23 March 2015

குடும்ப 'குத்து விளக்கு 'இப்படி படுத்தலாமா :)

            '' உன் பெண்டாட்டியை , குடும்ப பாங்கான குத்து விளக்கு மாதிரி நினைச்சது தப்பா போச்சா .ஏண்டா ?''

                     ''அலாவுதீனின்  அற்புத விளக்கு கிடைச்சாலும் அவளை திருப்தி படுத்த முடியாது போலிருக்கே !''

தலை நகரிலும் தொடரும் தலைவரின் அந்தரங்க லீலைகள் !

          ''நம்ம தலைவர் டெல்லிக்குப் போனாலும் அவர் லீலைகளை விடமாட்டாரா ,ஏன் ?''
           ''டெல்லி  VIA ஆக்ரா டிரெயின்லே போறோம் சரி ,டெல்லியில் வயாக்கிரா எங்கே கிடைக்கும்னு கேட்கிறாரே !''
அ. முஹம்மது நிஜாமுத்தீன்23 March 2014 at 21:29
தலைவர் ரொம்ப...
.
.
.
.
.
.
.
விஷ(ம)மான ஆளுதான் போல?!?
 1. அதென்ன ஏழு புள்ளி ?இன்னொரு அரை புள்ளி வைங்க ,தலைவருக்கு பொருத்தமா இருக்கும் !(நீங்களும் விஷமத்தனமான ஆளுதான் போலிருக்கே )
 2. டெல்லிக்காரர்களுக்கு அது வேண்டாம் போல
  எப்போதும் அது சாப்பிட்டவர்களைப் போலத்தான்
  திரிவார்கள் போல இருக்கு
  அங்கு போகிற நமக்குத்தான் வேண்டும் போல
  1. அதனால்தான் பாலியல் வன்கொடுமை அங்கே நிறைய நடக்கின்றதோ ?
   நமக்கெதுக்கு ,நாமதான் வயாக்கரா வழியாத்தானே டெல்லிக்கு போகிறோம் ?
  2. ஆபீஸில் 'நீளும் 'கை ,வீட்டில் ...?

             ''நீ  லஞ்சம்  வாங்கிறதை உன் மனைவிகூட கமெண்ட் அடிக்கிறாளா ,எப்படி ?''

         ''கை நீட்டுற வேலை எல்லாம்  ஆபீஸோட வச்சுக்குங்க ,என் கிட்டே வேணாங்கிறா !''

  3. பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம்!


   வர வேண்டிய பருவத்தில் 
   வரவில்லை என்றால் ...கஷ்டம் !
   வருவதும் மணநேரம் வரும் முன்பே 
   வராவிட்டாலும் ...கஷ்டம் !
   வந்துக் கொண்டே இருந்தாலும் 
   தாய்மை அடைவதில் ...கஷ்டம் !
   வருவது நிற்கவில்லையே என்று 
   பிள்ளைப் பேறு முடிந்தும்...கஷ்டம் !
   இஷ்டப் பட்டு கஷ்டப் படுவது ...
   பெண்மைக்கு இயற்கை தந்த சீதனம் ! 

24 comments:

 1. 01.அப்படினா இவண்தான் தினம் குத்து வாங்கவேண்டி வரும்.
  02. தலைவர் ஆகுறதே லீலைகளுக்காகத்தானே...
  03. வாங்குற லஞ்சத்தை பொண்டாட்டிகிட்டே கொடுக்ககூட கை நீட்டக்கூடாதா ?
  04.அருமையான பெண் கவி.

  ReplyDelete
  Replies
  1. 1.கொடுத்துத்தான் வச்சிருப்பான் போல :)
   2.வரவு அளவு கடந்தால் இந்த லீலையில் தானே செலவழியும் :)
   3.அது மட்டும் கொட்டுற மாதிரி கொண்டு வரணும் :)
   4.ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியோ :)

   Delete
 2. 1. ஹா...ஹா..ஹா பாவம் கணவன்.

  2. ஹா...ஹா... ஆனால் இப்படி ரயிலில் பயணத்தின்போது லீலை நடத்தும் தலைவர்கள் பற்றி முன்பு ஏதோ ஒரு பத்திரிகையில் படித்த நினைவு இருக்கிறது.

