10 February 2015

விசுவாசமுள்ள 'வீட்டோட' மாப்பிள்ளை :)

---------------------------------------------------------------------------------

   இன்னும் சில மாதங்களில் இது நடக்கும் :)              
                 ''ATM கார்டை காட்டிட்டு  உள்ளே போங்கன்னு  ஏன் சொல்றீங்க ,வாட்ச்மேன் ?''
                 ''வெயிலுக்கு  AC  சுகமா இருக்குன்னு  சும்மாவாச்சும்  சில பேர் உள்ளே   நுழைய  ஆரம்பிச்சிட்டாங்களே !''

பணம் தேவைன்னு இப்படியுமா நடந்துக்கிறது ?

         ''அடகு கடையிலே வந்து ஒரு முழத்துக்கு எவ்வளவு தருவீங்கன்னு கேட்கிறீங்களே ,ஏன் ?''

        ''பொன்னை வைக்கிற இடத்தில் பூவையும் 
வைக்கலாம்னு சொன்னாங்களே !''

இப்படி எல்லோரும் நினைக்க நினைத்தால் ஆளில்லாத வீட்டுக்குள் புகுந்து திருடுபவர்கள் பாடு ரொம்ப கஷ்டமுங்க.

கோபாலன்
ReplyDelete

Replies

 1. அவங்க கஷ்டம் நமக்கெதுக்கு ?அதுதான் பாங்கிலும் ,நிதி நிறுவனங்களிலும் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்களே !
  நன்றி
  Delete
 2. நான் சொல்லவந்தது, பீரோவ ஒடச்சுட்டு செய்ன், வளையலை தேடினா அங்க பூதான் இருக்கும்.

  கோபாலன்

 3. கிடைக்கிற பூவைக் காதில் சுற்றிக்க வேண்டியது தான் ,வேற வழி ?

 4. விசுவாசமுள்ள 'வீட்டோட' மாப்பிள்ளை !

                       ''ஊரே 'மாமதுரை போற்றுவோம் 'ன்னு விழா கொண்டாடிக்கிட்டு இருக்கு !நீ மட்டும் 'மாமா   துரை  போற்றுவோம் 'ன்னு  தனி ஆவர்த்தனம் வாசிக்கிறியே ,ஏன் ?''
                     ''பொண்ணை கொடுத்து ,வீட்டோட மாப்பிள்ளையா ஆக்கிகிட்ட என்னோட மாமா  துரையை  போற்ற வேண்டியது என் கடமையாச்சே !''
 5. (சென்ற வருடம் அரசின் சார்பில்  'மாமதுரை போற்றுவோம் ' என்ற  தலைப்பில் ஒரு வார விழா கொண்டாடியதால்  உண்டான மொக்கை இது :)
                     

 6. மெய் போனாலும் மொய் போகாது !  திருமண ஆல்பத்தைப் புரட்டுகையில் ...
  சிரிப்புடனே காட்சி தரும் பெருசுகளைப் பார்க்கையில் ....
  பாவமாய்த்தான் இருக்கிறது 'போய் விட்டார்களே 'என்று !
  மொய் வைத்தவர்களை மறக்க முடியுமா ?


31 comments:

 1. இன்னும் சில மாதங்களில் இது நடக்கும் :) //

  ஹஹஹ....ஹா..உண்மைதான். அங்கே தானே கரண்டு கட்டாகாம இருக்கு....

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கட்டானாலும் கூலாதானே இருக்கும் :)

   Delete
 2. Replies
  1. கூலான உங்க வோட்டுக்கு நன்றி :)

   Delete
 3. ஹா...ஹா... சென்னைல சில இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் தொடங்கி இருக்கிறார்களாம்! அப்புறம் ATM என்றால் Anju Time Mattum என்று அர்த்தமாமே... அப்படியா!!!

  ஹா...ஹா...ஹா.... இது நல்ல ஜோக்!

  ஹா...ஹா....ஹா... மாமா துறை வாழ்க!

  அடப் பாவமே...

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் துரை, துறை ஆகிவிட்டது! :))))))

   Delete
  2. Anju Time Mattum தான்னு ஆகிப் போச்சு .ஆறாவது தடவையா , காற்று வாங்கப் போனாலும் காசு பிடிக்கத்தான் போறாங்க :)
   கோபாலன்ஜி கருத்தும் நல்ல ஜோக் தான் :)
   மாமனார் வீடும் அவருக்கு வேலை தரும் துறை தானே :)
   மொய் எழுதி மனதில் வாழ்பவர்களை மறக்க முடியுமா :)

   Delete
 4. தமிழ் மணம் - 4
  அப்புறமாக்கா வாறேன்.....

