25 March 2015

கைவிடக் கூடாதுன்னு சொன்னது இதைத்தானா :)

 ----------------------------------------------------------------------------------------------------
பிள்ளைங்க பரீச்சையில் பாஸ் ஆக இப்படியா  உதவுறது :)


               ''நீ பரீச்சை  எழுத ,நான் ஏண்டா உடும்பு மாதிரி சுவரில் ஏறப் பழகணும்?''
              ''பொறுப்பில்லாம பேசாதீங்க அப்பா ,நாலாவது மாடியில் ஏறி ஜன்னல் வழியா பிட் கொடுக்கிறவங்களைப் பார்த்தாவது திருந்தப் பாருங்க !''

               


கைவிடக் கூடாதுன்னு அவங்களே சொல்லிட்டாங்களா ?

          ''என்னாலே நம்பவே முடியலே ,டாஸ்மாக் கடையிலே அவ்வையாரின் ஆத்திச் சூடி வரிகளா ?''
           ''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு எழுதி இருக்காங்களே !''
 கரந்தை ஜெயக்குமார்25 March 2014 at 11:05
ஆகா ஔவைக்கு இந்த நிலையா?


 1. Bagawanjee KA25 March 2014 at 11:08
  அரிது அரிது டாஸ்மாக் பக்கம் ஒதுங்காத மானிடரை பார்த்தல் அரிதுன்னு இன்னைக்கு வந்தா  பாடுவாங்க போலிருக்கே !
 2. Ramani S26 March 2014 at 06:58
  சரிதானே
  ஊக்கம் தரும் மதுவை கைவிடலாமா ?


  1. மதுவை வாயில் விடாமல் கை விட்டாலும் நல்லதுதான் !
  2. அம்பாளடியாள் வலைத்தளம்25 March 2014 at 16:37
   பாவம் ஒளவையார் தமிழ்க் கருத்து எப்படியெல்லாம் திரிவு படுகிறது
   பாருங்கள் !
  3. குடிகாரனின் ஆத்திச் சூடி அ'ரம்' செய விரும்பு 'என்றுதானே ஆரம்பமாகும் ?
  4. அனுஷ்கா ,ப்ரியாமணியின் ஓரவஞ்சனை நியாயமா ?

   '          'அனுஷ்காவும் ,ப்ரியாமணியும் தெலுங்கு படங்களில் ஆபாசமா நடிப்பதை         எதிர்த்து  வழக்கு போட்டது சரின்னு சொல்றீங்களே ,நீங்க முற்போக்குவாதியா ?''

              ''அட நீங்க வேற ,தமிழ் படங்கள்லே காட்டாத கவர்ச்சியை அங்கே மட்டும்  காட்டுவது நியாயமான்னுதான் கேட்குறேன் !'' 

  5. திண்டுக்கல் தனபாலன்25 March 2013 at 06:56

   அதானே பார்த்தேன்...

   எல்லாம் 'டப்பு'....


   1. எல்லாம் 'டப்பு 'ன்னு நீங்க சொல்லீட்டிங்க;வழக்குன்னா கோர்ட் நாலையும் விசாரிக்கும்,முக்கியமா சம்பத்தப் பட்டவர்களின் கவர்ச்சி காட்சிகள் தொகுக்கப் பட்டு ஆராயப் படும் !கோடிக்கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்க தேவையா இந்த ஆராய்ச்சி ?ஆராயப்பட்ட படங்கள் கூட 'டப் 'செய்யப் பட்டு 'டப்பு 'பார்க்கப் படுமே :)
   2. தனக்கு தானே தண்டனை அளித்துக் கொள்பவர்கள் !

    கடவுளைக் கும்பிடும்போது 
    கன்னத்தில் போட்டுக் கொள்வதற்கு ...
    'என் தப்புக்கு நானே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன் 
    நீயும் அறைந்து விடாதே ' என்பதுதான் காரணமா ? 
42 comments:

 1. 01. கரணம் தப்பினால் மரணம் போலயே.......
  02. நல்லவேளை எங்க அப்பத்தா அன்னைக்கே செத்துப்போச்சு.
  03. அதானே ஓரவஞ்சனை எதற்க்கு ?
  04. இப்படியும் இருக்குமோ.....?

  ReplyDelete
  Replies
  1. 1.நாலு மாடி படியேறினால் நமக்கு மூச்சு வாங்குது ,இவனுங்க எப்படி :)
   2.இருந்திருந்தா ,இதைப் படிச்சிட்டு போய்சேர்ந்து இருப்பாங்களா :)
   3.ஆந்திராகாரனுக்கு மட்டுமென்ன காட்டுறது ,ஆத்திரமா வருது :)
   4.எப்படியும் சொல்லிக்கலாம் :)

   Delete
 2. Replies
  1. நாலாவது மாடி ஜன்னல் வழியே பிட்டு கொடுத்ததைதானே :)

   Delete
 3. Replies
  1. பாசக்கார அப்பன்கள்,பிள்ளைங்களுக்கு எப்படியெல்லாம் உதவுறாங்க :)

   Delete
 4. வாழ்கையில் பாஸ் ஆகாத பெற்றோர்கள்...!

