15 February 2015

தலை எழுத்து என்று தப்பிக்கமுடியுமா ,கணவனால் :)

-------------------------------------------------------------------------------------------------

   சாலை விபத்தா ,இல்லற விபத்தா :)        

                 ''அந்த கல்யாண மகால் பொருத்தமான இடத்திலே அமைந்துருக்கா ,எப்படி ?''

         ''அடிக்கடி விபத்து நடக்கும் இடம் ஜாக்கிரதைன்னு அந்த இடத்திலே போர்டு இருக்கே !''

தலை எழுத்து என்று தப்பிக்கமுடியுமா  ,கணவனால் :)

                ''குடியை விடலேன்னா டைவர்ஸ்தான்னு  உன் மனைவி  சொல்றாளா ,என்னடா செய்யப் போறே ?''
            ''என் தலையிலே எனக்கு ரெண்டு பெண்டாட்டின்னு எழுதி இருந்தா யாராலே மாற்ற முடியும் ?''

 திண்டுக்கல் தனபாலன்15 February 2014 at 08:38
அடு(சு)த்த திட்டம்...!
ReplyDelete

Replies


 1. நண்பனிடம் சொன்னதை மனைவியிடம் சொல்லிப் பார்க்கட்டும் ...மணமாலைக்கு பதில் பிணமாலைதான் மேலே விழும் !
 2. மனைவியின் சமையலை மட்டம் தட்டலாமா ?

                  '' TV ல்   'செய்துப் பார்ப்போம் 'நிகழ்ச்சியில் காட்டின மாதிரி 'இந்த 'கேப்பை பாத் 'தை செஞ்சுருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
 3.            ''இனிமேலே 'செய்து சாப்பிடுவோம் 'ன்னு நிகழ்ச்சி வந்தா  பார்த்துட்டு செய் !''

 4. அக்மார்க் அரசியல்வாதி !  நியாயவிலைக் கடைகளை மூட வேண்டும்   என்றதும் ...
  ஏழைகளின் வில்லனென செருப்பை வீசிய கூட்டம் ..
  நியாய எடைக் கடைகளை திறக்க வேண்டும் என்றதும் 
  ஏழைகளின் தெய்வமென பூமாலைகளை சாற்றியது !
29 comments:

 1. 01. கார்னரில் கல்யாண மண்டபம் கட்டினால் இதையெல்லாம் யோசிக்கணுமோ.....
  02. அவ என்ன பிளான் போட்டு சொன்னாளோ....
  03. டி. வி. காரன் சரியாத்தான் சொல்லி இருக்கான்.
  04. நியாயம்தானே,,,,

  ReplyDelete
  Replies
  1. 1.கட்டும் போது பார்த்துக்கலாம் :)
   2.மனைவியும் நிதானம் இல்லாத போது சொல்லி இருப்பாரான்னு சந்தேகமா :)
   3.பாரப்ப்தெல்லாம் ருசிப்பதில்லையே :)
   4.கைத்தட்டு வாங்கணும்னா எப்படி வேண்டுமானாலும் நாக்கு வளையும் :)

   Delete
 2. வணக்கம்
  ஜி
  வீதியில் கட்டினால் இப்படித்தான் நடக்கும்
  15-2-2015 இன்று நீல கிரி தேயிலை தோட்டத்தில் தொழில் செய்யும் பெண்ணை புலி கடித்து இறந்ததாகவும் ஒரு சிறுவனை கடித்து விட்டு ஓடியதாக செய்தி வந்தது.. இதற்கு காரணம்.. புலிவாழும் இடத்தில் மனிதன் வாழ்ந்தால் இப்படித்தான்... விபத்து...மற்றவைகளை இரசித்தேன்..த.ம 1


  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. புறம்போக்கு இடத்தில் பினாமி கட்டிய கல்யாண மண்டபமோ :)

   Delete
 3. தப்பிக்க முடியாத விபத்து ஜி...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. ஒரு சில புது மாப்பிள்ளைகள் தலைப்பாகையை ஹெல்மெட் மாதிரி அணிந்துக் கொள்கிறார்கள்,இருந்தாலும் .. :)

   Delete
 4. வழக்கம்போல இன்றும் அருமை அண்ணா !

  தம+

  ReplyDelete
 5. //சாலை விபத்தா ,இல்லற விபத்தா :)//

  இரண்டில் எது ரொம்ப ஆபத்தானதுன்னு சொல்லிடுங்க பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. எது மோசம் என்பது பாதிப்பைப் பொறுத்து ஆளாளுக்கு மாறக் கூடும் :)

   Delete
 6. முதலில் போட்ட comment இல், பிழைகள் இருந்தாதால நீக்கிட்டேன் பகவான்ஜி. அந்தப் படமும் ‘ஒரு மாதிரி’ இருக்கில்லையா?! Delete பண்ணிடுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. டெலிட் பண்ணியாச்சு அந்த கமெண்ட்டையும் விபத்தா நினைச்சு மறந்துடுங்க :)

   Delete
 7. 1.ஹா.... ஹா...ஹா.... என்ன பொருத்தம் போர்டுக்கு என்னபொருத்தம்..

  2. ஹா...ஹா... அடப்பாவி...

  3. ஹா...ஹா...ஹா...

