7 January 2015

நடிகை ஸ்ரீதேவியை அழகியென்று கூறக் காரணம் ?


--------------------------------------------------------------------------------------------
தரகர் சொன்னதும் பொய்யே பொய்யே !
                ''பொண்ணுக்கு  காது சரியா கேட்காதுன்னு 
     ஏன் முன்னாடியே சொல்லலே?'' 
                ''எள்ளுன்னா எண்ணெயா நிற்பானு  சொன்னேனே!''

சென்ற வருடம் ,இதே நாளில் ஜோக்காளியில்...
நடிகையின் சரித்திரம் தெரியும் ,இவரைப் பற்றி ...?
                        '' விண் வெளிக்குப் போன முதல் வீரர் யூரி கக்காரின் பெயர் ஞாபகம் வர 'க்ளு 'கேட்டா 'டாய்லெட்'ன்னு ஏன் சொன்னே ?''
              ''யூரினுக்கும் ,கக்காவுக்கும் அங்கேதானே போகணும் ?''


              


நடிகைஸ்ரீதேவியை அழகியென்று கூறக் காரணம் ?

முந்தைய தலைமுறையினருக்கு கனவுக் கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவியை  ...
அழகி  என்று சொன்னால் யாருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்கமுடியாது  ...
இந்தியாவின்  கனவுக்கன்னியான அவரைப் பற்றி ...
நம் இந்திய எந்த மாநில கல்விக்கூட புத்தகங்களிலும் குறிப்பு இருக்கமுடியாது  ...
தமிழின விரோத சிங்கள அரசு ...
சிங்கள மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள ஏழாம் தரத்திற்கான பாடப் புத்தகத்தில் ...
'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள் 'என்று குறிப்பிட்டு உள்ளதாம் ...
இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது ...
அழகு என்பது ஜாதி ,மதம்,இனம் .மொழி கடந்து ரசிக்கப் படுவது என்றாலும் ...
இதை இந்த நேரத்தில் சிங்கள அரசு பதின்ம வயதினருக்கான பாடப் புத்தகத்தில் ... சொல்லவேண்டிய காரணம் என்னவாக இருக்கும் ?
அதுவும் தமிழச்சி என்று இனத்தைக் கூறிக் கொக்கரிப்பதாகவே தெரிகிறது !

இந்த பதிவைப் பற்றி நம்ப நம்பள்கி அவர்கள் கிண்டிக் கிழங்கு எடுத்ததைப் படித்து ரசிக்க ....http://www.jokkaali.in/2014/01/blog-post_749.html
வேகநரி14 January 2014 at 19:06
//அப்ப இலங்கையில் சிங்களப் பகுதிகளில் பிறந்த தமிழர்களை (யாழ்ப்பணம் மாதிரி தமிழர்கள் பகுதி இல்லாமல்) சிங்களமும் பேசினால் அவார்களை சிங்களவர்கள் என்று கூறலாமா?//
ஆஹா! ஸ்ரீதேவியை பற்றிய பின்னணி இப்படியிருக்கா! நன்றி நம்பள்கி.
இப்போ தமிழர்கள் அழகானவங்க கிடையாது என்று சிங்கல மாணவங்களுக்கு பாடம் எடுப்பதிற்காக இலங்கை அரசு ஸ்ரீதேவியை பாடபுத்தகத்திலே கொண்டு வந்திருந்தாலும், அல்லது இலங்கை ஜர்னலிஸ்ட் ஒருவர் தமிழகத்திலே சிங்கலவங்களை monster ளாக காட்டுவற்க்காக எழுதிய கற்பனை தயாரிப்பு செய்தியாக இருந்தாலும், இவங்க இருவருமே எடுத்து கொண்ட ஸ்ரீதேவி இதற்கு பொருத்தமனவர் கிடையாது.
எல்லோருக்கும் தெரிந்த ஹன்சிகாவை இவர்கள் எடுத்திருக்கலாமே.

