6 February 2015

கவச உடையில் ஹனி மூனா :)

              ''ஐம்பதாயிரம் செலவு பண்ணி  உனக்கு வைர நெக்லஸ்  வாங்கிஇருக்கேனே ,அப்புறமும் என்ன நாலரை லட்சம்னு முணுமுணுக்கிறே  ?''
            ''உங்களை வாங்கறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே ,வரவேண்டியதை சொன்னேங்க !''

பிள்ளைக்கு தாய்  பால் கொடுக்கலைன்னு இப்ப குத்தலா?
                ''நேற்றைக்கு உன் புருசனோட என்னடி சண்டை ?''
         ''போராட்டம்னு தரையிலே பாலைக் கொட்டுறது அநியாயம்னு சொன்னேன் ...அதுக்கு அவர் 'தாய் பாலைக்  கொடுக்காம  ,நீ வேஸ்ட் செய்ஞ்சது மட்டும் நியாயமா 'ன்னு  கேட்குறார்டி!''
கேள்வி என்னமோ நல்லாத்தான் இருக்கு! ஆனா, ஏதோசொல்லுவாங்களே வேலில போற ஓணான தலைக்கு மேல போட்டுக்கிட்டான்னு......அது போலவோ?!!! ஜி?!

த.ம.
ReplyDelete


 1. இதிலே என்ன சந்தேகம் ?இந்த மனுஷன் வாங்கி கட்டிக்கிறது முதல் தடவை அல்ல !
  இதே கேள்விக்கு ...அழகு குறைஞ்சுடுமேன்னு அந்த அம்மா சொல்ல ...அழகு இருக்கிறவங்கயில்லே, அதுக்கு வருத்தப் படணும்னு இவர் சொல்ல ...படா குஸ்திதான்!
 2. நல்ல கேள்விதான் !
  ReplyDelete


  1. தாய்ப்பாலைக் கொடுங்கன்னு விளம்பரம் பண்ற அளவிற்கு நிலைமை இருக்கிறதை நினைச்சா வருத்தமாய் இருக்கிறது ,அதனால் உண்டான கேள்விதான் இது !
  2. போலியை பேச்சிலேயே கண்டுபிடுச்சிடலாம் !

                     ''அவரை  போலி  டாக்டர்னு சொல்றீயே ,ஏன் ?''

                         ''கண்லே பூ விழுந்து இருக்குன்னு சொன்னா ,மல்லிகைப் பூவா , பிச்சிப் பூவான்னு கேட்கிறாரே !''

  3. கவச உடையில் ஹனி மூனா :)   நிலவுக்கு சென்று வர  பணம்  இருந்தாலும்கூட  
   ஹனி MOONனை பூமியில்தான்  கொண்டாட முடியும் ! 22 comments:


 1. 01. இதுக்கு அவனை வெளக்கமாத்தை எடுத்து அடிச்சு இருக்கலாம்.
  02. கேள்வி சுரீர்னு இருக்கே.....
  03. இவணை நம்பி கண்ணைக்கொடுத்து......
  04. ஏன் வானத்துல பறந்துக்கிட்டே......

  தமிழ் மணம் நாளை...

  ReplyDelete
  Replies
  1. 1அடித்தாலும் உறைக்காதே:)
   2.தெருவிலே நடந்த போராட்டம் ,வீட்டுக்கு வந்துடுச்சு :)
   3.பூவை எடுக்க ஊசியை பயன்படுத்துவாரோ :)
   4.அந்தரத்தில் அந்தரங்கம் :)
   நாளை ,நவரத்தினமா ?

   Delete
 2. Replies
  1. கண்ணுக்குள் விழுந்த பூவையுமா :)

   Delete
 3. Honey இருக்கும் போது Moon எதற்கு...? ஹா.... ஹா...

  ReplyDelete
  Replies
  1. கனி இருக்க காய் கவர்ந்தற்று என்று கூட சொல்வீங்க ,வலைச்சர வள்ளுவராச்சே நீங்க ..., :)

   Delete
 4. தமிழ் மணம் ஹி ஹி - நால்வர் அணி

  ReplyDelete
  Replies
  1. நான்கு கில்லாடிகள் என்றும் போடலாமே :)

   Delete
 5. கவச உடையில் ஹனி மூனா..என்றவுடன். மாப்பிள்ளை ஏற்கனவே இருக்கும் மனைவிமார்களுக்கு தெரியாம இருப்பதற்கு கவச உடையில் ஹனிமூன் போறாராக்குமுன்னு நெணச்சுபுட்டேனுங்கோ....

  ReplyDelete
  Replies
  1. பல்பு வாங்கிட்டேன்னு சொன்னால் போதாதா :)

   Delete
 6. ஹாஹாஹா! சூப்பர் ஜோக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. நம்ம கிங் ராஜ் ஜி ரசித்ததை நீங்களும் ரசித்தீர்களா ,சுரேஷ் ஜி :)

   Delete
 7. தேன் நிலவை ரசித்தேன்
  தம+1

  ReplyDelete
  Replies
  1. கடைசியா , நீங்க கொடுத்த கேக்கைச் சாப்பிட்டேன் .அடுத்த கேக் ரெடியாச்சா :)

   Delete
 8. // ''உங்களை வாங்கறதுக்கு எங்க அப்பா செய்த செலவுலே ,வரவேண்டியதை சொன்னேங்க !''//

  புருசனைத் துப்பட்டாவில் முடிஞ்சி வெச்சிருந்தா இப்படியெல்லாம் கணக்குப் பார்க்கலாம். இல்லேன்னா பொண்டாட்டி பாடு திண்டாட்டம்தான்!

  ReplyDelete
  Replies
  1. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் ,விலைக்கு வாங்கப் பட்ட அடிமாட்டுக்கு எங்கே சூடு சொரணை இருக்கப் போகிறது :)

   Delete
 9. பரவாயில்லைஎ ஜி ரொம்ப கம்மிதானோ 41/2 லட்சம்....ஹஹஹ்ஹ்

  கண்ணுல பூ...ஹஹஹஹஹ

  ஜி ஹனி மூன் எல்லாம் பழசு ஜி....இப்பல்லாம் ஹனிமார்ஸ்....புக் பண்ணிட்டாங்களா?!!!

  ReplyDelete
  Replies
  1. செவ்வாயில் குடியேற்றம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நாசாவே சொல்லிவிட்டது ,அதுவரை 'செவ்வாயை 'ரசித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் :)

   Delete
 10. ”நாலரை லட்சம் பாக்கின்னு” சரியாத்தான் சொல்லி இருக்காங்க

  ReplyDelete
  Replies
  1. கணக்கிலே அவங்க புலியாச்சே :)

   Delete
 11. வணக்கம்
  ஜி
  மாப்புள்ள கேட்ட கேள்வி சரிதான்...
  தற்போதைய காலம் இதுதான்..அழகு குறைந்துவிடும் என்ற காரணம்...இரசிக்கவைக்கும் நகைச்சுவை.த.ம 11
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சொன்ன பதிலும் சரிதானே :)
   தாயே இப்படி கவலைப் படலாமா :)

   Delete