10 April 2015

ஆண்களுக்கு 'டைம் பாஸ் ' ,பெண்களுக்கு :)

----------------------------------------------------------------

எம்டனுக்கு எம்டன்கள்:)

           ''பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போய் ஒரு மாசமாச்சே ,அடுத்து பேசவே இல்லையே ,நியாயமா ?''
           ''அன்னைக்கு ,பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாதான் டிபன்னு சொன்னீங்களே ,அது மட்டும் நியாயமா ?''

மனைவியிடம் இதை மறைக்கலாமா ?

      "ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது ...பலபேர் , மனைவிக்கு 
தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
      "எதை ?"
      "பேங்க் பாலன்ஸ்சை தான் !அதை  மறைக்க  பாலன்ஸ் சிலிப்பை 
கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே! "
 Jeevalingam Kasirajalingam10 April 2014 at 05:07
பாலன்ஸ் சிலிப்பை கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே!
இல்லாள் கண்டால் பணம் பறிக்கும் போராட்டம்
நடாத்துவாளோ!
ஐயா!
நீங்க சும்மா குப்பையில போகிற பாலன்ஸ் சிலிப்பையும் 
விடமாட்டியள் போல கிடக்கு...
குப்பையில் கூட மாணிக்கம் கிடைக்கும்னு சொல்றாங்களே ,உண்மைதானா என்று ஆராய்ச்சி பண்ண வேண்டாமா ?
திண்டுக்கல் தனபாலன்10 April 2014 at 07:30
ATM கார்டை "வச்சுக்கிட்டு" இருக்கலாம்... தப்பில்லை... ஹிஹி..
.Bagawanjee ....
ATM கார்டிலேயே பின் நம்பரையும் எழுதி 'வச்சுக்கக் கூடாது' ன்னு சொல்ல வந்ததை விளக்கமாச் சொல்லுங்க தனபாலன் ஜி !என்னவோ ஏதோன்னு நினைக்க வேண்டி வருதே !
துரை செல்வராஜூ10 April 2014 at 08:10
Balance Slip - ஆகாமல் இருந்தால் சரி!
சரியாகச் சொன்னீர்கள் ,அதுவும் பெண்கள் ரொம்ப கவனமா காலடி எடுத்து வைக்கணும் ,இல்லேன்னா 'வழுக்கி விழுந்தவள் 'னு சொல்ல இந்த சமூகத்தில் நிறைய பேர் இருக்காங்க !

ஆண்களுக்கு 'டைம் பாஸ் ' சரி ,பெண்களுக்கு ?

         '''டைம் பாஸ் வார இதழில் ஆண்களுக்கான  'கில்மா ' மேட்டர்தான் 
வருது !நாம படிக்கிற மாதிரி இல்லேடி !''
         ''ஒண்ணும் கவலைப் படாதே !பெண்களுக்காக 'மெனோ பாஸ் 'னு 
வார இதழ் வரப் போவுதே  !''

உயிரே ,உன் விலை என்ன ?

கோழிகளின் கழுத்து அறுபடும் போதுகூட  ஏற்படாத பரிதாபம் ...
'கோழிக் கறி கிலோ ரூ 100,உயிருடன் கிலோ ரூ 80'
என்பதைப் படிக்கையில் ஏற்படுகிறது !
உயிருக்கு என்னதான் மதிப்பு ?
22 comments:

 1. Replies
  1. காணிக்கையை போட்டா மட்டும் போதாது ,உங்க மனசுலே பட்டதை கொட்டுங்க ,கந்தசாமி அய்யா :)

   Delete
 2. * அப்போ ஒரு மாசமா டிஃபனுக்கு வெய்ட்டிங்னு சொல்லுங்க!


  ** அப்படி எல்லாம் மறைக்க முடியாதுங்க... (விரக்தி!!)

  *** அப்படி ஒரு புத்தகமும் வந்தாலும் வரும்!

  **** என்ன ஒரு சிந்தனை!

  ReplyDelete
  Replies
  1. * வெய்ட்டிங்கே இல்லை ...பொண்ணை பிடிச்சிருக்குன்னு பொய்யைச் சொல்லி அப்பவே டிஃ பனைச் சாப்பிட்டு போனவங்கதான் :)
   ** slip யை காட்டலேன்னா , வீட்டிலே நிம்மதியா sleep பண்ண முடியாதோ :)
   *** சக்கைப் போடு போட்டாலும் ஆச்சரியமில்லை :)
   **** சிந்திக்க வைக்குதே பிராய்லர் கோழி :)

   Delete
 3. எம்டன்கள் தான்... ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. இந்த எம்டன்களுக்கு எம்டன் குண்டே தேவலை :)

   Delete
 4. “““““எம்டனுக்கு எம்டன்கள்:)
  ''பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போய் ஒரு மாசமாச்சே ,அடுத்து பேசவே இல்லையே ,நியாயமா ?''
  ''பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாதான் டிபன்னு சொன்னீங்களே ,அது மட்டும் நியாயமா ?''“““““““

