6 January 2015

மனைவிக்கு பின் கணவன் இருந்தால் ?

  வீடு பிடிக்காட்டி இப்படியுமா சொல்றது ?           
               ''நீங்க சொல்ற வாடகையிலே  இந்த  வீடுதான் கிடைக்கும்  ,உங்களுக்கு  பிடிக்குதா?''

        ''வீடா இது? பேசாம to let க்கு   பதிலா  toilet  னு போர்டுலே எழுதி போடச் சொல்லுங்க !''   இது கிட்டப் பார்வையா ,கெட்டப் பார்வையா ?

                 ''டெஸ்ட் எதுவும் பண்ணாமலே எனக்கு கிட்டப் பார்வை நல்லா இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க  டாக்டர் ?''
                ''நர்ஸ் போற பக்கமெல்லாம்  உங்க பார்வை போறதை வைச்சுத்தான்!''
சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...


சிஸ்டரை பார்த்தால் உங்களுக்கு ஏன்யா?
(ஹீஹீ... நான் ரொம்ப நல்லவன்)
ReplyDelete

 1. தன்னை யாருமே பார்க்க மாட்டேன் என்கிறார்களேன்னு யாரும் வருத்தப்படக்கூடாது என்பதற்காக  நான் பார்க்கிறது வழக்கம் ...
  உலகத்திலே நான் ஒருத்தன்தான் நல்லவன்னு நினைச்சுக் கிட்டிருந்தேன் ,துணைக்கு நீங்களும் வந்ததிற்கு ரொம்ப நன்றி !

 2. போதையில் மிதக்கலாம் (?) தியானத்தில் மிதக்க முடியுமா ?

                 ''இன்ஸ்பெக்டர் சார் , என் வீட்டுக்காரரை காணலே ,கண்டுபிடிச்சு கொடுங்கன்னு மனு கொடுத்தா ஏன் வாங்க மறுக்கிறீங்க ?''
              ''மொட்டை மாடியில் தியானம் பண்ணிக்கிட்டு இருந்தவர் ,அந்தரத்தில் பறந்து  போனதாச்  சொல்றீங்களே !'' 

 3. ஹா...ஹா....ஹி....ஹி....
  அதுசரி அய்யா....இந்த காலத்து அம்மணிகள் வீட்டுக்காரு காணவில்லை என்றால் சாமிக்கு இரண்டு தேங்காய் உடைப்பார்கள்..........


  Replies


  1. போனதுக்கு ரெண்டு தேங்காய்னா,திரும்ப வரக் கூடாதுன்னு நாலு தேங்காய் உடைப்பார்கள் !
   நன்றி


  2013 இதே நாளில் ,ஜோக்காளியில்....

 4. செத்த பிறகாவது நிம்மதியா இருக்க விடுங்க!
 5.              ''தற்கொலைப் பண்ணிகிட்ட சாந்தியோட புருசன் லெட்டர்லே என்ன எழுதி இருக்கிறார் ?''
              ''என் ஆத்மாகூட  சாந்தி அடையணும்னு  யாரும் வேண்டிக்காதீங்கன்னு தான் !''


 6. போட்டோவில்,மனைவிக்கு பின் கணவன் ...  தம்பதிகள் போட்டோவிற்கு 
  'டைட்டில் 'வைக்கும் போட்டி ...
  பரிசை வென்றது ..
  'புயலுக்கு  பின் அமைதி ' 


32 comments:

 1. 01. இதுகூட நல்லதுதானே ஒரே இடத்துலே ரெண்டும் முடிச்சிரலாம்.

  02. சிஸ்டர் எலக்ட்ரிசியனுக்கு டெஸ்டர் னஉ சொல்றது மாதிரி இருக்கு.

  03. மடியில எதையாவது வச்சா ? உடனே உடனடி நடவடிக்கை எடுப்பாரே.... நம்ம இன்ஸ்.

  04. சாந்தியோட வாழ்ந்தது சந்தி சிரித்த வாழ்க்கையோ....

  05. உண்மைதான்.

  த.ம.இ. and வா.ஒ.

  ReplyDelete
  Replies
  1. 1.அவுட் புட்டுக்கு சரி ,இன் 'புட்'டுக்கு எங்கே போறது :)
   2.எப்படியோ சிம்பிளா டெஸ்ட் முடிஞ்சு போச்சு :)
   3.நல்லாவே எடை போட்டு வச்சுருக்கீங்க :)
   4.வாந்தி எடுக்க வைக்க முடியலையோ :)
   5.ஏன் அமைதிக்கு பின் புயல்னு சொல்லக் கூடாதோ :)
   அதென்ன ,ஓ?