இனம் கடந்த திருமணங்கள் வரவேற்கப்படவேண்டும் என்ற Bagawanjee KA கருத்து சிறந்தது.
ReplyDelete

Replies


 1. இங்கே பொறந்து நம் கண் எதிரே வளர்ந்த ஸ்ரீதேவியைப் பற்றியே தெரியவில்லை ,ஹன்சிகா என்பதால் நம்பள்கிக்கு தெரிந்து இருக்க வாய்ப்புண்டு !
  இனம் கடந்து திருமணம் பண்ணிக்க எனக்கும் ஆசைதான் ...மனைவிதான் ?.....அவ்வ்வ்வ் !
  நன்றி
  Delete
 2. //இனம் கடந்து திருமணம் பண்ணிக்க எனக்கும் ஆசைதான் ...மனைவிதான் ?.....அவ்வ்வ்வ் !//

  மனைவி இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மற்றவங்களையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
  Delete
 3. உண்மையில் நீங்க வேக நரிதான், நேற்று இரவு வேறொரு தளத்தில் நான் போட்ட கருத்தை அதிகாலையில் படித்துவிட்டு எனக்கும் வாழ்த்து கூறியதற்கு நன்றி !
  அங்கே அடிச்சா இங்கே வலிக்கலை ,இனிக்குது !
  Delete

 4. 2013 இதே நாளில் ,ஜோக்காளியில்....

  நாட்டுலே இப்படியும் சில ஆராய்ச்சியாளர்களும் இருக்காங்க !பாம்புச் சட்டை  என்ன பிராண்ட் ,என்ன சைஸ் என்று 
ஆராய்பவன்தான் ...
மயிர் பிளக்கும்  ஆராய்ச்சியாளன் !


41 comments:

 1. நான் நினைத்தது இந்த பதிவு தமிழ் மணத்தில் வர வேண்டுமென்று !அய்யகோ ,என் செய்வேன் ?திரை மணத்திற்கு தாவி விட்டதே :)

  ReplyDelete
  Replies
  1. என்னே!!! ஸ்ரீதேவியின் மகிமை:)))

   Delete
  2. பதிவு போடும்போது இரவு மிகவும் தாமதமாகி விட்டது ,ஸ்ரீ தேவி நினைப்பில் ,தமிழ் மணத்தில் இணைக்கும் போது கோட்டை விட்டுட்டேன் :)

   Delete
 2. உங்கள் நகைசுவையை மீண்டும் ரசித்தேன்.
  நம்பள்கியுடன் சேர்த்து என்னையும் போட்டிருக்கிறீர்கள். நன்றி.

  திரைமணத்தில் இல்லை தமிழ்மணத்தில் நேரடியா எடுத்து உங்க பதிவை படித்தேன் இப்போ.

  ReplyDelete
  Replies
  1. படித்து இருக்கலாம் ,மூலப் பதிவு திரைமணத்தில் இருப்பதால் ஏழு வாக்குகள் விழுந்தாலும் ,வாசகர் பரிந்துரையின் கீழ் இது வராது ,அதுதான் என் சிறிய வருத்தம் :)

   Delete
 3. பொண்ணுக்கு காது கேக்கலைன்னா - "எள்ளுன்னா எண்ணெயா நிற்பாளா" அடக் கடவுளே இதுக்கு இப்படியெல்லாம் அர்த்தம் கண்டுபிடிக்கிறீங்களே!!!

  சிங்கள அரசுக்கு, தமிழ் பெண்கள் அழகாக இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போல, அதனால தான் "//தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள்//" என்று சொல்லியிருக்கிறார்கள்.
  நீங்கள் கேட்பது போல் . ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு இது தேவையா? பிஞ்சிலேயே பழுப்பது எப்படி என்று அவர்களின் கல்வித்துறை சொல்லிக்கொடுக்கிறது போல.

  ReplyDelete
  Replies
  1. அ'ரு''த்தம் பொருத்தம் தானே :)
   அழகு என்பது இனத்தைப் பார்த்து வருவதில்லையே :)கருப்பினில் கூட வெல்லக்கட்டிகளும் இருக்கத்தானே செய்கிறது ..ஹிஹி!

   Delete
 4. ஓஹோ! இந்த தரகர் சொன்னதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ!!! இனி உஷாரா இருக்கணும்:))

  ReplyDelete
  Replies
  1. சமயோசிதமாய் பேசும் கலையை தரகர்களிடம் இருந்துதான் நாம் கற்றுக் கொள்ளணும்:)

   Delete
 5. [[[நான் நினைத்தது இந்த பதிவு தமிழ் மணத்தில் வர வேண்டுமென்று !அய்யகோ ,என் செய்வேன் ?திரை மணத்திற்கு தாவி விட்டதே :)]]

