2 March 2015

வீட்டுக்கு வந்த ' நவக்கிரக நாயகி ':)

----------------------------------------------------------

வாட்டர் தெரபி தலைக்கீழாய் செய்தால் :)
            ''அதிகாலை ஐந்து  மணிக்கு வெறும் வயிற்றில் மூணு லிட்டர் தண்ணீர் குடித்தால்    நோயே  வராதுங்கிறது சரி ,ஐந்து மணிக்கு எப்படி எந்திரிக்கிறது ?''
        ''இரவு தூங்கிற முன்னாலே மூணு லிட்டர் தண்ணீர் குடிச்சுப் பாரேன் !''
  மனைவியின் முன் ஜாக்கிரதை !
           ''வேலைக் காரி என் ஜீன்ஸ் பேன்ட் .சட்டைப் போட்டுக்கிட்டு  
வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
               ''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தா ...நான்னு நினைச்சு 
அவகிட்டே நீங்க ஏடாகூடமா நடந்துக்க  கூடாதுன்னுதான் !''
அடக் கடவுளே
ஜீன்ஸ் போட்டா இன்னும் அழகாத் தெரிவாளே ?
யோசிக்க வேண்டாமோ ?

 1. ஜீன்சினால் சீன் கிரியேட் ஆகாமல் இருந்தால் சரிதான் !
 2. இதுக்கு ரூம் போட்டு யோசிச்ச மாதிரி தெரியலே !

  நகையை அடகு வைச்ச சீட்டை ரொம்ப பத்திரமா வச்சிக்கணும் போலிருக்கு ...
  நகை திருப்புறதுக்கு முன்னாடியே மர்ம மனிதர்களிடம் கூட காட்ட வேண்டிய நிலைமை உண்டாகி விட்டது ...
  நான்கு நாட்களுக்கு முன்னால் மதுரை செக்கானூரணியில் ...
  மூன்று வீடுகளில் கொள்ளை அடித்து உள்ளார்கள்...
  ஒரு வீட்டில் இருந்த பெண்மணியிடம் நகை ,பணத்தைக் கேட்டு மிரட்டி உள்ளார்கள் ...
  எதுவும் தன்னிடம் இல்லையென்று சொல்ல ...
  கொள்ளையர்கள் நம்ப மறுத்து பாசத்துடன் ...
  முறைப்படி திருமணம் நடந்ததா ,ஓடிப் போய் கட்டிகிட்டியா என்று கேட்க ...
  முறைப் படிதான் நடந்தது என்று சொல்ல ...
  அப்படின்னா ,கல்யாண ஆல்பத்தை காட்டு என ,அதைப் பார்த்து ...
  கல்யாண கோலத்தில் அணிந்து இருந்த நகைகள் எங்கே என்று கேட்க ...
  அடகு வைத்து இருப்பதாக அந்த பெண்மணி சொல்ல ...
  நம்ப மறுத்த கொள்ளையர்கள் ...
  அடகுசீட்டை பார்த்த பின்தான் ...
  கிடைத்ததை சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள் !
  எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் இந்த கொள்ளைக்காரர்களும் !


 3. வலிப் போக்கன்3 March 2014 at 18:51
  இவர்களை இண்டர்போல் திருடர்கள் என்று சொல்லலாம்
  ReplyDelete


  1. Bagawanjee KA3 March 2014 at 18:52
   விட்டால் ஜாதகத்தை கேட்பார்கள் போலிருக்கே !
  2. வீட்டுக்கு வந்த ' நவக்கிரக நாயகி ':)

                ''உங்க மருமகளை 'நவக்கிரக நாயகி 'ன்னு சொல்றீங்களே ,ஏன் ?''
               '' தினமும் கோவிலுக்குப் போன  என் பையன் நவக்கிரகத்தை சுற்றுவதற்குப்  பதிலா ,இவளை சுற்றிக்கிட்டு  இருந்திருக்கானே  !''

  3. விவேகானந்தர் சொன்னதில் அர்த்தம் உள்ளது !

   நூறு இளைஞர்கள் என் பின் வரட்டும் 
   நாட்டையே மாற்றிக் காட்டுகிறேன் ...
   இது ,விவேகானந்தர்  அன்று சொன்னது !
   இன்று லட்சம்  இளைஞர்கள் தயார் 
   ஒரு 'விவேகானந்தரை''காணாம் !

24 comments:

 1. 01. மூதேவி 5 லிட்டரையும் குடிச்சிட்டு தூங்கித்தொலையேன்
  02. இதுகூட வசதிதானே கட்டிப்புடிச்சுப்புட்டு நண்பன் நந்தகுமாருனு நினைச்சுட்டேனு சொல்லிடுவானே...
  03. இனிமேல் போலியான அடகு சீட்டை வாங்கி வச்சுக்கிறலாமோ..
  04. எல்லாம் 60 நாளைக்குத்தான்
  05. இனி விவேகாநந்தரே வந்து பிறந்தால்தான்

  தமிழ் மணம் இணைக்க முடியலையே....