   Delete
  2. வாக்கு ஒன்று

   Delete
  3. ஒன்று என்றாலும் நன்று !

   Delete
 2. சாந்தியோட புருஷன் எந்த அளவிற்கு துன்பப்பட்டிருப்பார்ன்னு புரியுது.
  ஐயோ,சூப்பர் டைட்டில். எப் இந்த பரிசை நீங்கள் வென்றீர்கள் ஜி?

  ReplyDelete
  Replies
  1. இங்கேயே நரகத்தைப் பார்த்து விட்டதால் இனி அவருக்கு சொர்க்கம்தான்:)
   கொடுத்ததே நீங்கதானே :)

   Delete
 3. நல்ல வேலை. வீடு பிடிக்கவி்ல்லை என்பதற்காக பேய் வீடு என்று சொல்லாமல் சென்றாரே....
  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. வீடு பிடிக்கலைன்னா சத்தமில்லாமல் போய் விடு என்று மிரட்டி இருப்பார்கள் ,அதனால் அப்படி சொல்லாமல் விட்டார் :)

   Delete
 4. Replies
  1. அமைதி என்றால் பிடிக்கும் ,அதுவும் புயலுக்கு பின் அமைதி என்றால் ?

   Delete
 5. வணக்கம்
  முதலாவது மிகவும் கிற்....
  வைத்தியசலைக்கு போனால் இனி அடக்கமாக இருக்க வேண்டும்.போல...சும்மா பார்த்தாலே தப்பாக வரும் போல..
  அனைத்தையும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மேல் உச்சி மண்டையில் கிர் என்றதோ :)
   அடக்கம் வந்தாலே ஆஸ்பத்திரிக்கு போக வேண்டி இருக்காதே :)

   Delete
 6. Replies
  1. ????மது ஜி ,தானாக விழாது த ம :)

   Delete
 7. Replies
  1. நீங்கள் போட்டோவில் முன்னா ,பின்னா ,ஜி :)

   Delete
 8. பெண்களைக் கலாய்த்து எழுதினால் சிலருக்குப் பிடிப்பதில்லையே.

  ReplyDelete
  Replies
  1. இதையெல்லாம் கணக்கிலே எடுத்துக் கொள்ளாத அளவிற்கு பக்குவம் அடைந்து விட்டார்கள் பெண்கள் :)

   Delete
 9. 1. 2 இன் 1...!! ஹா....ஹா...

  2. கெட்ட பார்வைதான். ஹா...ஹா....

  ReplyDelete
  Replies
  1. 1.இப்படி நேர்மறையாய் அவருக்கு எடுத்துக்க தெரியலையே :)
   2.கெட்டப் பார்வையிலேயே செட்டப் பண்ண நினைப்பாரோ :)

   Delete
 10. Replies
  1. நம் உடலும் உயிருக்கு வாடகை வீடுதானே ..ஹி ஹி...தத்துவம் :)

   Delete
 11. Replies
  1. என்ன பார்வை உந்தன் பார்வை என்று பாடுவது இப்போ ஒத்து வராதுன்னு அவர்கிட்டே நீங்கதான் சொல்லணும் அய்யா :)

   Delete
 12. அருமையான நகைச்சுவைகள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சாந்தி கிடைக்காதவரையும் ரசித்தீர்களா :)

   Delete
 13. கிட்டப்பார்வை எட்டப்பார்வை நகைச்சுவையை அதிகம் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. saithai ajees ji கமெண்டை ரசீர்த்தீர்களா :)

   Delete
 14. Replies
  1. தியானத்தில் மிதப்பதையும் ரசித்தீ ர்களா :)

   Delete
 15. மனைவிக்குப் பின் கணவன்?!! ஹஹ்ஹ எப்பவுமே அப்படித்தானேங்கோ! அப்ப நீங்க முன்னாடியா....அதான் ஜோக்காளி ஜோக்கடிச்சுக்கிட்டு வலம் வர்ராரு.....பரவாயில்லைங்க ஜி நீங்க கொடுத்து வைத்தவர்தான்....ஹஹஹ்!

  சாந்தி புருஷனுக்குக் கூட சாந்தி கிடைக்கலைன்னா....என்னத்த சொல்றது....ஜி ஹ்ஹஹ்

  கிட்டப்பார்வை...கெட்டப்பார்வை ஹஹஹ் சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. முன்னால்,பின்னால் நிற்பது இருக்கட்டும் ,மனைவிக்கு 'இடம் 'கொடுக்கலாமா :)

   Delete