30 March 2015

பெண் மனது மட்டும் ஆழமில்லே :)

மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்ககதரிசி :)

                   ''கால் விரல் அணிகலனுக்கு  மிஞ்சின்னு பேர் வைத்தவன் தீர்க்கதரிசியாத்தான் இருக்கணும்னு ஏன் சொல்றீங்க ,மாமா ?''
                    ''என் மகளுக்கு  போட்ட தங்க நகைங்களில் எதுவும் மிஞ்சியிருக்கிற மாதிரி தெரியலையே ,மாப்பிள்ளை !''

மனைவியிடமா வாய்தா கேட்பது ?

        ''உன் வீட்டுக்காரர் வக்கீலாச்சே ,அவரை ஏன்  டைவர்ஸ் பண்ணிட்டே?''
  ''எதைக் கேட்டாலும்  அடுத்த மாசம் பார்ப்போம்னு 'வாய்தா 'கேட்கிறாரே !''
Ramani S31 March 2014 at 05:23
வக்கீல் புருஷனா இருக்கலாம்
வாய்தா வக்கீல்னா லொள்ளுதான்..
பழக்க தோஷத்தில் வீட்டில் வாய்தா கேட்டதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா ?இனிமேல் அவர் கோர்ட்டில் கூட வாய்தா கேட்க மாட்டார்னு படுது !
துரை செல்வராஜூ30 March 2014 at 09:14
வாய்தா கேட்டதால் - வக்கீல் வாழ்க்கை இழந்து போனாரே.. !?..

(இப்பத்தான்..யா நிம்மதி!)

... !?...
இனி அவருக்கு எந்த கறுப்பு கவுன் வந்து சோறு போடப் போகுதோ ?
மனைவி போட்ட ‘டைவர்ஸ்’ கேசுக்கும் ‘வாய்தா’ வாங்கிட்டே இருந்திருப்பாரே. எப்படி அந்த அம்மாவால் டைவர்ஸ் வாங்க முடிஞ்சுது?


 1. அப்படி ஆகிவிடும் என்றுதானோ என்னவோ ஒரு வருடம் பிரிந்து இருந்தாலே நீதிமன்றம் விவாக ரத்து கொடுத்து விடுகிறதோ !


தலைவலி தனக்கு வந்தா தான் தெரியும் !

         ''என் பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிட
 நீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?''

        ''காலி பண்ணாமே இருந்த  பக்கத்து போர்சன்காரங்க  சொல்லாம 

கொள்ளாம ஓடிட்டாங்களே !''
        
        ''இவ்வளவு நல்லது பண்ண எங்களுக்கு நீங்க 
என்ன செய்யப் போறீங்க ?''

     ''இனிமேலும் வீணையை விடலேன்னா நீங்களும் வீட்டைக் காலி பண்ண 

வேண்டி இருக்கும் !''பெண் மனது மட்டும் ஆழமில்லே !

கடலில் மூழ்கியவர்களைக் கூட காப்பாற்றி விடலாம் ...
டாஸ்மாக் கிளாஸில்  மூழ்கியவர்களை
ஒன்றும் செய்ய முடியாது !


37 comments:

 1. 01. அந்தப்பெயரை வைத்தவன் கஞ்சியாகத்தான் இருக்கணும்.
  02. இவளும் வக்கீல் பொண்டாட்டிதானு நிரூபிச்சுட்டா....
  03. ஒரோ கல்லுல மொத்த மாங்காயும் அடிப்பானோ....
  04. உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. 1.கஞ்சனுக்கு எதிர்பதமா இந்த வார்த்தை :)
   2.ஆனால் வாய்தா தராத மனைவி :)
   3.அவ்வளவு திறமைசாலியா :)
   4.அது அவனைக் குடித்து விடுவது தானே உண்மை :)

   Delete
 2. வணக்கம்
  ஜி
  எல்லாம்அசத்தல்.. அருமையாக உள்ளது இரசித்தேன் த.ம1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அசத்தலில் மிஞ்சி நிற்பது அதுதானே :)

   Delete
 3. ரசித்தேன் நண்பரே
  தம் +1

  ReplyDelete
  Replies
  1. அந்த மாப்பிள்ளையின் செயல்தான் ரசிக்கும் படியில்லை ,அப்படித்தானே :)

   Delete
 4. மன நோய்க்கு மருந்து உண்டு ஜி...

  ReplyDelete
  Replies
  1. குடி நோய்க்கு இல்லை ,அப்படித்தானே :)

   Delete
 5. வீணையை அதிகம் ரசித்தேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வீணையின் நாதம் ரசிக்கத்தானே செய்யும் :)

   Delete
 6. மிஞ்சி.... ஒண்ணையும் மிச்சம் வைக்கறதில்லை போல! :)

  அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வெள்ளி மிஞ்சி என்பதால் தப்பித்து விட்டது :)

   Delete
 7. ரசித்தேன்..! சிரித்தேன்..!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. உங்களின் இரு தேனுக்கும் நன்றி :)

   Delete
 8. அனைத்தும் அருமை அண்ணா ...

