8 February 2015

மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான்:)

  ---------------------------------------------------------------
இதுக்குத்தான்  பழகவிடக் கூடாதுன்னு சொல்றது :)
               ''டாக்டர் ,உங்களுக்கும் வயிறு எரியுதா ,பேஷண்ட் எவனும் பீஸ் கட்டாம ஓடிப் போயிட்டானா ?''
          ''சும்மா ஓடியிருந்தாலும் பரவாயில்லே,நர்சையும் தள்ளிக்கிட்டு போயிட்டானே !''  
                                                                                                                                               

மனைவி இப்படின்னா ..கஷ்டம்தான் :)         
         ''உன் மனைவி உன்னை சந்தேகப்படுறான்னு சொல்றீயே ,ஏன்?''
        ''புரை ஏறும்போது யாரோ என்னை நினைக்கிறாங்கன்னு 
சொன்னா ,'நான் இங்கே இருக்கும் போது எந்த சிறுக்கி உங்களை 
நினைக்கிறா 'னு கேட்கிறாளே !''

கடன் குடுத்தவன் எவனாவது நெனச்சிருப்பான் அப்படீன்னு சொல்லி சமாளிச்சிரணும். ஹிஹி அதுதான் நம்ம ஐடியா.

கோபாலன்
ReplyDelete

Replies

 1. எனக்கு தெரியாம கடன் வேற வாங்கிறீங்களான்னு அடுத்த அடி விழுமே ,எப்படி சமாளிக்கிறது ?
 2. நம்ம சின்ன வீட்டுச்சமாச்சாரம் தெரிஞ்சிடுச்சேன்னு உடனே கால்ல விழவேண்டியதுதான்!
  த.ம.8
  ReplyDelete

  Replies


  1. மிதிக்க வசதியா போயிடுமே .பரவாயில்லையா ?
     ''சித்த மருத்துவர் ஜோதிடரும் ஆனார் சரி ,ஜெயிலுக்கு ஏன் போனார் ?''
     '' என் புதிய கண்டுபிடிப்பு ,சகல தோஷ நிவர்த்தி மாத்திரைன்னு  மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டாராம்  !''
கொஞ்சம் கூடுதலாகத்தான் போயிட்டாரு
அடுத்து யோசிச்சு சரிபண்ணிடுவாருன்னு
நினைக்கிறேன்
ஏன்னா மாற்றி யோசிக்கிறவங்க ஜெயிக்கிற
காலமில்ல இது இல்லையா ?
ReplyDelete

Replies

 1. (ஏ)மாற்றி யோசிக்கிறவங்க காலம்தான் இது !
 2. அதானே நடக்குது? மாத்திரைக்கு பதில் தீர்த்தம்!
  விரைவில மாத்திரை வந்து விடும்!
  ReplyDelete


  1. தீர்த்த மாத்திரை என்பார்களோ ?
  2. உங்களுக்கென்று ஒரு பாணி. அட இது கூட நல்லாயிருக்குங்கோ.
   ReplyDelete


   1. உங்க பாணியில் எழுதினால் புத்தகம் ,மின்னிதழ் ஆகிவிடுகிறது பாஸ் ,என் எழுத்து வெறும் டைம் பாஸ் தான் !   1. எங்குமிருக்கும் காக்கா [ஆட்களும்தான் ]!

    ''மரத்தடியிலே பைக்கை நிறுத்தினா போதும் ,காக்கா அசிங்கம் பண்ணிடுதே !''
     ''ஆமா ,காக்கா இல்லாத இடமும் இல்லை ,அது 'கக்கா '

   2. பண்ணாத பைக்கும்  இல்லைன்னு சும்மாவா சொன்னாங்க ?''


    1.  தலைவலி வரலாம் ,ஆனா வரக் கூடாது !


     தலைவலி வந்தால் நாம 'பாமை 'தடவிக்குவோம் !
     'பாம் வெடிக்கும் 'ன்னா போலீசுக்கு தலைவலி ,
     நம்ம எல்லாரையும் தடவ ஆரம்பிச்சுடுவாங்க !32 comments:

 1. 01. டாக்டர் ஒழுங்காக சம்பள ம் கொடுக்கலையோ..?
  02. நினைக்கிறது பொம்பளையாகத்தான் இருக்கணுமா ?
  03. சகல பேருக்கும் தோஷம் பார்த்தவரு தனக்கு பார்க்காமல் போயிட்டாரே....
  04. மரத்தடி சாமியார் சொன்ன குறள் மா3 இருக்கே...
  05. அப்படீனா தலைவலி வந்தால் டாஸ்மார்க்தான் போகணும்.
  தமிழ் மணம்

  ReplyDelete
  Replies
  1. 1.நொம்பலம் கொடுத்திருப்பாரோ :)
   2.சந்தேகம் வேறு யார் மீது வரும் மனைவிக்கு :)
   3.'ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி, கழுநீர்ப் பானையில் விழுமாம் துள்ளி' பழமொழிதான் ஞாபகம் வருகிறது :)
   4.சரியாதானே சொல்லி இருக்கார் :)
   5.அந்த விசயத்தில் நம் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்:)

   Delete
 2. Replies
  1. நமக்கு தமிழ்வெளி (திரட்டி )பிடிக்கும் தலைவலி பிடிக்காது ,அப்படித்தானே ஜி )

   Delete
 3. பேஷண்டுக்கு பர்சும் பத்திரம் , நர்சும் பத்திரம் .

