21 February 2015

அழகு முகத்தை அடையாளம் தெரியுமா ?

------------------------------------------------------------------
 வாலிபர்களின் 'கனவு ' வாகனம் வருவதே  தெரியலியாமே :)            

           ''பெரியவரே ,உங்களுக்கு அல்சர் வந்திருக்கிறது ,இது எப்படி வருதுன்னு தெரியுமா ?''
              '' எதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது ,'அல்சர் 'வர்றது எப்படித் தெரியும் டாக்டர் ?''

மனைவி காதுக்கு மேட்சிங்கா வைரத் தோடு அமையுமா ?

       ''கடையிலே இருக்கிற எல்லா மாடல் தோடுகளைக் காட்டியும் ,உங்க மனைவிக்கு எதுவுமே பிடிக்கலே ...ஏதாவது  ஒரு மாடல் நல்லாயிருக்குன்னு நீங்களாவது எடுத்து சொல்லக்கூடாதா ?'' 
       ''அட நீங்க வேற ,நான் சொல்ற எதைத்தான் அவ காதுலே போட்டுக்கிட்டா ?''
சைதை அஜீஸ்21 February 2014 at 07:00
காதுல போட்டுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை!
அவ போடுற கரண்டி, பூரிகட்டை, தட்டு போன்றவற்றிலிருந்து தப்புவதே பெரிய விஷயமா இருக்கில்லே!
ReplyDelete

Replies


 1. மூணாவது மனிதன் முன்னாலே தாம்பத்திய ரகசியத்தை இப்படி போட்டு உடைச்சா, எல்லாம் பறக்கத்தானே செய்யும் ?
 2. ஊருக்கே தெரிந்த தலைவரின் 'இரகசியம் '!

          ''எந்த டெஸ்ட்டும் பண்ணாமலே எனக்கு முதுகு வலி வர வாய்ப்பே இல்லைன்னு உறுதியாச் சொல்றீங்களே ,எப்படி டாக்டர் ?''
           ''ஆட்சிக்கு வர்ற எந்த கட்சிக்கும்  நீங்க தாவுறதாலே 'முதுகெலும்பு இல்லாதவர் 'ன்னு தெரிந்தது தானே?''


 3. அழகு முகத்தை அடையாளம் தெரியுமா ?

  முக நூலில் பார்த்த முகத்தைகூட 
  நேரில் பார்த்தால்  அடையாளம் தெரியவில்லை ...
  கடவுளே வந்தாலும் நம்மால் கண்டுகொள்ள முடியுமா ?


26 comments:

 1. 01. பக்கத்தில் நிற்கிற நர்சு தெரியுதானு கேளுங்க ?
  02. சந்தர்ப்பம் பார்த்து அவ காதுல போடுறானோ...
  03. அரசியல்வாதிகளுக்கு இப்படியொன்னு இருக்கா ?
  04. முகநூல்ல, ஒருத்தி ரெண்டு பேரு இருந்தால்தானே...
  05. தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. 1.நமக்கே தெரியும்போது அவருக்கு தெரியாமல் போகுமா :)
   2.போட்டாலும் ஏறுமான்னு தெரியலை :)
   3.இருந்தால் அரசியலில் ஏன் இருக்கப் போகிறார்கள் :)
   4 இருந்தாலும் ,நீங்க ஏன் friends request அனுப்பணும்:)
   முதல் பிரவேசத்திற்கு நன்றி :)

   Delete
 2. 1. ஹா...ஹா....ஹா... ரசித்தேன்.

  2. ஹா...ஹா...ஹா.... இதுவும் நல்ல டைமிங்!

  3. ஹா...ஹா...ஹா....

  4. அதானே!

  ReplyDelete
  Replies
  1. நேரம் கிடைக்கும் போது நழுவ விடுவாரா அவர் ,அதான் போட்டுப் பார்க்கிறார் :)

   Delete
 3. நல்லா கேளுங்க ! அவரு அல்சர் டாக்டர பாக்க வந்தாரா ? இல்ல கேன்சர் டாக்டர பாக்கவந்தாரான்னு !


  முகநூல்ல வர்ர எந்தமுகமும் நேர்ல பாக்கறமாதிரியாணா இருக்கு @@

  அனைத்தும் அருமை .
  தம+

  ReplyDelete
  Replies
  1. அப்படிக் கேக்குறது நல்ல 'கல்சரா ' தோணலே :)

   நீங்க எதுக்கு இந்த ரிஸ்க்கெல்லாம் எடுக்கிறீங்க :)

   Delete
 4. வார்த்தை விளையாட்டை ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. பல்சர் மட்டும்தானா ,இல்லை ..புல்டோசரும் தெரியலியான்னு டாக்டர் கேட்டதையும் நான் ரசித்தேன்:)

   Delete
 5. சூப்பர் ஜோக்ஸ்! காதுல போட்டுகிட்டா ஜோக் அட்டகாசம்!

  ReplyDelete
  Replies
  1. வேறொன்றுமில்லை அனுபவம்தான் இப்படி நம்மை ரசிக்க வைக்கிறது :)

   Delete
 6. வணக்கம்
  ஜி
  தங்களின் வார்த்தை பிரயோகம் என்னை பல தடவை சிரிக்கவைத்து... இரசித்தேன் த.ம6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தடியடி பிரயோகம் என்றால் வலிக்கும் ,வார்த்தைப் பிரயோகம்தானே :)

   Delete
 7. எதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது ,'அல்சர் 'வர்றது எப்படித் தெரியும் ....???????

  ReplyDelete
  Replies
  1. கண்ணெதிரே நடப்பதே தெரியலே ,வயிறுக்குள் நடப்பதா உடனே தெரிந்து விடும் :)

   Delete
 8. அல்சர் பல்சர்....போன்று..........அனைத்தும் அருமை.
  தம+1

  ReplyDelete
  Replies
  1. பல்சருக்கு போட்டியா சீனா, குல்சர் பைக்கை அறிமுகப் படுத்தி இருக்கிறதே :)

   Delete
 9. 'முதுகெலும்பு இல்லாதவர்'ன்னு இருக்கிறாங்களா?
  எதிரில் வர்ற 'பல்சரே 'தெரிய மாட்டேங்குது - அப்படி
  பெண்களும் வேகமாய் ஓடுறாங்களே!

  ReplyDelete
  Replies
  1. அரசியலில் அப்படியும் பலர் இருக்கிறார்களே :)
   உங்க நாட்டிலேயும் பல்சர் இருக்கா :)

   Delete
 10. உங்களின் சிரிப்பு வைத்தியம் நிச்சயமாக எந்தத் துயர்மிக்க மனதையும் குணமாக்கிவிடும்.
  நன்றி ஜி
  தம 9

  ReplyDelete
  Replies
  1. அய்யா பசி பரமசிவம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் பதிவு போட்ட கையோடு இதை நீங்கள் சொல்வதால் நம்புகிறேன் :)

   Delete
 11. ஊருக்குத் தெரிந்த இரகசியம்! இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. கேட்டால் ,அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது ,நிரந்தர எதிரிகளும் கிடையாதுன்னு வியாக்கியானம் வேறு செய்வார்கள் :)

   Delete
 12. நல்ல கேள்வி - எதிரில் வரும் பல்சரே தெரியல இதுல அல்சரை எப்படித் தெரிஞ்சுக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. நமக்கு கேட்கத்தானே தெரியும் :)

   Delete
 13. ஹஹாஹஹஹ்ஹ்....செம ஜி!

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி ஜி :)

   Delete