  ReplyDelete
  Replies
  1. பூத் மூடுற முன்னாடி வந்துருங்க :)

   Delete
 5. Replies
  1. அதை நாமும் அமுலாக்கும் நாள் வெகு விரைவில் :)

   Delete
 6. “விசுவாசமுள்ள 'வீட்டோட' மாப்பிள்ளை” ----காலை ஆட்டிக்கிட்டே சாப்பிடலாமே.......!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. கோடிட்ட இடத்தை நீங்களே நிரப்பி விடலாமே :)

   Delete
 7. Replies
  1. உன்னை அறிந்தால் படத்தைப் போலவா :)

   Delete
 8. 01. வாட்சுமேனுக்கு வந்த சோதனையா ?
  02. அடகு கடைகாரர் கோடரியை காண்பிச்சு சொல்லியிருப்பாரே... குணம் இருக்கும் இடத்தில்தான் கோபம் இருக்கும்னு.
  03. நல்லவேளை ஊருக்கே ‘’மாமா’’ துரைனு சொல்லாமல் போனான்.
  04. பரவாயில்லையே பகவான்ஜி படிச்சிட்டு ஓட்டு போடாமல் போறவங்களுக்கு ஏதோ மெசேஜ் கொடுக்குறது மா3 இருக்கே....

  (நல்லவேளை நான் காலையிலேயே ஓட்டு போட்டுட்டுதான் அலுவலகத்துக்கு போனேன்)

  ReplyDelete
  Replies
  1. 1.வாட்ச்மேனும் இல்லைன்னா உள்ளேயே உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க :)
   2.பூவைப் பறிக்க கோடரி எதுக்குன்னு உங்களே மாதிரியே அவரும் கேட்டாராமே :)
   3.அதை டபிள் எம்யேனு சொல்வாங்க :)
   4.மறு மொய் செய்ய முடியலேன்னு தானே வருத்தப்பட்டுகிட்டிருக்கேன் :)

   Delete
 9. Replies
  1. காலை நேரம் நம் எல்லோரும் கிடைப்பது அரிதாகி விட்டது இல்லையா ,நண்பரே :)

   Delete
 10. சூப்பர் மாமனாருக்கு தனியே ஒரு சுப்ரபாதம் எழுதிவச்சிருப்பரோ?
  தம+1
  திருமண ஆல்பம் நிச்சய உண்மை.

  ReplyDelete
  Replies
  1. உங்க ஐடியாவை அவர் நிறைவேற்றுவார் என்று நிச்சயமா நம்பலாம் :)

   Delete
 11. ''வெயிலுக்கு AC சுகமா இருக்குன்னு சும்மாவாச்சும் சில பேர் உள்ளே நுழைய ஆரம்பிச்சிட்டாங்களே ! ,இப்போது மட்டும் என்னவாம்..அப்படித்தானே நடக்குது..

  ReplyDelete
  Replies
  1. இப்பவேயா ,உள்ளே என்னதான் நடக்குது :)

   Delete
 12. நகைப்பணி தொடரட்டும்
  தம+

  ReplyDelete
  Replies
  1. சேதாரம் இல்லாமல் தொடர்கிறேன் :)

   Delete
 13. வணக்கம்
  ஜி
  எல்லாத்தையும் சிந்தித்து எழுதும் திறனுக்கு வாழ்த்துக்கள் ஜி... த.ம 13
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அரைத்த மாவையே அரைக்க முடியாதே :)

   Delete
 14. கடைசி - யதார்த்தம்.....

  ReplyDelete
  Replies
  1. ஒருவேளை ,ஆல்பத்தை பார்த்து மொய் லிஸ்ட்டை செக் செய்வார்களோ :)

   Delete
 15. ஹா... ஹா... நல்ல ஜோக்ஸ்...

  ReplyDelete
  Replies
  1. 'தங்க மங்கை'யில் மனதோடு பேசிய நீங்கள் .இங்கே மனம் விட்டு சிரித்ததற்கு நன்றி :)

   Delete