  ReplyDelete
  Replies
  1. 1.ஐந்து லிட்டரைக் குடித்தால் மூன்று மணிக்கே விழிப்பு வந்திருமே :)
   2.அவனா நீன்னு மனிவி கேட்டா அசிங்கமா போகுமே :)
   3.வர்றவன் நம்பணுமே :)
   4.ஏன் முப்பது நாளைக் குறைத்து விட்டீங்க :)
   5.மீண்டும் வந்தால் உலகத்தைப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார் :)

   Delete
 2. வாட்டர் தெரபி கலகல சிரிச்சு முடியலை........
  அவ தானே அவனுக்கு நவ.....................கிரகம்...
  அனைத்தையும் ரசித்தேன்...கலகலப்பு தான்.
  தம 1

  ReplyDelete
  Replies
  1. இதை பிளாடர் தெரபி என்று சொல்லலாமா :)
   கிரஹலக்ஷ்மியை மணந்து டைவர்ஸ் செய்தாரே ஒரு நடிகர் ..உங்கள் நினைவுக்கு வருகிறாரா :)

   Delete
 3. வணக்கம்
  ஜி

  விவேகானந்தர் நகைச்சுவை செம அசத்தல்.... மற்றவைகளை இரசித்து மகிழ்ந்தேன் த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சிலுவைகள் செய்யலாம் ,சுமப்பதற்கு யாரும் தயாராய் இல்லையே :)

   Delete
 4. சீக்கிரம் எழுந்திருக்க இப்படி வழியா ஜி...? ஹா... ஹா...

  பல னந்தாக்கள் பெருகி விட்டார்கள்...?

  ReplyDelete
  Replies
  1. சிரமப் பரிகாரம் பண்ணிக்க எழுந்துதானே ஆகணும்:)
   பலான நந்தாக்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

   Delete
 5. தூங்குவதற்கு முன்னால் குடித்தால் எப்படி அவன் தூங்குவான்.... ராத்திரி முழுத்தும் பாத்ரூமுக்கு நடந்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்...
  பக்கா திருடன் என்பதை நிருபிக்கிறாங்களே...தம+1

  ReplyDelete
  Replies
  1. நம்ம ஆளுக்கு பிளாடர் படு ஸ்ட்ராங் ,ஐந்து மணிக்குதான் டான்னு எழுந்திருப்பான் :)
   நல்ல வேளை,போட்டுக்கிற சொக்காயையாவது விட்டு வைத்தாங்களே,பக்கா திருடர்கள் :)

   Delete
 6. அருமையான ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரசனையான கருத்துக்கு நன்றி :)

   Delete
 7. திருட வருபவர்களும் செக் செய்து கொள்கிறார்கள். மாமியாருக்கு அவள் நவகிரகத்தில் சனியாகத் தெரியாதவரை சரி.விவேகாநந்தரைவிட அதிகம் பேசும் நம் தலைவர்கள் என்னானார்கள்.

  ReplyDelete
  Replies
  1. சாதா திருடர்களும் கிரிமினலாய் யோசிக்க ஆரம்பித்து விட்டார்களோ :)
   சனீஸ்வரிக்கு பரிகாரம் தனி நெய்விளக்கு போட வேண்டியது தான் :)
   விவேகானந்தர் பெயரைச் சொல்லி வோட்டு பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள் :)

   Delete
 8. Replies
  1. கூட்டாஞ்சோறு என்றும் சொல்லலாமே :)

   Delete
 9. தமிழ் மணம் நவரத்தினம்

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தைப் பார்த்தால் பதிவர்கள் எல்லோர் மேலும் வாக்கு மழை செமையாய் பொழிந்திருக்கே:)

   Delete
 10. வாட்டர் தெராபி ஹஹஹஹ் செம...ஜி!

  நவகிரஹ நாயகி...ஹஹஹ்..

  விவேகானந்தர் அருமை! உண்மை!

  ReplyDelete
  Replies
  1. உங்க கமெண்டைப் பார்த்ததும் சந்தேகம் ....நவகிரஹ என்பது சரியா .நவக்கிரக என்பது சரியா :)

   Delete
 11. Replies
  1. ரசித்தமைக்கு நன்றி :)

   Delete
 12. விவேகானந்தர் சொன்னதில் அர்த்தம் உள்ளது !

  ReplyDelete
  Replies
  1. அன்று சொன்னதன் அர்த்தம் ,இன்றுதான் புரியுது :)

   Delete