  நடிகை + ஸ்ரீதேவி மாதிரி [capturing] சொற்கள் இருந்தால் நீங்கள் சினிமா என்று போடா விட்டாலும் திரைமனத்திற்கு சென்று விடும். இதை தடுக்க வடக்கத்திகாரன் மாதிரி சிறிதேவி என்று சொல்லலாம். அவர்களுக்கு ஸ்ரீகாந்த் என்று சொல்லவராது. கிரிக்கெட் வர்ணனையில் நம்ம ஸ்ரீகாந்தை சிறிகாந்த் என்று சொல்லி கொல்லுவார்கள் (ஆங்கிலம், ஹிந்தி வர்ணனை இரண்டிலும்) ஸ்கூல் என்று சொல்ல வராது; இஸ்கூல் என்று தான் சொல்வார்கள். ஸ்டேஷன் என்று வராது; இஸ்டேஷன் என்று தான் வரும்.
  +1

  ReplyDelete
  Replies
  1. இதே தலைப்பைக்கூட வார்த்தைகள் நடுவே இடைவெளியிட்டு கணினியை ஏமாற்றி பதிவைப் போடுவதுதான் என் பாணி ,இரவில் நேரம் இல்லாததால் செய்ய முடியாமல் போனது :)

   Delete
 6. ஹா...ஹா...ஹா... எண்ணெய்னு சொன்னா என்னவா நிப்பா?

  ஹா....ஹா.....ஹா.... என்ன ஒரு சுலபமான வழி!

  ஸ்ரீதேவி பற்றி அப்படி வேறு வந்ததா? பொறாமை அவிங்களுக்கு!

  ஹா.....ஹா.....ஹா...

  ReplyDelete
  Replies
  1. அனேகமா வழுக்கி விழுவா :)

   நாளை இலங்கையில் நடைபெறும் தேர்தலில் ராஜபக்சேயை ஸ்ரீதேவி கூட காப்பாற்றமுடியாது போலிருக்கே :)

   Delete
 7. மயிர் பிளக்கும் ஆராய்ச்சியாளன்! - :))))

  ஸ்ரீராம் சாரின் கேள்வி-யையும் ரசித்தேன்...

  த.ம. 4

  ReplyDelete
  Replies
  1. அவர் கேள்வியை நீங்களும் வழிமொழிந்ததற்கு நன்றி :)

   Delete
 8. இதுவல்லவோ ஆராய்ச்சி...!

  இந்தப் பதிவின் மூலம் உங்களின் வருத்தம் பலருக்கும் புரியுமா...?

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆராய்ச்சியைப் போன்றே சிலநாட்களுக்கு முன் நமது நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானம் இருந்ததாக கண்டுபிடித்து உள்ளார்களே :)

   ஒரே ஒருத்தருக்கு தவிர மற்றவர்களுக்கு புரிந்தால் நல்லதுதான் :)

   Delete
 9. பகவான்ஜியின் கேள்வியே சரியில்லை..அவர் கேள்வி...: "நடிகைஸ்ரீதேவியை அழகியென்று கூறக் காரணம் ?"

  ஒரு புண்ணாக்கு காரணமும் இல்லை; அழகியை அழகி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லவேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. நாம சொல்றது இருக்கட்டும் ,தமிழ் இனத்தைக் கொடுமைப் படுத்திய சிங்கள அரசு சொல்வதற்கு என்ன காரணம் என்பதுதான் என் கண்ணோட்டம் :)

   Delete
 10. மயிர் பிளக்கும் ஆராய்ச்சியாளன்!
  தண்ணீர் சிக்கலைத் தீர்ப்பாரா?

  தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
  http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
  படித்துப் பாருங்களேன்!

  ReplyDelete
  Replies
  1. தண்ணீர் சிக்கலை தீர்ப்பதை விட அவருக்கு முக்கியமான வேலை வேற இருக்கே :)

   Delete
 11. ”நடிகை ஸ்ரீதேவியை அழகியென்று கூறக்காரணம்” ஒரு ஆண்டுக்கு முந்தைய செய்தியா.?

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றது சரிதான் அய்யா ,நாளை அதிபர் தேர்தல் நடப்பதால் ஸ்ரீ தேவியை மறந்து இருப்பார்களே :)

   Delete
  2. ஸ்ரீதேவிக்கு இன்னும் ஒரு ஒரு ஆண்டு வயது கூடிவிட்டது என்பதை தான் ஐயா உங்களுக்கு நினைவுபடுத்துவதாக எனக்கு தோணுது :)

   Delete
  3. வயது எத்தனை கூடினாலும் என்றும் கனவுக் கன்னி தானே :)

   Delete
 12. 01. இந்தப் பழமொழி செவுடுகளுக்காக உருவாக்கினார்கள் 80தை இன்றே அறிந்து கொண்டேன் நண்பரே...