  ReplyDelete
  Replies
  1. மகனையும் பெயிலாக்கும் பெற்றோர்களும் கூட :)

   Delete
 5. அனைத்தும் அருமை ஜி .
  தம+

  ReplyDelete
  Replies
  1. மகன்மேல் எவ்வளவு பாசம் இருந்தால் ,இப்படி தைரியமா ஏறி பிட் கொடுக்கத் தோணும் :)

   Delete
 6. அப்பன் மகனுக்கு இப்ப உதவினால்தானே..பின்னாடி..மகன் அப்பனுக்கு உதவுவான். பிட்டு என்ற விசயத்திலே பெரிய தத்துவமே அடங்கிறது.

  ReplyDelete
  Replies
  1. படத்தில் உள்ள பய பிள்ளைங்களைப் பார்த்தால் 'சைட்'டுக்கு கொடுக்க வந்த மாதிரி இருக்கே ,காதல் வந்துட்டா ,இமய மலையில்கூட ஏறுவாங்க போலிருக்கே :)

   Delete
 7. தேர்வு நேரத்தில் பிட் பற்றிக் கருத்திடப்போய் எனக்கு ஏன் வேண்டாத வம்பு..!
  :))

  ReplyDelete
  Replies
  1. பிட் அடிக்கிறவங்க போட்டுத் தாக்கி விடுவார்களா :)

   Delete
 8. டாஸ்மாக் கடையில் அவ்வையின் ஆத்திசூடி எழுதி இருக்கிறதா.?

  ReplyDelete
  Replies
  1. ஒரு குடிகாரன் தெளிவா இருக்கும் போது ,சிந்தித்து எழுதி இருக்கானே :)

   Delete
 9. அத்துனையிம் அருமை. முதல் கேள்வி வேதனை.

  ReplyDelete
  Replies
  1. சான்றோன் ஆக்குதல் தந்தைக்கடனே ...இவன் எங்கே ஆகப் போறான் :)

   Delete
 10. நீயும் ஒரு அப்பனா ? என்றான் என் மகன்.
  திடுக்கிட்டேன்.
  ஏண்டா ?

  இங்க பாரு. இனிமேயாச்சும் இவங்களைப் பார்த்தபின்னே ஆவது
  பொறுப்பா நடந்துக்க.

  நாளைக்கே நான் பாஸ் பண்ணி வேலைக்கு போனா என்னோட சம்பளப் பணத்த மட்டும் வேண்டும் . இப்ப எனக்கு வேணும் அப்படின்னா நீ செஞ்சா குறஞ்சா போயிடுவே.

  காலம் டா. .

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. அதானே ,மகன் இக்கட்டான நிலையில் இருக்கும் போது உதவாதவன் எல்லாம் அப்பன் ஆவானா :)

   Delete
 11. ''ஆமா ,ஊக்க'மது' கைவிடேல்னு! ஐயோ! பாவம் ஆத்திச் சூடி

  ReplyDelete
  Replies
  1. இன்று ஔவை இருந்திருந்தால் ,நம்ம பெருமாள் முருகன் மாதிரி ..இதுவரை எழுதிய எல்லாவற்றையும் வாபஸ் வாங்கிறேன்னு சொல்லி இருப்பாங்களோ :)

   Delete
 12. எல்லாமே சிறப்பான ஜோக்ஸ்தான்! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கன்னத்தில் போட்டுக் கொள்வதற்கு உங்களிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்த்தேன் :)

   Delete
 13. வழக்கம் போல் அனைத்தும் சூப்பர்!
  த ம 11

  ReplyDelete
  Replies
  1. வழக்கம் போல இப்படி கமெண்ட் போடாமல் , கொஞ்சம் வித்தியாசமாய் போடலாமே,செந்தில் ஜி :)

   Delete
 14. காலத்திற்கேற்ற கருத்துப்படம், நகைச்சுவையோடு.

  ReplyDelete
  Replies
  1. இந்த படத்தை பார்த்ததும் ,பூச்சு வேலை நடக்கிறது என்றுதான் முதலில் நினைத்தேன் :)

   Delete
 15. அன்புள்ள அய்யா,

  தானாடாவிட்டாலும் தன் தசையாடுமுன்னு சொல்வாங்களே... அது இதுக்காத்தான் இருக்குமோ?

