22 March 2015

துணை 'எழுத்து ' எவ்வளவு முக்கியம்னு இப்ப புரியுதா :)

-----------------------------------------------------------------------------------------

மின்சார மந்திரிக்கு பிடிச்ச பூச்சி :)
          ''நம்ம மின்சார மந்திரி அடிக்கடி தன்னோட பேச்சிலே மின்மினிப் பூச்சியை உதாரணம் காட்டுறாரே ,ஏன் ?''
           ''ஒரு பூச்சிக் கூட தன் தேவைக்கு வெளிச்சத்தை தானே உண்டாக்கிக் கொள்ளும்போது  ,மனுஷனாலே ஏன் முடியாதுன்னு மறைமுகமா 
கேட்கிறாரோ!''

துணை (எழுத்து ) எவ்வளவு முக்கியம்னு இப்ப புரியுதா :)

        ''என்ன மெக்கானிக்  ,பஸ்ஸை எடுக்க வர்ற என்கிட்டே  வேப்பிலைக் கொத்தை ஏன் கொடுக்கிறீங்க ?''
         ''பிரேக் பிடித்தால் வண்டி முன்னால் 'பேய் 'நிற்கிறது என்று புகார் நோட்டிலே நீங்கதானே எழுதி இருந்தீங்க ,அதான் !''
சைதை அஜீஸ்22 March 2014 at 11:30
கால் இல்லையென்றால்தானே பேய் '?..
துரை செல்வராஜூ22 March 2014 at 11:37
எப்படிங்க!?

 1. நீங்க சினிமாப் பேயை பார்த்து சொல்றீங்க ,நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க காலுள்ள பேயைப் பற்றி உங்களுக்கு தெரியாதா ?
  நன்றி
 2. எப்படிங்கன்னு பாய்கிட்டே கேட்டா பதில் கிடைக்காது ,பேய்கிட்டேதான் கேட்கணும் !
  நன்றி
 3. துரை செல்வராஜூ22 March 2014 at 16:06
  காலுள்ள பேய்!..
  அதை ஏங்க இந்த நேரத்தில நினைவு படுத்திக்கிட்டு!?...
 4. தெரியாத தேவதைக்கு தெரிஞ்ச பேயே தேவலை ,இல்லையா ?
 5. Mythily kasthuri rengan22 March 2014 at 22:13
  கோவலனுக்கு கால் போடாமல் கேவலன் என்றெழுதிய மாணவன் அவர் கேவலமா நடந்ததால காலை ஒடச்சேன்னு சொன்னானாம் ! அதுமாதிரி இதுவும் கால் ஜோக் (மீதி முக்கால் எங்க சார்?)  1. கேவலமா நடந்துகிட்டதுக்கு பெண்டாட்டியே கவலைப் படலே,உனக்கு யார்ரா காலை ஒடிக்க  அதிகாரம் கொடுத்ததுன்னு கேட்டு இருக்கலாமே !
   பனுமாதி என் பெண்டாட்டி ,காலை எங்கே வேணும்னா போடுவேன்னு சொன்ன ஆளை நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீங்களே !அவரும் நம்ம முக்கால் தோஸ்த்துதான் !
  2. டாஸ்மாக் 'தண்ணி'யை மறந்த கவிஞர் !

             ''தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ,தண்ணீர் கரையில் முடிக்கிறோம்ன்னு 
  3. எழுதின கவிஞர் ,நடுவிலே ஒரு வரியை விட்டுட்டார் !''
  4.              ''எந்த வரியை ?'''
                  ''தண்ணியில் தினமும் மிதக்கிறோங்கிறதை !''
  5. இவனன்றோ பாரதியின் பேரன் ?

   மரணபயம் வென்றவன் ...
   எருமைக்குப் பதிலாய் 'YAMAHA 'வை 
   எமனுக்கு பரிசளிப்பான் !28 comments:

 1. 01. பவர் ஃபுல்லா இருப்பாரோ......
  02. துணையெழுத்து தலையெழுத்தையே மாற்றிடுச்சே....
  03. கண்ணதாசன் கவிதையோ....
  04. எமனும் லஞ்சம் வாங்குவாரோ....

