19 February 2015

எதுவுமே பிடிக்கலேன்னா என்ன பண்றது :)

                  ''முப்பத்திரண்டு வகை பவுடரை காட்டியும்   'வாசனையே இல்லை'ன்னு  இந்தம்மா சொல்றாங்க, நான் என்ன செய்றது  முதலாளி ?''

                    '' எறும்பு பவுடரை வேணா  காட்டிப் பாரு !''

வள்ளுவரை நினைக்க வைத்த மனைவி :)

          ''உனக்கு சூடு வச்சது உன் பெண்டாட்டி ,திருவள்ளுவரை 
ஏண்டா திட்டிக்கிட்டிருக்கே ?''
        ''அவர் அனுபவப்பட்டிருந்தால் 'தீயினால் சுட்ட புண் உள்ளாறும் 'னு 
எழுதி இருப்பாரா ?'' 
Manjubashini Sampathkumar19 February 2014 at 14:08
தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் என்ற திருவள்ளுவரின் வாக்கையே தனக்கு சாதகமா எடுத்துக்கிட்டாரே முதுகெலும்பில்லாக்கோழையாக மனைவிக்கிட்ட சூடு வாங்கிட்டு மனைவியை எதிர்க்கும் சக்தி இல்லாம திருவள்ளுவரை சொல்றார் பாருங்க. :) அருமை.

 1. திருவள்ளுவரை அவர் எப்பவும் நினைக்கிறவர்தான்,அதனால்தானே வலியில் துடிக்கும் போதும் குறள் ஞாபகம் வந்திருக்கு !
 2. மழைக் குறைய காரணம் கண்டுபிடித்த மதுரை மேதை !

  கடந்த ஞாயிறு அன்று மதுரையில் ஒரு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது ...
  எதற்காக ?...
  ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என அறிவித்து தண்டிக்க வேண்டும் என்பதற்காகவா...
  கச்சத்தீவு  மீட்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
  இலங்கைச் சிறையில் இருக்கும் மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவா ...
  இப்படிப்பட்ட கோரிக்கைக்காக அல்லவாம் ...
  பாரம்பரியமாக நரியை பரியாக்கும் திருவிளையாடல் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்று வருகிறதாம் ...
  அதில் உண்மை நரியை பயன்படுத்த காவல்துறை தடை விதித்து விட்டதாம் ...
   பொய் நரியை பயன்படுத்தியதால் மழைப் பொய்த்துவிட்டதாம்...
  (என்னே ஒரு அரிய கண்டுபிடிப்பு பாருங்கள் ,புவி வெப்பமயம் ஆவதால் இயற்கைச் சுழற்சி மாறிவருகிறது என்பதைச் சொல்வோரெல்லாம் தலைகுனியனும்!)
  ஆகவே உண்மை நரியை பயன்படுத்த அனுமதி தரணும்னு தான்  கையெழுத்து இயக்கமாம் ...
  சரி ,உண்மை நரியை உண்மை பரியாக்கி காட்ட இவர்களால் முடியுமா ?
  இப்படி ஒரு மூட நம்பிக்கையை வளர்க்கும் இயக்கத்திற்கு கௌன்சிலர் ஒருவர் தலைமையாம் ...
  இவர்களால் வர வேண்டிய மழையும் வராது போலிருக்கே !


 3. உண்ணக் கொடுக்கும் தாய்க்கே துரோகமா ?

  பூமித் தாய் படைத்த உணவினை  உண்டபின் ...
  மனிதன் வீசியெறிந்த பிளாஸ்டிக் பைகளை 
  'ஜீரணிக்க 'முடியவில்லை  ...பூமித்தாயால் !

31 comments:

 1. 01. கடையை கூவத்து ஓரமா போட்டால் வாசம் எப்படி ? வரும்
  02. இந்த அனுபவம் மிஸ்டர்.திருவுக்குமா ? இருக்கு
  03. இதினாலதான் வெயில் கொளுத்துதோ ?
  04. அருமை பகவான்ஜி
  தமிழ் மண் 1

  ReplyDelete
  Replies
  1. 1அந்த இடத்தில் இருப்பதால்தானே பௌடரும் ,சென்ட்டும் அமோகமா விற்குது :)
   2.இல்லாட்டி எழுதுவாரா :)
   3.இப்படி அறிவுக் கொழுந்துகள் இருந்தால் கொளுத்தத்தானே செய்யும் :)
   4.மனிதன் தனக்கு ஜீரணம் ஆவதை மட்டும் கவனித்தால் போதுமா :)
   மண் ?