  ஆமாப்பா....கல்யாணத்துக்கு அப்பறம் அனுபவிக்கப் போற தண்டனைய பொண்ணு பாக்க வரும்போதே குடுக்கணுமான்னு சொன்ன நல்லெண்ணத்தப் புரிஞ்சிக்க மாட்டேங்கிறிங்களே...!  ““““““"ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது ,பலபேர் மனைவிக்கு
  தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!"
  "எதை ?"
  "பேங்க் பாலன்ஸ்சை தான் !அதை மறைக்க பாலன்ஸ் சிலிப்பை
  கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே! "“““““““

  ---பலபேர் மனைவிக்குத் தெரியக் கூடாதுங்கிறது நியாயந்தானே :))

  ஹ ஹ ஹா

  ReplyDelete
  Replies
  1. ''''''''''''தண்டனை அனுபவிக்கப் போறது ஒரு ஆள்தான் .டிஃபனுக்கு ஒரு கூட்டமே அலையுதே :)

   '''''''''''''''''''''ஒரு கமா இல்லேன்னா இப்படியும் ஒரு அர்த்தம் வருதா ,சரி பண்ணிட்டேன் :)

   Delete
 5. 01. விடாக்கணடனும், கொடாக்கண்டனும் சம்பந்திகளா ?
  02. பொண்டாட்டி பேங்க்ல வேலை செய்தாள் ஒண்ணும் மறைக்க முடியாதே...
  03. இப்ப எல்லாமே கில்மாவாத்தானே இருக்கு.
  04. சிலபேர் செத்தவுடன் மதிப்பு உயர்ந்து விடுவது போல்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. 1.ஆனால் ,நல்லாத்தான் இருக்கும் :)
   2.அதுக்கு பேங்கிலேதான் வேலை செய்யணுமா :)
   3.இணையம் வந்த பிறகு ,அப்படி ஆனாத்தானே விற்க முடியும் :)
   4.சாவைக் கொண்டாடுவோர் இருப்பதால் உயரத்தானே செய்யும் :)

   Delete
 6. கோழிக்கறி நகைச்சுவை சற்று வேதனையாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. இன்றைய விசேசம் ,நீங்கள் என் தளத்தில்முதல் கருத்துரைப் போட்டு இன்றோடு ஓராண்டு ஆகி விட்டது ...இன்றுதான் முதலில் வேதனை அடைந்து இருக்கிறீர்கள்:)

   Delete
 7. இந்த நகைச்சுவைப்பதிவுகளை ரசித்தேன் தனித்தனியே.

  ReplyDelete
  Replies
  1. அதில் ஒன்று ,நீங்க ஐடியா தந்ததால் வந்தது ,எதுவென்று தெரியுதா,ஸார் :)

   Delete
 8. வணக்கம்
  ஜி
  நகைச்சுவை அனைத்தும் அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி...த.ம 7
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்க ஊரிலும் கோழி விலை இப்படித்தானா :)

   Delete
 9. இங்க ஒரு வீட்ல பிரியாணி சாப்பிட்டுக்கிட்டு இருக்கேன்...இவுங்க பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாதான் பிரியாணின்னு சொன்னாங்க... நா... அப்புறம் பேசுறேன்...சும்மா சொல்லக்கூடாது...நன்னா செஞ்சிருக்கா...போங்க...


  பலபேர் மனைவிக்கு தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு...விஷயம் இப்ப "ATM ” க்கும் தெரிஞ்சு போச்சா? கேமரா இருக்கில்ல... கண்டுபிடுச்சிடுமுல்ல...!


  “சரி...சரி... வேளையப்பாரு... நம்ம BOSS நம்பள பாத்துகிட்டே PASS பண்றத நீ நிமிந்து பார்க்காதே...! சரியான 'கில்மா '“


  உயிரே... உயிரே... நீ என்னோடு கலந்துவிடு...

  நன்றி.
  த.ம. 8.  ReplyDelete
  Replies
  1. #நன்னா செஞ்சிருக்கா...# ப்பூ ,வெஜிடேபிள் பிரியாணி தானா :)

   அந்த கேமரா வழியா கட்டிகிட்டவ பார்த்தா வம்பா போகுமோ :)

   நிமிந்து பார்க்காதே சட்ட சபையிலே MLA க்கள் பார்த்த மாதிரி குனிஞ்ச தலை நிமிராம கில்மாவை மட்டும் பாரு :)

   எடைப் போட்டு வாங்கிட்டீங்க ,உங்களோடு கலக்கத் தானே போவுது :)

   Delete
 10. ரசிக்க வைத்த நகைச்சுவைகள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ரசனைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

   Delete
 11. உயிருக்கு என்ன தான் மதிப்பு ? :((((((

  ReplyDelete
  Replies
  1. சோ அவர்கள் 'உண்மையே உன் விலை என்ன ' என்று கேட்டதைப் போல ,உயிரே உன் விலை என்ன என்று கேட்கத் தோன்றுகிறது :)

   Delete