   ஒரு குரங்குன்னா பரவாயில்லையே:)

   Delete
 12. 01. தாலியைத்தானே கழட்டி விட்டால் புருஷனை கழட்டி விடலையே...
  02. திரு. சைதை அஜீஸ் அவர்கள் சொன்னது 100க்கு100 வேதனையான உண்மை.
  03. அதானே... இவண் தொனத்தொனனு பேசினா, அவள் எப்படி பேசமுடியும்
  04. பலகாரத்துல கொஞ்சம் நெய் விட்டுக்கிறச்சொல்லுங்கோ...
  05. மனம் ஒரு மங்கி என்று சும்மாவா சொன்னாங்க...

  தமிழ் மணம் - 9

  ReplyDelete
  Replies
  1. 1.அதுவும் நடந்துவிடகூடாதுன்னு தான் அவர் ஆசை :)
   2.குழந்தையாய் இருக்கும் போதே எந்திரமய வாழ்க்கை :)
   3.பேச்சையும் ஒன வே ஆக்கிடலாமா :)
   4.கொழுப்பில்லே கூடும் :)
   5.அதுவும் இஞ்சி தின்ன மங்கி :)

   Delete
 13. படித்தேன்
  ரசித்தேன்
  தம 10

  ReplyDelete
  Replies
  1. உங்க ரெண்டு தேனுக்கும் நன்றி !

   Delete
 14. ஹா... ஹா...
  ரசிக்க வைத்தன...

  ReplyDelete
  Replies
  1. அது என் பாக்கியம் :)

   Delete
 15. ஹாஹாஹா! சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றிக்கு நன்றி :)

   Delete
 16. அவர் பதவிக்கு அல்வா கொடுக்க போறாங்க அவருக்கு பால் பலகாரமா>...........
  சூப்பர்ஜி
  தாலி அவருக்கு வேலியோ ?

  அதுக்குமேல கணவர் அதிகமா பேசினா ரிங் டோன் அப்புறம் சங்கு டோனாகா வைக்க வேண்டிவருமோ ? தம 11


  ReplyDelete
  Replies
  1. அதுவும் ஆவின் பால் பலகாரம் :)
   தாலியை கழட்டிட்டாஆள் காலியோ :)
   நல்ல ஐடியா ,வேண்டாதவங்களுக்கு மட்டும் சங்கு சத்தம் செட் பண்ணிடலாமே :)

   Delete