13 March 2015

ஆழம் இது அய்யா ,அந்த பொம்பளே மனசுதான்யா :)

  ------------------------------------------------------------

மருமகன் அப்பாவின்னா இப்படியும் ஏமாற்றலாமா :)                   

           ''ஏம்மா ,மாப்பிள்ளைக்கு  நான் போட்டது பித்தளை மோதிரம்னு  ,இன்னுமா  அவர் கண்டு பிடிக்கலே ?''

                   '' அவர்தான்  உலோகம் தெரியாத ஆளாயிருக்காரே !''

ஆழம் இது அய்யா ,அந்த பொம்பளே மனசுதான்யா !

               ''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டா  பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குங்கிறது பழமொழி...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''
            ''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ  நினைக்கிறதையே  கண்டுபிடிக்க  முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது  ?''
துரை செல்வராஜூ13 March 2014 at 08:11
இதுக்கு அதுவே தேவலாம்!..


 1. பிறாண்டுவது ரெண்டுக்குமே உள்ள பொதுவான குணம் ,இதில் எது தேவலாம் ?
 2. சோக்காக் கேட்டுக்கினாம் பாரு ஒரு கேய்வி...!


  1. ஐந்தறிவு நினைப்பதை கண்டுபிடிக்க முடியாது ,ஆறறிவு காரிகையின் மனதில் உள்ளதைக் கண்டுபிடிக்க ஏழாம்அறிவுதான் தேவைப்படுமோ?
  2. சிலநேரம், சரித்திரபூரவமான உண்மைகளையும் ஜோக்குகள் வாயிலாகத் தெரிவிக்கிறீர்கள் என்பது ஆச்சரியமூட்டுகிறது நண்பரே!..


   1. சரித்திரம் ,பூகோளம் என்றெல்லாம் இதில் ஒன்றுமில்லை...மேலே 'லேபில்' என்பதில் உள்ள மூன்றாவதே காரணம் . ஹிஹிஹி ...
   2. நடிகர்கள் சொல்வதும் 'டூப்பு 'தானா ?

                  ''அந்த நடிகர், அடுத்த படத்தில் நடிப்பதற்கு  உயிரோட 
                   
   3. இருப்பாரான்னு தெரியலேன்னு சொல்றீயே ,ஏன் ?''
   4.          ''இப்ப நடிக்கிற படத்திலேயே 'உயிரைக் 
   5. கொடுத்து ' நடிச்சுகிட்டு இருக்காராம் !''


   6.  யாருக்கு பதவி கிடைக்கும் ?    'லக்கும் 'இருந்து  ...
    பல்லக்கும்  தூக்கத் தெரிஞ்சா போதும் ..
    பதவி கிடைத்து விடும் அரசியலில் !26 comments:

 1. 01. அடடே ல லோ ஆனதாலே எத்தனை பெரிய Aமாற்றம்.
  02. 7வது அறிவு மனுசன் வந்தால் சொல்லிடுவானா ?
  03. இது அரசியல்வாதிக்கும் பொருந்தும் போலயே...
  04. கடைசியிலே தூக்குறவனுக்கு சிவலோக பதவிதான் கிடைக்குது.

  ReplyDelete
  Replies
  1. 1.உண்மை தெரியாதவரை ஏமாற்றமில்லை :)
   2.இன்னும் அரை சேர்ந்தால் வேண்டுமானால் சொல்லலாம் :)
   3.நடிக்கத் தெரிந்த எல்லோருக்குமே பொருந்தும் :)
   4.அந்த பதவிதான் கேட்காமலே கிடைக்குமே :)

   Delete
 2. "'லக்கும் 'இருந்து ...
  பல்லக்கும் தூக்கத் தெரிஞ்சா போதும் ..
  பதவி கிடைத்து விடும் அரசியலில்!" என்பது
  உண்மை தானே!
  அது தானே - நான் கூட
  நாடாளுமன்ற நாற்காலியில் இருக்க
  போகமுடியாமல் இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. நமக்கு லக்கு மொக்கைப் போடுவது மட்டும்தானே :)

   Delete
 3. 1. உலோகம் தெரியாத ஆள்! ஹா..ஹா..ஹா..

  2. பாவங்க அவரு..

  3. ஹா...ஹா....ஹா.... சிலர் நடித்து நம் உயிரை எடுப்பார்கள்!

