18 February 2015

நல்ல வேளை ஜட்டி சைஸை கேட்கலே :)

           ''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்னு வந்து என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? ''

          ''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே !''

ரிவால்விங் சேரில் இருந்தால் ரிவால்விங் சேர்மனா ?

         ''வாட்ச்மேன்...நான் சேர்மனைப் பார்க்கும் போது என் பையனைக் கூட்டிட்டு போனது , உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?''
           ''சேர்மன் சேர்லே உட்கார்ந்து இருந்தார் ,நீங்க என்ன வாட்சுமேலேயா உட்கார்ந்து இருக்கீங்கன்னு ,உங்க பையன் வந்து கேட்டானே  !''


இப்பத் தாங்க தெரியுது. வாச்மேன் வேலைல பொம்பளைங்க ஏன் இல்லைங்கறது.

கோபாலன்

 1. அதான் ,வீட்டுக்கு வீடு புருசனை வாட்ச் பண்ணத்தான் வாட்ச்உமன் இருக்காங்களே !
 2. நம்ம பணம் அவங்க பையில் என்பது உண்மை!
 3.       '''உங்க பணம் உங்க கையில்' திட்டம் வரப் போகுதாம் ,அதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?'''
 4.         ' இப்போ நமக்கு சேர வேண்டிய  பணம் அவங்க பையில் சேர்ந்துக்கிட்டு இருந்ததை ஒத்துக்கிறாங்களா  ?''

 5. மனோதிடம் இருக்க ஜோதிடம் எதுக்கு ?


  கையிலே உள்ள ரேகை ஒவ்வொருத்தருக்கும்  ஒரே  ஒரு விதம்தான் !
  ஒரே ஒரு யானையை தடவிய குருடர்கள் போல் ...
   நாலு ஜோதிடர்கள் கூறுவதோ நாலு  விதம்! 
  ஒரு நேரத்தில் எல்லோருக்கும்  ஒரே  நேரம் காட்டும்
  கடிகாரம்  காட்டுவதே நல்ல நேரம் !


26 comments:

 1. 1. ஹா...ஹா...ஹா.... பனியன் மட்டுமா பாஸ்!

  2. ஹா...ஹா...ஹா... சில பிளேடு ஜோக் எல்லாம் ரசிக்கவைக்கும். இது ரெண்டும் அந்த ரகம்.

  3. ஹா...ஹா... அதானே? ஒத்துக்கறாங்களாமா... கேட்டுச் சொல்லுங்க பாஸ்!

  4. ஆளுக்கொரு பலனைச் சொல்றாங்க பாஸ்! நாம கொடுக்கற காசுக்குத் தகுந்த மாதிரி. :)))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. 1.அதுதான் எனக்கும் சந்தேகமா இருக்கு :)
   2.கூர்மையான பிளேடாச்சே,கிழிக்கத்தான் ,சே ...ரசிக்கத்தான் வைக்கும் :)
   3.அர்ரியர்ஸ் கேட்டு ஆர்ப்பாட்டம் போடலாமா :)
   4.எப்படியோ அவங்களுக்கும் பொழப்பு ஓடுது :)

   Delete
 2. Replies
  1. நீங்க மனுசங்க ,நம்ம dd யைப் பார்த்தீங்களா ?:)

   Delete
 3. உங்கள் உள்நோக்கம் புரிந்து விட்டது ஜி... ஹா.... ஹா....

  ReplyDelete
  Replies
  1. அடச்சீ ,நல்ல நினைப்பே வராதா :)

   Delete
 4. ஹா ஹா ஹா ! வழக்கம்போல அசத்தல் ஜீ !

  தம+

  ReplyDelete
  Replies
  1. fight club படத்தை பார்த்துட்டு சொல்றீங்க போலிருக்கே :)

   Delete
 5. 01. இவணுக்கு தெரியுமா ? அளவு
  02. அப்பனைப்போலவே புள்ளையோ...
  03. சபாஷ் சரியான கேள்விதான்.
  04. சோசியக்காரன் பொழப்புல மண்ணா ?
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. 1.தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை ,போனா போவுதுன்னு பனியனை வாங்கி வருவது அவர் மனைவிதான் :)
   2.பேர் சொல்லும் பிள்ளையாச்சே :)
   3.சிலிண்டர் மானியத்தில் அந்த பணத்தை அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லிடலாமா :)
   4.பெரியார் சொல்லியே திருந்தாத சனங்க,நான் சொல்லியா திருந்தப் போவுது ?
   த ம .ஐந்தருவியா :)

   Delete
  2. நான் கேட்டது இவணுக்கு அவளோட அளவு ?

   Delete
  3. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணி விடுமே அந்த இழவு ..சீச்சி ,அளவு :)

   Delete
 6. உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொன்னது இதுக்குத்தானா...???

  ReplyDelete
  Replies
  1. வேற எதுக்குன்னு நீங்களும் சொல்லலாமே :)

   Delete
 7. உப்பிட்டது இவராயிருந்ததால் பனியன் சைஸ். இவர் மனைவியாய் இருந்தால்...? ஒவ்வொரு பதிவிலும் ஒரு செய்தி. ரசித்தேன்

  ReplyDelete
  Replies
  1. குடும்பத்திலே குழப்பத்தை உண்டாக்கி விடாதீங்க சார் :)

   Delete
 8. //என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ?........... ''//

  "நான் பனியனே போடுறதில்லே”ன்னு சொல்லிச் சமாளிச்சாரோ?!

  ReplyDelete
  Replies
  1. எங்கே சமாளிக்கிறது ,அடுத்த கேள்வியை நம்ம gmb சார் சொன்ன மாதிரி கேட்டு விடுவானோ என்று பயந்து செத்துப் போனார் :)

   Delete
 9. மனோதிடம் இல்லாதவன்தான் ஜீ ஜோதிடம் பாக்குறான்

  ReplyDelete
  Replies
  1. மனிதனின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டுதான் பலரும் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .அந்த பலரில் பூசாரிகள் ,நேமாலஜி ,வாஸ்து,ஜோதிடர்கள் அடங்குவார்கள் :)

   Delete
 10. வணக்கம்
  ஜி
  உப்பிட்டவர்களை இப்படித்தான் நினைக்கனும் போல... நன்று... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அவர் நெஞ்சிலேயே ஒட்டி இருக்கும்படியா ,நன்றி காணிக்கையா பனியன் வாங்கிக் கொடுக்க சைஸை கேட்டிருப்பாரோ :)

   Delete
 11. ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. அன்பான கருத்திற்கு நன்றி :)

   Delete
 12. உப்பிட்டவரை உள் அளவும் நினை! ஆஹா.. என்னவொரு கற்பனை!

  ReplyDelete
  Replies
  1. 'உள்'ளத்தைக் கொள்ளைக் கொண்டு விட்டதா :)

   Delete