  தம+

  ReplyDelete
  Replies
  1. அனைத்துமேவா :)

   Delete
 9. அன்புள்ள பகவான் ஜி,

  தங்கமகள் மிஞ்சி இருக்காளேன்னு நெனைக்கறத விட்டுட்டு... தங்கமான மருமகன குறை சொல்றத மொதல்ல விடுங்க மாமா... ஆமா... மிஞ்சிய தங்கத்தில போடக் கூடாதுன்னு யாரும் சொன்னாங்களா மாமா?

  என்னதான் வக்கீலா இருந்தாலும் அவரு எதைக் கேட்டாலும் ‘ வாய்...தா...! வாய்...தா....!’ என்று ஓயாமல் கேட்டா?

  “வீணை கத்துக்கிறப்ப வீட்ட காலிபண்ணவச்சதுக்கு என்ன செய்யப்போறீங்க...?”

  “வீணை...வீணை... அது மீட்டும் விரல்களைக் கண்டேன்... ஆமா... இவ்வளளவு பெரிசா இருக்கு... அதான் இவ்வளவு பெரிய சப்தமா?”

  சும்மா... வெறுப்பேத்தாதிங்க... நானே வீணை நரம்பு அறுந்து போச்சுன்னு இருக்கேன்...!

  அப்ப இனிமே நிம்மதியா இருக்கலாமுன்னு சொல்லுங்க...! பேஷ்...பேஷ்... ரொம்ப சந்தோஷம்..!


  பெண் புத்தி பின் புத்திக்கிறது தெரியுது...! ஆழம் தெரியாமல் கால விடாதிங்கன்னா... கேட்டாத்தானே! ஒரு சந்தேகம் டாஸ்மாக் கிளாஸில் மூழ்கியவர்ன்னு யாரைச் சொல்கிறீர்கள்...? ஒன்னுமே புரியல... ஒலகத்தில... என்னமோ நடக்கிது... !

  நன்றி.
  த.ம. 9.

  ReplyDelete
  Replies
  1. தாலியை மஞ்சக்கயிர் என்பதால் நிலைச்சிருக்கோ :)

   சே சே அப்படியா கேட்கிறது :)

   சகிச்சுக்க முடியாம இவரே நரம்பை அறுத்து விட்டாரோ :)

   எதிலுமே ஆழம் தெரியாம ....விடக்கூடாதுதானே :)

   Delete
 10. (மொபைல் வழி படித்து) அனைத்ரையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. மொபைல் வழி என்றால் சரியா படிக்க முடியுதா :)

   Delete
  2. என் பதிவுகளே ,சில நேரங்களில் சட்டையை மீறிய பனியன்களாய் மொபைலில் தெரிவதால்அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது :)

   Delete
 11. சரி சரி விடுங்கப்பா..
  வக்கீலுக்கு “வாய்தா“னே மூலதனம்!!!!

  ReplyDelete
  Replies
  1. வாயா ,வாய்தாவா :)

   Delete
 12. பழக்கதோஷம்...வாயல வந்துவிட்டது போல...வாய்தா...

  கொலுசு தனி ,மிஞ்சி தனி தானே..?

  வீணை தேவலை காலி பண்ணிவிடலாம்...அடுத்தவர்களை..

  ரசித்தேன்...தம 11

  ReplyDelete
  Replies
  1. வாய் தா என்பது பழக்க தோஷம்தானா:)

   தனிதான் ,அதற்கேற்ப கொலுசைக் கழற்றி விட்டேன் ,இப்போ சரிதானே :)

   அது சிரமம்தான் :)

   Delete
 13. எனக்கும் வாய்தா கொடங்க அடுத்த பதிவுல கருத்துப்போட.

  ReplyDelete
  Replies
  1. வாய்தாவை சரியாக பயன்படுத்தி இருக்கீங்க ,நன்றி :)

   Delete
 14. டாஸ்மாக் கிளாசும் அவ்வளவு ஆழமா...?? அதில் மூழ்கியவர்களை காப்பாத்த வழியே இல்லையா ...??ஃ த.ம.12வது

  ReplyDelete
  Replies
  1. வழி இருக்கு ,ஆனா அது அரசு செய்யுமான்னு தெரியலே :)

   Delete
 15. Replies
  1. அரைகுறையாய் கற்றுக் கொண்டு வீணாய் போகாமல் இருந்தால் சரிதான் :)

   Delete
 16. வீணை செம கச்சேரி தான் போங்க....
  தம+1

  ReplyDelete
  Replies
  1. செமதான் ,கேட்கத்தான் ஆளில்லே :)

   Delete
 17. ஹஹஹ்ஹாஹ் மிஞ்சி மிஞ்சிவிட்டது....

  அஹஹஹ் வாய்தா கொடுத்ததால் அந்த வாய் தான் வினை

  வீணைக் கச்சேரி பிரமாதம்..  ..

  ReplyDelete
  Replies
  1. வெள்ளி ஆனதால் தங்கிவிட்டது :)

   டைவர்ச்சை வாய்தா மறக்கடிச்சுடுவாரோ :)

   இப்போ எங்கே வீணைக் கச்சேரியை கேட்க முடிகிறது :)

   Delete