25 February 2015

தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை :)

மாப்பிள்ளை ரோசக்காரர் போலிருக்கு :)

        ''மனைவி மேல் அவருக்குப் பாசம் அதிகம் னு அவர் பைக்கைப் பார்த்தா தெரியுதா .எப்படி ?''
      ''என் மனைவி மட்டுமே ,மாமனார் எனக்கு தந்த பரிசுன்னு எழுதிப் போட்டிருக்காரே!''தலைவர் 'ரம்மி 'யில் ஜெயிக்கும் ரகசியம் !

            ''தலைவர் மரத்தடியில் ரம்மி விளையாடினா பணத்தை அள்ளுறார்,கிளப்பில் விளையாடவே மாட்டேங்கிறாரே ,ஏன் ?''
            ''சட்டைப்பையில் இருந்து சீட்டை எடுக்கிற வித்தை CCTV காமெரா மூலம் வெளியே தெரிஞ்சுடும்னுதான் !''
Thulasidharan V Thillaiakathu25 February 2014 at 22:55
என்ன ஜி! ரம்மியையும் ரம்மியமாகப் படம் பிடிக்கும் காமெரா பின்னர் கும்மி அடிக்க வைக்கும்! இல்லையா ஜி?
Bagawanjee KA25 February 2014 at 23:25
cctv காமெரா அரசியல் தலைவர் முதல் ஆன்மீகத் தலைவர் (?)வரை அனைவரையும் கும்மி அடிக்க வைப்பதை பார்த்து கொண்டுதானே இருக்கிறோம் ?
 1.  சொல்வது எளிது ,செய்வது அரிது !

        ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்ன்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கீயா ,ஏன் ?
         ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காண்பின்னு சொல்லத்தான் !''

 2. தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை !

  'டியூப் லைட் 'என்றவளின் வாயை அடைக்க 
  செலவு பாராமல் 'எலெக்ரானிக்  சோக் 'வாங்கி மாட்டினான் ...
  சட்டென்று எரிந்தது டியூப் லைட்..
  பட்டென்று கேட்டாள் ..
  வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?


40 comments:

 1. 01.அடுத்து கார் வாங்க அடிப்போடுறானோ...
  02. நீங்க ஆன்மீகத் தலைவர் அப்படினு சொல்றது நம்ம குத்தியானந்தாவையா ? ஜி
  03. சொன்னவன் இதை யோசிக்கவே இல்லையோ ?
  04. எதைச்செய்தாலும் இந்தச்சமூகம் இப்படித்தான் ஜி

  தமிழ் மணம் இணைக்க முடியலையே...

  ReplyDelete
  Replies
  1. 1.இப்படி மறைமுகமாய் குத்திக் காட்டுவதைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது :)
   2.அவர் நினைவு மட்டும்தான் வருதா :)
   3.யோசிக்காமல் சொன்ன வார்த்தையோ :)
   4.தாலி கட்டிகிட்டவளுக்கு உள்ள உரிமையோ :)
   இப்போ சரிதானே :)

   Delete
 2. வணக்கம்
  ஜி
  மாப்பிள்ளை சொன்னது சரிதான்...
  ரம்மி விளையாட்டா.... நம்மவங்க அதில் கில்லாடி ஜி...அவர்களின் கண்னே CCTVபோலதான்... மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மாமியாரும் சேர்ந்த பரிசல்லவா ,மனைவி :)
   தலைவரை ரம்மிலும் சரி ,ரம்மியிலும் சரி ,யாராலும் அடிச்சுக்க முடியாதே :)

   Delete
 3. என் உள்ளத்தில்
  சொல்வது எளிது ,செய்வது அரிது!
  தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை!
  ஆகிய இரண்டும்
  அடிக்கடி வந்து போகிறதே!

  ReplyDelete
  Replies
  1. கடந்த வருடப் பதிவுக்கு நீங்களும் கருத்துரை சொல்லி இருப்பீர்கள் ,அதுதான் அடிக்கடி போல் தோன்றுகிறது :)

   Delete
 4. 1) முதல் ஜோக் வார்த்தை அமைப்பு சரியில்லையா? இல்லை எனக்குதான் புரியவில்லையா? கணவன் பைக்கிலோ மனைவி இது என் அப்பா என் கணவருக்கு வாங்கித் தந்தது என்று எழுதி விட்டார். சரிதானே?

  2) ஜோக்கும் அதைத் தொடர்ந்து துளசிஜியின் பின்னூட்டமும் சூப்பர்.

  3) ஹா...ஹா....ஹா... ஆனா அவரு தன்னையும் சேர்த்துத்தானே சொல்லியிருப்பாரு, பாவம்!

  4) ஹா...ஹா...ஹா.... விடாது கருப்பு!

  ReplyDelete
  Replies
  1. 1.சொந்தக் காசில் வாங்கிய பைக் கில் மனைவியை அப்படி எழுத வைத்து விடுவாரா :)
   2.ரம்யாவையும் ரம்மியமாய் படம் பிடிக்கும் என்று சொல்லாமல் சொல்கிறாரோ :)
   3.கொசுக் கடி அந்த பாடு படுத்துது போலிருக்கு :)
   4.கணவனை கருப்பு துரத்துற மாதிரி தெரியலியே :)

   Delete
 5. கில்லர்ஜி கேட்டது போல ஒரு வேளை கார் எதிர்பார்த்து இப்படி எழுதி இருப்பாரோ!