  எம்மா உயரத்தில இருக்காங்க... நிச்சயம் தசையாடுங்கிறீங்ளா...? ஒரு வேளை ‘களவும் கற்று மற’ன்னு சொல்லித்தாராங்களோ என்னமோ? அவுங்களப் போயி தப்பா நினைச்சுட்டமே!

  பாடங்களைப் படிக்காமலே... சின்னப்பதாஸ்...தாஸ்... நீ... இப்ப பாஸ்... பாஸ்.

  ஆபாசமாக ....‘படங்களில் நடிக்க’க் கூடாதுன்னுதானே சொல்றீங்க... ஒரு வேளை அவரு பிற்போக்கான வாதியா இருப்பாரோ என்னவோ?

  என் தப்புக்கு நானே கன்னத்தில் போட்டுக் கொள்கிறேன்... கடவுளே! ஆமாம் நீ செஞ்ச தப்புக்கு ஒ கன்னத்தில நீயும் போட்டுக்கிட்ட மாதரி தெரியல... ஒங்க வீட்டுக்காரா அம்மாவும் ஒங்க கன்னத்தில போட்டமாதரியும் தெரியில... இருந்தாலும் இவ்வளவு பயம் கூடாது... கூடவே கூடாது!

  நன்றி.
  த.ம. 13.

  ReplyDelete
  Replies
  1. அவருக்கு சதை ஆடுதோ இல்லையோ,நாலாவது மாடி ஜன்னலில் நிற்பவரைப் பார்த்தால் நமக்கு குலை நடுங்குதே:)
   படங்களில் மட்டும் ஆபாசமாய் நடிக்க வேண்டாம் என்றால் .......:)
   ஒருவேளை ,பயப் படுதலே ஞானத்தின் ஆரம்பமா ,ஜேம்ஸ் ஜி :)

   Delete
 16. 1) வேதனையுடன்தான் சிரிக்க வேண்டும் ஜி!

  2) ஹா...ஹா....ஹா... இதுவும் வேதனை வகையறாவில்தான் சேர்த்தி!

  3) ஹா...ஹா....ஹா... நியாயமான கேள்வி. நானும் வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன்!

  4) அப்படிக் கூட இருக்குமோ ஜி?

  ReplyDelete
  Replies
  1. 1 துன்பம் வரும் வேளையிலே சிரிக்கத்தானே வேணும் :)
   2.துன்பம் தொடருதா :)
   3.அப்படின்னா கேஸ் நம்ம பக்கம்தான் தீர்ப்பாகும் :)
   4.அதிலும் சுயநலம்தான் :)

   Delete
 17. ஹஹஹஹ் அனைத்துமே சூப்பர் ஜி! ரசித்தோம்!

  ReplyDelete
  Replies
  1. வாத்தியார் நீங்களுமா ஜன்னலோர பிட்டை ரசிச்சீங்க:)

   Delete
 18. முதல் படம் முதலில் வரவில்லை ஜி! வந்ததும் பார்த்தால்....ஜி! அது ரொம்பவே வேதனை தரும் விஷ்யம் இல்லையா ஜி! நம்ப மானம் கப்பலேறிப் போயாச்சு.....

  ReplyDelete
  Replies
  1. நாலாவது மாடி ஜன்னல் வழியா பிட்டை எப்படித்தான் கொடுப்பார்களோ ,யாருமே தடுக்க மாட்டாங்களா :)

   Delete
 19. நாலு மாடி படியேறினால் நமக்கு மூச்சு வாங்குது ,இவனுங்க எப்படி :) வயதான பெருசுகளுக்குத்தான் இந்தத் தொல்லைகள் இளவட்டங்களுக்கு இல்லையே...

  ReplyDelete
  Replies
  1. மாடி ஜன்னலில் உள்ளவர்களை உற்று பாருங்கள் ,கிழடுகளும் இருக்கிறார்களே ,டிவியில் கூட காட்டினார்களே :)

   Delete
 20. பிள்ளைங்க பரீச்சையில் பாஸ் ஆக
  இப்படியா உதவுறது?
  ஒளிப்படத்தைப் பார்த்தாத் தலை சுற்றுகிறதே!

  ReplyDelete
  Replies
  1. பார்த்தாலே தலை சுற்றுதா ,நீங்கள் எல்லாம் எப்படி ஜன்னலில் ஏறி நிற்கப் போகிறீர்கள் :)

   Delete
 21. வணக்கம்
  ஜி
  எல்லா நகைச் சுவையும் நன்றாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரசித்ததோடு நின்று விடாமல் நன்றி சொன்னீர்களே ,அங்கே ,நீங்க நிக்கிறீங்க ரூபன் ஜி :)

   Delete