  ReplyDelete
  Replies
  1. 1.யூனிட்டுக்கு எவ்வளவு என்று பணம் கொட்டுகிறது ,பவர் ஃ புல்லா தானே இருப்பார் :)
   2.வேப்பிலை அடித்து பேயை ஓட்டிட்டாரா:)
   3.கவியரசருக்கும் மேலே :)
   4.சமூக விரோதிகள் சிலர் ,நீண்ட ஆயுளுடன் வாழ்வதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது :)

   Delete
 2. புளிய மரத்தின் கீழே
  பேய் ஒண்ணு ஆடுது என்றாங்க
  நீங்க
  வேப்பிலைக் கொத்தைக் கொடுத்து
  பேய் ஒண்ணு நிற்குது என்கிறீங்க

  ReplyDelete
  Replies
  1. டிரைவருக்கு வண்டியை ஒட்டுறதா ,பேயை ஒட்டுறதா என்று ஒன்றும் புரியலே :)

   Delete
 3. Replies
  1. எமகா இல்லே ,யமஹா :)

   Delete
 4. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
 5. அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக மிக நன்றி :)

   Delete
 6. ஹஹஹஹ எல்லாமே......பனுமாதி என் பெண்டாட்டி ,காலை எங்கே வேணும்னா போடுவேன்னு சொன்ன உங்க முக்கா தோஸ்து அவங்க மேல கால போட்டாருனு வைங்க உங்க தோஸ்துக்கு சமாதிதான், பனுமாதிகிட்டருந்து...ஹஹஹ்

  யமஹா...ஹஹ்ஹஹ்..தான்


  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா பனுமாதி பன்னுமாதிரி லேசா இருக்க மாட்டாங்களா :)

   Delete
 7. எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.? இருந்தாலும் இந்தக் கால் போன கதைகள் என்றைக்குமே நகைக்க வைக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. கால் போன போக்கில்தான் போகக்கூடாது ,கால் போன கதைகளை தாராளமா படிக்கலாம் :)

   Delete
 8. காலை ஒடித்தும் சிரிப்பு வருகிறதே..!
  ஓஒ அது என் கால் இல்லையே :))
  ஹ ஹ ஹா

  ReplyDelete
  Replies
  1. அவனவனுக்கு கால் ஓடிஞ்சாதான் வலி தெரியும் ,அப்படித்தானே :)

   Delete
 9. துணை (எழுத்து ) எவ்வளவு முக்கியம்னு இப்ப புரியுதா :) நன்று!

  ReplyDelete
  Replies
  1. எழுத்து மட்டுமா வாழ்க்கையில் ,துணையும் முக்கியம்தானே :)

   Delete
 10. வணக்கம்
  ஜி
  அரசியலில் இலை யெல்லாம் சாதாரணம்... இப்படி வெளிச்சம் போட்டு காட்டினால்தான் தான் செய்த சேவை வெளியில் தெரியும்.. மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தனக்கு வரும் கமிஷன் குறையும் என்று தெரிந்தாலும் ,மின்சாரத்தில் தன்னிறைவு அடையணும்னு நினைக்கிற மந்திரி நல்ல மனிதர்தானே :)

   Delete
 11. மந்திரி பேய் டாஸ்மாக் யமாகா எல்லாமே அருமை...
  தம பாஸ்வேர்ட் பிராப்ளம்..... மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தளத்தை உயிர் பெற வைப்பதற்குள் உயிர் போயிட்டது போலிருக்கே :)

   Delete
 12. எனக்கு புரிஞ்சது, துணையெழுத்து எவ்வளவு முக்கியம்னு..!!!
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் புரிஞ்சு போச்சா ,சரிதான் :)

   Delete
 13. துணை எழுத்து முக்கியம் என்பதை தெரிந்து கொண்டேன். நன்றியுடன் தொடருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. துணை எவ்வளவு முக்கியம்னும் புரிந்து இருக்கணுமே :)

   Delete
 14. அப்படி பார்த்தா, பாம்பை பாம்பு என்று சொல்வதில் இலக்கணப்பிழை உள்ளதே பகவான்ஜீ!
  (பாம்புக்கு தான் கால் கிடையாதே, அப்போ பாம்பை பம்பு என்று தானே சொல்லவேண்டும்?)

  ReplyDelete
  Replies
  1. இதென்ன வாம்பா ...தப்பு தப்பு ... வம்பா போச்சு :)
   பாம்பை தாராளமா பம்புன்னு சொல்லலாம் ,பம்பை என்னான்னு சொல்றது :)

   Delete