5 February 2015

C C T V கேமராவை ' இங்கே ' யுமா வைப்பது :)

             ''தப்பு பண்றவங்களை கடவுள்  நின்று கொல்லும்னு சொல்வதில் அர்த்தமே  இல்லைன்னு ஏன் சொல்றீங்க ?"
            ''கோவிலுக்குள்ளேயும்  CCTV  கேமராவை மாட்டி வைச்சுருக்காங்களே !''


மகன் செய்த தப்பு தாய்க்கு புரியாது !
               ''டாக்டருக்கு உன் பையன் பரவாயில்லையா ,ஏண்டி ?''
    ''பையன் எட்டணாவை விழுங்கிட்டான்னு டாக்டர் கிட்டே போனா, 
அவர் எட்டாயிரம் ரூபாயை விழுங்கிட்டாரே !''

  
இவனுக்கெல்லாம் பிள்ளையை கொடுத்த அந்த ஆண்டவன 
சொல்லனும்...!!!
ReplyDelete

Replies


 1. அதானே ,பிள்ளை பிழைச்சானேன்னு நினைச்சுப் 
 2. பார்க்கலையே !
 3. நான் ஒண்ணுமே முழுங்காம போனதுக்கே சீட்டுக்கு எம்பதாயிரம் முழுங்கிட்டானேன்னு வருத்தப்பட்டாராம்.

  கோபாலன்
  ReplyDelete

  Replies


  1. அரசு கோட்டாவிலேயே படிப்பு செலவு இவ்வளவு அதிகம்ன்னா தனியாருக்கு சொல்லவா வேணும் ?
  2.  வாய்தா கோர்ட்டில் கேட்கலாம் ,வீட்டில் ...?

           ''வக்கீலான உன் வீட்டுக் காரரை  டைவர்ஸ் பண்றீயே ,ஏன் ?''
           ''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''
     

  3. ரீமிக்ஸ் முதலில் செய்தது நாம்தான் !


   பாட்டுதான் வந்தது ,இப்போ படமுமா ரீமிக்ஸ் என்று கேட்க நாதியில்லை  நமக்கு !
   டீ போட தண்ணி பாலிலும்  நாம் தண்ணி சேர்ப்பதால் !22 comments:

 1. 01. நல்லவேளை எட்டணாதான், முழுங்கினான் ஒரு ரூபாய் முழுங்கி இருந்தால் பதினாறாயிரம் பில் போட்ருப்பான் டாக்குடர்ரு....
  02. பழக்கதோஷம் தான்.
  03. ஆஹா வாழ்க்கை இங்கேதான் தொடங்குதோ...

  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. நண்பரே ,இந்த பதிவு முதலில் குறைப் பிரசவமாகி விட்டது ,அதற்குள் நீங்கள் படித்து கருத்தும் சொல்லி ,த ம திரட்டியிலும் தலைப்பு கூட இல்லாமல் இணைந்து விட்டது .நேற்றைய பதிவு தாமத பிரசவம் ,இன்றைய பதிவு அவசரப் பிரசவம் ஆகிவிட்டதால் வருந்துகிறேன் !
   1.டாக்டர் கத்தி வைச்சாலே காசுதானே :)
   2.ஆனால் ,டைவர்ஸ் வரை போயிடுச்சே :)
   3.அதாவது ,'கல'ப்படத்தில் :)

   Delete
 2. மனச்சாட்சி கடவுள் படுத்த படுக்கை ஆகும் போதாவது கொல்லும்...!

  ReplyDelete
  Replies
  1. அப்படியும் தெரியவில்லையே ஜி :)

   Delete
 3. Replies
  1. இரட்டிப்பு நன்றி :)

   Delete
 4. தப்பு செய்கிறவர்களை தெய்வம் நின்று கொல்லும் என்பது வாக்கு. ஆனால் பல இடங்களில் தெய்வம் படுத்துக் கொண்டும் அமர்ந்து கொண்டும் இருப்பதால்தானோ இந்த cctv காமெரா....!
  டைவொர்ஸுக்கும் வாய்தா கேட்காமலா இருப்பார்..கோட்டாவில் டாக்டருக்குப் படித்தவராஅப்படிச்சொல்லவில்லையே.

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலும் நிற்கும் போஸ்தானே:)
   மனைவி வாய்தா கொடுப்பதாக இல்லையே :)
   மெரிட் கோட்டாவில் மலிவாய் படித்தவரைச் சொன்னேன் :)

   Delete
 5. சாமி கண்ணை மறைப்பது மாதிரி...C C T V கேமராவையும் சாமி மறைத்துவிடுவார். இதெல்லாம் சாமிகளுக்கு தெரியாமலா இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவு விழிப்புணர்ச்சியை உண்டாக்கி விட்டது போலிருக்கு ....cctv கேமராவை உடைத்து விட்டு கோவிலில் கொள்ளை என்று tvல் இப்போ நியூஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் :)

   Delete
 6. கடவுள் மேல நம்பிக்கை இல்லாமதான் மனுசன் கேமராவை மாட்டி வைத்தான்.

  கோபப்பட்ட கடவுள் தப்புப் பண்ணினவனை எப்படித் தண்டிப்பார்?

  ReplyDelete
  Replies
  1. தப்பு பண்றவனை தண்டிப்பது இருக்கட்டும் ,கண்டுக்கிட்ட மாதிரியும் தெரியலயே:)

   Delete
 7. நம்மை
  காப்பாற்றும் கடவுளை
  கேமரா
  கண்காணித்து
  காப்பாற்றட்டும்.
  தம+1

  ReplyDelete
  Replies
  1. கடவுளே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியலை ,cctv கேமராவை முக்காடு போட்டு மூடிட்டு , சிலையை கடத்தி விடுகிறார்களே :)

   Delete
 8. எட்டாயிரம் முழுங்கிய டாக்டர் பையனை காப்பாத்தி இருப்பதை நினைச்சு சந்தோஷப்பட வேண்டியதுதான்! சிசிடீவி கேமரா வைக்கிறதோட அல்லாம கேமரா பொருத்தப்பட்டுள்ளது இன்முகத்துடன் இருக்கவும்னு அறிவிப்பும் வைச்சிருக்காங்க கவனிச்சீங்களா?

  ReplyDelete
  Replies
  1. இன்முகத்துடன் இல்லையென்றால் எங்கள் சந்தேக வலைக்குள் சிக்கி விடுவீர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ :)

   Delete
 9. Replies
  1. மிக்க நன்றி ஜி :)

   Delete
 10. வணக்கம்
  இரசிக்கவைக்கும் நகைச்சுவை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஜி :)

   Delete