21 March 2015

இந்த கருவைக் கலைக்க பெண்களே அஞ்சுவதில்லை :)

---------------------------------------------------------------------------------

அதிசயப் பிரசவம் !

          ''என்னடி சொல்றே .உனக்கு இரட்டைக் குழந்தை பிறந்தது அதிசயமா  ?''
           ''முதல் குழந்தைப் பிறந்த மூன்று மாதம் கழித்து அடுத்த குழந்தைப் பிறந்தானே !''


இந்த கருவைக் கலைக்க பெண்களே அஞ்சுவதில்லை !            

            ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா ,என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''

           ''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''
 டிபிஆர்.ஜோசப்21 March 2014 at 10:14
ஹஹ்ஹஹ்ஹா!! ஆம்லெட்டும் 'அடை' மாதிரிதான இருக்கும்?

 1. அடைகாக்கப் படவேண்டிய முட்டை ,ஆம்லேட் ஆனால் மீண்டும் அடையாகும் விந்தையை உங்களால் புரிந்து கொண்டேன் !
 2. Ramani S21 March 2014 at 03:26
  ஆமாம் நிச்சயம் அறிய வாய்ப்பில்லைதான்.

  1. பசும் பால்,எருமைப் பால் எங்கே இருக்கு ?பாக்கெட் பால்தானே இருக்குன்னு சொல்ற அபார்ட்மென்ட் தலைமுறை உருவாகியிடுச்சே!

பருப்பு வேகுறதுக்கே ஒரு சிலிண்டர் வேணும் !

      ''ரேசன்லே கிடைக்கிற  துவரம் பருப்பை .துயரம் பருப்புன்னுசொல்றீங்களே ,ஏன் ?''

        ''லேசுலே வேக மாட்டேங்குதே !''

கவலை மறக்க கோவிலுக்குப் போனா ....?

கோவிலில் உள்ளே  நுழையும்வரை 

ஆயிரம் ஆயிரம் கவலை ...
நுழைந்தபின் ஒரே ஒரு கவலை ..
வெளியே விட்ட செருப்பு இருக்குமா ?'

24 comments:

 1. 01. இதென்ன கொடுமை.
  02. அட முட்டைக்கு இப்படியும் கதை இருக்கா ?
  03. அப்படினாக்கா ? மண்ணெண்ணைக்கு மண்ண் எண்ணை அப்படினு சொல்லலாமா...?
  04. அப்புறம் எப்படி ? அப்பிளிகேஷன் செல்லும்

  ReplyDelete
  Replies
  1. 1.இதை ஒற்றைக் குழந்தை என்பதா ,இரட்டைக் குழந்தை என்பதா :)
   2.வாய்க்கு ருசியா இருக்கிறது மட்டும்தானே தெரியும் :)
   3.மண்ணில் இருந்து வந்ததுதானே :)
   4.செருப்பை எவனும் தூக்கிறக் கூடாதுன்னு வேண்டிக்கலாம் :)

   Delete
 2. பின்னூட்டத்திலும் முத்திரை பதிப்பவரின் பதிவுகளின் நகைச்சுவைக்குக் கேட்கவா வேண்டும்!!!

  ஹஹஹா

  தம 2

  ReplyDelete
  Replies
  1. கேட்கத்தான் தோன்றுகிறது ,உங்களின் விமர்சனத்தை :)

   Delete
 3. அட இப்படி இப்படி எல்லாம் நடந்தா எப்படி இருக்கும் .

  ReplyDelete
  Replies
  1. அண்ணன் தம்பிக்குள் மூன்று மாத வித்தியாசம் என்பதை நம்பத்தான் முடியாது :)

   Delete
 4. Replies
  1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்னு நினைக்கிறவனாச்சே:)

   Delete
 5. 1.. ஹா... ஹா..ஹா.. இது என்னவகைப் பிரசவம்!!

  2. ஹா..ஹா... ஒருமுறையாவது அவனுக்குச் செயல்முறை விளக்கம் காட்டிடக் கூடாதோ!

  3. ஹா...ஹா....ஹா... துயரத்துடன் சோகச் சிரிப்புச் சிரிக்கணுமோ!

  4. செருப்புக்கவலை!

  ReplyDelete
  Replies
  1. 1.கிளினிக்கல் மிராக்கிள்னு சொல்லலாமோ :)
   2.அதற்கு 21 நாள் பொறுமை வேண்டுமே :)
   3.அதுக்குத்தானே ,இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகளேன்னு பாடி வச்சிருக்காக :)
   4.அவனவன் நெஞ்சிலே ஆயிரம் கவலைகள் ,அதில் தலையாயது இந்த கவலை :)

   Delete
 6. தலைப்ப பார்த்ததும் பகவான்ஜி சீரியஸ்சா ஏதோ சொல்லப்போறார்னு பாத்தா வழக்கமான அதே ஸ்டைலில் காமெடியாக கலக்கி விட்டார்.
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. பல்பு வாங்கிட்டேன்னு சொல்லுங்க ,செந்தில் ஜி :)

   Delete
 7. இத்த முட்டை சமாசாரத்தை கண்டி அந்த ஆள் கண்டுக்கினா முட்டை பஜ்ஜி போட்டு எப்படி அலேக்கா துன்னுவது என்று ஒரு அரை பிளேடு பதிவு போட்டு எல்லோர்ர் கழுத்தில் ரத்தம் சொட்ட வைப்பார்!

  ReplyDelete
  Replies
  1. அப்படியேதும் நடக்கக் கூடாதுன்னு பழனி கந்தசாமியை வேண்டிக்கலாமா :)

   Delete
 8. அதிசயப் பிரசவ்ம் இப்படியுமா...?கையில் ஒரு பையைக் கொண்டுபோனால் செருப்பைக்கையோடு வைத்திருக்கலாம் கவலை இல்லாமல் கடவுளை தொழலாம்.

  ReplyDelete
  Replies
  1. கைப்பையிலே செருப்பை வைத்துக் கொண்டு கும்பிட்டால் சாமி ,கண்ணைக் குத்திடாதா :)

   Delete
 9. அதுவும் புது செருப்பா இருந்தா கடவுளே கண்ணுக்குத் தெரிய மாட்டார்!

  ReplyDelete
  Replies
  1. கண் முன்னால் செருப்பே ஆடிக்கிட்டிருக்குமோ :)

   Delete
 10. ஹஹஹஹஹ இது என்ன இ பிரசவம்....இது ஏதோ முயல் பிரசவம் போல இருக்கே....

  துவரம் பருப்பு துயரம் பருப்பு ஹஹஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. முயல் சில நேரங்களில் மட்டுமே,ஓரு குட்டியை ஈன்றபின் அடுத்த குட்டிக்கு ஒரு சில மணி நேரம் தாமதமாகும்,ஆனால் இது போன்று மூன்று மாதம் தள்ளிப் போகாதே :)

   வேகாட்டி வெறுப்புதானே வரும் :)

   Delete
 11. கவலையை மறக்கக் கோவிலுக்குப் போன
  நம்மாளுங்க
  வெளியே விட்ட காலணி (செருப்பு) இருக்குமா என்று
  கோவிலுக்கு உள்ளே எண்ணுவாங்க தான்...

  ReplyDelete
  Replies
  1. பெரிய கோவில்களில் இலவச செருப்பு பாதுகாப்பு இருப்பதால்தான் கூட்டம் அலை மோதுகிறதோ:)

   Delete
 12. வணக்கம்
  இரசித்தேன் ஜி பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊர் பருப்பு வேகுதா,ரூபன் ஜி :)

   Delete