  ReplyDelete
  Replies
  1. அவரை நீங்களே எதிர்பார்க்க வைத்துவிடுவீர்கள் போலிருக்கே :)

   Delete
 6. ரசித்தேன்
  நன்றி நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. நன்றியை நானில்லே சொல்லணும் :)

   Delete
 7. புது மாப்பிளையோ ? மனைவியை பரிசுனு சொல்லிருக்காப்ல ?
  அவரு வலையில் சிங்கத்தை அடைப்போம்னுதான சொல்லிருக்காரு . பிடிப்போம்னு சொல்லலையே !

  தமிழ்ல பட்டுமல்ல ! சைனிஸ்லகூட மனைவி ர்ச்சனை தொடரும்போல ?
  சீட்டுவிளையாட்டுலயும் சீட்டிங்கா ? ஒருவேள சிட்டிவ் எம்.எல்,ஏ வோ ?

  தம+

  ReplyDelete
  Replies
  1. போக போக இந்த பரிசும் புளிச்சுப் போயிடுமா :)
   யாராவது பிடிச்சா ,இவர் அடைக்கிற தைரிய சாலியாக்கும்?:)

   ஏன் சோக் ,சைனிஸ் மேக்கா:)
   ஆமாம் ,அவர் சிட்டிங் கம் சீட்டிங் எம் எல் எ :)

   Delete
 8. Replies
  1. அப்பா தந்த பரிசுன்னு போட்டுக்கிற மாதிரி மாமனார் தந்த பரிசுன்னு போட்டுக்கிற தைரியம் ஏன் யாருக்கும் வரலே :)

   Delete
 9. ஹா... ஹா... சிரித்தேன் தித-திண்டுக்கல் தனபாலன் ஜி...

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் தனபாலன் ஜி ,உங்களுக்கு இந்த கருத்துரையை டைவர்ட் செய்து விட்டேன் :)

   Delete
 10. புது மாப்பிளை பிழைக்கத்தெரிந்தவரோ?.....
  அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. முற்போக்கு வாதியை இப்படி சந்தேகிப்பதை ஆட்சேபிக்கிறேன் :)

   Delete
 11. மனைவியே மாமனார் தந்த பரிசாக இருக்கும் போது பைக் என்ன பைக்.? அயூப் லைட் என்பதை தமிழில் வாழை மட்டை ஆக்கினாளோ.

  ReplyDelete
  Replies
  1. மாமனார் மட்டுமா அந்த பரிசுக்கு காரணம் ?
   கற்பூரப் புத்தியோ மனைவிக்கு ?:)

   Delete
 12. “தமிழில் தொடர்கிறது மனைவியின் அர்ச்சனை“-இந்த சீரியல் எத்தனை மணிக்கு தொடர்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாழ்நாள் முழுதும் தொடர்கிறதே :)

   Delete
 13. போட்டு நுளைச்சு விட்டுப்புட்டோம்.

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்துரையை எங்கே நுளைச்சுப் பார்க்கிறதுன்னு புரியலே :)

   Delete
 14. Replies
  1. ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 15. வாழை மட்டைக்கு எப்படி வந்தது இந்த ஐடியா ?

  ReplyDelete
  Replies
  1. என்னைத்தானே கேக்குறீங்க ,நான் ஜகா வாங்கிக்கிறேன், வுடு ஜூட் :)

   Delete
 16. நானும் தொடர்கிறேன்.... தமிழில் தொடரும் மனைவியின் அர்ச்சனயை.....

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ்,நீங்களுமா :)

   Delete
 17. Replies
  1. நன்றி ரூபன் ஜி :)

   Delete
 18. கற்பரசிகள் பார்த்தால் வாழை மட்டையும் எரியுமாமே.........!
  அதனால் ஆத்துக்காரர் பேசாமல் இருந்திருப்பாரோ என்னமோ?
  த ம 12

  ReplyDelete
  Replies
  1. கற்பரசிகள் ,பெய்யெனச் சொன்னால் மழையும் பெய்யுமாம் !ஆனால் ,அடிக்கடி வறட்சி வருவது ஏன் என்றுதான் புரியவில்லை :)

   Delete
  2. ஜி! இது கொஞ்சம் படா டேஞ்சசரா இருக்கே ஜி! பொண்ணுங்ககிட்டருந்து உங்களுக்கு இருக்கு ஜி பூரிக்கட்டை....அது சரி உங்க வீட்டுல அவுங்க பாத்தாங்களா இத...அஹ்ஹாஹ்ஹ இல்ல எதுக்கும் உடம்புக்கு ஒரு கவசம் வாங்கிப் போட்டுக்கங்க...அஹஹஹஹ்

   Delete
  3. நம்ம பாக்யராஜ் சொன்ன மாதிரி, கற்புக்கரசின்னா அந்தக் காலத்தை மட்டுமே ஏன் நினைக்கிறீங்க ,உங்க மனைவி ஏன் ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது ?...சரியான கேள்விதானே :)

   Delete
 19. ஜி அந்த முதல் ஜோக் என்னவோ இடிக்குதே ஜி! அப்ப நாங்க ட்யூப் லைட்டோ....ஐயையோ அப்ப தமிழ்ல அர்ச்சனை.??!! ..ஹஹஹ துளசி தப்பிச்சாரு...

  ReplyDelete
  Replies
  1. இப்போ படிச்சுப் பாருங்களேன் ,இடிக்காதுன்னு நினைக்கிறேன் :)

   Delete