26 February 2015

பொண்ணுங்க பஸ்ஸில் நிம்மதியா உட்கார்ந்து வர முடியுதா :)

   தர்ம அடிதான் இவங்களைத் திருத்தும் :)       

           ''என்னம்மா சொல்றே ,பஸ்ஸிலே 'கையை  வெளியேயும் ,உள்ளேயும் நீட்டாதீர்கள் 'என்று எழுதிப் போடணுமா ?''

                 ''என் பின்னாடி உட்கார்ந்து இருக்கிறவர் கை ஓவரா நீளுதே !''கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமல்ல ,மாஞ்சாக் கயிறும்தான் !
             ''தாலி கட்டிகிட்டு என் பெண்டாட்டி இப்படி ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
           ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
             ''மாஞ்சாக் கயிறு தான் !''
அப்போ நூறு பவுணில தாலி கட்டுபவர்கள் நிலை என்ன ?! :)

 1. Bagawanjee KA
 2. நூறு பவுனோ ,ஐநூறு பவுனோ தாலி என்பது மஞ்சக் கயிறுதானே ?
 3. விட்டது சனின்னு சந்தோஷமா இருக்காமல், இப்படி பொலும்புறாரே!
  இவர் அப்ரண்டீஸ் போல!!
  ReplyDelete


  1. தாலி கட்டுறதுக்கு முன்னாலே, இந்த சனி விட்டு இருந்தா பரவாயில்லைன்னு அவருக்கு படுவதில் தவறு இல்லையே !
  2. உப்பு தின்னா சூடு சொரணை வரணுமா ?

               ''நான் கட்சி  தாவுனதுக்காக .நிருபர்கள் என் தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்க !''
                ''ஏன் தலைவரே ?''
               ''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு கேவலப் படுத்துறாங்க !''
  3. ஜாதகம்  இதுக்குத்தான் உதவுது :)


   ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்களோ இல்லையோ ...
   பெண் வீட்டாரிடம் இருந்து என்ன தேறும் என்பதைப் பார்த்து 
   நாகரீகமாய் சொல்லி விடுகிறார்கள் ...
   ஜாதகம் சேரவில்லை என்று !


28 comments:

 1. 01. இதுவும் போதாது முன்னாடியும், பின்னாடியும் நீட்டாதீர்கள் அப்படியும் எழுதிப்போடனும்.
  02. மாஞ்சாக் கயிறு தான் ஆனால் யாருக்கு ?
  03. அவன் தாவுறது போன ஜென்மத்துல குரங்கா பிறந்திருப்பானோ ?
  04. 4 சோஸியக்கும் பொழப்பு நடக்குதே...

  த.ம.நா.கா

  ReplyDelete
  Replies
  1. 1.இதெதுக்கு வம்பு ,சேஷ்டைக்கு தர்ம அடி தரப்படும் என்றே எழுதிப் போட்டுடலாம் :)
   2.கயிறில் இப்படி ஒரு சிக்கல் இருக்கா :)
   3.குரங்குகள் எண்ணிக்கை குறையுதே:)
   4.வெறும் கையில் முழம்போட்டாலும் வாங்க ஆளிருக்கே :)

   Delete
 2. வணக்கம்
  ஜி
  கை நீட்டுவது கால் நீட்டுவது இந்த கால மனிதர்களின் கை வந்த கலை மாற்றவே முடியாது....
  ஜாதகப்பொருத்தம் பார்ப்பது வழக்கம் சரியாக இருந்தால் பின்பு வரவு பற்றி சிந்திப்பார்கள் வரவு குறைவு என்றால் அப்புறம் என்ற வார்த்தைதானாக வந்து விடும்..
  இவை எல்லாம் தந்திர சூட்சிமம்.. மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கை வந்த கலையா :)
   ஜாதகம் இப்படியும் சாதகம் செய்கிறதே :)

   Delete
 3. ஒ! இதுக்குதான் ஜாதகம் பாக்குறதா!!!

  ReplyDelete
  Replies
  1. நாட்டிலே பல பேரு இப்படித்தான் பார்த்து கிட்டிருக்காக :)

   Delete
 4. 1. கை என்ன, காலும் நீளுமே!

  2. ஹா...ஹா..ஹா.. கட்டியதோடு ஒரு கையால் பிடித்துக் கொண்டே இருக்கவேண்டுமே!