  02. பொருத்தமாகத்தான் இருக்கு.

  03 ஸ்ரீதேவியைப்பத்தி..... பத்தி..... பத்தி.... பத்தி.... பத்தி.....

  04 ஸூப்பர் பாம்பூ

  தமிழ் மணம் – 6

  ReplyDelete
  Replies
  1. 1.என்பதை 80பது என்றும் எழுதலாம் என்பதை நானும் தெரிந்து கொண்டேன் :)
   2பொருத்தம்னு நீங்கதான் சொல்றீங்க ,எல்லாரும் நாறுதுன்னு நினைக்கிறாங்க :)
   3.ஸ்ரீ தேவியை பற்றி இன்னும் பத்தி,பத்தியா நிறைய எழுதணுமா :)
   4.முடிஞ்சா நாமும் பாம்பு சட்டைப் போட்டு பார்த்துக்கலாமா:)

   Delete
 13. கிறுக்குப்பிடித்த சிங்கள அரசு தமிழரை நாசப்படுத்தவேண்டும் என்றுதான் இப்படியொரு கேடுகெட்ட வேலையைச்செய்திருக்கும் . இன்னும் சொல்லவேண்டிய வார்த்தைகள் தாராளமாய் வந்தாலும் , ஜோக்காளியை பத்திரகாளியாக்க வேண்டாமென்பதால் முடித்துக்கொள்கிறேன் .

  வழக்கம்போல் இன்றும் சிரிப்புகள் சிறப்பாய் இருக்கின்றன .

  தம

  ReplyDelete
  Replies
  1. இலங்கையில் நடப்பது ஒரு இனத்துவேச ஆட்சி என்பது இதனாலும் தெரிகிறது !

   Delete
 14. ஜோக்ஸ் எல்லாமே அருமை! ஸ்ரீதேவி பத்தி ஆராய்ச்சியும் அதற்கு வந்த பின்னூட்டங்களும் ரசிக்க வைத்தன!

  ReplyDelete
  Replies
  1. நம்பள்கியின் நீண்ட கருத்துரையை, சுட்டியைக் க்ளிக் செய்து படித்து விட்டீர்கள் போலிருக்கே :)

   Delete
 15. தபாம்பு சட்டை அழகு
  சிங்களக்கொடுமை பாடநூல் மூலமாகவுமா?
  தம 9

  ReplyDelete
  Replies
  1. கொடுமைக்கும் பல வழி:)

   Delete
 16. நாட்டுலே இப்படியும் சில ஆராய்ச்சியாளர்களும் இருக்காங்காங்களா.................

  ReplyDelete
  Replies
  1. புஷ்பக விமானம் தான் உலகின் முதல் விமானம் என்பதும் மயிர் பிளக்கிற ஆராய்ச்சிதானே:)

   Delete
 17. ஹாஹஹஹ்ஹ் நடிகை ஸ்ரீதேவினு தலைப்பு வைச்சா அது திரைமணத்துக்குத்தானே போகும்...ஜி !!!!ஹஹ்ஹஹ்

  நல்ல ஆராய்ச்சிப்பா.....

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான் இன்று அடுத்த பதிவை எச்சரிக்கையுடன் சேர்த்து விட்டேன் :)

   Delete
 18. https://www.youtube.com/watch?v=Q3LYWW92wBA

  புத்தம் புதிய குறும்பட ட்ரைலர் :- Tamil and English love horror comedy action short film trailer

  மேலும் விபரங்களுக்கு Free Short films

  ReplyDelete
  Replies
  1. பார்த்தேன் ,ரசித்தேன் அசோக் குமார் ஜி :)

   Delete
 19. பகவான்ஜி! இந்த புது வருடத்திலாவது ஆளை மாத்து-பா! ஸ்ரீ தேவி போர் அடிக்குது!
  ஸ்ரீ தேவியை கழட்டி வீட்டு வேறு ஏதாவது தேவியை பற்றி பேசுவோமே! அப்ப, மூதேவியை பற்றி பேசுவோமா என்கிற கிரேசி மோகன் டைப் ஜோக் அடிக்கவேண்டாம்!

  ReplyDelete
  Replies
  1. சரி ,நான் ஸ்ரீ தேவியை கழட்டி விட்டுட்டேன் ,ஸ்ரீ தேவி பாகவதத்தை கிழிகிழியென்று கிழிக்க நீங்கள் இருக்கையில் எனக்கென்ன கவலை ?:)

   Delete