   Delete
  2. சாரி நண்பரே... நான் தங்களுக்கு கருத்துரை எழுதுவது தினம் அறை இருட்டில்தான் அதாவது ரூமில் விளக்கு அணைத்த பிறகு அதன் காரணமாகவே சில தவறுகள் நிகழ்ந்து விடுகிறது.

   Delete
  3. அறை இருட்டில் நடப்பது சிறு தவறுதானே ,பரவாயில்லை,விடுங்க :)

   Delete
 2. மதுரைகாரர்கள் எப்பவுமே இப்படி வித்தியாசமா தான் சிந்திப்பீர்களா பாஸ்:)))
  அட கடவுளே!! எறும்பு பவுடர்ன எறும்பு முகத்துக்கு use பண்ணுற பவுடரா!!! நான்கூட எறும்பை பவுடர் பண்ணி வைச்சுருப்பாங்கன்ல நினைத்தேன்!!

  ReplyDelete
  Replies
  1. அய்யகோ,அந்த மேதையும் நானும் ஒண்ணா :)
   நூறு கிராம் பவுடர் தயாரிக்க எத்தனை எறும்பு தேவைப்படுமோ :)

   Delete
 3. "கௌ"ன்சிலர் வேறா...?

  Plastic - வருங்காலத்தினருக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அந்த cow தான் cat யை தேடுது :)

   Delete
 4. Replies
  1. அப்புறமா ,விளக்கமா கமெண்ட்டைப் போடுங்க ஃபிரோ :)

   Delete
 5. ஹா...ஹா...ஹா.... அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
 6. ஹா...ஹா...ஹா.... அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி + நன்றி :)

   Delete
 7. நெஞ்சு பொறுக்குதில்லையே என்று எழுதத் தோன்றுகிறது. கழுதைக்குக் கல்யாணம் நரிக்குக் கல்யாணம் நாம் திருந்தவே மாட்டோமா.?

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,கழுதையை இவர்கள் கட்டிக்கொள்ளாமல் போனார்கள் :)

   Delete
 8. வணக்கம்
  ஜி
  இரசிக்கவைக்கும் நகைச்சுவை நன்று த.ம5
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தீயினாற்சுட்ட புண் உள்ளாறும் என்பது உண்மைதானே :)

   Delete
 9. Replies
  1. வள்ளுவரைக் கலாய்ப்பது சரியில்லை ,அப்படித்தானே :)

   Delete
 10. Replies
  1. இருவரிக் கவிதையை வாசிக்கத் தந்த அவரா பாவம் :)

   Delete
 11. மதுரை முட்டாள் மேதைகள்....இன்னும் இப்படி இருக்காங்க திருந்தாம..
  பூமித்தாய்க்கு நாம் செய்யும் துரோகம்.... ஜீரணிக்க முடியாத உண்மைவேதனை...
  தம7

  ReplyDelete
  Replies
  1. இப்படிப் பட்ட முட்டாள்கள் இருக்கும் நாடு வல்லரசு ஆகுமா :)

   Delete
 12. மதுரை முட்டாள் மேதைகள்....இன்னும் இப்படி இருக்காங்க திருந்தாம..
  பூமித்தாய்க்கு நாம் செய்யும் துரோகம்.... ஜீரணிக்க முடியாத உண்மைவேதனை...
  தம7

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்து மட்டும்தான் ஒன்றுக்கு இரண்டு முறை ,த ம செவனை டீலாவிலே விட்டுட்டீங்களே :)

   Delete
 13. எறும்பு பவுடர் போட்டா எறும்புக்கு கூட கூட்டம் மொய்க்காதே! ஹாஹாஹா!

  ReplyDelete
  Replies
  1. காயிலுக்கு கொசுவும்,பொடிக்கு எறும்பும் போகலைன்னா என்னதான் செய்றது :)

   Delete
 14. எதுவுமே பிடிக்கலேன்னா என்ன பண்றது :) மூக்கை கிள்ளி பாத்திட வேண்டியதுதான்..

  ReplyDelete
  Replies
  1. மூக்குக்கு தனியா பவுடர் தேட வேண்டி இருக்குமே :)

   Delete
 15. எறும்பு பவுடர் குடுத்து பார்க்கச் சொன்ன முதலாளி - என்னா ஒரு வில்லத்தனம்! :))))

  ReplyDelete
  Replies
  1. அவன் மூஞ்சியில் கில்பக்கை ஸ்பிரே பண்ண :)

   Delete