  4. ம்ம்ம்ம்.... அதென்னவோ உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. 1.ஒருநாள் மாப்பிள்ளை உண்மை அறிந்தால் மாமனார் என்ன பாடுபடப் போகிறாரோ :)
   2 .பாவம் அவர் மட்டும்தானா :)
   3.அப்படிப் பட்டவர்கள் நடிக்கையிலேயே சாவது நல்லது :)
   4.ரோசக்காரன் எவனும் அரசியல்வாதி ஆகமுடியாது என்பதும் உண்மைதானே :)

   Delete
 4. ஏமாறுவது தான் தவறு ஜி...

  ReplyDelete
  Replies
  1. ஏமாற்றுவதும் தப்புதானே ஜி :)

   Delete
 5. அருமையாக உள்ளது அனைத்தும் தம+1

  ReplyDelete
  Replies
  1. அனைத்துக்கும் சேர்த்து ஒரு த ம போட்டதுக்கு நன்றி :)

   Delete
 6. ''என்னங்க ,பூனை கண்ணை மூடிக்கிட்டா பூலோகம் இருண்டு விட்டது என்று நினைக்குங்கிறது பழமொழி...இதை சொல்றதிலே உங்களுக்கென்ன சங்கடம் ?''
  ''நான் உனக்கு தாலிகட்டி இருபது வருசமாச்சு ...நீ நினைக்கிறதையே கண்டுபிடிக்க முடியலே ,பூனை என்ன நினைக்குதுன்னு எப்படி கண்டுபிடிக்கிறது ?''

  கடல் (பொம்பள மனசு ) இன்னமும் ஆழமாய்ப் போய்க்கொண்டு இருக்கையில் ஏழாம்
  அறிவு கிட்டியும் ஒண்ணும் பண்ண முடியாது ஜி :) நான் சொல்வதும் சரி தானே ?...:))

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆழத்தில் இறங்கி எவனும் முத்தெடுக்க முடியாது :)

   Delete
 7. வணக்கம்
  ஜி
  எல்லாம் கலக்கல் நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் வந்து கலக்கியதற்கு நன்றி :)

   Delete
 8. அரசியலில் பதவி கிடைக்க முதலில் அல்”லக்”கையாக இருக்க வேண்டும் என்பது புரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. அல்'லக்'கை ,சரியான வார்த்தைப் பிரயோகம்,ரசித்தேன் :)

   Delete
 9. Replies
  1. ஆங்கிலப் பட விமர்சனம் ,ஆங்கிலத்தில் கமெண்ட் ..அசத்துறீங்க ஜி :)

   Delete
 10. பாவங்க மாப்பிள்ளை இப்பதான் பால் குடி மறக்காத பச்சப் புள்ள.....

  ஹஹஹஹ அட அந்த முத மாப்பிள்ளைதானேங்க (பால் குடி மறக்காத பச்சப் புள்ள) இங்க பாவங்க......உலகமே தெரில அப்புறம் எங்க பொம்பள மனச படிக்கப் போறாரு,,,ஹஹஹஹ

  அவரு நடிச்சு உயிர விட்டா பரவால்ல ஜி நம்ம உயிர எடுக்காம இருந்தா ஓகே....என்ன சொல்லறீங்க ஜி?

  லக்கு பல்லக்கு செம...ஜி! + அல்லக்கை சேர்த்துக்கங்க ஜி ஹாஹஹ்ஹ

  ReplyDelete
  Replies
  1. இந்த பச்ச பிள்ளைக்கு ரெண்டு சிவப்பு பிள்ளே வேற பொறந்துடுச்சே :)

   Delete
 11. அட கருத்து போட்டுட்டுப் பார்த்தா நம்ம கதையேதான் நடிகருக்கு ஸ்ரீராமும்.....அரசியல்வாதிக்கு ஜிஎம்பி சாரும்...சொல்லிருக்காஹ.....

  ReplyDelete
  Replies
  1. உங்க மைண்ட் ரீடிங்கை அவர் படித்துவிட்டாரோ :)

   Delete
 12. அவர்தான் உலோகம் தெரியாத ஆளாயிருக்காரே !'';நல்ல மாப்பிள்ளை!

  ReplyDelete
  Replies
  1. உலகம் தெரிஞ்சா, முதல் உதை மாமனாருக்குதான் :)

   Delete
 13. உண்மையிலே..ஆழம்தான் அய்யா....

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் அளந்து பார்த்து தோற்ற மாதிரி இருக்கே :)

   Delete