  3. ஹா...ஹா...ஹா... வீட்டில் அவங்கதான் கை நீட்டணும்!

  4. உண்மை.

  ReplyDelete
  Replies
  1. 1.அற்புத விளக்கு கிடைச்சாலும் பாவம்தான் ,தேய்ச்சி தேய்ச்சி இவரே தேய்ந்து போய் விடுவார் :)
   2.ஒடும் ரயிலில்கூட ஜல்சா ..ஹும் ,இவர்கள் எல்லாம் தலைவர்கள் :)
   3.அவருக்கே உரித்தான தனிப்பட்ட உரிமையோ :)
   4.பெண்மையே இதில்தான் அடக்கம் என்பதும் உண்மை :)

   Delete
 3. Replies
  1. மனைவிக்கேற்ற மெகா புருஷரா ஆக முடியலையோ:)

   Delete
 4. அனைத்தும் அட்டகாசம் ஜி,
  தம+

  ReplyDelete
  Replies
  1. அற்புத விளக்கு செய்வதை விடவா இது அட்டகாசம் :)

   Delete
 5. Replies
  1. இன்னுமா வலைத் தளம் சரியாகலே ?செல் கமென்ட் போல் இருக்கே :)

   Delete
 6. அந்தக் குத்து விளக்கையே அல்லாவுதீன் அற்புத விளக்கு என்று நினைத்து உரசிப் பார்த்தாரோ.கடைசியில் அருமையான கஷ்டப் பாட்டு.

  ReplyDelete
  Replies
  1. குண்டக்க மண்டக்க தேய்த்ததால் வீட்டிலேயே பூதம் கிளம்பிருச்சோ :)
   இஷ்டப் பட்டு இந்த கஷ்டத்தை அனுபவிப்பவர்கள் எத்தனை பேர் :)

   Delete
 7. ஹஹஹஹ்ஹ அனைத்தும் ரசித்தோம்...

  ம்ம் கடைசிக் கவிதை ம்ம் ஆம் அருமையானக் கஷ்டப்பாடுதான்...இயற்கை தந்த சீதனமாயிற்றே...!! இயற்கையை மிஞ்ச முடியுமா!

  ReplyDelete
  Replies
  1. இருந்தாலும் ,இயற்கை.. பெண்ணுக்குமட்டும் அதிகமாய் தான் தொந்திரவு கொடுத்திருக்கிறதே :)

   Delete
 8. ஆபீஸில் 'நீளும் 'கை ,வீட்டில் ...? நன்று!

  ReplyDelete
  Replies
  1. அங்கே நீளணும்,இங்கே தாழணும்:)

   Delete
 9. இன்று நான்குமே சுவையாயிருந்தன.

  ReplyDelete
  Replies
  1. நிஜமாத்தான் சொல்லுறீங்களா நிஜாமுத்தீன் :)

   Delete
 10. //அ. முஹம்மது நிஜாமுத்தீன்23 March 2014 at 21:29
  தலைவர் ரொம்ப...
  .
  .
  .
  .
  .
  .
  .
  விஷ(ம)மான ஆளுதான் போல?!?
  //

  இன்று தங்கள் பதிவிலேயே, சென்ற ஆண்டில் நான் அளித்த பின்னூட்டத்தையும் சேர்த்தே வெளியிட்டு,
  இன்றைய எனது 'பிறந்த நாளை' சிறப்பானதாக ஆக்கிவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. பார்த்தீர்களா ,நீங்கள் சொல்லாமலே பிறந்த நாள் பரிசைக் கொடுத்துள்ளேன் :)
   நம் இருவரின் 'மைண்ட் வேவ் லேங்க்'த்தும் ஒரே மாதிரியா இருக்கும் போலிருக்கே :)

   Delete
 11. வணக்கம்
  ஜி
  எல்லாம்அருமையான நகைச்சுவை இரசித்தேன் இறுதியில் சொல்லிய கவிதை மிக மிக சிறப்பு. த.ம10
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கஷ்டப் படாமே அதை புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி :)

   Delete
 12. கவிதை ரசித்தேன் ஜீ!

  ReplyDelete
  Replies
  1. கவிதையில் இனிமை கண்டு ரசித்தமைக்கு நன்றி :)

   Delete