  புரை ஏறும்போது யாரோ என்ன திட்டறாங்கனு சொல்லிருந்தா , மனைவி சந்தோஷப்பட்டிருக்கும் .

  அந்த தலைவலிக்கு பாமைத்தடவினும் , பாமுக்கு ஆளைத்தடவினாலும் 'சுள்'ளுனு ஏறும் .

  தம+

  ReplyDelete
  Replies
  1. டாக்டரும் அந்த இரண்டைத்தானே விரும்புறார் :)

   என்னைத் தவிர திட்டுற உரிமை யாருக்கு இருக்குன்னு கேட்பாங்களே :)

   'சுள் 'ளுன்னு எது ஏறும் :)

   Delete
  2. டாக்டர் நர்ஸ விரும்புறாறோ இல்லையோ ! கண்டிப்பா பர்ஸ விரும்புவாரு .

   அதத்தான அவரும் சொல்லுவாரு . உன்னத்தவிர என்ன இந்த உலகத்துல வேற யாரு திட்டப்போறாங்க ? னு

   முதல்ல வர்ர சுள்ளு தலைவலிய ்குறைக்கும் . அடுத்துவர சுள்ளு தலைவலிய ஏத்தும் .

   Delete
  3. சபாஷ் ,எதிர்ப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டா :)

   Delete
  4. எல்லாம் தங்களிடம் ருசித்த சொற்றாடல்தானே ஜி .

   Delete
  5. நார் நானே 'மணக்கையில் ' பூவுக்கு சொல்லணுமா:)

   Delete
 4. Replies
  1. போன 'பிகர் 'வராதுதான் :)

   Delete
 5. பாவம் !! அவரே பேச்சு துணைக்கு னு இருந்தது அந்த நர்ஸ் மட்டும் தான்,வந்த ஒரேயொரு பேசன்ட்டும் இப்படியா பண்ணனும்:))

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் ரொம்பத்தான் அறுக்க ஆரம்பிச்சிட்டார் போலிருக்கு :)

   Delete
 6. யார் பெட்டர்னு நர்ஸ் முடிவு பண்ணிட்டாங்க போல!

  :)))))))

  ReplyDelete
  Replies
  1. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்துவோமே :)

   Delete
 7. யார் பெட்டர்னு நர்ஸ் முடிவு பண்ணிட்டாங்க போல!

  :)))))))

  ReplyDelete
  Replies
  1. எப்பவும் உங்க கமெண்ட் TWINS சாவே வருதே :)

   Delete
  2. மொபைல் தவறு! நான் ஒரு தடவெ க்ளிக் செய்தா............. ரெண்டு வாட்டி பப்ளிஷ் பண்ணுது!

   :)))))))))))))))

   Delete
  3. நான் ஒருதரம் சொன்னா ,என் மொபைல் ரெண்டுதரம் சொல்லும் :)இப்படியும் நீங்க பஞ்ச் டயலாக் சொல்லிக்கலாம் :)

   Delete
 8. நர்சையும் தள்ளிக்கிட்டு போயிட்டானே ...அப்ப...டாக்டருக்கு வயிறு எரியத்தான் செய்யும்... பின்னே...கூலிங்காவா ...இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஃபீசை மட்டும் கொடுக்காமல் போயிருந்தாகூட ,டாக்டர் வருத்தப்பட்டிருக்க மாட்டாரோ :)

   Delete
 9. தமிழ் மணம் ஹி ஹி ஒரு வாரம்

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேலை ,ஏழாம் பொருத்தம் இல்லைதானே :)

   Delete
 10. காக்கா சூப்பர்
  ஹ ஹா ஹா..... தம+1

  ReplyDelete
  Replies
  1. காக்கா சூப்பர்தான் ,அது செய்ற வேலை கடுப்படிக்குதே :)

   Delete
 11. பாவம் டாக்டர்... அவரு வச்சிருந்த நர்ஸ் போச்சே... (வேலைக்கு வச்சிருந்த ஜி)
  எந்தச் சிறுக்கியா இருந்தா என்ன அவளாவது நினைக்கிறா பாருன்னு சொல்லிட்டு அடி வாங்குமுன்னே எஸ்ஸாயிட வேண்டியதுதானே...
  காக்கா... கக்கா... சோக்கா கீது ஜி...

  மற்றவையும் நண்பர்களின் கமெண்ட்டும் அருமை..

  ReplyDelete
  Replies
  1. விவரமாச் சொல்லுங்க ,டாக்டர் வீட்டுலே குழப்பம் வந்திடப்போவுது :)
   எஸ்ஸாகிற தைரியம் அவருக்கு வரலை போலிருக்கே:)
   உங்க கமெண்ட்டும் ஷோக்கதாதான் கீது :)

   Delete
 12. வணக்கம்
  ஜி
  டாக்கடர் நர்சை தள்ளிட்டு ஓடியது- உதவிக்காக.. ஜி
  மற்றவை எல்லாம்இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி...த.ம 10

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நர்ஸ், மனம் கவர்ந்தவரின் உயிரைக் காப்பாற்ற இப்படி செய்திருப்பாரோ :)

   Delete
 13. ஃபீஸும் குடுக்கல, நர்சையும் விட்டு வைக்கல! அய்யோ பாவம் டாக்டர்!

  ரசித்தேன்.

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. ரசித்து வாக்கிட்டமைக்கு நன்றி !

   Delete