  4. அதுதான் உலகம்!

  ReplyDelete
  Replies
  1. 1.சத்தமில்லாமல் அந்த போர்டை இன்று தூக்கி எறிந்து விட்டார்களே:)
   2.குடிகாரனுக்கு வந்த ஆசையைப் பாருங்க :)
   3.நல்ல வேளை,செத்து பார்ப்போம்னு நிகழ்ச்சி ஏதும் வரலை :)
   4.உலகத்தை நனறாகவே ஏமாற்ற தெரிந்து வைத்துக் கொண்டுள்ளார்கள்:)

   Delete
 8. தமிழ் மணம் - அந்த 7 நாட்கள்.

  ReplyDelete
  Replies
  1. அந்த ஏழு நாட்கள் இனிமை தந்தாலும் கூட ,நேற்றைய பதிவுக்கு... உங்க ஊர் நண்பர் 'மனசு ' வைத்திருந்தால் ,இப்போ காலியாக இருக்கும் த ம மகுடம் கிடைத்திருக்கும் ..ஜஸ்ட் மிஸ் :)

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. தங்களை வைத்து நானும் நிறைய படித்துக்கொண்டேன் பகவான்ஜி வாக்கு, மகுடம் அதன் உள் விபரங்கள் அதனுள் உள்ள உள்குத்து எனக்கும் தெரிய ஆரம்பித்து இருக்கிறது ஆகவே நான் யாருக்கும் குறைவின்றி குத்தி விடுகிறேன் ஆகவேதான் என்னையும் தொடர்ந்து மகுடத்தில் ஏற்றி விடுகிறார்கள் 80தை புரிந்து கொண்டேன்.ஒருவேளை எனக்கு அறிவும் வளர்கிறதோ...

   Delete
  4. பதிவு வெளியான 48 மணி நேரத்திற்குள் விழும் வோட்டுதான் செல்லுபடியாகும் வோட்டு ....ஒரு சீனியர் பதிவர் (குமார் ஜி அல்ல ) பழைய பதிவுக்கெல்லாம் மறக்காமல் வோட்டு போடுவார் ,ஞாபகமாய் இன்றைய பதிவுக்கு வோட்டு போடமாட்டார் !
   வோட்டு போட்டுத்தான் ஆகணும்னு ஏன் எதிர்ப்பார்க்கணும் என்று கேட்கலாம் ..வேறென்ன உதவி நாம் செய்து கொள்ள முடியும் ?எழுதுறவங்களுக்கு உற்சாகப் படுத்த நான் கமெண்ட்போடும் பதிவுகளுக்கு நிச்சயம் ,உங்களைப் போலவே குறைவின்றி குத்தி விடுவதே என் வழக்கம் !
   இது நான் தனபாலன் ஜி ,முரளிதரன் ஜி ,தமிழ் இளங்கோ ஜி ,போன்றவர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பாடம் :)

   Delete
 9. ''' அய்யோ...அவரவர் ஒன்னுகூட இல்லேன்னு தவிச்சுகிட்டு இருக்கயிலே....“. அவரு தலையிலே ரெண்டு எழுதியிருக்காமே..... எப்படி”?????

  ReplyDelete
  Replies
  1. டாஸ்மாக்கின் தலைமைக் குடிமகன் என்ற அந்தஸ்து ஒண்ணு போதாதா :)

   Delete
 10. பகவான்ஜி தாங்கள் சொல்லும் சீனியர் பதிவர் யார் 80தை நானும் அனுபவத்தில் தெரிந்து கொண்டேன். விளையாட்டுக்காக சொல்லவில்லை உண்மை.

  ReplyDelete
  Replies
  1. ஊரைச் சொன்னாலும் பேரைச் சொல்லக்கூடாது என்பார்கள் ,நாம் அவர் பேரையும் சொல்லலே ,ஊரையும் சொல்லலே.அவர் போக்கிலேயே அவர் போகட்டும் ,நமக்கொன்றும் நட்டமில்லையே !இதைச் சொல்ல வேண்டிய காரணம் ,சக பதிவர்களும் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் :)

   Delete
 11. ''அடிக்கடி விபத்து நடக்கும் இடம் ஜாக்கிரதைன்னு அந்த இடத்திலே போர்டு இருக்கே !''..ha!..ha!.....
  ''...'என் தலையிலே எனக்கு ரெண்டு பெண்டாட்டின்னு எழுதி இருந்தா யாராலே மாற்ற முடியும் ?''...'' ha!...ha!...
  வழக்கம்போல அருமை.
  ரசித்தேன்.
  நன்றி
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. கடந்த வாரம் ,தங்களின் பாட்டி காலமான நிலையில் ,என்னை ஊக்குவிக்கும் தங்களின் கருத்துரைக்கு நன்றி !

   Delete
 12. Replies
  1. வலைச் சித்தரின் உதவியால் கணணி பிரச்சினை தீர்ந்து விடுமென நம்புகிறேன் :)

   Delete
 13. கல்யாணம் ஒரு விபத்து என்று தெரிந்தே மாட்டிக்கொள்ளத் துடிக்கிறோம்! :))

  ReplyDelete
  Replies
  1. இதற்காகத்தான் கவிஞர் ',இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா 'ன்னு பாடி இருக்காரோ :)

   Delete