27 February 2015

வளரும் நடிகை என்றால் பிரச்சினைதானே :)

            ''மேக்கப்பைக் கலைக்காமல் வீட்டுக்கு நீங்க போவதே இல்லையே ,ஏன் ?''

                    ''நடிகைன்னு தெரிஞ்சா வீட்டைகாலி பண்ணச் சொல்றாங்களே !''


வருகிறது ஊழியர்களின் புதுமைப் போராட்டம் !

      ''அங்கே ஊழியர்கள் போராட்டம் நடக்குதே , ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க வேண்டாம்னு  
கோஷம் போடுறாங்களா ?''
       ''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு  58 வயதில்  ஓய்வு தருவது நியாயமான்னு கேட்கிறாங்க !''
கரந்தை ஜெயக்குமார்27 February 2014 at 06:23
நியாயமான கோரிக்கைதான்


 1. நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் போய்விட வேண்டுமென்று நடிகர்கள் சொல்வதைப் போல , உயிர் போகும் வரை சர்வீசில் இருக்கணும்னு நினைக்கிறது ,அடுத்த தலைமுறைக்கு பாதிப்பைதான் தரும் !
 2. என்ன காரணம் தெரிந்தால் சிரிப்பாகவருகிரது... இன்றைய வாக்காளர்களில் 24 சதவீதம் இந்த வயதினர் இவர்களின் ஓட்டுக்களுக்கு வலை வீசும் முன் பார்த்து இருக்கவேண்டியது வேலை இல்லா பட்டதாரிகள் 54 சதவீதம் ... 24 பெரிதா 54 பெரிதா என தெரியாத மத்திய அரசு ... இன்னும் என்ன என்ன கூத்துக்கள் வருமோ காத்திருந்து பார்ப்போம் .


  1. அதுதானே ,இளைய தலைமுறை வாக்காளர் அதிகரித்து இருக்கும் சூழ்நிலையில் இப்படி அறிவிப்பை வெளியிட்ட நோக்கம் என்னவாக இருக்கும் ?ஒருவேளை ,அடுத்து ஆட்சிக்கு நாம் ( காங்கிரஸ் )வரப் போவதில்லை ,வருபவர்கள் சம்பளம் தர இயலாமல் மல்லு கட்டட்டும் என்று நினைத்து விட்டார்களா ?
  2.  பெற்றோர் செய்ததும் ,குழந்தைகள் செய்ததும் !

   பெற்றோர்கள் குழந்தைகளை 
   'கிரச் 'சில் சேர்த்தார்கள் ...
   குழந்தைகள்  பெற்றோர்களை 
   முதியோர் இல்லங்களில்  சேர்க்கிறார்கள் !


   1. ஒவ்வொரு விசைக்கும் சமமாய் எதிர் விசை உண்டுங்கிற நியூட்டன் விதி இதற்கும் பொருந்துகிறதே !

26 comments:

 1. 01. இது 20 வருஷத்துக்கு முந்திதானே....
  02. வேலை வாங்கும்போது... 58 ஆ....
  03. பழிக்குப்பழி.
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. 1.வீடு கொடுக்காதது வேண்டுமானால் அப்போ நடந்திருக்கலாம் ,மேக்கப் இல்லைனா இன்றும் ,சில நடிகைகளை கண்டு பிடிக்க முடியாதுதான் .மேக்கப் போட்டாலும் பல நடிகர்களை நடிகர் என்றே ஒத்துக்க முடியாது ,அது வேற விஷயம் :)
   2.வேலையில் இருக்கும் போதே வேலை காட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் :)
   3.பிஞ்சு மனத்திலேயே விதைத்து விடுகிறார்களோ :)

   Delete
 2. அட ஆமாம்
  நிரந்தரம் எனச் சொல்லிவிட்டு
  இப்படிச் செய்தால் தவறுதான்

  ReplyDelete
  Replies
  1. உலகமே நிரந்தரமில்லை ,வேலை மட்டும் எப்படி நிரந்தரமாய் தர முடியும் :)

   Delete
 3. Replies
  1. உங்க பொன்னான வாக்கை அளித்ததமைக்கு நன்றி :)

   Delete
 4. Replies
  1. சொல்லுங்க ஜி ,சொல்லுங்க ,ஏதாவது :)

   Delete
 5. 1. கஷ்டம்தான்!

  2. ஹா..ஹா..ஹா.. ('வயதில்' என்கிற வார்த்தை விடுபட்டுப் போயிருக்கிறது)

  3. கஷ்டம்தான்! த.வி.த.சு! & மு.செ.பி.வி.

  ReplyDelete
  Replies
  1. 1மேக்கப் இல்லாதபோது பார்ப்பதுதானே :)
   2.சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் :)
   3.நானும் சரியாக கண்டு பிடித்து விட்டேன் ,பழமொழிகளை :)

   Delete
 6. தமிழ் மணம் ஐந்தருவி

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் ஐந்தருவியில் குளித்த சுகத்தைத் தருகிறதே ,உங்கள் வாக்கு :)

   Delete
 7. அது சரி! இப்பவுமா நடிகைனா வீட்ட காலி பண்ணச் சொல்றாங்க!!?

  ம்ம்ம் தன் வினை தன்னைச் சுடும்...நாம் குழந்தைகளை வளர்ப்பதில்தான் உள்ளது இல்லையா ஜி!

  ReplyDelete
  Replies
  1. மேக்கப் போடலைனா நடிகைன்னே தெரியலே ,எதுக்கு காலி பண்ணச் சொல்லப் போறாங்க :)

   அடிக்கடி என் பையனும் ,நல்லவராவது தீயராவதும் அன்னை வளர்ப்பினிலே னு பாடிக்கிடிருக்கான் ..என்ன செய்யக் காத்திருக்கானோ :)

   Delete
 8. Replies
  1. ஆகாஆகா ஆகா........
   த ம 7 :)

   Delete
 9. எல்லாவற்றையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கமெண்ட்ஸ்களையும்தானே :)

   Delete
 10. வளரும் நடிகை...
  58
  எதிர் வினை...
  எல்லாமே ஹி...ஹி...

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் சரி ,அடுத்தது ?

   Delete
 11. இப்போதுமா.... நடிகைன்னா காலி பண்ணச் சொல்கிறார்கள்????????????

  ReplyDelete
  Replies
  1. துணை நடிகைகள் படும் பாடு உங்களுக்குத் தெரியாததா :)

   Delete
 12. ''நிரந்தர வேலைன்னு சொன்ன பிறகு 58 வயதில் ஓய்வு தருவதை... வண்மையாக கண்டி கண்டிக்கிறோம்..ஆமா.!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. வடிவேலு டயலாக் மாதிரி இருக்கே :)

   Delete
 13. வணக்கம்
  ஜி
  நடிகைக்குஇந்த நிலை என்றால் பிச்சைக்காரனுக்கு எப்படியான நிலை வரும்..... செம அசத்தல் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வீடு இருந்தால்தானே பிரச்சினை ,இல்லாவிட்டால் ஊரெல்லாம் அவர் வீடுதானே :)

   Delete