  3. அச்சச்சோ...

  4. அது என்னவோ உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. 1.கேட்கலைன்னா நீளும்தான் :)
   2.கையுறை தயாரா இருக்கே :)
   3.இதுக்கெல்லாம் அசந்தா அரசியல் பண்ண முடியுமா :)
   4.ஜாதகமும் டைம் பாஸ் செய்ய தோதா போச்சு :)

   Delete
 5. எழுதி போட்டா கேக்க மாட்டங்க இழுத்து வச்சு நாலு போடு போட்டாத்தான் கேப்பாங்க

  ReplyDelete
  Replies
  1. புகை பிடிக்காதீர் என்று எழுதியிருந்தால் ,பூவை அழிக்கும் கூட்டமும் இருக்கிறதே ,எப்படி திருந்துவார்கள் :)

   Delete
 6. அவர் செருப்பே எடுத்து அடி பின்ன வேண்டும்...!

  ReplyDelete
  Replies
  1. அடி வாங்கி வாங்கியே வைரம் பாய்ஞ்ச உடம்பில் அடி உறைக்குமா:)

   Delete
 7. அனைத்தும் அருமை ஜி !

  தம+

  ReplyDelete
  Replies
  1. நேரம் கிடைக்கும்போது விரிவான கருத்தை சொல்லுங்க ஜி :)

   Delete
 8. தமிழ் மணம் - வைகை 6

  ReplyDelete
  Replies
  1. இது வற்றாத வைகை ,தண்ணீர் வந்தால்தானே வற்றுவதற்கு :)

   Delete
 9. ஜாதகப் பொருத்தம் சேரவில்லை என்று சொல்வதில் இப்படியும் ஒரு அர்த்தமா.?தாலி என்பது மஞ்சக் கயிறா. எந்தகாலத்தில் இருக்கிறீர்கள்அப்போது காலை நீட்டுபவர்களுக்கு என்ன எழுதுவது.?

  ReplyDelete
  Replies
  1. சாதகமாய் இல்லை என்றால் இப்படி சொன்னால் மறுத்துப் பேசுகிறார்கள் :)
   மஞ்சக் கயிர் ஒரு சிம்பாலிக் வார்த்தையா போச்சு :)
   கையை வெளியேயும் காலை உள்ளேயும் நீட்டாதீர்கள் என்று எழுதி விடலாமா :)

   Delete
 10. எப்படியெல்லாம் எழுதி வைக்க வேண்டியிருக்கு! ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. எழுதி வைச்சு என்ன பிரயோசனம் ,படிச்சவனும் அப்படித்தான் இருக்கான் :)

   Delete
 11. ஒட்ட..தகர டப்பா பஸ்சுல...எப்படிபொண்ணுங்க பஸ்ஸில் நிம்மதியா உட்கார்ந்து வர முடியும்.எனக்கு இப்படித்தான் தோனுது.

  ReplyDelete
  Replies
  1. அது பொண்ணுங்களுக்கு மட்டும் உண்டான பிரச்சினை இல்லையே :)

   Delete
 12. ஜி இப்பல்லாம் தாலி மஞ்சக் கயிறு எல்லாம் இல்லை...தங்கத்துலதான்....மஞ்சக் கயிறு ஜஸ்ட் கல்யாணத்தன்னைக்கு மட்டும்தான்.....ஆனா மஞ்சச் கயிரு மாஞ்சாக் கயிறா மாறுவதற்கு அதிக நேரம் எடுக்காதே....

  ஆமாம் தேரவில்லை என்றால் ஜாதகம் பொருந்தலைனு உடான்ஸ் வுடுறதுல நம்ம ஆளுங்க என்னன்றீங்க...ஜி! ஜாதகம் பாக்கறதே அதுக்குத் தானே....ஹஹஹஹ


  ReplyDelete
  Replies
  1. நமக்கு இருந்த' உடான்ஸ்'திரட்டியும் விலைக்கு வந்திரிச்சேன்னு வருத்தமாயிருக்கு :)

   Delete
 13. கை கால் நீளம்! வெட்டி எடுத்துடுவாங்கன்னு எழுதிட வேண்டியது தான் போல!

  ReplyDelete
  Replies
  1. அப்படியே அதில் அரிவாள் சிம்பளையும் போட்டுடலாமா :)

   Delete